PDA

View Full Version : திருக்குறளும் தமிழும்

M.Jagadeesan
13-12-2010, 10:07 AM
திருக்குறளில் "தமிழ்","கடவுள்","ஒன்பது"ஆகியசொற்கள்இடம்பெறவில்லை.வள்ளுவர்அருளியதிருக்குறள்ஓர்உலகப்பொதுமறை.எனவேமொழி,இனம் நாடு,மதம் என்றுஎந்த வகையிலும் சிறைப்படுத்த முடியாவண்ணம் மிகவும் எச்சரிக்கையாகச் சொற்களைக்
கையாண்டுள்ளார்.
திருவள்ளுவர், தம் தாய்மொழியாம் தமிழ் மீது கொண்ட பற்று, அவரையும் அறியாமல்
சில இடங்களில் வெளிப்பட்டுவிட்டது!
முதல் அதிகாரத்தில்,இரண்டு,மூன்று, நான்கு ஆகிய குறட்பாக்கள் முறையே வல்லினம்,
மெல்லினம்,இடையினம் ஆகிய எழுத்துக்களில் தொடங்குகின்றன.

"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்,

இக்குறள் "க"_வல்லினத்தில் தொடங்குகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இக்குறள் "ம"_மெல்லினத்தில் தொடங்குகிறது.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இக்குறள் "வே"_இடையினத்தில் தொடங்குகிறது.

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து,"அ " இறுதி எழுத்து,"ன்" திருக்குறளின் முதல்
குறள் "அ"வில் தொடங்கி, இறுதிக் குறள் "ன்"இல் முடிகிறது.

Hega
13-12-2010, 10:09 AM
திருக்குறளின் சிறப்பு பற்றி அறிந்தோம்.

இன்னும் சொல்லுங்கள்....

M.Jagadeesan
13-12-2010, 11:54 AM
நன்றி HEGA அவர்களே!

கௌதமன்
13-12-2010, 12:21 PM
உலகில் அதிகம் மொழிபெயர்க்கப் பட்ட நூலும் இதுதான். தனக்கென செய்யுள் இலக்கணத்தை (குறள் வெண்பா) வகுத்துக் கொண்டதும் இதுதான் (பிழையிருந்தால் திருத்தவும்).
மந்திரங்களையும், கடவுளின் செய்திகளையும் பாட்டாக எழுதிய காலத்தில் மானுடம் மேம்பட எழுதப்பட்ட புதுக்கவிதைதான் திருக்குறள்.

M.Jagadeesan
13-12-2010, 02:23 PM

நன்றி கௌதமன்!

பைபிள் நூலுக்கு அடுத்தபடியாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்று எண்ணுகிறேன்.

Hega
13-12-2010, 03:18 PM
உலகில் அதிகம் மொழிபெயர்க்கப் பட்ட நூலும் இதுதான். தனக்கென செய்யுள் இலக்கணத்தை (குறள் வெண்பா) வகுத்துக் கொண்டதும் இதுதான் (பிழையிருந்தால் திருத்தவும்).
மந்திரங்களையும், கடவுளின் செய்திகளையும் பாட்டாக எழுதிய காலத்தில் மானுடம் மேம்பட எழுதப்பட்ட புதுக்கவிதைதான் திருக்குறள்.

தனக்கென செய்யுள் இலக்கணத்தை வகுத்து கொண்டது திருக்குறள்

இது எனக்கு புதிய தகவல்.
நன்றி கௌதமன் அவர்களே...
தொடருங்கள்...

கௌதமன்
13-12-2010, 03:46 PM
திருக்குறளுக்கு முன்பாக ‘குறள்’ என்ற செய்யுள் வகை இல்லை. வெண்பா இலக்கணத்தையொட்டி ஆனால் 4 அடி என்ற விதிக்குப் பதிலாக 2 அடிச் செய்யுளாகத் குறுகத் தரித்ததுக் குறள். அதனாலாயே தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறத் தடையிருந்தததென்றும் ஔவையின் முயற்சியால் தான் அரங்கேறியதென்றும் கூறிக் கேட்டிருக்கிறேன்.(உண்மையா?)

நாஞ்சில் த.க.ஜெய்
13-12-2010, 07:32 PM
தகவல்கள் புதுமை பதிவுகள் அருமை தொடர்க
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

M.Jagadeesan
13-12-2010, 10:09 PM
திருக்குறளுக்கு முன்பாக ‘குறள்’ என்ற செய்யுள் வகை இல்லை. வெண்பா இலக்கணத்தையொட்டி ஆனால் 4 அடி என்ற விதிக்குப் பதிலாக 2 அடிச் செய்யுளாகத் குறுகத் தரித்ததுக் குறள். அதனாலாயே தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறத் தடையிருந்தததென்றும் ஔவையின் முயற்சியால் தான் அரங்கேறியதென்றும் கூறிக் கேட்டிருக்கிறேன்.(உண்மையா?)

ஒளவையாருக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காகக் கட்டிவிடப்பட்ட கதை அது.
"ஒள்வையார்" திரைப்படத்தில் S.S. வாசன் அவர்கள் செய்த தவறு அது.திருவள்ளுவர்
காலம் வேறு , நீதி நூல் பாடிய ஒள்வையின் காலம் வேறு.

கௌதமன்
14-12-2010, 01:41 PM
ஒளவையாருக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காகக் கட்டிவிடப்பட்ட கதை அது.
"ஒள்வையார்" திரைப்படத்தில் S.S. வாசன் அவர்கள் செய்த தவறு அது.திருவள்ளுவர்
காலம் வேறு , நீதி நூல் பாடிய ஒள்வையின் காலம் வேறு.

சுட்டுதலுக்கு நன்றி !
என் ஐயம் தங்களால் தீர்க்கப்படுமென நம்புகிறேன்!
சங்கங்கள் சுட்டும் ஔவையின் பாடல்கள் ஒரே நூலாசிரியால் எழுதப்பட்டதா? ஔவை என்பது ஒரு பொதுப் பெயர் என்றும் பல்வேறு கால்கட்டங்களில் பல்வேறு பெண்பாற்புலவர் பெருமக்கள் ஔவை என்றப் பெயராலாயே அறியப்பட்டனரென்பதும் எவ்வளவிற்கு உண்மை. முதற் மாந்தினப் பெண் என விவிலியம் உரைக்கும் Eve என்பது ஔவையின் திரிபே என் வாதாடும் தமிழறிஞர்கள் இன்றும் உளரே!

M.Jagadeesan
14-12-2010, 02:27 PM

ஒள்வையார் சங்க காலத்தில் மிகவும் புகழ் பெற்ற பெண்பாற் புலவராகத் திகழ்ந்துள்ளார்.
அதனால் தமிழத்தில் வழிவழியாகச் சிறப்புடைய பெண்பாற்புலவர் பலர் ஒளவை என்றே
அழைக்கப்பட்டு வந்துள்ளனர்."தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு.அருணா
சலம் அவர்கள் ஆறு ஒளவையார்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.திரு.மு.வ.அவர்கள்
தமது இலக்கிய வரலாற்றில் பல ஒளவையார்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்துள்ளமையைக் குறிப்பிடுகின்றார்.சோழர் காலமாகிய இடைக்காலத்தில் வாழ்ந்து,
நீதி நூல்கள் பாடிய ஒளவையாரே,அனைவரிலும் மிக்க புகழ் பெற்றவர்.

சங்கங்கள் சுட்டும் ஒளவையின் பாடல்கள் அனைத்தும் ஒரே நூலாசிரியரால் எழுதப்
பட்டது.விவிலியம் உரைக்கும் Eve என்பது ஒளவையின் திரிபு என்பது நீங்கள்
சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்.

கௌதமன்
14-12-2010, 03:10 PM
வள்ளுவர் தம் குறளில் எளிய உயரிய வாழ்க்கையை இயல்பாகச் சிந்தித்துள்ளார். மாந்தன் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய கடமைகள் உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தரும் விடைகள் பெருந்தன்மையுடையன; அறிவுக்குப் பொருந்துவன. இத்தகைய உயரிய அறிவு நிறை முதுமொழிகளை உலக இலக்கியங்கள் எவற்றினும் காண இயலாது.
-ஆல்பர்ட்டு சுவைசர்(நோபெல் சமாதான பரிசு பெற்றவர், 1952

nambi
15-12-2010, 12:07 PM
திரியைத்துவங்கிய ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி! பின்னூட்டமிட்ட கௌதமன் அவர்களுக்கும் நன்றி!

---------------------------------------

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவிட்சர் (Albert Schweitzer) ஜெர்மன் பேரரசுக்குட்பட்ட பிராங்கோ ஜெர்மன் நாடான பிரான்ஸ் நாட்டு (அல்செக் லொரைன்) எல்லையில் பிறந்தவர். படிக்கின்ற பொழுதே (அதாவது பாதிரிமார் பள்ளிக்கூடத்திலே படிக்கின்றபொழுதே..) ''பாதிரியாராக பணியாற்றினால் எத்தனை பேருக்கு நாம் நல்லது செய்யமுடியும் அதனால் என்ன பயன் விளையும்?, அடித்தட்டு மக்களுக்கு இதனால் என்னப் பயன்?, நம்மால் என்ன செய்யமுடியும்? என்பதை எண்ணிப்பார்த்ததின் விளைவாக மருத்துவராக பணிபுரிந்தால் நம்மால் அவர்கள் வாழ்க்கையின் ஒருபகுதிக்காவது உதவ முடியும் என்று தீர்மானித்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.

பாதிரியாராக இருக்கும்பொழுதே இசையிலும் தேர்ச்சி பெற்றார், பாதிரிக்குரிய அனைத்து பாடங்களையும் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், அதன் பின் மருத்துவராவதற்காக நான்காண்டுகள் பயின்று அதன்பின்னும் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.

''என் வாழ்க்கை, நான் பயின்ற மருத்துவம், இவையனைத்தும் மக்கள் பயனுறும் வகையில் அமையவேண்டுமானால் வசதியும் வாய்ப்பும் பெற்ற ஐரோப்பியர்களுக்கு மத்தியில் என்நாட்டில் தொண்டாற்றிப் பயனில்லை......

.....''இந்த மருத்துவ தொண்டு யாருக்கு கிடைக்கவில்லையோ? அவர்களுக்குப் போய் சேரவேண்டும் என்று மத்திய ஆப்பிரிக்காவில் ''லேம்பர்னே'' என்ற இடத்தில் உள்ள ''நீக்ரோ'' மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும்'' என்று தோன்றிய எண்ணத்தினால் அவர்கள் இடத்தில் சிறிய குடில் அமைத்து மருத்துவத்தை துவங்கினார்.

அந்த மக்கள் விரட்டியடித்தபொழுதும் அங்கிருந்த மக்களுக்கு தொண்டு செய்ய வந்ததை விளக்கி பின் அவர்களுடன் நட்பு பாராட்டி பின் 30 வருடங்களுக்கும் மேலாக தொண்டாற்றி அதன்காரணமாக நோபல் பரிசு பெற்றவர்..ஆல்பர்ட் சுவைசனர்

மகாத்மா காந்தியைப்போல, அன்னைத்தெரேசாவைப்போல தொண்டாற்றியவர். உலகத்தில் உள்ள தத்துவங்களையெல்லாம் படித்தவர். அதை பற்றி ஆராய்ந்தவரும் கூட..ஜரோப்பியத் தத்துவங்களை படித்ததுமட்டுமில்லாமல். கிருத்துவத்திலே ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். அதன் காரணமாக இந்தியாவின் தத்துவங்களை ஆராய்ந்தார்.

இந்தியாவில் தான் அதிக தத்துவங்கள் தோன்றின என்ற காரணத்தால் பௌத்த தத்துவங்கள் படித்து இன்னும் பல இந்திய தத்துவங்களை படித்து ''இன்டியன் தாட்ஸ் அன்ட் இட்ஸ் டெவலப்மென்ட்'' என்று எழுதிய புத்தகத்தில் தன்னுடைய எண்ணங்களை வடித்து எழுதி இருந்தார்.

அதில் கூறியிருந்தவை.....

''உலகில் உள்ள தத்துவங்களை எல்லாம் படித்து பார்த்தேன், நான் ஆற்றுகின்ற தொண்டு எந்தளவுக்கு மக்களோடு தொடர்புடையது என்பது இந்த உலகத்தாருக்கும் தெரியும். இந்த தொண்டுக்கு எந்த மதத்திலே இடமிருக்கிறது என்பதை தேடித்தேடிப் பார்த்தேன். எந்த தத்துவம் மனிதனுக்கு மனிதன் உதவி புரிகிறது என்பதை பார்த்தபொழுது. இந்தியாவிலே வேதாகாலத்திற்கு பின்பு தோன்றிய எந்த நூலிலும் இந்த கருத்து இல்லை. ஆனால் வேதாகலத்திற்கு முற்பட்ட காலத்தில் உள்ள மக்களிடையே காணப்படும் சிந்தனையை கொண்டிருப்பதாக விளக்கும் இந்த திருக்குறளில் மட்டும் தான் இந்த கருத்தை கொண்டிருக்கிறது''.

அதாவது அவருடைய தத்துவத்தை, அவருடைய தொண்டினை திருக்குறள் மட்டுமே முன்வைக்கிறது.

''இறைவழிபாடு, ஆன்மீகம், மதநெறி இவைகளெல்லாம் நான் எண்ணிப்பார்க்கிறபொழுது அவைகளிலும் மேலான தத்துவங்களை திருக்குறள் கொண்டிருக்கிறது. உலகில் நிலையானது என்று ஒன்றுமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு தொண்டு செய்வது தான் ''உயர்ந்த மதம்'' என்ற நிலையான கருத்தை ''திருக்குறள்'' வலியுறுத்துகிறது. மனித இனத்தை மேம்படுத்துகிற தத்துவத்தை வலியுறுத்துகிற திருக்குறளுக்கு மேலான, ஈடான ஒரு நூலை நான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்''....

(நன்றி! பெரியார் இணையம்....ஆதாரம்...திராவிடர் வரலாற்று ஆய்வு மையத்தின் தொடக்கவிழாவில் பேராசிரியர் அன்பழகனார் பேசிய உரையிலிருந்து....மேலும் தகவல்கள்... ஆங்கில தகவல் களஞ்சியம்...)

கௌதமன்
15-12-2010, 12:23 PM
நான் வள்ளுவரின் திருக்குறளை அவரின் தாய்மொழியிலேயே படிக்க என்னை தகுதியாக்கிக் கொள்ளவே தமிழ் மொழியைப் படிக்க விரும்புகிறேன்
- மகாத்மா காந்தி

முரளிராஜா
15-12-2010, 02:35 PM
நண்பர் ஜெகதீசன் உங்கள் பதில் அனைத்தும் அருமை.