PDA

View Full Version : என் தேடுதல்கள்.... மறக்கவியலா நாள் என்றுHega
09-12-2010, 10:08 PM
மன்றம் வந்த நாள் தொடக்கம்
அங்கிங்கெனும் பிரித்து கிறுக்கிட்டவை
இங்கொன்றாக்க உதவிய
மகா பிரபுவுக்கு என் மஹா நன்றி.....அன்புள்ள சகோதரியே!

இதோ உங்கள் கவிதை பதிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில், இதை அப்படியே எடுத்து ஒரு தனித்திரியாக துவங்கி அதற்கு உங்கள் பெயருடன் கவிதைகள் தொகுப்பு என்று பெயரிட்டு இனி எழுதப்போகும் கவிதைகளையும் அதிலேயே தொடருங்கள்.

அன்புடன்
மகாபிரபு

Hega
09-12-2010, 10:11 PM
(22-03-2010)


இறைவா நீ வர வேண்டும்என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ இருக்க வேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
வாழ்வை சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலந்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய்--மலர வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலேநான் மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
(25-03-2010)

ஓ.........மனமே

ஓ.........மனமே
நீ எங்கே போகிறாய்?
மண்ணான உலகில்
திண்டாடும் உயிரைக்
கண்ணாரக் காண்பாயோ?..........

மண்ணுக்கே போகும்
மன்னவனே……..நீ
போகும் பாதை
இன்னதென்பதை…………..
அறிவாயா?

வாழ்க்கையிலே போராட்டங்கள்
வழிகளிலெல்லாம் முட்செடிகள்,
விழிகளிலெல்லாம குருதித்துளிகள்…………
எதிர்பார்பபெல்லாம் ஏமாறறங்கள்.
தொடர்வதேனோ மனிதனே...

மண்ணிலே உயிர்த்த மானிடனே.....
மரணம் உன்னை நெருக்கிடும்
போதும் மௌனமாய் இருக்கிறாய்.?.
நிற்பதற்கே இடமில்லை,
நீ பற்றிப்படர நினைப்பாயோ?

இன்னும் உறங்கிடும்..மனமே
பொறுமையை தகர்த்திடு மனமே
பொங்கி எழுந்திடு….மனமே
வெறுமையை போக்கிடு……மனமே
வேதனை நீக்கிடு…மனமே …

உன் உறக்கத்தை கலைத்திடு ……மனமே
விழித்திடு மனமே,,ஜெயித்திடு தினமே ..
நீ போகும் பாதையை உணர்ந்திடு…….மனமே!!!!பின்னூட்டங்களோடு....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23130

Hega
09-12-2010, 10:13 PM
(27-03-2010)

நாள் தோறும் தேடுகின்றேன்

தேவதைகள் வாழ்க்கையென்றும்
தேனாக இனிப்பதில்லை.
தினம் தோறும் தொடர்ந்து வரும்
கவலைகளும் அழிவதில்லை

விடையறியா தேடுதல்கள்
வலிபோக்கும் மருந்தானதில்லை
சோர்ந்து போன உள்ளமதில்
சுமையென்றும் அகல்வதில்லை.

நிலையில்லாத உலகினிலே
நிம்மதியும் நிலைப்பதில்லை
நினைத்தெல்லாம் நடக்குமென்னும்
நினைவுகளும் அழிவதில்லை.

அனைத்தையும் நேசிக்கிறேன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்
வலியில்லாத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்.


பின்னூட்டங்களோடு....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23179
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23179

Hega
09-12-2010, 10:15 PM
(28-03-2010)

எல்லாமே நீயானாய்


கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்


பின்னூட்டங்களோடு....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23186

Hega
09-12-2010, 10:18 PM
( 26-11-2010 )


என் அன்பு


நீ என்னை வெறுத்தால்
நான் உன்னை நேசிப்பேன்.
என் இருதயம் அன்பாலானது

நீ என்னை அவமதித்தால்
நான் உன்னை கௌரவிப்பேன்.
உன்னை போல் நான் முட்டாளல்ல

நீ என் துன்பத்தில் சிரித்தால்
நான் உன் துன்பத்தில் அழுவேன்.
நீயும் நானும் ஒருவரல்ல

நீ என்னை காயப்படுத்தினால்
நான் உன் வலி போக்குவேன்.
உன்னைப்போல நான் மாறமாட்டேன்

நீ என்னை அவமானப்படுத்தினால்
நான் உன் தோல்விநேரம் கலங்கிடுவேன்.
என் மனம் கல்லானதில்லை .

என் குறைகளை நீ இகழும் நாளில்
உன்னை நான் தினம் புகழ்ந்திடுவேன்
உன் வழிகள் என் வழிகளல்ல

என் வெறறியை நீ மறுதலித்தால்
உன் சோர்விலே நான் துணை வருவேன்.
எனக்குள்ளே இருப்பதேல்லாம் உன் நினைவே

என்னிடம் நீ சண்டையிட்டால்
உன்னோடு நான் சமாதானமாவேன்.
என் அன்பு தூய்மையானதே

தாழ்மையோடும் பொறுமையோடும்
உன் கடினப்பட்ட மனதை
என் அன்பால் ஜெயித்திடுவேன்.


பின்னூட்டங்களோடு.... http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25411

Hega
09-12-2010, 10:21 PM
(26-11-2010 )


எதிர்பார்ப்பு


காளை உன்னை நெஞ்சில் வைத்து
கற்பனைகள் பல கட்டினேன்
உன் ஆதரவும் அன்பும் கண்டு
அறிவிழந்து உனை நாடினேன்

எதிர்காலம் உன்னால் சிறக்குமென
இறுமாப்பாய் நான் காத்திருந்தேன்
காத்திருந்த எனக்கு நீயோ
முடிவை தந்தாய்
கல்லை போனற இதயத்தினால்

காத்திருந்த காத்திருப்பும்
கற்பனையின் சந்தோஷங்களையும்
கல் வீட்டு நிலையாக்காமல்
மணல் வீடாய இடித்ததேனோ


பின்னூட்டங்களோடு .....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25412

Hega
09-12-2010, 10:24 PM
(06-12-2010)

நாமாகி இருந்தால்


மன்னிக்க மாட்டாயா? -உன்
மனமிரங்கி …………
மாற்றிட மாட்டாயா?--உன்
மனதை நீ……..

காயங்கள் ஒருநாள்
மாறிடும் போது
கண்டிட வருவேன்
கலக்கங்கள் தீர்ப்பேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

அன்றொரு நாளில்-- நீ
தந்த நம்பிக்கை
என்னில் நிலைத்திடும் போது
ஜெயம் பெற்று வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

பள்ளி சென்ற போதினில்
நாம் கற்ற பாடங்கள்
என்னை உயர்த்திடும் போது
உன்னைத்தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

நல்ல நட்பின் புகலிடமாய்
அணையாத அன்போடு
இணையாக திரிந்த காலங்கள்
நினைவில் நான் தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

நான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்
தண்டனைக்கு பயந்தே,நான் விலகிப்போனேன்.
நான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது
சுடராக வருவேன்.
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

தானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,
நாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ?

Hega
09-12-2010, 10:26 PM
(07-12-2010)

அன்பு என்பது........

பாசம் என்பது பாரமாகுமா..

நேசம் என்பதும் நெஞ்சைத்
தொட்டுச்செல்லுமா...?

வாழ்க்கை முழுவதும்
வாதை ஆகுமா
இன்பம் தேடினால்
என்றும் இனிமை போகுமா?

அன்பாய் அரவணைப்பதும் .
என்னை அடிமை ஆக்குமா.
இத்தனை வலி ,,
இந்த அன்பில் தோன்றுமா?

பந்தம் என்பதும்
பாசம் என்பதும்
வந்த சொந்தத்தால்
நிந்தை ஆகுமா?

பேதை என் உள்ளம்
வேதனை தனை
சோதனையோடு
சகிக்க வேண்டுமா?


இல்லை...........இல்லை


அன்பு என்பது
அன்னை அன்பை ஜெயிப்பது
பாசம் என்பது
தந்தை அறிவைக்கொடுப்பது

நேசம் என்பது
நட்பில் நிழலாய் இருப்பது
அணைப்பு என்பது
அகிலம் ஜெயிக்க செய்வது

வாழ்க்கை முழுவதும்... ஜெயிக்கும்
வல்லமை தருவது
நினைக்கும் போதிலே
இனிய நினைவைத்தருவது

பந்தம் என்பது
உயிர் கொடுப்பது
சொந்தம் என்பது
என்றும் நிலைத்து நிற்பது.

துன்ப நேரத்தில் பெரும்
நிழலாய் இருப்பது
துவளும் போதிலே
தாங்கும் தூணாய் இருப்பது

இத்தனை பயன்
இந்த அன்பில் இருக்க
அத்தனை அன்பும் எனக்கு
வேண்டாம் என்பேனா.... ?


பின்னூட்டங்களோடு .....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25523

Hega
09-12-2010, 10:29 PM
(05-12-2010)வார்த்தைகள் மௌனமாயானதேன?


வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
உணர்வுகள் நிறைந்ததால்
உறக்கத்தை தொலைத்ததேன்?

ஊர்வலம் சென்றிடும் நினைவுகள்
இனியதாய் தோனறிய நாளிலே
பழகிய பாசமும் பகிர்ந்திட்ட நேசமும்
வேசமாய் போனதால் மோசமாயானதேன்?

தூங்கிக்கிடக்கும் வலிதனை
உணர்வுகள் கிழித்துப்போட்டதால்
கண்களில் வழியும் கனவுகள்,
இதயத்தைஅடைத்திடும்
இதமான வலியானதேன்?

தூங்கும் என் நினைவுகள் தூங்கட்டும்
வலிகளால் வடிந்திடும் குருதியில்
என் உயிர் நிசபதமாய் ஆகட்டும்
என் மௌனமே வாழ்வினில் ஜெயிக்கட்டும்.

பின்னூட்டங்களோடு .....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25522

Hega
09-12-2010, 10:31 PM
(05-12-2010)


என் நம்பிக்கையே!


இயற்கையில் இளகிடும்
மனதினைகொடுத்து
இமயமாய் அதிலொரு
கனவினைத்தொடுத்து
இளகிய மனமது
இறைவனைத்தேடுது
இனியொரு வரமில்லை
இறங்கி நீ வா...

இன்னல்கள் தொல்லைகள்
இதுவரை போதும்
ஏன் இந்த வாழ்வென்ற
கேள்வியும் போதும் .
இருப்பதை உணர்ந்து
இனியேதும் வேண்டேன்
எனக்கென மறுபடி
இரங்கி நீ வா....

நான் தவறிடும்
வேளையில் கலங்கிவிடாது
தவறுகள் சகித்து
தயங்கியே நித்தம்
தவித்திடும் வேளையில்
தாய் மடி நீயாகி
என்னைக்காத்திட வா

இறைவனின் கரமே
இணையற்ற உறவாய்
எனை அணைத்திடும் நாளில்
இனியெனக்கில்லை
இகமதில் துன்பம்
இறுமாந்திருப்பேன்
சீக்கிரம் வா

இன்பத்தில் துன்பம்
இன்னல்கள் இல்லை
இனியென்றும் சுகமே
இறைவனின் கரத்தில்
இயலாமை அகன்று
இடுக்கண்கள் நீங்கி
நீடித்த நாட்கள் நிம்மதி
தந்திட வா...

அலை மோதும் உலகினிலே
அன்பினைத்தேடி
யாரிடம் செல்வேன்
உம்மையே நான்
அண்டியே வந்தேன்
இறையே என்
அடைக்கலாமானாய்
எனக்காக வா

பின்னூட்டங்களோடு .....http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25522

Hega
09-12-2010, 10:37 PM
அப்பாடா எல்லாமே தொகுத்தாகி விட்டது...

இனி புதிதாவோம்...

Hega
09-12-2010, 10:39 PM
மின்மினிப்பூச்சியாய்


மின்னி மின்னி மறையும்
மின்மினிப்பூச்சியாய்
கண்ணிமைப்பொழுதினில்
காலமோ ஓடுதே .

கடந்து வந்த பாதையோ
கதை பல சொல்லுதே..
கண்ணீர்கள் அனைத்தையும்
காலம் தான் துடைக்குதே...

அலைந்திட்டேன் பல நாட்கள்
அமைதலோ இல்லையே
மறதியின் பூமியில்.. பல கதை
மறக்க முடியல்லையே-

மாறாத இன்பமாய் ...பூ
மலரான காலங்கள்.
மனதுக்குள் காயங்கள்
மௌனமாய் அழுதேனே

கண்ணிமை நேரத்தில்
மின்னலாய் வியாகுலம்
சட்டென மறைந்திட
பற்றினேன் உம்மையே.

வந்தீரே என்னகம் தங்க
தந்தீரே நம்பிக்கை
வற்றாத நீரூற்றாய்.. வரும்
வாதையை ஜெயிப்பேனே.

பாலகன்
10-12-2010, 03:27 AM
ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! :D

மின்மினி கவிதைகள் மிக அருமை. கவிதை மட்டும் அருமை. உள்nளெ பல விசயங்கள் பொதிந்துள்ளது எங்களால் உணரமுடிகிறது.
எது எப்படியோ இப்ப மகிழ்ச்சியாய் இருந்தா சரி.

அன்புடன்
மகாபிரபு

சூறாவளி
10-12-2010, 03:55 AM
மின்மினி பூச்சி கவிதைக்கு சபாஷ்...

இக்கவிதை தாங்கி வந்த பல வரிகள் உண்மையே... எப்போதும் மனதினுள் ஏற்படும் வடுக்களுக்கு காலம்தான் சிறந்த மருந்து.. ஆம் காலம்தான் அதை மறக்க செய்யும்..


கண்ணிமை நேரத்தில்
மின்னலாய் வியாகுலம்
சட்டென மறைந்திட
பற்றினேன் உம்மையே

சரி எல்லாம் சொன்னிங்க இதுல மறைஞ்சிருக்கிறது யாருன்னு அப்படியே கவிதையில சொல்லலாம்ல.. அதை மட்டும் மறைச்சிட்டிங்க..:D:lachen001:

பாராட்டுக்கள்..

தொகுப்பாக வழங்கி உதவி புரிந்த மகாபிரபுவுக்கு நன்றிகள்.

Hega
10-12-2010, 10:25 AM
ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! :D

மின்மினி கவிதைகள் மிக அருமை. கவிதை மட்டும் அருமை. உள்nளெ பல விசயங்கள் பொதிந்துள்ளது எங்களால் உணரமுடிகிறது.
எது எப்படியோ இப்ப மகிழ்ச்சியாய் இருந்தா சரி.

அன்புடன்
மகாபிரபு

அப்போ மத்ததெல்லாம் அருமையல்லாது போய் விட்டதோ ...

எப்போதும் மகிழ்ச்சி என் கூடவே இருக்கும். அப்பப்போ இழப்பின் ஏக்கம் எட்டிபார்க்கும். .தங்கள் வாழ்த்துக்கு நன்றி பிரபு.

Hega
10-12-2010, 10:28 AM
மின்மினி பூச்சி கவிதைக்கு சபாஷ்...

இக்கவிதை தாங்கி வந்த பல வரிகள் உண்மையே... எப்போதும் மனதினுள் ஏற்படும் வடுக்களுக்கு காலம்தான் சிறந்த மருந்து.. ஆம் காலம்தான் அதை மறக்க செய்யும்..சரி எல்லாம் சொன்னிங்க இதுல மறைஞ்சிருக்கிறது யாருன்னு அப்படியே கவிதையில சொல்லலாம்ல.. அதை மட்டும் மறைச்சிட்டிங்க..:D:lachen001:

பாராட்டுக்கள்..

தொகுப்பாக வழங்கி உதவி புரிந்த மகாபிரபுவுக்கு நன்றிகள்.


தனித்திருந்தேன் என தவித்திருந்தேன்..
காட்டில் நடுவே... கடவுள் வந்தார்னு சொன்னால் நம்பவா போறிங்க..

இது எப்பூடி பனித்துளி.......:aetsch013:.

பாலகன்
10-12-2010, 02:17 PM
அப்போ மத்ததெல்லாம் அருமையல்லாது போய் விட்டதோ ...

எப்போதும் மகிழ்ச்சி என் கூடவே இருக்கும். அப்பப்போ இழப்பின் ஏக்கம் எட்டிபார்க்கும். .தங்கள் வாழ்த்துக்கு நன்றி பிரபு.

ஐய்யோ நான் அப்படி சொல்லவில்லை! கவிதைகள் ஒரே இதத்தில் இருப்பதை நன்று என்றேன். மற்றபடி சோகம் இழைந்த கவிதையை கண்டு அப்படி சொன்னேன்.

மீண்டும் பாராட்டுகள்

Hega
10-12-2010, 03:10 PM
அப்படியா அடுத்து வருவது....

ஊர் கூடி பாடும் சோக கீதம்..

காத்திருங்கள்....

பாலகன்
10-12-2010, 03:29 PM
அப்படியா அடுத்து வருவது....

ஊர் கூடி பாடும் சோக கீதம்..

காத்திருங்கள்....

ஊரு கூடி பாடும் சோக கீதம்..?
சரி அதையும் தான் பார்க்கலாமே?
தொடரட்டும் உங்கள் பயனம்

Hega
10-12-2010, 07:17 PM
நானு செய்த பாவம் என்னங்க?

உலகம் போற போக்கைப்பாத்து
ஒளிஞ்சி கொண்ட எங்க ஆண்டவரே.........
கொஞ்ச மனமிரங்கி
எங்கள பாருங்க.

உயிரக்குடுத்து காடு
கழனி வெட்டிக்கிட்டோமுங்க,
வாயைகட்டி வயித்தக்கட்டி
வீடு ஒண்ணும் கட்டிக்கிட்டோமுங்க

நாங்க தாங்க படிக்கல்ல,
நம்ம புள்ளயாச்சும் படிக்கணுமிண்ணு
ஊரெல்லாம் ஒண்ணு சேர்ந்து
பள்ளிக்குடமும் கட்டிக்கிட்டோமுங்க,

வியர்வை சிந்த மண்ணக்கொத்தி,
பசள போட்டு பதப்படுத்தி
வித விதமா விதை விதைச்சி
பயிரும் வச்சி

ஊருக்கெல்லாம் சோறு போட்டோங்க,
இப்ப நானு வாழ சோறு கேட்டு
நாயி மாதி அலையிறேனுங்க.
கோவில் குளம் எல்லாம் கட்டி

கோபுரமும் பெரிசாக்கட்டி ...
நோய் நொடின்னு வந்திட்டா
வைத்தியரு ஆசுப்பத்திரி
ஆனதெல்லாம் நமக்கு இருந்திச்சிங்க.

நாடுதாங்க நமக்கில்ல
வீடாச்சும் இருக்குதேண்ணு......
வயசான காலத்தில ஓய்ஞ்சிருக்க
நினச்சி நானும் கோட்டை

எல்லாம் கட்டிகிட்டேனுங்க.
இப்ப நம்ம வாழ்வே
சிதஞ்சி போச்சிங்க
வீடும் இல்ல வாசலும் இல்ல.

குழந்த குட்டி ஊனமாக
பெண்டு பிள்ளக படும்பாட
பாத்து நமக்குக்கண்ணீர்
வரல்லங்க………

கண்ணீரெல்லாம் வத்திப்போச்சுங்க.
எண்ட ரத்தத்தாலநிறஞ்சி போச்சிங்க.
ராசா மாதி இருந்தேனுங்க.
எல்லாமே இருந்திச்சிங்க

இப்ப எல்லாமிருந்தும்
ஒண்ணுமில்லாம
நாதியத்துப்போயித்தேனுங்க
நா தினமும் சாகுறேனுங்க. .


நானு செய்த பாவம் என்னங்க?
கல்லுப்போல கிடக்குற
ஐயாசா………மிபெரிய சாமி,….
சின்னச்சாமி எல்லாச்……

சாமியும் ஒண்ணு சேருங்க
எங்க மேல இரக்கம் காட்டுங்க
சீக்கிரமா வழியக்காட்டுங்க.
நானு நிம்மதியா சாகணுமுங்க..

சூறாவளி
11-12-2010, 01:33 AM
தனித்திருந்தேன் என தவித்திருந்தேன்..
காட்டில் நடுவே... கடவுள் வந்தார்னு சொன்னால் நம்பவா போறிங்க..

இது எப்பூடி பனித்துளி.......:aetsch013:.

நம்பிட்டோம்ல....:p அட சத்தியமா நம்பிட்டே புள்ள...:lachen001::icon_rollout:

சூறாவளி
11-12-2010, 01:46 AM
நானு செய்த பாவம் என்னங்க... ??

கேள்விகள் கேட்டே அதுவும் பாமரனின் மனக்குமுறல்களை அதே அவர்களின் பேச்சு வழக்கில் எளிமையான சொற்கள் பயன்படுத்தி இக்கவி சிற்பத்தை செதுக்கியதால்... இது என்னை கவர்ந்தது என்பதில் ஐயமில்லை... சபாஷ்.. ஹேகா அவர்களே...:icon_b:


நானு செய்த பாவம் என்னங்க?
கல்லுப்போல கிடக்குற
ஐயாசா………மிபெரிய சாமி,….
சின்னச்சாமி எல்லாச்……இதைதான் நானு கேட்கிறேன்.. அவங்க செய்த பாவம் என்னங்க?

கடசி வரை அதை சொல்லவே இல்லை.. :confused:

Hega
11-12-2010, 11:42 AM
நன்றி பனித்துளி.

பாலகன்
11-12-2010, 01:51 PM
ராசா மாதி இருந்தேனுங்க.
எல்லாமே இருந்திச்சிங்க

நீங்க எந்த ராசாவை சொல்றீங்க :D

சாமீ சாமீன்னு செஞ்ச பாவத்துக்காக (சாரி தெரியாத பாவத்துக்காக) நோ நோ! பாவம் செஞ்சோமான்னே முதல்ல டவுட்டு! கவிதை மிக அருமை Hega

தொடர்ந்து எழுதுங்கள். எங்களை கவிதைகளால் மகிழ்விக்கும் உங்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்

ஆன்டனி ஜானி
11-12-2010, 03:42 PM
ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்லுவார்கள்

ஆனால் உழைத்து ஊருக்கு கொடுக்காதே ........

சாமியும் ஒண்ணு சேருங்க
எங்க மேல இரக்கம் காட்டுங்க
சீக்கிரமா வழியக்காட்டுங்க.
நானு நிம்மதியா சாகணுமுங்க..

இந்த அனியாயத்த எங்க போய் சொல்ல கடவுளே !!!!

சாக வேண்டுமானால் சாமி வேண்டாம் ........

வாழ்வதற்க்கு மட்டும் தான் சாமி வேண்டும் ..........ஒக்கேயா ......

Hega
12-12-2010, 10:53 PM
நன்றிகள் பிரபு . ஜானி,பனித்துளி

நான் இக்கவிதையை ஈழபோர் நடந்த காலகட்டத்தில் ஒரு ஈழபாமரனின் மனக்குமுறலாக நினைத்தே எழுதினேன்.

ஈழத்தமிழன் சாவில் கூட நிம்மதியாக சாக முடியாதிருந்த கால கட்டமல்லவா அது.

அதனால் தான் நிம்மதியாக சாகவாவது கடவுளருள் செய்யகூடாதான்னு கேட்டேன்.

Hega
12-12-2010, 10:57 PM
பாசம் என்பது என்ன..


பாசம் என் தூக்குகயிறாகிடுமானால் நான் ஏன் அதை தேட வேண்டும்
பாசத்தை பணத்தால் வாங்கிட முடிந்தால் ஏன் அன்பையும் பாசத்தையும் ஒருவரிடம் மண்டியிட்டு யாசிக்க வேண்டும்..


பாசமென்பதும்
அதில் வாசம்
செய்வதும
அதீத நேசத்தால்
மோசமாகுமோ

என அகந்தையால்
நான் இழந்ததும்
உந்தன் பாசத்தால்
நீ இழப்பதும்
நாளை என்பதை
தூரமாக்குமா

அஞ்சி வாழ்வதும்
கெஞ்சி நிற்பதும்
மிஞ்சிப்போனதால்
எஞ்சியதென்ன
தஞ்சமும் நீயே என்
சிந்தையும் நீயே

பாசம் என்பது சிந்தை
நோக வைத்திட்டால்
பாசத்தின் கட்டு
நெஞ்சை இறுக்கிடும்
உண்மை நேசம் புரிந்தால்
வாழ்வு இனித்திடும்

சூறாவளி
12-12-2010, 11:18 PM
பாசமென்பதும்
அதில் வாசம்
செய்வதும
அதீத நேசத்தால்
மோசமாகுமோ


பாசம் வைப்பதும் நேசம் கொள்வதும் எப்போதும் மோசமாகாது..... நாம் அதே போல் நாம் நேசிப்பவரிடமிருந்து எதிர்பார்த்து அந்த பாசமும் நேசமும் கிடைக்காத நேரம் தான் அது மோசம் போனதாக நம்முல் நினைக்க தோன்றும்..

ம்ம்ம்... இக்கவிதை வரிகள் பாசத்தாலும் நேசத்தாலும் எதிர்பார்த்து கிடைக்காத வலியை மென்மையாய் உணர்த்துகிறது...

கவி வரிகளுக்கு பாராட்டுக்கள்..

பிரேம்
13-12-2010, 01:14 AM
கவிதைகள் அருமை..

Hega
13-12-2010, 08:20 PM
நன்றி பனித்துளி
நன்றி பிரேம்

Hega
13-12-2010, 08:25 PM
வாழ்ந்து காட்டிடலாம்வாழ்ந்து கா்ட்டிடுவோம்
வறுமையை ஓளித்தி்டுவோம்
வாடிநிற்கும் மலர்களுக்கெல்லாம்
வழிகாட்டியாகி வாழவழி
செய்திடுவோம்

விழுந்து விட்டால் எழுந்தி்டுவோம்
கவலைகள்,கண்ணீரெல்லாம்
துடைத்தி்டுவோம் எதிராய் வரும்
சூழ்ச்சிதனை முறியடித்து
ஜெயித்தி்டுவோம்

வாழ்க்கையது மேடுகளும்
பள்ளங்களூம் கொண்டதென
புரிந்தே நாம்,கலக்கங்களை
நீக்கி கார் காலமதை
ஜெயித்திடுவோம்

சோர்வதுவோ சூழ்ந்திட்டால்
சோகம் எல்லாம் அகற்றி்டுவோம்
தோல்விகளே தொடர்ந்திட்டால்
தோல்விகளை தோற்கச்செய்தே
ஜெயித்தி்டுவோம்.

தமிழரெல்லாம் ஒன்றுபட்டு
தரணியையே அசைததிடுவோம்.
வீறு கொண்டு எழுந்திடுவோம்
வானமதை வில்லாக
வளைத்தி்டுவோம்

சூறாவளி
13-12-2010, 10:11 PM
வாழ்ந்து காட்டிடலாம்சோர்வதுவோ சூழ்ந்திட்டால்
சோகம் எல்லாம் அகற்றி்டுவோம்
தோல்விகளே தொடர்ந்திட்டால்
தோல்விகளை தோற்கச்செய்தே
ஜெயித்தி்டுவோம்.துவண்டிருக்கும் மனங்களுக்கு இக்கவி வரிகள் ஒரு உற்சாக டானிக்..

பலதரப்பட்ட கவிகளும் ஹேகாவின் கைகளில் இருந்து செதுக்கப்படும் என்பதை நிருபித்து விட்டீர்கள்,, பாராட்டுக்கள்..:icon_b:

நாகரா
15-12-2010, 04:00 AM
(22-03-2010)


இறைவா நீ வர வேண்டும்என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ இருக்க வேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
வாழ்வை சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலந்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய்--மலர வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலேநான் மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்


இறைவனின் பதில்:

ஏகா!
என்றே எனை விளிக்கும்
நற்சொல்லே நின் பேராக
நின் மெய்யே என் ஆலயமாய்
நின் நெஞ்சே என் கருவறையாய்
என்றும் நினைப் பிரியாதே
உள்ளேன் நானே
என் செல்ல மகளே!

அருமையான பிரார்த்தனைக் கவிக்கு வாழ்த்துக்கள் ஏகா!

Hega
16-12-2010, 07:36 PM
நன்றி நாகரா,

நன்றி பனித்துளி

Hega
16-12-2010, 07:39 PM
அன்பில் நிலைத்திடுவேன்


சந்திரனைப்போல அழகுடனே
சூரியன் போலே பட்டொளி வீசும்
உம் முகம் காண நித்தமும் துடித்தேன்
அத்தனை அன்பும் வாற்றாத ஊற்றாம்.

மண்ணிலே வாழ்வு மண்ணாகிடாமல்
விண்ணைத் தொட்டிடவே மாபெலன் தந்த
உன் மாறிடா அன்பை கூறிடா நாட்கள்
என் வாழ்வில் இனி இல்லையே.

ஆபத்து நாளில் கிட்டிப்போய் இருந்தேன்
செட்டைகள் நடுவே சட்டெனத்தாங்கி
அடைக்கலம் தந்தாய், இப்போதும் நினைப்பேன
எப்போதும் மறவேன் ... அன்பில் நிலைத்திடுவேன்

பொன்னையும் வேண்டேன் பொருளையும் வேண்டேன்
அன்பையே வேண்டிடுவேன் ... இறையிடம்
நீடித்த நாட்கள் போஷித்திடவே
என் அன்பால் யாசித்திடுவேன்.

அண்ணா உன் அன்பில்அன்னை அன்பை
நான் உணர்ந்தேன், அரணாக இருந்து
நல்வழிகாட்டி துலங்கிய உன்னில்
இறைவனை கண்டேன்

என் எண்ணத்தின் ஏக்கம..சிந்தையின்
தாக்கம் இதமாய் மாறும்..இனிதாய்
மலரும், உள்ளமோ சிலிர்க்கும்
எம் அன்பால் நல்லதே நடக்கும்

சூறாவளி
16-12-2010, 07:46 PM
அன்பில் நிலைத்திடுவேன்


சந்திரனைப்போல அழகுடனே
சூரியன் போலே பட்டொளி வீசும்
உம் முகம் காண நித்தமும் துடித்தேன்
அத்தனை அன்பும் வாற்றாத ஊற்றாம்.

மண்ணிலே வாழ்வு மண்ணாகிடாமல்
விண்ணைத் தொட்டிடவே மாபெலன் தந்த
உன் மாறிடா அன்பை கூறிடா நாட்கள்
என் வாழ்வில் இனி இல்லையே.

ஆபத்து நாளில் கிட்டிப்போய் இருந்தேன்
செட்டைகள் நடுவே சட்டெனத்தாங்கி
அடைக்கலம் தந்தாய், இப்போதும் நினைப்பேன
எப்போதும் மறவேன் ... அன்பில் நிலைத்திடுவேன்

பொன்னையும் வேண்டேன் பொருளையும் வேண்டேன்
அன்பையே வேண்டிடுவேன் ... இறையிடம்
நீடித்த நாட்கள் போஷித்திடவே
என் அன்பால் யாசித்திடுவேன்.

அண்ணா உன் அன்பில்
அன்ணை நான் உணர்ந்தேன்
அன்பான உன்னில்
இறைவனை கண்டேன்

என் எண்ணத்தின் ஏக்கம..சிந்தையின்
தாக்கம் இதமாய் மாறும்..இனிதாய்
மலரும், உள்ளமோ சிலிர்க்கும்
எம் அன்பால் நல்லதே நடக்கும்

அண்ணன் மேல் வைத்திருக்கும் தங்கயின் பாசப் பொழிவை மிக செம்மையாக வெளிக்காட்டி விட்டிர்கள்..:icon_b:

உண்மை அன்பு எப்போதும் தோற்க்காது... நல்லதே நடக்கும்..

நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.. ஹேகா..

Hega
16-12-2010, 07:51 PM
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிங்க.

இப்படி சொல்லி சொல்லியே எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இப்பூமியிலே..

உண்மை அன்பு.
அப்படி என்றால் என்ன .......:fragend005:

Hega
16-12-2010, 07:56 PM
என் மருமகளுக்கு பிறந்த நாள்.
அவளுக்காக


என் குட்டி மருமகளே...

அண்ணண் பெண்ணே
என் அற்புதமே
கட்டிக்கரும்பே
என் குட்டி மருமகளே...

கொஞ்சிக் கொஞ்சி பேசி
அத்தையென்று அழைத்த
அன்பினிலே குளிர்ந்தேன்
உன் அழைப்பில் சிலிர்த்தேன்.

கிள்ளை மொழி பேசி
துள்ளித்துள்ளி ஓடும்
கள்ளி உந்தன் கன்னம்
கிள்ளிடத்தான் ஆசை

உன் அழகைக்கண்டு
அத்தை மனம் மகிழ்ந்தேன்
சித்தம் போல ருசித்து
நித்தம் உன்னை ரசிப்பேன்

சுத்திச் சுத்தி வந்து
சக்தி எனக்குந் தந்து
எட்டி நிற்கும் இன்பம்
கிட்டிச் சேர செய்தாய்.

கட்டி என்னை அணைத்து
அள்ளி முத்தம் தந்து
அத்தை எனும் சொந்தம்
என்றும் நிலைக்க செய்வாய்

கீதம்
16-12-2010, 09:11 PM
அத்தைமடி மெத்தையடி பாடலைப் பாடினேன் என் தம்பி குழந்தைகளுக்கு. நீங்களோ உங்கள் மருமகளுக்கு சொந்தப்பாடலே உருவாக்கிப் பாடிவிட்டீர்கள். பாராட்டுகள் Hega, உங்களுக்கும், உங்கள் அன்பைப் பெற்ற குட்டி தேவதைக்கும்.

பாலகன்
17-12-2010, 04:12 AM
என் மருமகளுக்கு பிறந்த நாள்.
அவளுக்காக


என் குட்டி மருமகளே...
நீங்களோ உங்கள் மருமகளுக்கு சொந்தப்பாடலே உருவாக்கிப் பாடிவிட்டீர்கள். .

பரவாயில்லையே ஹேகா! உங்க மருமகன் குட்டியாய் :icon_rollout: இருக்கும் போது எழுதுன பாடலை இன்னும் நினைவு வச்சி இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள். :D

இப்படி ஒரு அத்தை கிடைக்க அவர் கொடுத்து வச்சிருக்கனும்.

பாடல் மிக மிக அருமை.

சூறாவளி
17-12-2010, 01:48 PM
உண்மை அன்பு.
அப்படி என்றால் என்ன .......:fragend005:

உங்களுக்குள்ளே இருக்கின்றதே... !! அதான் உங்கள் கவிதைகள் சொல்லிவிடுகின்றதே... அதான் உண்மை அன்பு..:icon_b:


கிள்ளை மொழி பேசி
துள்ளித்துள்ளி ஓடும்
கள்ளி உந்தன் கன்னம்
கிள்ளிடத்தான் ஆசை


படிக்கும் எவரையும் கிள்ளிட ஆசைபட வைக்கும் கவிதை வரிகள்..

மனதில் இருக்கும் அன்பு வரிகளாய் உங்கள் கைகளில் நடனம் ஆடுகின்றது.. :icon_b:

பாராட்டுக்கள்

ஆன்டனி ஜானி
17-12-2010, 01:56 PM
வாழ்த்துக்கள் நிஷா

எனது குட்டி மருமகளுக்கும் இதே டிசம்பர் மாததில் தான் பிறந்த நாள்
நான் தெரிவிக்க மறந்து விட்டேன் ......


உங்கள் குட்டி மருமகளுக்கும், எனது குட்டி மருமகளுக்கும் சேர்த்து பிறந்த
நாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் ......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ........

Hega
17-12-2010, 10:13 PM
உங்கள் அனைவரின் பாராட்டுக்களுக்கும்
என் தாலாட்டு
எப்பொழுதும் உண்டு

Hega
17-12-2010, 10:14 PM
தோழி


நேற்றிரவு என் கனவில்
நீ வந்தாயோ....தோழி
இன்றெல்லாம் இன்ப நினைவலைகள்
தொடரச்செய்தாயோ தோழி

பூத்திருக்கும் பூவாய் நான்
மணம் வீசிமயக் கிடவே
மலர்தா ங்கும் மரமாக
நீ வந்தாயா? என் தோழி

மலைகளெல்லாம் பனித்
துளிகளென்றால் அந்தத் துளியாக
நானிருந்துவான் மேகம் தொட்டிடவே
மழைத்துளியாக வந்தாயா? என் தோழி

என் கற்பனைக்கு நீ சிறகானால்
நான் தாண்டிடுவேன் பல கடல்கள்,
என் சிந்தைக்கு நீ உணவானால்
நான் கடந்திடுவேன் பல தடைகள்.

மூன்று கடல் ஆழத்திலே
முத்தமிழ் என்ற முத்தெடுத்தேன்,
கண்டெடுத்த முத்ததனை கோத்து
மாலையாக்க துணை
புரிய வந்தாயோ என் தோழி

Hega
17-12-2010, 10:34 PM
நண்பனே


என் அன்புள்ள சினேகிதனே
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன

பண்புள்ள மானிடாம்
உன்னிடம் கண்டதென்ன
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன

நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன.
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன

தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன.

அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்.

சூறாவளி
18-12-2010, 12:48 AM
தோழி


நேற்றிரவு என் கனவில்
நீ வந்தாயோ....தோழி
இன்றெல்லாம் இன்ப நினைவலைகள்
தொடரச்செய்தாயோ தோழி


தோழி என்ற இந்த கவிதையை எனக்கு கடன் தர முடியுமா தோழி...:)

என் எண்ண அலைகளை வண்ண எழுத்துக்களாய் மலர்மாலையாய் கோர்த்து விட்டிர்கள்..

பாராட்டுக்கள்.. ஹெகா..:icon_b::icon_b:

சூறாவளி
18-12-2010, 12:52 AM
நண்பனே


அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்.

அழகான உள் அர்த்தங்களோடு நண்பனுக்கு எழுதிய கவி நன்று...

பாராட்டுக்கள் ஹேகா,,,:icon_b::icon_b:

சூறாவளி
20-12-2010, 01:37 AM
என்ன இந்த பக்கம் நிசப்தமா இருக்கு...

வந்து ஒரு எட்டு பாக்கறது..;)

Hega
26-12-2010, 11:26 PM
விடை யறியா தேடலிது

சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து

சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே

தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தனயனாம் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே

எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...

யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே

யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்

Hega
27-12-2010, 01:03 PM
ஆக்கபபொறுத்தவர்கள்
அழிக்கதுடிக்கும் போது
பழிக்கும் இச்சமூகம்
விழிக்கும் நாள் வருமோ

சிறப்பாய் இருந்ததென்று
கற்றோர் கண்டிடுங்கால்
சீர் தருவார் என்பதை
உணரும் நாள் வருமோ

ஒறுத்தார் இகமதிலே
சிறப்பார் அகமதிலே
மறுப்பை தூசியாக்கி
பொறுத்தார் பூமியாள்வார

Hega
02-01-2011, 09:48 PM
மறக்கவியலா நாள் என்றுமறக்கவியலா நாள் என்று
மனதில் வைத்து பூட்டினாலும்
முகம் காட்டும் கண்ணாடியாம்
என் அகமோ துடிக்கிறதே..

கடந்து வந்த பாதையிலே
தொடர்ந்து வந்த வாதையெல்லாம்
பேதையிவள் உள்ளத்திலே
கதை கதையாய்....

எதை நினைப்பேன் எதை
சொல்வேன். வதை
யென்னில் கதையெழுதிய
கதை சொல்லவா

எதையுமே நினையாமல்
விதி போகும் பாதையில்
சதியேதும் செய்யாமல்
மதியின்றி சென்ற கதை
சொல்லவா

எதைத்தான சொன்னாலும்
இதுதான் கதையென்று
சொன்னபின்பு அதை
விதையாக்கிய கதை
சொல்லவா.

எதை நான் சொன்னாலும்
இனி எதுதான் நடந்து விடும்.
என்னால் மறக்கவியலா நாள் இன்று
என்பதை என்று நான் மறப்பேனோ...

சூறாவளி
04-01-2011, 04:54 PM
விடை யறியா தேடலிது

சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து

சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே

தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தனயனாம் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே

எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...

யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே

யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்தலைப்பிற்க்கு ஏற்றார்போல் வரிகளில் அனைத்தையும் கொண்டு வந்து விட்டீர்கள்.. கடைசியில் யாதும் அறியேன் என சொல்லிட்டு போனா எப்படி!! அறிந்து, அதை நிவர்த்தி செய்தால்.. மீண்டும் முதல் வரிகளுக்கு செல்லலாமே...:icon_rollout: