PDA

View Full Version : அப்பப்போ தோணுவது.....



Hega
08-12-2010, 07:59 PM
என்னவுண்டு சொல்லிவிடு**
நின்மனதில் என்னவுண்டு
நித்தம் நித்தமென் மனதில்
நீயிருக்க......
உன் மனதில் நானிருக்க
நின மனதை தந்து விடும் `
எணணமுண்டோ சொல்லி விடு.

Hega
08-12-2010, 07:59 PM
மாறுதலால், மீறுதல்கள் நடந்ததில்லை என்றாகுமோ..
தேறுதலகள் தொடர்வதனால் மாறுதல்கள் நடந்திட்டாலும்
சில மீறுதல்கள் மாறிடாத நினைவலையாய் மாறுவதேன்....

Hega
08-12-2010, 08:03 PM
ஒன்றே தேடின் நன்றே வாழ்வை
வென்றோ மென்று இன்றே சொல்வோம்
அன்றோ இன்றோ என்று மொன்றாய்
நின்றோ மென்றால் குன்றாய் நிலைப்போம்.

Hega
08-12-2010, 08:05 PM
நினைத்தபடி நடப்பதென்றால்
இறைவன் ஒருவன் தேவையில்லை
நினைப்பதெல்லாம் நடக்குமென்று
நினைவதையே தவிர்த்து விட்டால்.
நிலைத்து நிற்பாய் இவ்வுலகில்
நீடித்த நாட்களுக்கு......

இணைய நண்பன்
08-12-2010, 08:05 PM
உங்கள் கவிவரிகள் மேலும் வளர்ந்து மன்றத்தில் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.

Hega
08-12-2010, 08:07 PM
எம்மினத்தின் சுதந்திரமும் நாளை எனும் எதிர்பார்ப்பும்
எதிர்கால எம் வாழ்வும் இல்லாமல் போனதேனோ?
நடுத்தெருவில் நின்று கொண்டு நாதியற்று தவிக்கும் மாந்தர்
வாழ்வதனை வளமாக்க வழியேதும் பிறந்திடாதோ?

விதியிலே நின்று கொண்டு வீறாப்பாய் பேசுவதால்
விடுபட்டுப்போன எம் இனத்தின் எதிர்காலம்
உயிர் பெறறு எழுந்திடுமோ, பேர் பெற்று வாந்திடுமோ?
நாம் சேருமிடம் எதுவென்று யாரிடம் போய் வேண்டிடுவோம்?

Hega
08-12-2010, 08:11 PM
மகிழ்ச்சியான மனதுடனே
நெகிழ்ச்சியாக நீ பேசி
என் கவலை போக்கிய நாட்கள்
இன்றும் பசுமையாக என் மனதில்
உன் நினைவுகளை தானாய்
தாலாட்டி செல்வதை
நீ அறிவாயா.

Hega
08-12-2010, 08:15 PM
இயல்பானதாய் இருப்பதெல்லாம்
அலைபாய்வதாய் தெரிவதில்லை
நிலையில்லாத மனிதராலே- எங்கும்
நிலைத்து வாழ முடிவதில்லை

Hega
08-12-2010, 08:17 PM
மாறியதும் நீதான் ,எனை
மாற்றியதும் உன் அன்புதான்
தேற்றியதும், தினம் தேடியதும்
உன் அணைப்பைத்தான் இன்றும்
தேடுகின்றேன் காணாமல் போன
மாயம் தானென்ன வென்று சொல்லிவிடு
தேடாமல் நான் இருப்பேன் என் உயிரே

Hega
08-12-2010, 08:18 PM
உந்தன் உறவானதனால் எந்தன்
சித்தம் கலங்கியதே சிந்தனைகள்
நீயானதால் வேதனைகள் அண்டியதே
நித்தம் உனை நினைப்பதினால்
நெஞ்சம் கலங்கி பித்தானதே
இத்தனைக்கும் என் அன்புனக்கு
இற்றைவரை புரியல்லையே

Hega
08-12-2010, 08:19 PM
கடவுள் போட்டு வைத்ததையெல்லாம்
கடமையாக செய்தோமானால் கவலை
கண்ணீர் நிலைத்திடாதகன்றிடுமே, இனி
வருவதெல்லாம் இனிமையாக மாறிடுமே

Hega
08-12-2010, 08:20 PM
மேலே பறந்திடலாம், மேன்மை பல அடைந்திடலாம்
மேதையாகி மேன்மக்களால் மென்மேலும் புகழ்பெறலாம்
சோதனைகள் அனைத்தையுமே சாதனைகளாக்கிடலாம்
சாத்னைகள் பெருகி விட்டால் வானமதை தொட்டிடலாம்.

Hega
08-12-2010, 08:21 PM
வெற்றியே கிட்டினால் வாழ்வது சலித்திடும்
எட்டிய தோல்வியால் ஞானமோ பெருகிடும்
பற்றிய நம்பிக்கை சான்றோராய் மாற்றிடும்
சாற்றியே போற்றினால் இறையருள் தொடர்ந்திடும்

Hega
08-12-2010, 08:22 PM
நிர்ணயிக்கப்பட்டதில்லையென்றும் எம் வாழ்வில்
மனம் போன போக்கதினால் தினம் செல்லும்
குணம் தானே குரங்காகி மரமேறும் மனிதர்களாம்
நம் வாழ்வில் நினைபதெல்லாம் நடப்பதில்லை
நடப்பதை நாம் நினைப்பதென்றால் கணம்பொழுதில்
மாறிடுவோம் நாமெல்லாம் தேவ தூதர்களாய்....

Hega
08-12-2010, 08:23 PM
நமக்கு ஓய்வுண்டென்போமானால் நம்மை
நாமே ஏமாத்திடுவோம் .ஓடும் கடிகாரத்தினால்
ஓய்ந்திருக்க நேரமேது சாய்ந்திருக்கும் பொழுதுகளில்
மாய்ந்து மாய்ந்து சிந்திப்பதும் மறுபொழுதில்
நிந்திப்பதும் மந்தியான நம் இயல்பல்லவா....

Hega
08-12-2010, 08:24 PM
அதை உணர்வோம் நாம் இனிமேல்
தனிமையெனும் சுழலதிலே இனிமை
இனியில்லையென கனிமையான நட்பு
வேண்டி இறைவனிடம் சரணடைவோம்

Hega
08-12-2010, 08:25 PM
எந்நாளும் என் சொந்தமாக என் வாழ்வில்
துணையிருந்தாய் நல்வாழ்வை நான் காண
முன்னாலே வழிநடந்தாய்.. இன்று எல்லாமே
எனக்கெல்லாமாக ..... நீ எனக்கில்லாமல் போனதேனோ.

Hega
08-12-2010, 08:26 PM
பொறுமையது நமக்கிருந்தால் பூமியது
பொங்கிடுமோ..மனதினிலே கனிவிருந்தால்
நோய் நொடிகள் அண்டிடுமோ. என்
அருகினிலே நீ நடந்தால என்
கண்ணீரெல்லாம் மாறிடுமோ..

Hega
08-12-2010, 08:28 PM
என்னருகில் நீ இருந்தால் விண்ணருகில்
நான் சென்றிடுவேன் எனைச்சூழும்
சோதனைகள் பல வென்றே பண்னிசைத்து
பாடியே நான் உன்னிசையில் மூழ்கிடுவேன்

Hega
08-12-2010, 08:28 PM
நீ நற் காரியத்தில் இடம் பெறவும்
சீரியராய் வாழ்ந்திடவும்
பாரினிலே புகழ் பெறவும்
கோரினேன் நான் இறைவனிடம்
வாரியே நல் ஆசிகளை தந்ததனால்
ஊரினிலே நீ பெற்ற பெயர்
காரிகையால் தள்ளாடலாமோ .??

Hega
08-12-2010, 08:29 PM
அறிந்திடுவீரென் னகமுழுதும் நீயிருக்க
நானுன்னை மறவேன் தினந்தோறும்
உன் நினைவலைகள் எனைசூழ்ந்ததினால்
உன்னொளியலைகள் என்மேல்படர்ந்திடுமே

Hega
08-12-2010, 08:30 PM
நல்லுழைப்பு நமக்கிருந்தால் கிட்டிடுமாம்
நல் வாழ்வை திட்டமிட்டாலெட்டிவிடும்
வானமதை சட்டெனவே தொட்டிடலாம்
நற்செல்வம் நாள் தோறும் நல்லுழைப்பால்

Hega
08-12-2010, 08:32 PM
உறையிடம் தரலால், உணர்வது வேண்டி
இறையிடம் கேட்டால் நிலையில்லா வாழ்வு
நிலைத்திடும் நாளில் அகிலத்திலென்றும்
செழித்து நான் வளர்ந்தால் என்னகமதில்
இன்பம் நிலைத்திடுமன்றோ.............

Hega
08-12-2010, 08:33 PM
தொப்புள் கொடி உறவென
தப்புக்கணக்கு போட்டதால
பாசம் கொண்ட நெஞ்சமது
பாவியாகிபோனது

தேவிஎன அழைத்த அண்ணன்
போடி நீ என்றதனால்
வாடி நிற்கும் பாச
மலர் மலர வழி காட்டுங்கள்...

Hega
08-12-2010, 08:34 PM
அங்கு உன்னைக் காண்பேன் என நான்
கனவிலும் நினைத்திலேன்...கண்டதும்
கொண்டேன் அளவில்லா இன்பம்
இனியெனக்கில்லை வாழ்வினில் துன்பம்

Hega
08-12-2010, 08:36 PM
உந்தன் நல்ல உள்ளத்தினால்
எந்தன் சிந்தை கவர்ந்தாய்-என்
சிந்தையெங்கும் தெய்வமாய்
என்னில் உறைந்தாய்.. என்றும்
எந்தன் நல் உறவாய்
நன்றே தொடர்வாய்...

Hega
08-12-2010, 08:38 PM
வருவேன் என்றாய்.
வந்தாய் வல்லமை தந்தாய்..
வாக்குகள் மாறாதிருந்தாய்
இறை மாட்சிமை..
நான் காணச் செய்தாய்
சேயாய் அணைத்தாய்
தாயாய் பாதுகாத்தாய்..
இன்று .....................
தீயாய் மாறி எனை
நோயால் வாட்டுவதேனோ....

Hega
08-12-2010, 08:48 PM
நீயே யாவுமென்றேன்
நீயோ நீ யார் என்றே
சொல்லடையாலே
செல்லெனசொல்லி
மெல்லிடையுள்ளம்
சல்லடையாக்கி
சென்றதுமேனோ...

சூறாவளி
09-12-2010, 02:30 AM
ஹய்யோ... ஒரே நாளில் இத்தனை பூக்களை தூவி எங்கலுக்கு பூக்குளியல் நடத்தி விட்டிர்களே...:)

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. பூக்களின் தோட்டம்.. அதில் ஒவ்வொரு பூவின் சுகந்த மணம் அனுபவிக்கிறேன் ஒவ்வொரு குறுங்கவிகலை ஸ்பரிசிக்கும் போதும்....:icon_b:

பாராட்டுக்கள்...

யோசிக்க வச்சிட்டிங்க... யோசிச்சி தனிதனியாக ஒவ்வொரு கவிக்கும் என் கருத்துக்களை பகிர்வேன்..

கீதம்
09-12-2010, 09:11 AM
அப்பப்போ தோணுவதை எழுத்தில் வடித்து
அகந்தனில் தோணும் வதைதனையும் சேர்த்தே வடித்து
உளத்தோணியில் ஒய்யாரபவனி வர வாழ்த்துகள்!

ஆன்டனி ஜானி
09-12-2010, 01:58 PM
அடடா ..அடடா என்னா கவிதை என்னா கவிதை

நினைத்தாலே தலை சுத்துது

ரெம்ப அருமையான பின்னூட்டங்கள்

கண்ணுக்கு மையழகு ,என்று சொல்வது போல

உங்கள் கவிதைக்கு வரிகள் ரெம்ப,ரெம்ப அழகு

வாழ்த்துக்கள்

சூறாவளி
09-12-2010, 07:11 PM
என்னருகில் நீ இருந்தால் விண்ணருகில்
நான் சென்றிடுவேன் எனைச்சூழும்
சோதனைகள் பல வென்றே பண்னிசைத்து
பாடியே நான் உன்னிசையில் மூழ்கிடுவேன்

இதுபோல் வரிகளை அன்பு செய்பவர்களிடம் எடுத்துரைத்தால் கண்டிப்பா இருக்கும் அன்பு பன்மடங்கு உறுதியாயிடும்..

ஹேகாவின் பல குறுங்கவிதைகளை எப்போதும் மனம்பாடம் செய்து வச்சிக்கணும்.. ஹி ஹி..:icon_rollout::D

Hega
09-12-2010, 09:21 PM
துளிதுளியாய்பனித்துளியில்
கீதம் பாடும் சத்தம கேட்டு
எட்டிபார்த்த ஜானிகளே

அப்பப்போ தோணுவதை
தப்பாமல் கிறுக்கிடுவேன்
பட்டாடை போர்த்த வேண்டாம்
திட்டாமல் திருத்தி்டுங்கால்
கட்டாயம் நானுமக்கு
எக்காளம் ஊதிடுவேன்..

வானவர்கோன்
09-12-2010, 09:29 PM
தொடர் கவிதை அருமை, தித்திக்கின்றது, பாராட்டுக்கள்.

Hega
09-12-2010, 09:30 PM
அங்கிங்கெண்ணாதபடி
எங்கணும் நிறைந்தாய்
தங்கமே உன்னை
பங்கம் நேராமல்
தங்கமாய் காப்பேன

Hega
09-12-2010, 09:39 PM
தொடர் கவிதை அருமை, தித்திக்கின்றது, பாராட்டுக்கள்.



வானவர் வருகிறார்..
வானமீதினிலே..
வருகை கேட்டு
இருகை கூப்பி
உவகை கொள்கிறோம்.

சூறாவளி
10-12-2010, 03:44 AM
துளிதுளியாய்பனித்துளியில்


அசத்துறிங்களே தோழி... :aktion033::aktion033::huepfen024::icon_03::icon_03::icon_03: உங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன்..:icon_03:

ஜானகி
10-12-2010, 04:51 AM
வீட்டில் பேசுவதும் கவிதை நடையில் தானோ ?
நாவில் தழும்பு ஏறியதோ கவிதை நயம் ?....எப்படியோ...
எங்கள் காட்டில் மழைதான் ! தொடருங்கள் !

ஜனகன்
10-12-2010, 05:22 AM
கவிதையாலேயே பதில் படைக்கும் கவிதாயினிக்கு பாராட்டுக்கள்.

உங்கள் வீட்டில் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.

Hega
10-12-2010, 10:22 AM
ஜனகனும், ஜானகி்யும்
ஒன்றே கூடி
நன்றே சொன்னீர்..
என்றும் மறவேன்
கன்றாய் தொடர்வேன்..

பாலகன்
10-12-2010, 02:42 PM
இதில் உள்ள அனைத்த கவிதைகளையும் படித்துவிட்டேன். அனைத்தும் மிக அருமை. எதை குறிப்பிடுவது.

நொடிப்பொழுதில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதும் தங்கள் திறம்(தரம்) கண்டு வியக்கிறேன். பெண்கவியே! உமது திறமைக்கு வாழ்த்தெல்லாம் போதாது.

வணங்குகிறேன்.

Hega
10-12-2010, 03:05 PM
மாபெரும் சபைதனில்
சிம்மா சனமிட்டமர்ந்து
எனை வாழ்த்தி வணங்கும்
மஹா பிரபுவே
மா சற்றயுன்நட்பே
யாம் பெற்ற
மா பெரும் கொடையன்றோ.

பாலகன்
10-12-2010, 03:25 PM
வாரே வா! வா! பகூஃத் அச்சா ஹே

Hega
10-12-2010, 07:14 PM
கடவுள்

நான் இங்கே
நீ என்னைத்தேடிவருவாய் என
கோயில் வாசலில்
உன்னிடம் யாசிப்பவனாக - நீயோ
கண்ணை மூடிச்சென்றாய்
நான் என்ன செய்ய
உன் வாழ்க்கை அங்கேயே
மாற்றங்களின்றி........!!!!!!!

சூறாவளி
11-12-2010, 01:59 AM
கடவுள்

நான் இங்கே
நீ என்னைத்தேடிவருவாய் என
கோயில் வாசலில்
உன்னிடம் யாசிப்பவனாக - நீயோ
கண்ணை மூடிச்சென்றாய்
நான் என்ன செய்ய
உன் வாழ்க்கை அங்கேயே
மாற்றங்களின்றி........!!!!!!!

அசாத்திய உண்மை... எந்த கடவுளும் எனக்கு உண்டியலில் காசு போடுன்னு சொல்லவே இல்லை.. உண்ன உணவில்லாதவனுக்கு கொடுக்க தயங்குவான் உண்டியல் உயரத்துக்கு காசு போடுவார்கள், இல்லாதவர்கலுக்கு கொடுத்தால்.. அவர்களின் முகத்தில் கடவுளை காணலாம்..

ஏழை எளியவருக்கு உதவினால் - கடவுள்
நம் வீடு தேடி வாசலில் வந்து நிற்பார்...

பாராட்டுக்கள் ஹேகாவுக்கு...:icon_b::icon_b:

பாலகன்
12-12-2010, 02:38 AM
கடவுள்



உன் வாழ்க்கை அங்கேயே

மாற்றங்களின்றி........!!!!!!!


தானதருமங்கள் குறைவதற்கு இன்றைய சூழலும் ஒரு காரணம்! ஒருவருக்கு உதவி செய்தால் அவர் தொடர்ந்து நம்மிடம் யாசகம் பெற்று வயிறுவளர்க்கவே பார்கிறார். அவர் நிலைமாற சிலவேளைகளில் அவர்களுக்கு உதவாமல் இருப்பதே நலம்.

அதேவேளையில் படிக்கும் ஏழைகளுக்கு, முயற்சி உள்ள ஏழைகளுக்கு தொழில் துவங்கவோ அல்லது படிப்பு செலவுக்கோ! மருத்துவ செலவிற்கோ உதவலாம்!.

நோக்கமின்றி இறைக்கப்படும் எந்த ஒரு பணமும் வீணரை உருவாக்கும் என்பது எனது கருத்து.

அழகிய கவிதைவடிவில் புரட்சிகர சிந்தனைகளை சொல்லிவரும் எங்கள் மன்றத்து மல்லி Hega விற்கு எனது பாராட்டுக்கள்

ஆன்டனி ஜானி
12-12-2010, 03:34 AM
துளிதுளியாய்பனித்துளியில்
கீதம் பாடும் சத்தம கேட்டு
எட்டிபார்த்த ஜானிகளே

அப்பப்போ தோணுவதை
தப்பாமல் கிறுக்கிடுவேன்
பட்டாடை போர்த்த வேண்டாம்
திட்டாமல் திருத்தி்டுங்கால்
கட்டாயம் நானுமக்கு
எக்காளம் ஊதிடுவேன்..

துளித்துளி மழையாய் வந்தவளே
அதில் நனய நினைத்து வந்தது
தவறானோ ,அதில் விளையாட
நினைத்ததும் தவறானோ
மழையில் நனைய வந்த
எனக்கு தறும் பரிசு
உடல் சுகம் இல்லாமல்
போவது ...........

அரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பா !!!!!

Hega
13-12-2010, 08:05 PM
தானதருமங்கள் குறைவதற்கு இன்றைய சூழலும் ஒரு காரணம்! ஒருவருக்கு உதவி செய்தால் அவர் தொடர்ந்து நம்மிடம் யாசகம் பெற்று வயிறுவளர்க்கவே பார்கிறார். அவர் நிலைமாற சிலவேளைகளில் அவர்களுக்கு உதவாமல் இருப்பதே நலம்.

அதேவேளையில் படிக்கும் ஏழைகளுக்கு, முயற்சி உள்ள ஏழைகளுக்கு தொழில் துவங்கவோ அல்லது படிப்பு செலவுக்கோ! மருத்துவ செலவிற்கோ உதவலாம்!.

நோக்கமின்றி இறைக்கப்படும் எந்த ஒரு பணமும் வீணரை உருவாக்கும் என்பது எனது கருத்து.

அழகிய கவிதைவடிவில் புரட்சிகர சிந்தனைகளை சொல்லிவரும் எங்கள் மன்றத்து மல்லி Hega விற்கு எனது பாராட்டுக்கள்


நல்ல சிந்தனை பிரபு..

இதே கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன்.

படியாய் இருப்பவனுக்கு ஒரு வேளை மீனை உண்ணகொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவன் தினமும் நிம்மதியாக சாப்பிடுவானாம். அஃதே எம்மிடம் உதவி என வருவோருக்கு வாழ்க்கைக்கான வழி காட்டிடல் சிறப்பே..
:icon_b:

Hega
13-12-2010, 08:07 PM
குட்ட குட்ட குனிந்து பார்
எட்டி நிற்போரெல்லாம்
கிட்ட வந்து குட்டுவர்
நெட்டி நீ த்ள்ளினால்
கிட்டி நிற்போர் கூட
எட்டியே செல்லுவர்.

Hega
13-12-2010, 08:17 PM
தானத்தில் சிறந்தது அன்னதானம்
செய்ய வேண்டியது இரத்ததானம்
கொடையில் சிறந்தது கண்தானம்
தினமும் வேண்டியது நிதானம்.
தாள் பணிந்திட சந்நிதானம்
ஈற்றில் அடைவது ஆத்மதானம்

சூறாவளி
13-12-2010, 10:19 PM
தானத்தில் சிறந்தது அன்னதானம்
செய்ய வேண்டியது இரத்ததானம்
கொடையில் சிறந்தது கண்தானம்
தினமும் வேண்டியது நிதானம்.
தாள் பணிந்திட சந்நிதானம்
ஈற்றில் அடைவது ஆத்மதானம்

இவ்வளவு தானமும் ஒருவரின் வாழ்வில் நிறைந்தால் அவர் வாழ்வே சமாதானம்தான்...

பஞ்ச் டயலாக் மாதிரி கவிதையா வந்து கொட்டுறிங்க.. ம்ம்ஹும்.. எடுத்து வச்சிகிறோம்...:)

பாராட்டுக்கள்..:icon_b:

Hega
17-12-2010, 10:10 PM
மன்றத்தின் கதவுகள்
கொடுத்த வரவேற்பு
உள் நுழைந்து நான்
பெற்ற உறவுகளும்
கண்ட சந்தோஷங்களும்
என் விழிகளில் .......நீர்

என் தொகுப்பிலிருந்து..

சூறாவளி
18-12-2010, 12:58 AM
மன்றத்தின் கதவுகள்
கொடுத்த வரவேற்பு
உள் நுழைந்து நான்
பெற்ற உறவுகளும்
கண்ட சந்தோஷங்களும்
என் விழிகளில் .......நீர்

நின் கண்ணீரின் சங்கமத்தில்
பனித்துளியும் ஒரு துளியாய்....

பாராட்டுக்கள்.. ஹேகா..:icon_b::icon_b:

Hega
18-12-2010, 11:33 AM
மயங்கும் என் நெஞ்சம்
தயங்குது மஞ்சம்
கொஞ்சியே பேசிடும் மன்னவா
கெஞ்சுவேன் உன்னிடம்- என்றும்
உன் பாதமே என் தஞ்சம்.

Hega
18-12-2010, 11:37 AM
நிலவை மேகம் மூடலாம்
என் நினைவை யார் தான் மூடுவார்.

வானோடு காற்றுமே
என் நினைவை மூடவில்லை

உன் உள்ளத்தில் நானிருக்க
நீ ஊமையானானதேனோ

ஆன்டனி ஜானி
18-12-2010, 02:21 PM
மயங்கும் என் நெஞ்சம்
தயங்குது மஞ்சம்
கொஞ்சியே பேசிடும் மன்னவா
கெஞ்சுவேன் உன்னிடம்- என்றும்
உன் பாதமே என் தஞ்சம்.

என் நெஞ்சம்

தயங்குவதோ கொஞ்சம்

கொஞ்சி பேசிடும் மன்னவளே

கெஞ்சுவேன் உன்னிடன்

என்றும் - உன் பாதமே என் தஞ்சம்

இது நான் சொல்லலப்பா !! ஜானி சொல்றான்

ஆன்டனி ஜானி
18-12-2010, 02:26 PM
நிலவை மேகம் மூடலாம்
என் நினைவை யார் தான் மூடுவார்.

வானோடு காற்றுமே
என் நினைவை மூடவில்லை

உன் உள்ளத்தில் நானிருக்க
நீ ஊமையானானதேனோ

வானத்தை மேகங்கள் மூடலாம்
என் நினைவை நீதானே மூடிவிட்டாய்

வானோடு காற்று சேர்ந்து வீசலாம்
என் நினைவை உன்னுடய மௌனத்தால்
மூடிவிட்டாய்

உன் உள்ளத்தில் நானிருக்க
நீ ஊமையாயிருப்பதேனோ !

கௌதமன்
18-12-2010, 04:08 PM
வானத்தை மேகங்கள் மூடலாம்
என் நினைவை நீதானே மூடிவிட்டாய்

வானோடு காற்று சேர்ந்து வீசலாம்
என் நினைவை உன்னுடய மௌனத்தால்
மூடிவிட்டாய்

உன் உள்ளத்தில் நானிருக்க
நீ ஊமையாயிருப்பதேனோ !

என்னாச்சு ஆண்டனி ஜானிக்கு
செமையாப் போட்டுப் பின்னுறாரு..கவிதையைத்தான்

ஆன்டனி ஜானி
18-12-2010, 04:10 PM
என்னாச்சு ஆண்டனி ஜானிக்கு
செமையாப் போட்டுப் பின்னுறாரு..கவிதையைத்தான்

சும்மா நண்பரே நம்ம பக்கம் காற்று வீசுவானி பார்த்தேன் ...

பாராட்டுக்கள் கௌதம் ......

அமரன்
18-12-2010, 08:39 PM
நண்பர்களே!

நம் மன்றத்தின் பலங்களில் ஒன்று பதில்க்கவிதைகள். அந்த லாவணிக் கவிதைகளின் தரம், அதிலுள்ள நாகரிகம் போன்றவற்றை நாமெல்லாம் அறிவோம்.

அறியாதோர் மன்ற வலம் வந்து அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி அனைவருக்கும்.

Hega
25-12-2010, 11:08 PM
ஆழிப்பேரலை

நீங்காத வடுவாய்
மாறாது நின்றாய

ஆறாது காயம்
ஆற்றாது வடுவை

குறையென்ன செய்தோம்
சூறையீட்டினாயே

கறையொன்றை யெமக்காய்
கரை தட்டியதேனோ

வற்றாத உற்றாம்
என் உறறோரின் நினைவில்

ஆறாத காயம்
ஆற்றாது காலம்

ஜானகி
26-12-2010, 09:20 AM
எங்கள் எல்லோரது மன வருத்ததினையும் அலை அலையாக வார்த்தைகளால் கொட்டித் தீர்த்ததற்கு நன்றி.

Hega
26-12-2010, 11:29 PM
நன்றி ஜானகி அவர்களே...

Hega
26-12-2010, 11:31 PM
என் தேவதை நீயேயென
யெனை நெருங்கி வந்தாய்
உன் தேவைகள் முடிந்ததுமே
தேவைதையில்லை என
யெனை விலகிசெனறுவிட்டாய்..

கீதம்
27-12-2010, 05:03 AM
தேவையை நிறைவேற்றுபவள்தான்
தேவதை என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதோ?

தேவைப்பட்டால் வதைக்கவும் கூடியவள் என்பதை
வலியுறுத்தியிருக்கவும் வேண்டுமோ கூடவே?

பாராட்டுகள் Hega.

ஜானகி
27-12-2010, 05:55 AM
சித்திரவதை என்பது இதுதானோ ?
பலரது வாழ்க்கை எனும் சித்திரத்தை,
அலையெனும் நெருப்பால் சுட்டுக் கரியாக்கியதே ?
பாலைவனமாகியதே..பலர் எதிர்காலம் ?

king44
27-12-2010, 11:28 AM
தென்றல் மோதி
பூக்களுக்கு வலிப்பதில்லை!
ஆனால்
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
ஆனால்
அது கூட சுமையாக தெரியவில்லை
சுகமாக உள்ளது!

அமரன்
27-12-2010, 07:06 PM
என் தேவதை நீயேயென


யெனை நெருங்கி வந்தாய்
உன் தேவைகள் முடிந்ததுமே
தேவைதையில்லை என

யெனை விலகிசெனறுவிட்டாய்..


தேவதை, தேவைதை, சித்திரத்தை..
இப்படித் தை தை எனச் சொல்லாடும் இடத்தில் எனக்கென்ன வேலை..

தேவ(வ)தையானாலும் அளவுக்கு மிஞ்சினால்..:)

காதலித்துக் கல்யாணம் பண்ணின என் நண்பனிடம் கேட்டேன்.. எப்படிடா போகுது லைஃப் என்று.

அவன் சொன்னான்..

காதலிக்கும் போது அவள் என் வாயைத் தைச்ச போது சந்தோசமா இருந்துச்சு.. இப்போ.... தாங்க முடியலடா..:)

Hega
27-12-2010, 07:28 PM
தேவையை நிறைவேற்றுபவள்தான்
தேவதை என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதோ?

தேவைப்பட்டால் வதைக்கவும் கூடியவள் என்பதை
வலியுறுத்தியிருக்கவும் வேண்டுமோ கூடவே?

பாராட்டுகள் Hega.



கீதம் அக்கா.. தேவதை எனும் போதே அவளால் வதைக்க முடியாது என ஆகிடுமே.

என் நிஜ வாழ்வில் பலர் மனதில் தேவதையாய் நான் ஆக்ரமிப்பதும், அவர் தம் தேவைகள் முடிந்ததுமே அதுவே வதையாவதாய் விலகி ஓடுவதும் கண்டிருக்கிறேன். ஆனால் தேவதையால் வதைக்க முடிவதே இல்லை.

அத்னால் தான் அவள் தேவதையோ

Hega
27-12-2010, 07:36 PM
சித்திரவதை என்பது இதுதானோ ?
பலரது வாழ்க்கை எனும் சித்திரத்தை,
அலையெனும் நெருப்பால் சுட்டுக் கரியாக்கியதே ?
பாலைவனமாகியதே..பலர் எதிர்காலம் ?

நன்றி ஜானகி அவர்களே...


அலையெனும் நெருப்பு
அலையவைத்ததனால் தான்

அலைந்திருந்த மனசை
அலையா்து அடக்கியாண்டோமோ

அலையின் சென்ற உறவும்
மன அலைமேலே நிலையாய்
அலையாத சிலையாய்
நிலைபெற்றதோ...

அலைதலினி வேண்டாம்.
அலைதலையே அடக்கி
அலையலையாய் பொங்கும்
மனதை யென்றும் ஜெயிப்போம்

Hega
27-12-2010, 07:51 PM
தென்றல் மோதி
பூக்களுக்கு வலிப்பதில்லை!
ஆனால்
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
ஆனால்
அது கூட சுமையாக தெரியவில்லை
சுகமாக உள்ளது!


அருமை நண்பரே..
யார் சொன்னது தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லையென.


நிஷாவென்றும் லைலாவென்றும்
தென்றல் மோதியதாலே

வலிதாங்கா பூக்கள்
வேரோடு மரித்து
மண்ணோடு மண்ணாய்
மரணித்ததுமுண்டே..

சுகமான தென்றல் சுடராகும் போது
சுடுவதினாலேவடுமாறா மலராய் ..

தென்றலெனும்நல்லாள்
தென்றாலாய்தவழ்வாள்
அவள் புயலாகும் போது
இவ்வையமே நடுங்கும்.

Hega
27-12-2010, 08:03 PM
தேவதை, தேவைதை, சித்திரத்தை..
இப்படித் தை தை எனச் சொல்லாடும் இடத்தில் எனக்கென்ன வேலை..

தேவ(வ)தையானாலும் அளவுக்கு மிஞ்சினால்..:)

காதலித்துக் கல்யாணம் பண்ணின என் நண்பனிடம் கேட்டேன்.. எப்படிடா போகுது லைஃப் என்று.

அவன் சொன்னான்..

காதலிக்கும் போது அவள் என் வாயைத் தைச்ச போது சந்தோசமா இருந்துச்சு.. இப்போ.... தாங்க முடியலடா..:)


ஆஹா அமரன் சார்.
நாங்க தை, தைன்னு குதிச்சால் நீங்க தாங்க மாட்டிங்களாக்கும்.


காதலித்த போது
பேதலித்த மனது
கைபிடித்த பின்பு
பேதையாக்குமென்றால்
மேதையென்று சொல்வோர்
பேதையவள் அன்பை
பேயென சொல்லி...அப்பாலே
போவெ்ன்பதேனோ

அமரன்
27-12-2010, 08:09 PM
பிடிச்சால் விடாது என்பதால் தானோ..

Hega
27-12-2010, 08:16 PM
பிடிச்சால் விடாது என்பதால் தானோ..



விடாது பெய்யும்
அடாது மழையால்
கெடாத நாற்றும்
வாடாத பூவும்
திடமாய் நிலைக்கும் போது
மடமகன்நீயோ
ஜடமாகலாமோ..

Hega
01-01-2011, 09:08 PM
வலிமை சுரந்தால் வலியும் அகலும்
அகலும் வலியால் அகலும் தெரியும்
தெரியும் அகலில் வழியே பிறக்கும்
பிறக்கும் வழியால் தெளிவே கிடைக்கும்

Hega
04-01-2011, 09:33 PM
இயந்திரமாய் நானும் என்
இயல்பையிழந்து போனேன்.
இ்யல்பையிழந்ததாலே
இனிமை யெனில் விலகி
கடுமைதனில் அமிழ
இயலாமை தனையே
இயல்பாக்கிட்டேனோ....

Hega
04-01-2011, 09:34 PM
இல்லையென்பதும் இருக்குமென்பதும்
ஒன்றுதான்.
தொல்லையென்பது இனியில்லையென்பதே
நன்றுதான்
அல்லலென்பது அகன்றிடுவதே
குன்றுதான்
வெல்வேனெபதால் பின் தொடர்வதில்
கன்றுதான்

Hega
04-01-2011, 09:35 PM
பொறாமையாய் இருக்கிறது
சொந்த ஊரில் சொகுசாக
வாழும் பலரைபார்த்து
கணணி உலகில் கண்ணியோட
இயந்திரமயமான வாழ்வில்
காண்போரிடமும் போலி
புன்னகைகண்டு மனம்
வெறுமையாய் அழுகிறது

Hega
04-01-2011, 09:36 PM
நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை.

இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,
இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய்
இரப்போரைபார்த்து இரங்காத
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால்
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை

நல்லது செய்வோர் அல்லல்களாலே
துன்புறுவதும்..
தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில்
இன்புறுவதுவதும்
ஏனென்றெனக்கென்றுமே
புரிவதில்லை

CEN Mark
14-01-2011, 11:55 AM
பொறாமையாய் இருக்கிறது
சொந்த ஊரில் சொகுசாக
வாழும் பலரைபார்த்து
கணணி உலகில் கண்ணியோட
இயந்திரமயமான வாழ்வில்
காண்போரிடமும் போலி
புன்னகைகண்டு மனம்
வெறுமையாய் அழுகிறது

பொறாமையாய் இருக்கிறது
அந்நிய ஊரில் சொகுசாக
வாழும் பலரைபார்த்து
கணணி உலகில்
காண்போரிடம்
புன்னகைகண்டு மனம்
வெறுமையாய் அழுகிறது

Hega
29-01-2011, 09:51 PM
பொறாமையாய் இருக்கிறது
அந்நிய ஊரில் சொகுசாக
வாழும் பலரைபார்த்து
கணணி உலகில்
காண்போரிடம்
புன்னகைகண்டு மனம்
வெறுமையாய் அழுகிறது



அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்பது இதுதானோ

நன்றி சென்மார்க்

Hega
29-01-2011, 09:56 PM
சொல்வதை இன்றே சொல்
ஆ்னால சொல்வதை
சொல்வதையாக்கி செல்லாதே

செல்லுமிடமெல்லாம் செல்
சொல்வதை செல்லில் சொல்லாதே

உமாமீனா
15-02-2011, 05:44 AM
சொல்வதை இன்றே சொல்
ஆ்னால சொல்வதை
சொல்வதையாக்கி செல்லாதே

செல்லுமிடமெல்லாம் செல்
சொல்வதை செல்லில் சொல்லாதே

ஆமாம்.....புரிகிறது

Hega
13-02-2012, 07:39 PM
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
இவ்வகத்தினிலே மனிதராய்
மரணித்த மனிதத்தோடு
வாழ்பவனால்
வீழுகின்ற என்னுணர்வு
மீளும் வழி தானறியேன்
கூடுகின்ற இடத்திலெல்லாம்
கூச்சலிடும் மனிதராலே
வாடுகின்ற என்மனதை
ஆற்றும் வழி காட்டுங்களேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 10:33 AM
நல்ல கவித் திரட்டு :)