PDA

View Full Version : U.PO.EN:04-GHOST



M.Jagadeesan
07-12-2010, 01:23 PM
நமச்சிவாயம்,சிவகாமி தம்பதிகளுக்குத் திருமணம் நடந்து 10 ஆண்டுகள் ஆயிற்று.குழந்தைச் செல்வம் இல்லை.மழலைச் செல்வம் இல்லாத வீட்டில் எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன பயன்?வேண்டாத தெய்வம் இல்லை;சுற்றாத மரம் இல்லை.தன் கணவனுக்கு மறுமணம் செய்துவைக்க சிவகாமி முடிவு செய்தாள்.தொடக்கத்தில் மறுமணம் செய்துகொள்ள நமச்சிவாயம் சம்மதிக்க வில்லை.ஆனாலும் மனைவி,மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தார்.ஒரு நல்ல நாளில் நமச்சிவாயம்,கல்யாணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.கல்யாணி சிவகாமிக்குத் தூரத்து உறவு.

கல்யாணி நல்ல குணவதி.அக்கா!அக்கா! என்று சிவகாமியிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தாள்.கணவனுக்குத் தேவையான எல்லா பணிவிடைகளையும் செய்தாள்.பணியாட்களிடமும் அன்புடன் நடந்து கொண்டாள்.ஆனால் இரவு நேரத்தில் அவளுடைய நடத்தை வித்தியாசமாக இருந்தது.கணவனைத் தன்னிடம் அண்ட விடுவதில்லை. நமச்சிவாயம் ஆசையாகப் பேச வரும்போதெல்லாம் விலகிச் சென்றாள்.கணவனைத் தொட அனுமதிப்பதில்லை. இவை எல்லாமே இரவில் மட்டும்தான்.காலையில் எழுந்ததும்இயல்பானநிலைக்குவந்துவிடுவாள்.கலகலப்பாகப் பேசுவாள்.அவளுடைய இந்த நடத்தை நமச்சிவாயத்திற்கும்,சிவகாமிக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தனர்.

திருமணம் முடிந்து ஓராண்டு கழிந்தது.கல்யாணியின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.ஒருநாள் சிவகாமி தன் கணவனிடம் வந்து,"என்னங்க நம்ம ஊருக்கு மந்திரவாதி ஒருத்தர் வந்திருக்காராம்.பேய் ஓட்ரதுல கெட்டிக்காரர்னு பேசிக்கிறாங்க!அவருகிட்ட நம்ம கல்யாணியைக் காட்டலாம்னு எனக்கு ஒரு யோசனை.பேய் ஏதும் பிடிச்சிருந்தாக் கூட அவரு ஓட்டிடுவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?"என்று கேட்டாள்.

"அப்படியா! சரி, அதையும் பார்த்திடலாம்" என்று நமச்சிவாயம் கூற, இருவரும் மந்திரவாதியைப் பார்க்கப் புறப்பட்டனர்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்தது மந்திரவாதியின் வீடு.பனை ஓலையால் வேய்ந்த சிறு குடிசை.குடிசையின் வேளியே ஒரு மரப்பலகையில்," இங்கு ஏவல்,பில்லி சூனியம்,பேய்,கெட்ட ஆவி ஆகியவற்றுக்கு பரிகாரம் செய்யப்படும்"என்று எழுதப்பட்டு இருந்தது. நமச்சிவாயமும்,சிவகாமியும் மந்திரவாதியின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

குடிசையின் உள்ளே மந்திரவாதி கண்களை மூடிக்கொண்டு தவத்தில் ஈடுபட்டிருந்தான்.தடித்த உருவம்;கற்றை மீசை; நீண்ட கூந்தலை அள்ளி முடிந்து கட்டி இருந்தான். கழுத்தில் மண்டை ஓட்டினாலான மாலையை அணிந்திருந்தான்.இடுப்பிலே கறுப்பு வேட்டியும்,அதன்மீது சிவப்புத் துண்டும் கட்டி இருந்தான்.அவனுக்கு முன்பாக ஒரு வாழைஇலையில் படையலுக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுஇருந்தன.பூசணிக்காய்,எலுமிச்சம்பழங்கள்,முட்டைகள்,ஒரு பெரிய மண்டையோடு,அதன் பக்கத்தில் சிறுசிறு மண்பொம்மைகள் ஆகியன இருந்தன.ஓமகுண்டம் ஒன்று எரிந்து கொண்டு இருந்தது.

"ஐயா! மந்திரவாதி!"

குரலைக் கேட்டு மந்திரவாதி, கண்களைத் திறந்து பார்த்தான்.

"யார் நீங்கள்?" கர்ண கடூரமாக ஒலித்தது மந்திரவாதியின் குரல்.

"ஐயா!என்பெயர் நமச்சிவாயம்.இவள் என் மனைவி சிவகாமி.எங்களுக்குத் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகின்றன.இதுவரையில் குழந்தைச் செல்வம் இல்லை.எனவே இரண்டாம் தாரமாக கல்யாணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்.ஆனால் அவளுடைய நடத்தை விசித்திரமாக உள்ளது.பகல் நேரத்தில் இயல்பாக இருக்கிறாள்,ஆனால் இரவு நேரத்தில் அவளுடைய சுபாவம் மாறி விடுகிறது.மூர்க்கத் தனமாக நடந்து கொள்கிறாள்.என்னைத் தொட அனுமதிப்பது இல்லை.இதுவரையில் எங்களுக்குள் தாம்பத்திய உறவு ஏதும் நடக்கவில்லை. நீங்கதான் ஏதாவது பரிகாரம் செய்யனும்" என்று நமச்சிவாயம் கேட்டுக் கொண்டார்.

"அந்த பொண்ணுக்கு எவ்வளவு வயசு?"

"இருபதுங்க"

"அந்தப் பொண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம்; நேரில் பாத்துத்தான் முடிவு செய்யனும்"

"உடனே வாங்க ஐயா!"

"சரி" என்று சொன்ன மந்திரவாதி ஒரு பையில் தனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான்.

எல்லோரும் காரில் ஏறி நமச்சிவாயத்தின் வீட்டிற்குப் புறப்பட்டனர்.சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர். காரில் இருந்து அனைவரும் இறங்கினர்.கேட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கு முன்பாக அங்கிருந்த*தெரு நாய் ஒன்று மந்திரவாதியைப் பார்த்து பலமாகக் குரைத்தது.அந்த நாய் கேட்டின் முன்பாக எப்போதும் படுத்துக் கிடக்கும்.கல்யாணி தினமும் அதுக்கு சோறு வைப்பாள்.

வீட்டின் உள்ளே நுழைந்த மந்திரவாதி வீட்டை நோட்டமிட்டான்.பையிலிருந்த முட்டை ஒன்றை எடுத்து தனது வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைந்தான்.கல்யாணியின் அறைக்குள் நுழை ந்தவுடன் முட்டை திடீரென்று சுழல ஆரம்பித்தது.மந்திரவாதியின் முகத்தில் ஒரு மின்னல் தோன்றியது. அடுத்து பூஜை அறைக்குள் நுழைய முயன்றான்.கால் தடுக்கி கீழே விழுந்தான். முட்டை கீழே விழுந்து உடைந்தது.அவன் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.

"இது பூஜை அறையா?"

"ஆம் ஐயா!"

" நமச்சிவாயம்! கல்யாணிக்குப் பேய் பிடித்து உள்ளது.அதை விரட்டவேண்டுமானால்
ஒரு மண்டலம் பூஜை செய்ய வேண்டும்.தினமும் கல்யாணிக்கு அவளுடைய அறையில் வைத்து சாங்கியங்கள் செய்யவேண்டும்.அதற்கு நான் இங்கே தங்கியாக வேண்டும்.எனக்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடு.பூஜைக்குத் தேவையான சாமான்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும்.தினமும் இரவு 12 மணிக்கு சுடுகாட்டிற்கு சென்று பூஜை செய்ய வேண்டும்" என்றான் மந்திரவாதி. எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாக நமச்சிவாயம் உறுதி அளித்தார்.

தனக்குத் தெரியாமல் இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்ததை அறிந்த கல்யாணி அதிர்ச்சி அடைந்தாள்.தான் நன்றாக இருப்பதாகவும்,தனக்குப் பேய் ஏதும் பிடிக்கவில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நமச்சிவாயம் கேட்கவில்லை.மந்திரவாதியின் பூஜைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார். வேறு வழியின்றி கல்யாணியும் ஒத்துக் கொண்டாள்.

தினமும் மந்திரவாதி பூஜைகளைச் செய்தான்.கல்யாணியின் அறைக்குப் போய் மந்திரங்களை ஓதி அவள் தலையில் வேப்பிலையால் அடித்தான்.இரவு 12 மணிக்கு வீட்டைவிட்டு சுடுகாட்டிற்குப் போவான்.அங்கு பூஜைகளை எல்லாம் முடித்தபின்பு இரவு 4 மணிக்கு வீடு திரும்புவான்.மந்திரவாதி வீட்டைவிட்டு வெளியே போகும்போதும்,வரும்போதும் தெரு நாய் அவனைப் பார்த்து பயங்கரமாகக் குலைத்தது.

இவ்வாறு ஒரு மண்டலம் கழிந்தது.கல்யாணியின் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.இதைகண்ட நமச்சிவாயம் தம்பதியினர் மிக்க கவலை அடைந்தனர்.ஒரு மண்டலம் கழிந்த மறுநாள், நமச்சிவாயம் மந்திரவாதியைப் பார்த்து, "ஐயா! கல்யாணியின் நடத்தையில் எவ்வித மாற்றமும் தெரியவில்லையே!"என்று கேட்டார்.

"கவலைப் படாதீங்க நமச்சிவாயம்! நாளை மறுநாள் அமாவாசை அன்று 12 மணிக்கு சுடுகாட்டில் பெரிய பூஜை ஒன்று செய்யப் போகிறேன்.கல்யாணியையும் அழைத்துக் கொண்டு போகிறேன்.அந்தப் பூஜைக்கு "காளி பூஜை"என்று பெயர். காளியின் முன்னால் எந்தப் பேயும் நிற்க முடியாது.பிறகு கல்யாணி சகஜ நிலைக்கு வந்து விடுவாள்.உங்கள் விருப்பப்படி நடந்து கொள்வாள்" என்று மந்திரவாதி சொன்னான். நமச்சிவாயம் "சரி" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் நமச்சிவாயம் வீட்டிற்கு மனநல மருத்துவர் பிலிப்ஸ் வந்தார்.
"வாங்க டாக்டர்" நமச்சிவாயம் டாக்டரை வரவேற்றார்.
டாக்டரிடம் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னார் நமச்சிவாயம்.உடனே டாக்டர்,"மந்திரவாதியைப் பார்ப்பதற்கு முன் என்னைப் பார்த்திருக்கலாமே!"என்று சொன்னார்.
"சரி, நான் கல்யாணியைப் பார்க்கவேண்டும்"என்று டாக்டர் எழுந்தார்.கல்யாணியின் அறைக்கு டாக்டரை நமச்சிவாயம் அழைத்துச் சென்றார்.
" நமச்சிவாயம்! நான் கல்யாணியுடன் தனியாகப் பேசவேண்டும்; நீங்கள் சற்று வெளியே இருங்கள்"
நமச்சிவாயம் வெளியே வந்துவிட்டார்.
டாக்டர் பிலிப்ஸ் கல்யாணியுடன் ஒரு மணி நேரம் பேசிவிட்டு வெளியே வந்தார்.
"மந்திரவாதியைப் பார்க்க வேண்டுமே!"என்றார் டாக்டர்.மந்திரவாதி இருந்த அறைக்கு டாக்டரை அழைத்துச் சென்றார் நமச்சிவாயம்.
மந்திரவாதியிடம் டாக்டரை அறிமுகம் செய்து வைத்தார் நமச்சிவாயம்.டாக்டர் என்று சொல்லாமல் நண்பர் என்று அறிமுகம் செய்தார்.
டாக்டரைப் பார்த்ததும் மந்திரவாதியின் முகத்தில் ஒரு அதிர்ச்சி தெரிந்தது.
" நமச்சிவாயம்! அமாவாசை அன்று நான் நடத்தப் போகும் பூஜை தினத்தில்,புதிய மனிதர்கள் யாரும் வீட்டில் இருக்கக் கூடாது." என்றான் மந்திரவாதி.

மந்திரவாதி பேசும்போது அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர் பிலிப்ஸ்.அந்த அறையை சுற்றிலும் பார்த்தார் பிலிப்ஸ்.சிறிது நேரம் கழித்து டாக்டரும், நமச்சிவாயமும் அறையை விட்டு வெளியே வந்தனர்.
வெளியே வந்தவுடன் நமச்சிவாயத்தின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார் டாக்டர்." நான் காலையில் வந்து உங்களைப் பார்க்கிறேன். நான் சொன்னபடி செய்து விடுங்கள்"என்று சொல்லிவிட்டு டாக்டர் விடை பெற்றுக் கொண்டார்.

மறுநாள் கலை 8 மணி.டாக்டர் நமச்சிவாயத்தின் வீட்டிற்கு காரில் வந்தார்.காரிலிரு ந்து இறங்கினார்.வீட்டின் முன்பாக கேட்டுக்கு நடுவில் முருகக் கடவுளின் வேல் ஒன்று நடப்பட்டு இருந்தது.அந்த வேலுக்கு அருகில் வழக்கமாகக் குரைக்கும் தெரு நாய் இறந்து கிடந்தது.இதை எல்லாம் பார்த்தவாறு டாக்டர் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

"வாங்க டாக்டர்! நீங்க சொன்னபடியே செய்தேன்.ஆனால் எதுவும் நடக்கவில்லையே!"
"எதுவும் நடக்கவில்லையா? மந்திரவாதி அவன் அறையில் இருக்கானா என்று போய்ப் பாருங்கள்!"

நமச்சிவாயம் மந்திரவாதியின் அறைக்குச் சென்று பார்த்தார்.மந்திரவாதி அங்கு இல்லை.
"டாக்டர்! மந்திரவாதி அவன் அறையில் இல்லை"
" நமச்சிவாயம்!இனிமேல் அவன் வரமாட்டான்"
"எப்படி டாக்டர் அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? வேறு இடத்திற்குப் பேய் ஓட்டப் போய் விட்டானா?"

"பேய் எங்காவது பேய் ஓட்டுமா?"
"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?"

"ஆமாம் நமச்சிவாயம்! இவ்வளவு நாள் இங்கிருந்தவன் மனிதன் அல்ல! அவன் ஒரு பேய்!அவனை நான் உற்றுக் கவனித்தேன்.அவன் கண்கள் இமைப்பதில்லை;கரு விழிகள் ஆடவில்லை; அவன் அறையில் செருப்புகள் இல்லை; பேய்களுக்கு செருப்புகளைக் கண்டால் பயம்.அவனைக் கண்டு தெரு நாய் அடிக்கடி குரைப்பதாகச் சொன்னீர்கள்.சாதாரண மனிதர்களுக்குத் தெரியாத*ஆவிகள் நாய்களின் கண்களுக்குத் தெரியும்.கடவுளரின் படங்கள்,விக்கிரகங்கள்,சின்னங்கள் இருக்குமிடங்களை ஆவிகள் அண்டாது.உங்கள் பூஜை அறையில் மந்திரவாதியால் நுழைய முடியாமல் போனதற்குக் காரணம் அவன் பேய் என்பதுதான்.இரவு 12 மணிக்கு மேல் மந்திரவாதி சுடுகாட்டிற்குப் போனபின் கேட்டிற்கு நடுவில் முருகனுடைய வேலை நான் சொன்னபடி நீங்கள் நட்டு வைத்தீர்கள்.சுடுகாட்டு பூஜை முடித்தபின் வீட்டுக்குத் திரும்பிய மந்திரவாதியால் வீட்டின் உள்ளே நுழைய முடியவில்லை.காரணம் முருகனுடைய வேல்தான்.அவனைக் கண்ட தெரு நாய் பலமாகக் குரைக்க ஆரம்பித்தது.வீட்டிற்குள் நுழைய முடியாத தன் கோபத்தை எல்லாம் நாயிடம் காட்டவே, பாவம்! நாய் அவனோடு போராட முடியாமல் இறந்துவிட்டது. தனக்குத் தினமும் சோறு வைத்த கல்யாணியின் உயிரைக் காப்பாற்றித் தன் நன்றியைக் காட்டிவிட்டது."

"டாக்டர் என்ன சொல்கிறீர்கள்? கல்யாணியின் உயிரை நாய் காப்பாற்றியதா?"
"ஆம் நமச்சிவாயம்! சுடுகாட்டு பூஜை என்ற பெயரில் கல்யாணியை சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று, அங்கு அவளைக் கற்பழித்துக் கொன்றுவிடுவதுதான் மந்திரவாதி யின் திட்டம். அவனுக்கு கல்யாணியின் மீது ஆசை.இதைக் கல்யாணியிடம் பேசியதிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்."

டாக்டர் பேசியதைக் கேட்டவுடன் நமச்சிவாயத்தின் உடல் நடுங்கியது.மேலும் டாக்டர் சொன்னதாவது.

"தற்போது பேயாக இருக்கும் மந்திரவாதி, மனிதனாக இருந்தபோது காமுகனாக*இரு ந்திருக்க வேண்டும்.பல இளம் பெண்களைக் கற்பழித்து கொன்றிருக்க வேண்டும்.ஏதோ ஒரு விபத்தில் அகால மரணமடைந்து ஆவியாக அலைகிறான். பேயாக ஆன பின்பும் தன் லீலைகளைத் தொடருகிறான்.அதனால்தான் கல்யாணியின் வயது 20 என்றவுடன் அவளுக்குப் பேய் ஓட்ட சம்மதம் தெர்வித்து இருக்கிறான்.தொழில் முறையில் பேய் ஓட்டுபவனாக*இருந்தால் இந்நேரம் தங்களிடம் ஆயிரக் கணக்கில் பணம் கறந்து இருப்பான். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.இதுவரையில் ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள்.எனவே அவனுடைய நோக்கமே கல்யாணியை அடைவதுதான்."

"டாக்டர்! ஒரு பெரிய ஆபத்திலிருந்து என் கல்யாணியைக் காப்பாற்றி விட்டீர்கள்.அவளுக்கு மன நிலை சரியாகவும் நீங்கதான் உதவி செய்யனும்."

"கவலைப்படவேண்டாம்! கல்யாணிக்கு மனநிலை விரைவில் சரியாகிவிடும்.ஆண்,பெண் உடலுறவு தவறானது என்றும், குழந்தை பிறந்தால் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் அவளுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.அந்த எண்ணத்தை அவளுடைய மனதில் இருந்து ஓட்டவேண்டும்"

'டாக்டர்! நீங்கதான் அதை ஓட்டவேண்டும்"

"கவலைப்படாதீர்கள்! நமச்சிவாயம்! உண்மையான பேயையே ஓட்டிவிட்டோம்!இதை ஓட்டுவதா கடினம்? என்று டாக்டர் சொல்ல இருவரும் சிரித்தனர்.


குறிப்பு: இந்தக் கதையைப் படித்துவிட்டு மதிப்பெண்ணை மஹாபிரபுவின் தனிமடலுக்கு அனுப்பவும்

பாலகன்
07-12-2010, 01:33 PM
மகாபிரபுவை மஹாபிரபுவாக ஆக்கிட்டீங்களே! :eek: :lachen001: :D

விரைவில் படித்து பின்னூட்டமிடுகிறேன்

ஆன்டனி ஜானி
07-12-2010, 02:23 PM
சிறு கதை என்று ஒரு பெரிய கதையை கொடுத்து
ஒரு page யை புல்லா நிறப்பிட்டீங்களே நண்பா

வாழ்த்துக்கள் ..........

ஜனகன்
07-12-2010, 10:34 PM
பாத்திரப்படைப்புகளும், உரையாடல்களும், உள்மன உணர்வுகளும், வேறுபட்ட சிந்தனையும் என்று எங்கும் விரவிக்கிடக்கிறது உங்கள் எழுத்தின் ஆளுமை.

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கேசுவர்
07-12-2010, 11:18 PM
கதை நல்லாயிருந்தது ரசித்தேன் ஐயா.

கீதம்
08-12-2010, 09:27 PM
பொருத்தமில்லாத் திருமணத்தால் உண்டாகும் உறவுச்சிக்கலை மனரீதியாக அணுகாமல் மாந்திரீகம் வழியாக அணுகுவதால் உண்டான அபாயத்தை அழகாகக் கதையாக்கியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
09-12-2010, 06:30 AM
பொருத்தமில்லாத் திருமணத்தால் உண்டாகும் உறவுச்சிக்கலை மனரீதியாக அணுகாமல் மாந்திரீகம் வழியாக அணுகுவதால் உண்டான அபாயத்தை அழகாகக் கதையாக்கியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.

பின்னூட்டம் அருமை கீதம்!

M.Jagadeesan
09-12-2010, 06:30 AM
கதை நல்லாயிருந்தது ரசித்தேன் ஐயா.

பாராட்டுக்கு நன்றி கேசுவர்!

M.Jagadeesan
09-12-2010, 06:31 AM
பாத்திரப்படைப்புகளும், உரையாடல்களும், உள்மன உணர்வுகளும், வேறுபட்ட சிந்தனையும் என்று எங்கும் விரவிக்கிடக்கிறது உங்கள் எழுத்தின் ஆளுமை.

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

பாராட்டுக்கு நன்றி ஜனகன்.

M.Jagadeesan
09-12-2010, 06:33 AM
சிறு கதை என்று ஒரு பெரிய கதையை கொடுத்து
ஒரு page யை புல்லா நிறப்பிட்டீங்களே நண்பா

வாழ்த்துக்கள் ..........

நன்றி! ஆன்டனி ஜானி அவர்களே!

M.Jagadeesan
09-12-2010, 06:34 AM
மகாபிரபுவை மஹாபிரபுவாக ஆக்கிட்டீங்களே! :eek: :lachen001: :D

விரைவில் படித்து பின்னூட்டமிடுகிறேன்

இன்னும் கதையைப் படிக்கவில்லையா?

இணைய நண்பன்
09-12-2010, 08:03 AM
மூடநம்பிக்கையின் ஆபத்தை அழகாய் காட்டியது கதை.பாராட்டுக்கள்.மேலும் தொடர வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
09-12-2010, 08:14 AM
மூடநம்பிக்கையின் ஆபத்தை அழகாய் காட்டியது கதை.பாராட்டுக்கள்.மேலும் தொடர வாழ்த்துக்கள்.

இணைய நண்பரே! தங்களின் பாராட்டுக்கு வாழ்த்துக்கள்!

பாலகன்
09-12-2010, 02:16 PM
என்னாது கல்யாணியோட உயிரை நாய் காப்பாற்றியதா?

பேயே பேயை ஓட்டுவது எங்கும் நடக்காது. காமப்பிசாசாக இருக்கே! நல்லவேளை டாக்டர் ரூபத்தில் அந்த முருகன் தான் வந்து நமச்சிவாயத்தை காப்பாற்றினாரு.

திரில்லர் கதை அருமை.

பாராட்டுகள்