PDA

View Full Version : கவிதை முயற்சிகள்...



கௌதமன்
11-12-2010, 01:41 PM
காற்றடிக்கும் சாளரத்தினருகே
திற்ந்து வைத்தப் புத்தகத்தில்
பட்ப்ட்க்கிறது பக்கங்கள்
எடையை வைத்தேன் புத்தகத்தின் மேலே

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே

பாலகன்
11-12-2010, 01:44 PM
நல்ல கேள்வி ஆமா எதை வைப்பது??
காற்றாய் வந்தவளை அங்கே வைக்க முடியாது தான் :D

யோசிக்கிறேன்.

பாராட்டுகள்

ஆன்டனி ஜானி
11-12-2010, 04:09 PM
இப்படி எல்லாம் ரூம் போட்டு இருந்து யோசிப்பிங்களோ

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே

உங்கள் காதலியை அமர சொல்லுங்கள் ......

பாலகன்
11-12-2010, 04:11 PM
உங்கள் காதலியை அமர சொல்லுங்கள் ......

அவள் நினைவுகளை அவளை பற்றிய கனவுகளை அங்கே வைக்கலாம். :D

அவள் தான் காற்றாய் வந்தவளாயிற்றே!

Hega
11-12-2010, 04:21 PM
காற்றோடு வந்தவள்
காற்றோடு போய் விடலாம்
காற்றில் அசைக்கப்பட்ட
உன்மனதை
காற்றாக்கிடாமல்.. நீ
கற்ற ஞானம்
கற்றுத்தரும்...


நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள் ....:icon_b:

கௌதமன்
11-12-2010, 05:19 PM
செவ்வகமான வீடுகள்
நேரான தெருக்கள்
ஒரே அளவில் மலைகள்
வளையாத ஆறுகள்
நிரைகளாய் நிரல்களாய் நட்சத்திரங்கள்
ஒரே மாதிரி மனிதர்கள்
தீவுகளாய் நாடுகள்
வட்டமாய் நாட்டின் எல்லைகள்
இப்போது சொல்லுங்கள்
ஒழுங்கு அழகா?
ஒழுங்கின்மை அழகா?:confused:

சூறாவளி
11-12-2010, 05:23 PM
காற்றோடு வந்தவள்
காற்றோடு போய் விடலாம்
காற்றில் அசைக்கப்பட்ட
உன்மனதை
காற்றாக்கிடாமல்.. நீ
கற்ற ஞானம்
கற்றுத்தரும்...


என்னங்க.. அவருக்கு கொஞ்ச சந்தோஷமான வரிகளை சொல்லி படபடக்க வைக்கும் அவளை எப்படியாவது மனசுக்குள் கொண்டு வரவோ அல்லது படபடக்கும் அவரோட மனசை அவளாலேயே சாந்தப்படுத்தும் வழியை சொல்றத விட்டுட்டு காற்றோடு போய்விடலாம்ன்னு சொல்லி அவரோட மனசை இன்னும் படபடக்க வச்சிட்டிங்கலே ஹேகா...... :D

கெளதமன்... நீங்க அசராம அவளையே நினைச்சிகிட்டு இருங்க... காற்று அவளிடம் போய் தூது சொல்லும் உங்கள் படபடப்பை, கண்டிப்பா அவள் வருவாள்..

பாராட்டுக்கள் நண்பரே..

கௌதமன்
11-12-2010, 05:36 PM
என் முதல் முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டும் விமர்சனமும் வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி

கவிதையை வசப்படுத்த தொடர்ந்து முயல்கிறேன்.:)

கௌதமன்
11-12-2010, 05:39 PM
காற்றடிக்கும் சாரளத்தினருகே
திற்ந்து வைத்தப் புத்தகத்தில்
பட்ப்ட்க்கிறது பக்கங்கள்
எடையை வைத்தேன் புத்தகத்தின் மேலே

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே

காற்றைப் போலவே நீயும் வந்தாய்
என்று எழுதியிருந்தால் சரியாயிருந்திருக்குமோ?

சூறாவளி
11-12-2010, 05:44 PM
காற்றைப் போலவே நீயும் வந்தாய்
என்று எழுதியிருந்தால் சரியாயிருந்திருக்குமோ?

காற்றினிலே நீயும் வந்தாய்... இது எப்புடி...:D

அமரன்
11-12-2010, 07:59 PM
காற்றடிக்கும் சாரளத்தினருகே
திற்ந்து வைத்தப் புத்தகத்தில்
பட்ப்ட்க்கிறது பக்கங்கள்
எடையை வைத்தேன் புத்தகத்தின் மேலே

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே

ஏன் பாஸ்..

பழய புத்தகக் கடைக்குப் போய்விடுவமே என்ற பயமா..

பயப்படாதீங்க..

பக்கங்கள் பலதடவை திறக்கப்பட்டு பழைய கடைக்குப் போன புத்தகத்தின் சந்தைப் பெறுமதி குறைவாக இருக்கலாம்.. உண்மைப் பெறுமதி அதிகம்..

விடுங்க..

மனப்பக்கங்களை காற்றுத் திறக்கட்டும்

எடை வைச்சுத் தடை போடாதீங்க..

தொடர்ந்து எழுதுங்க.

வாழ்த்துகள்.

அமரன்
11-12-2010, 08:03 PM
செவ்வகமான வீடுகள்
நேரான தெருக்கள்
ஒரே அளவில் மலைகள்
வளையாத ஆறுகள்
நிரைகளாய் நிரல்களாய் நட்சத்திரங்கள்
ஒரே மாதிரி மனிதர்கள்
தீவுகளாய் நாடுகள்
வட்டமாய் நாட்டின் எல்லைகள்
இப்போது சொல்லுங்கள்
ஒழுங்கு அழகா?
ஒழுங்கின்மை அழகா?:confused:

பட்டியல் இன்னும் நீளும்.

கலை’ந்திருப்பதிலும் மறைந்திருக்கிறது கலை.

எல்லாமே அழகுதான்
இதுதான் அழகென்று வரையறுக்கப்படும் வரை..

நல்லா இருக்குக் கவிதை.

பாராட்டுகள் கௌதமன்.

தொடர்கவிதைகள் பகுதிக்கு மாற்ருகிறேன். தொடர்ந்து படையுங்கள்.

பாலகன்
12-12-2010, 01:09 AM
ஒழுங்கின்மை அழகா?:confused:

ஒருவேளை அது எம்ஜியார் பட செட்டிங்கா இருக்குமோ? :D

தொடருங்கள் உங்கள் முயற்சியை

எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்

கீதம்
12-12-2010, 11:04 PM
செவ்வகமான வீடுகள்
நேரான தெருக்கள்
ஒரே அளவில் மலைகள்
வளையாத ஆறுகள்
நிரைகளாய் நிரல்களாய் நட்சத்திரங்கள்
ஒரே மாதிரி மனிதர்கள்
தீவுகளாய் நாடுகள்
வட்டமாய் நாட்டின் எல்லைகள்
இப்போது சொல்லுங்கள்
ஒழுங்கு அழகா?
ஒழுங்கின்மை அழகா?:confused:

ஐந்துவிரல் தத்துவத்தை
அதனதன் தனித்துவத்தை
அழகான கவித்துவத்தை
எடுத்தியம்புது எழுத்துவித்தை!
பாராட்டுகள் கெளதமன் அவர்களே.

M.Jagadeesan
12-12-2010, 11:57 PM
சில சமயங்களில் ஒழுங்கு தீமை பயக்கும்; ஒழுங்கின்மை நன்மை பயக்கும். நேரான அம்பு ஒரு கொலைக்கருவி. வளைவான யாழ் ஓர் இனிய இசைக்கருவி.

M.Jagadeesan
13-12-2010, 12:01 AM
காற்றடிக்கும் சாரளத்தினருகே
திற்ந்து வைத்தப் புத்தகத்தில்
பட்ப்ட்க்கிறது பக்கங்கள்
எடையை வைத்தேன் புத்தகத்தின் மேலே

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே

" நினைவாக நீயும் வந்தாய்" என்று இருந்தால் காதுக்கு இனிமையாக இருக்கும்.
கவிதை நன்று.பாராட்டுக்கள்!

கௌதமன்
13-12-2010, 12:11 PM
நன்றி நண்பர்களே! உங்கள் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.

ஆதி
13-12-2010, 12:50 PM
காற்றடிக்கும் சாரளத்தினருகே
திறந்து வைத்தப் புத்தகத்தில்
படபடக்கிறது பக்கங்கள்
எடையை வைத்தேன் புத்தகத்தின் மேலே

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே

கடைசி மூன்று வரிகள் மனதை அள்ளி சென்றுவிட்டன..

காதல் கவிதைகளுக்கே உரிய மெல்லியகரமான உணர்விழையோடுவது மட்டுமல்லாமல், மனதிலும் அந்த இழை ஒரு முடிச்சை போட்டுச் செல்கிறது கௌதம்..

சொற்தெரிவு, சொல்லப்படும் முறை, கட்டமைப்பு இவை மூன்றும் கவிதை எழுத அடிப்படையான அவசியமான மூலப்பொருட்கள், இவை மூன்றும் உங்கள் கவிதையில் இயல்பாகவே இயந்திருக்கிற*து..


சும்மா, தைரியமா கவிதை எழுதுங்க.. வாழ்த்துக்கள்...

ஆதி
13-12-2010, 12:51 PM
காற்றைப் போலவே நீயும் வந்தாய்
என்று எழுதியிருந்தால் சரியாயிருந்திருக்குமோ?

காற்றாய் நீயும் வந்தாய் என்பது பொருத்தமாகவே இடுக்கு..

கௌதமன்
13-12-2010, 01:49 PM
நன்றி நண்பர் ஆதன்!
கவிதையைப் பொருத்தவரை நடை பழகும் குழந்தை நான்
ஆதரவாய் (உங்கள்) விரலிருக்க நடப்பதொன்றும் கடினமில்லை
மன்றம் தந்தப் பாதையிலும் மலரன்றி முட்களில்லை

கௌதமன்
14-12-2010, 01:15 PM
நண்பர்கள்க் கூடி நலம் விசாரித்து
இணையத்தின் சமூக வலையத்தில்
குழுவொன்று அமைத்திட்டோம்
ஆத்ரவற்றவர்க்கு ஆதரவாய்,
ஏழைச்சிறார்க்கு எழுத்தறிவிப்பதாய்,
நட்சத்திரத்துக்கு விசிறிக் கூட்டமாய்,
விளையாட்டை விமர்சிப்பதாய்,
அரசியலை அலசிப் பார்ப்பதாய்,
ஆன்மீகத்தை பரப்புவதாய்,
அறிவியலை விவாதம் செய்வதாய்,
எண்ணற்ற குழுக்களிருக்கையிலே
நாங்கள் அமைத்திட்டக் குழுவோ
குறுந்தாடி அறிவியலார் குழு
வேடிக்கைக்காய் சொல்லவில்லை
விளையாட்டாகிவிட்டது சமூக வலையம்
அது போலல்லாது, நீடுதுயில் நீக்கப் பாடிவரும் நிலா
என் பாரதிதாசன் உரைத்திட்டபடி
பொறுப்புமிக்க மாந்தரமைத்த
சிறப்புமிக அரங்கம்தான் தமிழ் மன்றம்
ஆகையினால் அழைக்கின்றேன் தமிழ்ச் சான்றோரே
வருக! தங்கள் சிறப்பானப் பங்களிப்பைத் தருக!

நாகரா
14-12-2010, 02:51 PM
காற்றடிக்கும் சாரளத்தினருகே
திற்ந்து வைத்தப் புத்தகத்தில்
பட்ப்ட்க்கிறது பக்கங்கள்
எடையை வைத்தேன் புத்தகத்தின் மேலே

காற்றாய் நீயும் வந்தாய்
படபடக்கிறது மனது
எதை வைக்க மனதின் மேலே
இருதயச் சாளரம் திறந்தே இருக்கட்டும்
மனப் புத்தகத்தின் எண்ணப் பக்கங்கள்
காதல் காற்றில் படபடத்துக் கொண்டே இருக்கட்டும்.

அருமையான உம் காதல் கவிக் காற்றில் எம் மனமும் படபடக்கிறது, வாழ்த்துக்கள் கௌதமன், தொடருங்கள்...

கௌதமன்
14-12-2010, 02:59 PM
இருதயச் சாளரம் திறந்தே இருக்கட்டும்
மனப் புத்தகத்தின் எண்ணப் பக்கங்கள்
காதல் காற்றில் படபடத்துக் கொண்டே இருக்கட்டும்.

அருமையான உம் காதல் கவிக் காற்றில் எம் மனமும் படபடக்கிறது, வாழ்த்துக்கள் கௌதமன், தொடருங்கள்...

உங்கள் கரும்பாக்கள் என்னும் அரும்பாக்களுக்கிடையே
இவையெல்லாம் வெறும்பாக்கள்
கவிக்கு ஆதாரமாயிருக்கும் எங்கள் நாகராவின்
வசிஷ்ட வாக்கை வண்ங்குகிறேன்

நாகரா
14-12-2010, 03:13 PM
செவ்வகமான வீடுகள்
நேரான தெருக்கள்
ஒரே அளவில் மலைகள்
வளையாத ஆறுகள்
நிரைகளாய் நிரல்களாய் நட்சத்திரங்கள்
ஒரே மாதிரி மனிதர்கள்
தீவுகளாய் நாடுகள்
வட்டமாய் நாட்டின் எல்லைகள்
இப்போது சொல்லுங்கள்
ஒழுங்கு அழகா?
ஒழுங்கின்மை அழகா?:confused:
சுத்த வெளியின் அன்பொழுக்கம்
ஒழுங்கின்மையையும் அனுமதிக்கும்
பித்த மனத்தின் வன்பழுத்தம்
அன்பொழுக்கம் வெறுக்கும் மறுக்கும்
புத்தி மழுங்கி மயங்கும் உறங்கும்

உம் நவ கவியின் தீர்க்கக் கேள்விகள் அழகோ அழகு, வாழ்த்துக்கள் கௌதமன், தொடரட்டும் உம் கவிப் பெருக்கு..

கௌதமன்
15-12-2010, 12:30 PM
நண்பர் நாகராவைப் பற்றி...
வார்த்தைகளைத் தேடவேண்டாம்
ஆர்ப்பரிக்கும் கடலலைப் போல்
சொற்கள் தாமே சொக்கி வந்து
முத்தமிடும் இந்தத் தமிழ்க் கரையை (நாகரா)
களை கட்டும் பாட்டினிலே
தளை எப்படித் தட்டும்
வளை வாழும் எலியான நானுங்கள்
வலை பார்த்தேக் கற்றேன் கவி
__________________

கௌதமன்
15-12-2010, 02:19 PM
இல்லையென்றுச் சொல்லிவிடு நீயெனக்கு
தொல்லையின்றி நானிருப்பேன் துன்பமுமில்லை-ஆனால்
இடையிடையே ஏன் சிரித்து என்னை நீ கொல்லுகிறாய்

பள்ளிப்பருவமுதல் மனதைத் தொலைத்துவிட்டேன்
கள்ளியுன்னிடத்தில் காதலை நான் சொன்னதில்லை
தள்ளி நின்று நீ சிரித்துச் சொல்லாமல் சொல்லிச்சென்றாய்

நன்றாகத்தானிருந்தாய் பகை வந்துப் பிரிக்கும்வரை
இன்றுமெனக்குத் தெரியவில்லை ஏனிப்படி ஆனாயென்று
பார்த்தும்பாராமல் பாதையில்நீப் போகின்றாய்

இல்லையென்றுச் சொல்லிவிடு இப்பொழுதாவது
தொல்லையின்றி நானிருப்பேன் துன்பமுமில்லை-ஆனால்
இடையிடையே ஏன் சிரித்து என்னை நீ கொல்லுகிறாய்

நாகரா
16-12-2010, 03:54 AM
நண்பர் நாகராவைப் பற்றி...
வார்த்தைகளைத் தேடவேண்டாம்
ஆர்ப்பரிக்கும் கடலலைப் போல்
சொற்கள் தாமே சொக்கி வந்து
முத்தமிடும் இந்தத் தமிழ்க் கரையை (நாகரா)
களை கட்டும் பாட்டினிலே
தளை எப்படித் தட்டும்
வளை வாழும் எலியான நானுங்கள்
வலை பார்த்தேக் கற்றேன் கவி
__________________
உம் அன்பின் மிகுதியாலே
என் தளை தட்டும் பாட்டும்
நற்களை கட்டும் விஞ்ஞை!

எலி மூலம் "எல்"ஆம் நல்லொளியாம்
எல்லாமே துலங்கும் "எல்"அதுவும்
நெஞ்சநடு வளையுள்ளே வாழும்
வஞ்சமாய வலையதுவே அறுக்கும்

நாகத்தை வாழ்த்திய நல்லவரே
கௌதமன் பேருள வல்லவரே
நேசமாய்ப் பாடிய வித்தகரே
நீடூழி நீவிர் வாழியவே!

நண்பரே! நாகராவைப் பற்றிக் கொண்டது உம் நட்பு, வாழ்த்துக்கள், தொடரட்டும் உம் கவிப் பெருக்கு...

கௌதமன்
18-12-2010, 06:17 AM
நண்பர் பூமகள் (உறைந்த நிமிடங்கள்) கவிதைக்கு பாராட்டு

விலகிவிடு என்றுநீ தொலைதூரம் சென்றாலும்
விலகாத உன்னுருவம் கண்ணுக்குள் நிலைத்திருக்கும்
பயணம் முடிந்து விடைசொல்லிப் பிரிவதற்கு
புகைவண்டி பழ்க்கமா நம்பழக்கம்

உறைந்த நிமிடங்கள் அல்ல நெஞ்சை
உறைய வைத்த நிமிடங்கள்; உன்கவிதை
என்னைக் கரைய வைத்தக் கலவரங்கள்

கவிதாயினியே உன் கவிதைகள் ஊர்வலத்தில்
கற்பனையின் கைகோர்த்து கருத்துக்கள் நடக்கட்டும்
புதுவுணர்ச்சிகள் பூக்கட்டும்
பொன்மகளே, தமிழ்ப் பூமகளே வாழ்க
__________________________________________________________

கௌதமன்
18-12-2010, 06:45 AM
http://img138.imageshack.us/img138/4459/56804464.jpg

நண்பர் மகாபிரபு பரிசளித்தக் கவிதை

நீ ஓரிடத்திலிருக்கும்பூ; நானோ பறக்கும்பூ
வண்ணத்தைக் காட்டியெனையழைத்தாய்
மதுவிருந்ததளித்தாய்! நன்றி
பதிலுக்கு உன் மகரந்தத்தூள் சுமக்கும்
பணியை செய்யென்றால் எப்படி
__________________

கௌதமன்
18-12-2010, 06:48 AM
நண்பர் மகாபிரபு பரிசளித்தக் கவிதை
நீ ஓரிடத்திலிருக்கும்பூ; நானோ பறக்கும்பூ
வண்ணத்தைக் காட்டியெனையழைத்தாய்
மதுவிருந்ததளித்தாய்! நன்றி
பதிலுக்கு உன் மகரந்தத்தூள் சுமக்கும்
பணியை செய்யென்றால் எப்படி

கௌதமன்
18-12-2010, 03:10 PM
மற்றொருத்திரியில் நான் படைத்தது
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=293 <-பட இணைப்பு
வேலைய முடிச்சிக்கிட்டு வெரசாப் போகவேணும்
ரேசனிலக் கொடுக்குறாக ஒரு ருபாய்க்கு அரிசி

கௌதமன்
22-12-2010, 12:29 PM
தமிழ் சினிமா ஃபார்முலா
(எல்லாப் படங்களுக்குமானது அல்ல)
------------------------------------------
இந்தக் கவிதை(யா?)க்காக தமிழ்த்தாய் என்னை மன்னிக்க!
தூயத்தமிழில் முயன்றால் தலை கிறுகிறுக்குது,முடியல...
------------------------------------------
புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
பண்டிகை நாளில் வெளியீடு.
கட்அவுட்டில் ஹீரோவுக்கு அபிஷேகம்,மலர்மாலை,
முதல்காட்சிக்கு இனிப்பு வினியோகம்.
-----------------------------------------
கதைக்குள் நுழைவோம்...
விதவைத்தாயாய் முன்னாள் ஹீரோயின்.
நெற்றியில் விபூதி,கண்களில் கண்ணீர்
குடிசையில் வாசம், போட்டோவில் அப்பா.
ரீபோக் ஷூவும், ரேபேன் கண்ணாடியுமாக
கூலிவேலைச் செய்யும் மகனாக ஹீரோ.
அறிமுகப்பாட்டால் அதிரும் அரங்கு, சிதறும் நாற்காலிகள்.
வயதுக்கு மீறிய பேச்சுடன் ஃபுல் மேக்கப்பில்
பூ வியாபாரம் செய்யும் தங்கையாக வளர்ந்து வரும் நடிகை.
கல்லூரியில் படிக்கும் வில்லனின் மகள்.
வட நாட்டு இறக்குமதி,தகுதி-தமிழ் தெரியாது.
கதைப்படி குறும்புக்காரி, சுற்றிலும் தோழியர், ஊர்சுற்றல்,
ஹீரோவுடன் சந்திப்பு, முதல் சந்திப்பில் மோதல்.
வம்பு செய்யும் ரவுடியிடமிருந்து காப்பாற்றியபின் காதல்.
உள்நாட்டு லொக்கேசனில் மரத்தைச் சுற்றி பாடல்.
மகளின் காதலைத் தடுக்க வில்லனின் ஏற்பாடுகள்,
சண்டைக் காட்சியில் ஹீரோவின் டூப்பின் சாகசங்கள்.
கிளைக்கதையாய் தங்கையின் காதல்,கவர்ச்சிக் காட்சிகள்,
கர்ப்பம்,காதலன் ஏமாற்று,தற்கொலை முயற்சி.
ஹீரோ காப்பாற்றி அப்பா போட்டோ முன் சபதம்.

------------இடைவேளை----------------------

தங்கையின் பிரச்சனையால் காதலர்கள் தற்காலப்பிரிவு,
சோகம், டாஸ்மாக்கில் தண்ணியடி, தத்துவப்பாட்டு.
காதலன் நிலைகண்டு காதலி வருத்தம்,தோழியர் ஆறுதல்.
தங்கையின் காதலனைத் திருத்தி, ஊர் மெச்சத் திருமணம்.
திருமணத்தில் குத்துப்பாட்டு,பாட்டின் முடிவில்
ஹீரோ-ஹீரோயின் மீண்டும் சந்திப்பு.
வில்லனுக்குத் தெரியவர காதலியின் திருமண ஏற்பாடுகள்,
மாப்பிள்ளை வில்லனின் நண்பரின் மகன், காதலி மறுப்பு,
அதனால் வீட்டுக்குள் சிறைவைப்பு,
ஹீரோ முயற்சியில் காதலி தப்பித்தல்,
ஊர்ப்பெரியவரான கௌவரவ நடிகர் அடைக்கலம் தருதல்,
ஹீரோவுடன் ரகசிய திருமண ஏற்பாடுகள்,
டைரக்டர் போகவிரும்பிய வெளிநாட்டில் பாடல்.
கிளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வில்லன்.
ஹீரோவின் தாய் கடத்தல்,தடுத்த தங்கை தாக்கப்படுதல்,
மகளை அனுப்பும்படி மிரட்ட பழைய பாக்டரியில் தாய் அடைப்பு,
காவலுக்கு மாமிச மலைகளாய் ஸ்டண்ட் நடிகர்கள்,
சுவரை உடைத்து ஹீரோ வருகை,சண்டை, ரத்தம்.
தாய் செண்டிமெண்ட் வசனம், வில்லன் திருந்துதல்,
ஹீரோ காதலியைக் கரம்பிடித்தல்,பின்னணியில் லல்லல்லா
குரூப் போட்டோவில்,டைரக்டர், தயாரிப்பாளருடன் சுபம்.
--------------------------------------------
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்,
வெளிவந்த இரண்டே நாட்களில்,
புத்தாண்டு ஸ்பெஷலாக
சின்னத்திரையில் ஒளிபரப்பு,ஸ்பான்ஸர்கள்,விளம்பரங்கள்.
--------------------------------------------
மீண்டும் புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
வாழ்க தமிழ் சினிமா!
நன்றி!

கௌதமன்
22-12-2010, 04:15 PM
கவிதை(?) திரைப்படங்கள் எதையாவதை நினைவுப்படுத்தினால் நான் பொறுப்பல்ல.

கௌதமன்
22-12-2010, 05:28 PM
நண்பர் கீதம் அவர்களின் கவிதைக்கு பாராட்டும்
கடந்து வந்த இளமையின் ஞாபகங்களும் பரிதாப வாழ்வு யாருக்கடி?

என் சிறு வயது பருவத்தை
மீண்டும் ஞாபகப் படுத்தியது உங்கள் கவிதை

என்னுடைய இளம்பிராயம் என்பது
கோலிக்குண்டும், பம்பரமுமாய்
சுற்றிய காலம், சைக்கிள் டயரை ஓட்டிய காலம்
கிராமத்தில் தொலைக்காட்சி
கால் பதித்தக் காலம்
கால மாற்றத்தின் சாட்சியாயிருந்த காலம்!

ஹிந்தி தர்ஸனாக இருந்த தூர்தர்ஸன்
சித்ர்ஹாரில் ஹிந்திப்பாட்டு
அரிதாய் சித்ரமாலாவில் ஒரு தமிழ்பாட்டு
மூன்று மாததிற்கொருமுறை தமிழ்படம்
அதுவும் விருது வாங்கிய சோகப்படம்
ஞாயிறன்று இராமாயணம் (தினமலரில் தமிழ் வசனம்)
என்றிருந்த சமயத்தில்
மண்டல ஒளிபரப்பாய் நுழைந்தது
சென்னை தொலைக்காட்சி!

ரிமோட் மாற்ற அவசியமின்றி
ஒற்றுமையாய் ஒலியும் ஒளியும்,
செவ்வாயன்று நாடகம் (ஒரே சோபா, நாற்காலி,..)
8.40-ல் தமிழில் செய்திகள் (சோபனா ரவி, ஈரோடு தமிழன்பன்,..)
வயலும் வாழ்வும்,எதிரொலி
ஞாயிறு தோறும் தமிழ்த்திரைப்படம்
காண வீடு நிறையக்கூட்டம்!

நினைத்தாலே இனிக்கும்
இளமைக் காலங்கள் அது (சினிமா பேரு அதுவாவே வருது)
நன்றி கீதம்.
___________

கௌதமன்
25-12-2010, 02:02 AM
Originally Posted by நாகரா
வட மொழி மோகத்தில்
அதைத் தேவ பாஷை என்பேன்!
தாய்த் தமிழை துவேஷித்து
அதை நீச பாஷை என்பேன்!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
தான் தோன்றி மூத்த நற்றமிழைக்
கல் முன்னே சொல்லத் தகாதென்பேன்!
தமிழில் பூசையென்றால் அடாவடி செய்வேன்!

எதிர்வினையாக என் பின்னூட்டக் கவிதை

கல்லாயிருப்பதன் முன்னே எந்தமிழை
சொல்லாதிருப்பதே நன்று - எம் தோழர்
கல்லாதிருக்கும்படி சொன்ன வடமொழியே கேள்!
நல்லார் பயின்மொழி எம்மொழி-அதை
தள்ளார் அதன் சுவை அறிவார் - அதை பழிக்க
உள்ளார் இவரென அறிந்தால் - எதிர்க்க தமிழர்
எல்லாருமே வருவார்! பலம் தருவார்
__________________

கௌதமன்
02-01-2011, 04:04 PM
சேரும் புள்ளி [கவிச்சமர் - களம் திரியில் செய்த பதிவு]

இருக்குமோ என்று சந்தேகத்தோடும்;
தீர்க்கமாய் இருக்கிறது என்றும்,
இல்லவே இல்லையென்றும்
நம்பும் கூட்டம் எல்லாம் சேருகின்ற
ஒரு புள்ளிதான் ஞானம்!

இருக்கிறார் என்பாரும் தன்னில் தேடாமல்
தலங்களில், தவத்திருக்களில் தேடுகின்றார்.
தன்னை மதிக்கிறவர் (சுயமரியாதை)
வெளியில் எங்கும் இல்லையென்கின்றார்.

எங்கும் எதிலும் தன்னிலும் பிறரிலும்
உயிரிலும் சடத்திலும் காண்பாரெனில்
இல்லையென்பதும் இருக்குமென்பதும்
ஒன்றுதானே!
__________________

கௌதமன்
02-01-2011, 04:08 PM
நீங்களே சொல்லுங்கள் [கவிச்சமர் - களம் திரியில் செய்த பதிவு]

மறந்து போனேன்
மாலைநேர வேலைகளை
மன்றத்தில் நுழைந்த நாள்முதலாய்.
கடைக்குப் போக, புத்தகம் படிக்க,
கைபேசியில் கதைக்க, தொலைக்காட்சிக் காண என்று எல்லாம்
மறந்துதான் போனேன்.
இதையும் மீறி ஞாபகம் வைத்து
என்றைக்காவது ஒருநாள் பிள்ளைகளிடம்
படிப்பைப் பற்றி கேள்வி கேட்டால்
பிள்ளைகளே சொல்கிறார்கள்
அதை அம்மா பார்த்துக்கொள்வாள்
நீங்க மன்றத்துக்கு போங்கவென்று
நானென்ன சொல்ல
நீங்களே சொல்லுங்கள்!

Hega
02-01-2011, 08:58 PM
இப்படி மீண்டுமாய் பதிவதன் காரணம் என்ன கௌதமன் அவர்களே.....

கௌதமன்
03-01-2011, 12:32 AM
இப்படி மீண்டுமாய் பதிவதன் காரணம் என்ன கௌதமன் அவர்களே.....

1) கொஞ்ச நாள் கழித்து எந்தத் திரியில் எதைப் பதித்தோம் என்று தெரியாமல் போய்விடும் அதற்காக முன்னேற்பாடாய்...
2) இது ஒரு தொகுப்பாக இருக்கும். மலரும் நினைவுகளுக்காய்.
3) சமயம் கிடைக்கும் போது கவிதைகளை இன்னும் மெருகேற்றலாம். இன்னும் சரமாகத் தொடுக்கலாம். அப்படி மெருகேற்றியதுதான் இளம்பிராய நினைவுகள், தமிழ் சினிமா ஃபார்முலா கவிதைகள்.

தவறா?

நன்றி!