PDA

View Full Version : உனக்கு பையன் தான்டா பொறக்கும் - பாட்டிபாலகன்
07-12-2010, 02:31 AM
இரண்டு நாட்களுக்கு முன் என் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க மருத்துவமனை சென்ற நேரத்தில் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு பலகையை கண்டேன் (Laminated board) இதை ஆர்வமாக படித்துக்கொண்டிருந்த நான் அங்கிருக்கும் செவிலியரிடம் கேட்டேன், "நர்ஸ்! இப்ப தான் காலம் மாறிடுச்சே! இப்படியெல்லாம் இன்னுமா நடக்குது" அவர் பதில் அளிக்க முற்படுகையில் பிறந்த குழந்தையை அறுவை சிகிச்சை அறையிலிருந்து கொண்டுவந்தார்கள். முதலில் ஓடிச்சென்ற பாட்டி சொன்னாள், "அப்பாடா, முதல் பையன் பேரனா பிறப்பான்னு நான் முதலிலேயே சொன்னேன்ல" என்றாள்


கூடி நின்ற சுற்றம் அனைவரும் பையனா பொறந்துட்டான், அப்பாடான்னு ரொம்பவே பில்டப் கொடுத்துட்டு இருந்தாங்க, அவர்கள் பார்வை என்னை பார்த்து திரும்பிய போது " நான் சொன்னேன் இறைவன் கொடுக்கும் எந்த குழந்தையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேன்டும், இதில் ஆண் என்ன பெண் என்ன?" என்றேன்


உனக்கு பிறக்க போகும் குழந்தையும் ஆணாக தான் இருக்கும் என்று என்னை பார்த்து சொன்னார்கள், "நான் பெண் குழந்தையை தான் விரும்புகிறேன், ஆனால் கடவுள் சித்தம் எதுவானாலும் நான் ஏற்றுக்கொள்வேன்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலிசெய்தேன்.


மீண்டும் நர்ஸ் பக்கம் திரும்பி பார்த்தேன், அவள் சொன்னாள், "இவங்க புள்ளை மட்டும் பெண் குழந்தையாய் இருந்து அவங்க அதை பிறக்கும் முன்னரே கண்டுபிடிச்சிருந்தா இந்த சுவற்றிமாட்டிய பெண் குழந்தை அதுவாக தான் இருக்கும்" என்று என் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.


இந்த வார்த்தைகள் என்னை பாதிக்கவே இந்த சுவற்றில் மாட்டிய பெண்சிசு கொலை வார்த்தைகளின் நகலை எனது செல்பேசியில் படமெடுத்து வந்தேன். அதை உங்களுடன் பகிர்கிறேன். இதோ அந்த வரிகள்
பெண் சிசு


விழுந்தது ஒருதுளி கர்பத்தில் எழுந்தது தாயாகும் உணர்வு
வீடே விழாக்கோலம் பூனும் மகிழ்ச்சியால் மலரும் என்று எண்ணினேன்
பெண் எனத்தெரிந்ததும் பெரிதும் துக்கம் கவிந்தது இல்லத்தில்
பாட்டி சொல்கிறாள் எங்களுக்கு வேன்டாம் தந்தையும் அதே எண்ணத்தில்
பெண் எனத் தெரிந்தது் துயரப்படுவதேன். அத்துணை அதிர்ஷ்டம் இல்லாதவளா நாள்உன்னை பெற்றவளும் பெண்தானே அந்த வம்சத்தில் வந்தவள் தானே நான்
உலகில் உதிக்கும் முன் நான் உயிர்விடவேன்டும் என நினைக்கிறாயா அம்மா
உன் உடலின் ஒருபாகமான என்னை எமனிடம் அனுப்ப விழைகிறாயா அம்மா
நான் அங்கம் அங்கமாக வெட்டப்படுவேன் துண்டு துண்டாக சிதைக்கப்படுவேன்நான் அழவேன்டும் என்று நினைத்தாலும் எப்படி அழுவேன். அழ எனக்கு குரலில்லையே
இது மகாபாவமாகும் இதில் நீ பங்கேற்க வேன்டாம் அம்மா
பகத்சிங் ஆசாத் குரு போன்ற புதல்வர்களாக முடியும் என்னால் அம்மா
கல்பணா சாவ்லா அன்னை தெரசா போலாகி பெருமை சேர்க்க முடியும் உனக்குஇன்று ஆண்கள் செய்வது அனைத்தையும் செய்ய முடிவும் எனக்கு
விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம் அனைத்திலும் பெண்கள் முத்திரை பதிக்கிறார்
வரதட்சனை என்ற செலவுக்கு பயந்து நீயே என்னை கொல்ல முனைகிறாய்
மகன் வேன்டும் என்ற வேட்கையில் மகளை பலியிட விழைகிறாய்
உன் முற்றத்தில் பூத்த முல்லை நான், என்னை மணம் வீச விடம்மா
மகன் ஒருநாள் உன்னை விரட்டக்கூடும் அன்று நானிருப்பேன் உனை காப்பாற்ற அம்மா.


இப்படிக்கு
பெண்சிசு - கருவறை


கடைசி வரி மட்டும் சரியாக தெரியாததால் நானே எனது சொந்த கருத்தையே சேர்த்துவிட்டேன்.


நன்றி
அந்த மருத்துவமனை
-----------------------------------------------------------------------------------------------------------------

ஆன்டனி ஜானி
07-12-2010, 03:03 AM
இந்த காலத்தில் பெண்குழந்தையும் மதிப்பதில்லை
பெரிய பெண்களையும் யாரும் மதிப்பதில்லை நண்பா

இப்போது சொல்ல போனால் பெண்ணில்லையேல் ஆணில்லை என்று தான்
சொல்லனும் ......

இனி உள்ள காலக்கட்டத்தில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து தான் போகனும்

பெண் சிசுவை அளிப்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் நண்பா !!!!!!

உங்களுடய கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .......

வாழ்த்துக்கள் ..

ஆதவா
07-12-2010, 03:51 AM
அப்படியும் மீறி பெண் குழந்தை பிறந்துட்டா.... இன்னும் கொஞ்சம் சிவப்பா இருந்தா நல்லாருக்கும்னு சொல்லுவாங்க.
என் உறவினர் ஒருத்தருக்கு முதல் குழந்தை ஆண், நல்ல சிவப்பு... இரண்டாவது பெண், சிவப்புதான் என்றாலும் முதல் குழந்தை மாதிரி இல்லாததால் அந்த குழந்தையின் தாய்வழி பாட்டி பொண்ணு கொஞ்சம் மாநிறமாத்தான் வரும் என்று உச் கொட்டினார்...

என்ன கொடுமைங்க... சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். இத்தனைக்கும் தன் மகளைக் கட்டிக் கொடுத்தது தன் தம்பிக்கு..........

முன்னர் இருந்த பெண் சிசுக்கொலை குறைந்துவிட்டதேயொழிய ஒழிந்துவிடவில்லை...
நல்லா பொறந்தா சரிதான்!!!

ஆதவா
07-12-2010, 03:52 AM
பெண் சிசுவை அளிப்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் நண்பா !!!!!!

.

:confused::confused::confused::eek:

பாலகன்
07-12-2010, 04:24 AM
பெண் சிசுவை அளிப்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் நண்பா !!!!!!


:confused::confused::confused::eek:

ஐய்யோ எனக்கு பெண் குழந்தை பிறக்கும்னு கனவுல மிதக்கிட்டு இருக்கேன்ங்கண்ணா! இப்படி குண்டை தூக்கி போடுறீங்களே :eek: :sprachlos020: :lachen001:

பூமகள்
07-12-2010, 08:42 AM
பெண் சிசுவைக் கொல்றதைச் சொல்லப் போய், ஆண்டனி அண்ணா, பெண் குழந்தையைக் கொடுத்த(அளித்த) அம்மாவையும் அல்லவா கொல்லச் சொல்றாங்க??!! :eek::eek:

என்ன கொடுமை சரவணன்(பிரபு) சார் இது? :frown::eek:

ஜேஜே
07-12-2010, 09:58 AM
நெஞ்சை வருடும் படைப்பு.. என்னிடமுள்ள 200 இபணத்தையும் மகாபிரபுக்கு காணிக்கை ஆக்குகிறேன்..

விகடன்
07-12-2010, 12:04 PM
இதெல்லாவற்றிற்கும் வரதட்சணை ஒன்றே காரணம்.
அரபுநாடுகளில் பெண்களுக்குத்தான் மவுசு அதிகம். :)

ஆனால் அவர்களுக்குரிய சட்டதிட்டங்களும் சமய நடைமுறைகளும் அகோரம். :icon_ush:

Hega
07-12-2010, 04:19 PM
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து
நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள்
பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.

Hega
07-12-2010, 04:24 PM
மகா பிரபு சார்

என்கூட சண்டைக்கு வராதிங்க...

இது என் கருத்தில்லைங்க நம்ம பாரதியார் சொன்னது.

அவர் இன்னொருதடவை வந்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.... என்ன பாடுவார்னு நினைத்தேன்.