PDA

View Full Version : தவறு யாருடையது



dellas
13-12-2010, 07:54 AM
அது ஒரு காலைப்பொழுது, வாரத்தின் முதல்நாள். ஒரு பரபரப்பான பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றுகொண்டிருகிறேன். இருவழிசாலையில் பேருந்துகள் விரைந்து கொண்டிருகின்றன. சற்று நீளமான பயணிகள் நிழற்குடை. ஆண்களும் பெண்களும் தனித்தனியாக இடம்விட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து கடைகள் வரிசையாக இருக்கின்றன.

இவைகளைத்தாண்டி ஒரு இளைஞர் பட்டாளம் தனியாக, தங்களுக்குள் பேசிக்கொண்டும், கைதட்டி சிரித்துக்கொண்டும் நிற்கிறார்கள். அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது பார்த்தவுடன் புரிகிறது. அவர்களின் பார்வை நொடிக்கொருதரம் பயணிகள் நிழற்குடை பெண்கள் பகுதியை தழுவிச்செல்கிறது. யாரையோ அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் தெரிகிறது. நான் பக்கத்து கடைக்காரரிடம் எனது பேருந்து வழித்தட எண்ணை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.

பள்ளிக்கூட சிறார்கள் சீருடையில் எங்களைக் கடந்து சென்றது மனதிற்கு இதமாக இருந்தது.
வேலைக்குச் செல்பவர்கள் அவசரகதியில் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். இல்லத்தரசிகள் தங்கள் இல்லப்பணிகளை முடித்துக்கொண்டு, எப்படி இவ்வளவு விரைவாக வேலைக்கு செல்ல முடிகிறது என்பதை வியந்துகொண்டேன். காலைப்பொழுதின் சுறுசுறுப்பை ரசித்தபடி , என் பேருந்தை எதிர்பார்த்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.

இளைஞர் பட்டாளம் திடீரென்று பிரகாசமாகிறது. அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரும்பி ஒரே திசையில் பார்க்கிறார்கள் நானும் அந்த திசையில் பார்க்கிறேன். ஒரு இளம்பெண் அலைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய ஆடைகள் தற்கால உடைகளாகவும். அவள் வனப்பை வெளிக்காட்டுவதாகவும் உள்ளது. கையை அசைத்தும் தூக்கியும் அவள் பேசும்போது கண்டிப்பாக அவள் உடல் பாகங்கள் வெளியே தெரியும் அபாயம் உள்ளது கண்டிப்பாகஅவளுக்கும் தெரிந்திருக்கும்.

அதை அப்பெண் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதும், இளைஞர்கள் தன்னைப் பார்ப்பது அவளுக்கு கிடைத்த அங்கீகாரமென அவள் நினைப்பதும், அவளின் நடையழைகிலே தெரிகிறது. அவள் அவர்களைக் கடந்து பெண்கள் நின்றுகொண்டிருக்கும் பகுதிக்கு வருகிறாள். அங்கே சாதாரணமாக நிற்கும் ஒரு இளம்பெண்ணை அலட்சியமாக பார்த்து, சற்று எட்டப்போய் நிற்கிறாள்.

நகரத்தில் இவை எல்லாம் சாதாரணம் என்று நானும் என் பார்வையை சாலையை நோக்கித் திருப்புகிறேன். எட்ட நின்ற இளைஞர்கள் இப்போது அவள் பக்கமாக மெதுவாக நகர்ந்து வந்து நிற்கிறார்கள். கண்டிப்பாக அவர்களின் வர்ணனைகள் அவள் காதில் விழுகிறது. அவள் மெல்லிய சிரிப்பை அதற்கு பதிலாக தந்து, தன் முன் நெற்றியில் விழும் கூந்தலை தன் இடக்கரத்தால் பின்தள்ளுகிறாள். அந்த பேருந்து நிறுத்தத்தின் மொத்த கண்களும் அவர்களையே மொய்க்கிறது.

எனக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. தற்கால இளைஞர்கள் ஆடைகளைத்தான் நாகரீகமென நினைக்கிறார்களா?? உடைகள் உடல்களை மறைப்பதற்குத்தான் என்பது மறந்துவிட்டதா?? உடல் தெரிய ஆடை கட்டுபவர்களை எந்த கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்கிறார்கள்??

இதோ நான் போகவேண்டிய வழித்தட பேருந்து வந்து விட்டது. நான் அதை நோக்கிச் செல்கிறேன். அந்த இரு இளம்பெண்களும் அதே பேருந்தை நோக்கிதான் வருகிறார்கள். சாதாரண உடையணிந்த பெண் இவளுக்கு வழி விட்டு பின்னே வருகிறாள். நான் அவர்கள் பின்னால் செல்கிறேன்.

இளைஞர்களில் ஒருவன் வேகமாக அவர்களை நோக்கி வருகிறான். வந்தவன் தன் கைகளால் முன்னால் செல்லும் பெண்ணைத்தொட முயற்சிக்கிறான். இதைப்பார்த்த இரண்டாவதாக வந்தவள் அவன் கையை எட்டிப் பிடிக்கிறாள். பிடித்தவள் அவனை ஒரு சுழற்று சுழற்றி தரையிலே தள்ளுகிறாள். கீழே விழுந்தவனைக் கடந்து செல்லுகிறாள். எழுந்துகொண்ட அவன் அப்பெண்ணைப் பார்த்து,

'விலைமாதுவின் மகளே' என்று திட்டுகிறான்.

அவள் சாதாரணமாகத் திரும்பி,

'நண்பா, விலை மாதுவிற்கும் ஒருவிலை உண்டு, ஒரு அடையாளம் உண்டு. உங்களைப்போல் நாகரீகப் போர்வையில் சாக்கடைப் புழுவாய்த் திரிபவர்களுக்கு என்ன விலை, என்ன அடையாளம்.??உங்களைவிட விலைமாது உயர்ந்தவள்தான்.' என்கிறாள்.

சாட்டையடியாக வருகிறது பதில். நிலைகுலைந்துபோகிறான் அவன்.

தவறு யாருடையது ?? அப்பெண் யாரைச் சொன்னாள் ?? சிந்தனையில் நான். பேருந்தில் என் பயணம் தொடர்கிறது.

Hega
13-12-2010, 11:28 AM
கதையின் எழுத்து நடை அபாரம். மிக அருமையாக காட்சிகளை விபரிக்கீன்றீர்கள்.
பாராட்டுக்கள்...

எனககு கதையின் மூலம் சொல்ல வருவது என்னவென்பது புரியவில்லை.

'நண்பா, விலை மாதுவிற்கும் ஒருவிலை உண்டு, ஒரு அடையாளம் உண்டு. உங்களைப்போல் நாகரீகப் போர்வையில் சாக்கடைப் புழுவாய்த் திரிபவர்களுக்கு என்ன விலை, என்ன அடையாளம்.??உங்களைவிட விலைமாது உயர்ந்தவள்தான்.' என்கிறாள்.

இது யாரை நோக்கி சுட்டப்படுகின்றது.. வயதிற்கேற்ப குறும்புத்தனத்தோடு ரசிக்கும் இளைஞர்கள் மேல் இந்தமாதிரி கடினமான வார்த்தை எதற்கு....

சம்பந்தப்பட்ட அந்த பெண்ணே இளைஞர்களின் கேலியை ரசிக்கும் போது கூட வரும் பெண்ணுக்கு ஏன் கோபம் வர வேண்டும். மார்டனாக ஆடை அணிந்த பெணணைத்தானே அவர்கள் கேலி செய்து தொடமுயன்றார்கள். கௌரவமாக ஆடை புனைந்த பெண்ணிடம் இல்லையே.. அப்படி இருக்கும் போது பின்னால் வந்த பெண்ணுக்கு ஏன் கோபம் வர வேண்டும்

என் சுட்டிகாட்டல் தவறாகவும் இருக்கலாம்.. அப்படி இருந்தால் மன்னிக்கவும்..


தொடர்ந்து எழுதுங்கள்...உங்களால் இதைவிட அருமையான கதை கொடுக்க முடியும்.

dellas
13-12-2010, 03:08 PM
பாராட்டுதலுக்கு நன்றிகள். இளைஞரகள் கிண்டல் செய்வதை இரண்டாவது பெண் தடுக்கவில்லை. ஆனால் அவளின் ஆடை அலங்காரங்கள் அந்த இளைஞனை ஒரு பொது இடத்தில வைத்து தொடுவதற்கு தூண்டியிருக்கிறது . அதைத்தான் அவள் சாடுகிறாள். தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும் நண்பரே யோசித்தீர்களா. ? கீழ்த்தரமான இந்த சிந்தனையை நாகரீகப் போர்வையில் வளர விடும் இந்த கலாச்சாரத்தின் மீதுதான் என் கோபம். கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்

இணைய நண்பன்
13-12-2010, 06:14 PM
அருமை.மேலும் புதிய படைப்புக்கள் படைத்திட வாழ்த்துக்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
13-12-2010, 06:54 PM
இது கதையா இல்லை உண்மை நிகழ்வா ? எதுவாக இருந்தாலும் இதன் நிகழ்வுக்கு காரணமானது அந்த பெண்ணின் ஆடை சுதந்திரம் ..இரண்டாவதாக வந்த பெண் செய்தது தவறு என்பதே என் எண்ணம் முதலில் வந்த அந்த பெண்ணின் தவறு சுட்டிகாட்ட பட வேண்டும் என்றால் அந்த நிகழ்வு கண்டிப்பாக நிகழ்ந்து இருக்க வேண்டும் .தன்னை தற்காற்றுகொள்ள இரண்டாவது பெண் அவ்வாறு செய்திருந்தால் அது நியாயம் ..இன்றைய இளைஞர் களின் மனதினை கெடுத்து உடலிச்சையை தூண்டும் படி ஆடை அணிந்து இவ்வாறு செய்யும் நாகரிக பெண்கள் திருந்துவது எவ்வாறு நண்பரே !
கீழ்த்தரமான இந்த சிந்தனையை நாகரீகப் போர்வையில் வளர விடும் இந்த கலாச்சாரத்தின் மீதுதான் என் கோபம்.
இந்த கோபம் எனக்கும் உண்டு அந்த காலத்தில் பெரியவங்க கூறுவாங்க ஒன்று சொல் புத்தி வேண்டும் ,இரண்டு சுய புத்தியாவது வேண்டும் இன்றேல் பட்டு திருந்து ன்னு இந்த பொண்ணு பட்டு தான் திருந்தணும்.அப்போதான் இளைஞர் களின் பார்வையும் மாறும் .
என்றும் அன்புடன்
த.க.ஜெய்