PDA

View Full Version : இயலாமை.....



இமை
06-12-2010, 05:36 PM
நீ இல்லாத போதுதான் தெரிந்தது...
இல்லாமையால் வரும் இயலாமையை!
இல்லாமை மட்டும் இருந்தால் பரவாயில்லை!
இயலாமை என்பது கொடுமையின் உச்சம்!!!
ஏன் தெரியுமா?? கால் இருந்தும் ஊனம்!
வாய் இருந்தும் ஊமை! கண் இருந்தும் குருடன்!
காது இருந்தும் செவிடன்!..... இன்னும் பல.....

இது ஒரு வினோதமான வாழ்க்கை முறை!
ஒரு உலகத்திற்குள் புது உலகம்!
உணர்வுகளின் உச்ச கட்ட உறக்கம்!

இதுமட்டுமா.....

பசி என்று வயிறு அழைத்தால்...
எச்சிலை மட்டும் கொடுக்கும் மனது...
கைகள் வழுக்கி பேசிய கன்னங்கள் இன்று....
தென்னை மர மயிர் காடுகள்.... "ஐயோ"
காட்சிப்பிழை இல்லாத பிரிவுகளின் நிகழ் நினைவுகள்!!!
ஏன் இந்த அடக்கு முறை???

கிட்டத்தில் இருந்து பார்க்க பயம் கொண்ட மனம்.... இன்று....
வன்முறை வேடமிட்டு மிரட்டும் மாயம் தான் என்ன???

ஒரு வேளை புத்தன் துறந்த முற்றும் இது தானோ??
ஒரு விடை தெரியாத கேள்வி என்ன என்றால்??
மாற்று பால் உயிரின் தாக்கம்...
என் ஹோர்மொன்களை சம்பிக்க செய்கிறதே??? எப்படி?

இனி யுத்தம் செய்ய போர் களம் செல்ல வேண்டாம்....
மோதிர துவரம் உன் விரல் நுனி தொட்டால் போதும்....
என்னக்குள் நானும்!! என் அணுக்குள் அணுவும் மோதிக்கொள்ளும்!!!

வலியின் அளவு கோல் இல்லாமை என்றால்...
எதிர்பார்ப்பின் அளவு கோல் இயலாமை....


என்றும் அன்புடன்,
இமை

பாலகன்
06-12-2010, 05:41 PM
இயலாமையால் வரும் துயர் எடுத்து சொல்லியவிதம் நன்று

முயன்றால் அதைவிட்டு வெளிவந்து வீறுநடை போடலாம்

நாஞ்சில் த.க.ஜெய்
06-12-2010, 07:12 PM
இயலாமையை இல்லாமை ஆக்க முயலாமையை விட்டொழிக்க
என்றும் உங்களுடன்
த.க.ஜெய்

Hega
06-12-2010, 07:15 PM
இயலாமை ஏன் என எடுத்தாண்ட விதம் அருமை.

தொடருங்கள் இமை அவர்களே..

இல்லாமையென்பது இயலாமையானால்
த்ள்ளாமையெம்மை இல்லாமையாக்கும்.

முயலாமை தன்னை மூலையியெறிந்தால்
இயலாமை நம்மில் இல்லாமல் போகும்.