PDA

View Full Version : டீன் ஏஜ் வாழ்வில் சில பின்னோக்கிய பார்வைĨNanban
23-11-2003, 04:04 PM
டீன் ஏஜ் வாழ்வில் சில பின்னோக்கிய பார்வைகள்.........

ஒவ்வொருவர் வாழ்விலும் திருப்புமுனையாக சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கக் கூடும். இன்று அதை திரும்பி பார்த்தால் அந்த நிகழ்ச்சிகள் எவ்வாறிருக்கும்?

விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அன்று கட்டுப்பாடுகளை எதிர்ர்துப் போராடுவதாக நினைத்து மாட்டிக் கொண்டு, அதனால், இன்றளவும் தொடரும் பாதிப்புகள் அதிகம். இப்பொழுது அவை புரிந்தாலும், அந்த காலத்தில் அவை புரியவில்லை.

முதல் சிகரெட்டும். முதல் துரோகியும்........

பக்கத்து டவுன்
தெருக்களில்
முகவரியற்ற அநாதவராக

திரும்பிய பக்கமெங்கும்
தெரிந்த அன்னிய முகங்கள்
தந்த நம்பிக்கைகள்.....

பஸ் பிடித்துப் போகும்
தொலைவில் வீடு...

கடையில் கேட்டு வாங்க
தயக்கமில்லாத
ஊக்கம் தரும் நண்பர்கள்....

முதல் சிகரெட்
புகைச்சலும், இருமலுமாக
உறிஞ்சப்பட்டது....

வீட்டிற்குப் போய்
வாங்கிக் கட்டிக் கொண்டது
வாரியக் கட்டை அடி..

துள்ளிக் குதித்தது மனம்....
உங்கள் கட்டுப்பாட்டை
வென்று விட்டேன்........

தையத் தக்க தையா....

இன்று வரையிலும்
தேடிக் கொண்டிருக்கிறேன்........

வீட்டிற்குச் சென்று
வத்தி வைத்த
அந்த முதல்
நம்பிக்கைத் துரோகியை........

இளசு
23-11-2003, 09:17 PM
மிக ரசித்தேன் நண்பனே...
இறுதிவரி திருப்பம் எதிர்பாராதது... அருமை..

வத்தி வச்சவன் இருக்கட்டும்
பத்த வைத்தது
இன்னும் ஒட்டியே இருக்கா..?
ஒதுக்க முடிஞ்சதா?

அனுபவ ஊர்வலம் தொடரட்டும்..

Nanban
24-11-2003, 04:05 AM
அன்று ஒட்டிக் கொண்டு, இன்றளவும் தொடரும் பழக்கங்கள் தான்...........

ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் வேண்டாத விருந்தாளி அது...........

சேரன்கயல்
24-11-2003, 04:16 AM
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...நண்பன்...
போட்டுகொடுத்து காணாமல் போனவன் இன்றைக்கும் மனதில்...ஆழமாய்...
புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்லுவாங்க...

Nanban
24-11-2003, 05:48 AM
புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்லுவாங்க...

இப்படியாக எத்தனையோ விதமான சால்ஜாப்புகள்........

காத்திருக்கும் போது சும்மா ஒரு டைம் பாஸ்......
டைட்டான வேலைகளுக்கிடையில் ஒரு ரிலாக்ஸேஷன்........
பிரச்னைகளுக்கிடையில் டென்ஷனைப் போக்க......
சாப்பிட்டதும் செறிக்க ஒரு பஃப்.....
காலையில் டாய்லெட்டுக்குப் போக ஒரு சிகரெட்.....

ஆக எத்தனை எத்தனையோ வழிகளில் புகை பிடிக்கப் படுகிறது......

சேரன்கயல்
24-11-2003, 06:40 AM
ஆமாம் நண்பன்...
சாக்கு போக்கு சொல்வதற்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை...எல்லாத்துக்குமே நம்மிடம் கைவசம் காரணங்கள் பல உண்டு...

poo
24-11-2003, 12:48 PM
நண்பன் அவர்களே..

இந்த தலைப்பின்கீழ் இன்னும் நிறைய தொடரவேண்டும்.. உங்களுக்கு எந்தளவு தைரியம் என அறியவேண்டும்!!!எனக்குத்தான் இப்படியான அனுபவங்கள் இதுவரை இல்லை!!!

(வருந்துவதா.. இனி திருந்துவதா(?!)....)

(இப்படி பாப்பாவா இருக்காதேடா மச்சி.. திருந்துடான்னு அடிக்கடி நண்பர்கள் திட்டுகிறார்கள்!!)

Nanban
24-11-2003, 02:28 PM
முதல் காதல் எல்லோருக்கும் இன்னும் நினைவில் இருக்கிறதா என்று தெரியாது - ஒருவேளை மறக்கப்பட முயற்சிக்கவாவது நினைக்கப்படலாம்...... முதல் காதலை மறக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இல்லை. அந்த காதல் இதோ......

முதல் காதல்......

முதல் காதலை
மூன்றாவது காதலியிடம் சொன்னேன் -
ஏமாற்றப்பட்டதாக
நினைக்கவில்லை.....
முதல் காதல்
இப்படியா தொலைந்து போகணும்......
என்ற நினைப்பில்
அவள் நினைவுகள்.....

கல்யாணம் பண்ணிக்கப் போற
புள்ளைகளுக்கு
அடக்கம் வேணும்
என்ற வகையில் இல்லாதவள் அவள்....

அடையாளம் தேடி
அலையும் அவளுக்கு
குடத்திற்குள் குந்த வைக்கப்பட்ட
விளக்கு தத்துவம்
குதிரைக்கு போடப்பட்ட
கடிவாளம்.

காலில் இருக்கும் கொலுசு முதல்
மார்பு விரிய இழுத்து விடப்படும்
மூச்சுக் காற்று வரை
சத்தம் எழுப்ப
எத்தனையோ இசைக்கருவிகள்
அவளிடம் -
உதடுகளையும் சேர்த்து........
அலைகள் எழும்புவது
கரையில் ஆள் நடமாட்டம்
எத்தனை என்பதைப் பொறுத்து....

தினம் தினம் சிரித்து
தினம் தினம் கையசைத்து
கடைசியில் ஒரு கவிதை இசைத்து
கையில் கொடுத்த பொழுது
கவிந்து கொண்டே சொன்னாள் -

உன்னைப் பார்க்கப் பிடிக்கிறது
உன்னைப் பார்த்து சிரிக்கப் பிடிக்கிறது
உனக்கு கையசைக்கப் பிடிக்கிறது
கையில் கடிதம் மட்டும் வேண்டாம்
மறுநாள் முதல்
சமத்தாக குந்தி கொண்டாள்
குடத்தினுள் விளக்காக.....

இ.இசாக்
25-11-2003, 08:25 AM
இலக்கியத்தில் இயல்பானதாவும்
போற்றுதலுக்குரியதாகவும் உள்ளவை
நிகழ்வுகளின் பதிவாக அமைவது.
அதிலும்
இப்படியான மறைக்க விரும்பியவற்றை
துணிவோடு பதிவுசெய்வது
இன்னும் சிறப்புக்குரியது. என்பார் கதாசிரியர் கி.ரா பெரிசு

போற்றுதலுக்குரிய
சிறப்புக்குரிய
இயல்பான படைப்பாக
அன்பு நண்பன் அவர்களின் இப்பதிவுகளை காண்கிறேன்.

இப்படியாக
நானும் பதிய முயலும்போது தான்
கவிஞனுக்குரிய எல்லையை தொடமுடியும்.

rika
25-11-2003, 09:32 AM
முதல் அனுபவங்களை பகிரங்கமாக சொல்லும் அழகு அலாதியானது..
முதல் கவிதையில் சொல்லப்பட்ட எதார்த்தவரிகள்.. கடைசித் திருப்பம்..
ரசனை மிகுந்த பழைய கால நினைவுகள்..
இரண்டாவது கவிதையில் சொல்லிய ஆரம்ப வரிகள்..
முதல்காத்லை மூன்றாவளிடம் சொன்னது.. உண்மையான வரிகள்..
தொடரக் கேட்டுக் கொள்கிறேன்..

rika
26-11-2003, 05:46 PM
காதல் ஏக்கம்..

இவனாவது
சொல்வான் என்ற ஏக்கத்தில்
ராஜகுமாரர்கள்
இடம்மாறிப் போனார்கள்
எனது கனவுகளில்..

எனது கொலுசொலி
கேட்கவந்த
அரச குமாரனோ
மெட்டி ஒலி கேட்பதற்காக
பந்தக்கால் நட்டுவிட்டு
கண்ணீர் சிந்திப் போனான்..

இன்னும் எனது கனவுகளில்
கேட்கிறது
ராஜகுமாரர்கள்
வந்து போகும்
குதிரைப் பிளம்புகளின் ஒலி...

இளசு
26-11-2003, 06:07 PM
பாராட்டுகள் ரிகா அவர்களே...

புரவியில் ஏற்றியவனும்
பந்தக்காலில் இடறி
புரட்டி மண்ணில் போட்டதுண்டு

பந்தக்காலில் நின்றுகொண்டே
வந்த புரவியில்
மனோவேகம் போவோருண்டு..

பல குதிரைகள்..
பல பந்தல்கள்...
பொருந்தாப் பயணங்கள்...
வழியெங்கும் சத்திரங்கள்..
ஓயாதது என்னவோ
குளம்படிச் சத்தங்கள்..

முத்து
26-11-2003, 06:28 PM
எத்தனையோ
பொருள் காட்டும்
செய்தி சொல்லும்
குளம்படிச் சத்தங்கள் ...

சொன்னது புரிந்தும்
நடப்பது தெரிந்தும்
அரச குமாரர்கள்
என்னதான் செய்ய முடியும் .. ?

என்றாலும்
ஒரு புதிய சந்தேகம் ..
அனைத்தையுமே
சொற்களால் மட்டும்தான்
சொல்லவேண்டுமா .. ?
குளம்படிச் சத்தமே ஆயிரம்
பதில் சொல்லும்போது ..

Nanban
27-11-2003, 05:53 AM
ஆஹா.......

அருமையான சத்தங்கள்........

இனிமையாக ஒலிக்கும் சத்தங்கள்.........

ஒலிக்கட்டும்...... வலுவாக.............

poo
28-11-2003, 03:13 PM
ஒவ்வொரு பதிவிலும் ஆனந்தம்..

அமோக வரவேற்பு கண்டு பேரானந்தம்...

நண்பன் கொடுத்தவைத்தவரய்யா நீர்!!

Nanban
28-11-2003, 05:56 PM
இப்படியாக நானும்.....................

பதியன முயலும்போது தான்............
கவிஞனுக்குரிய எல்லையை தொடமுடியும்.

உங்களுடைய பல கவிதைகளில் தொனித்த அந்த நேரிடை அனுபவம் தான் என்னைச் சிந்திக்க வைத்தது.....

கவிதைக்கு தேவை.............. கற்பனையான காட்சிகள் அல்ல, நேரிடையான அனுபவத்தை, உண்மையான தொனியில், பாசாங்கு இல்லாமல் சொல்வதே என்பது தான்.............

உண்மையான காட்சிகளை சொல்லும் பொழுது தான், பாசாங்கு இல்லாத தொனி வரும் என்பதை நான் அறிவேன் ஆதலால், இந்த முயற்சி......

ஆக, எனது இந்த முயற்சியில் உங்களுக்கும் பங்கு உண்டு........

புதிதாக கவிதையை நோக்கும் பார்வையை உண்டாக்கியமைக்கு.........

போகும் தொலைவு வெகுதூரம் என்றாலும், நடப்பதற்கு சமயம் உண்டு...........

Nanban
02-12-2003, 01:58 PM
பாய்ஸ் படத்தை மிகவும் ரசிக்க முடிந்தது என்னால் - காரணம் அத்தகைய குறும்புகளையெல்லாம் கடந்து வந்ததினால் தான்.......

இந்தக் கவிதையைப் படித்து விட்டு திட்ட வேண்டாம்....... கடைசி நாள் அன்று எல்லாப் பெண்களிடமும் சொல்லி விட்டோம் - யார் யாருக்கு என்ன என்ன பெயர் என்று....... ச்..ச்சீ நாட்டி பாய்ஸ் என்று சொல்லிக் கொண்டே கண்களில் நீர் வரும் வரைக்கும் சிரித்துக் கொண்டே பை சொல்லிப் போய் விட்டனர்.....

இன்றும் பார்த்தால், சிரித்துக் கொள்வோம்......

சில தோழிகளுடன் இன்றளவும் கடிதப் போக்குவரத்து உண்டு...... மனைவிக்கும் தோழி என்பதால் பிரச்னை இல்லை........

செல்லப் பெயர்கள்...........

உனக்கும்
தோழிகளுக்கும்
பட்டப் பெயர்கள்
உண்டு
என்பது
தெரியும்......

யார் யாருக்கு
என்ன என்ன பெயர்
அறிவதில்
உங்களுக்குள் போட்டி

என்னிடம் கேட்ட
பொழுதெல்லாம்
மர்மாக
ஒரு புன்னகையுடன்
விலகிக் கொள்கிறேன்.

உன்னிடத்தில்
எப்படி சொல்வேன் -
ஆல்பா, பீட்டா, தீட்டா
கணிதக்குறிகளால்
உங்களுக்குப்
பெயர் வைத்த காரணம்?

கைகளை
டெஸ்க்கில் ஊன்றி
இருக்கையில்
தோன்றும் கோனம்......

இக்பால்
02-12-2003, 02:10 PM
நல்லவேளை நண்பர் நண்பன் படத்தை இயக்கவில்லை.
எல்லாம் விவகாரமான ஆட்களப்பா...-அன்புடன் இக்பால்.

இக்பால்
02-12-2003, 02:11 PM
சேரன்கயல் தம்பி...இந்த கவிதைக்கு விளக்கம் வேண்டாம்.
எனக்கே புரிந்து விட்டது. -அன்புடன் அண்ணா.

Nanban
02-12-2003, 02:14 PM
நல்லவேளை நண்பர் நண்பன் படத்தை இயக்கவில்லை.
எல்லாம் விவகாரமான ஆட்களப்பா...-அன்புடன் இக்பால்.

படத்தை நான் இயக்கி இருந்தால், இவைகளும் காட்சிகளாகி இருக்கும்.......

After all, எல்லாமே அனுபவம் தானே.......

இக்பால்
02-12-2003, 02:21 PM
போதும் போதும் நண்பர் நண்பனே...விட்டால் நமது மன்றத்தின்
வெளியீடாக கேர்ள்ஸ் என்று ஒரு படத்தை வெளியிட்டாலும்
வெளியிட்டு விடுவீர்கள். அப்புறம் மன்றம் ஒரு புயலில் சிக்கித்
தவிக்கும். -அன்புடன் இக்பால்.

சேரன்கயல்
02-12-2003, 02:33 PM
அண்ணே...நண்பன் படம் எடுத்திருந்தால் என்று இல்லை...நான் படம் எடுத்தாலும் கிரேக்க எழுத்துக்கள் என்ன...இன்னும் பல மொழிகளின் எழுத்துகளில் வர்ணம் தீட்டியிருப்பேன்...

Nanban
02-12-2003, 02:44 PM
பல போட்டிகளில் மாவட்ட அளவில் சாம்பியஷன்ஸ்...... ஸ்கூலில்...... தொடர்ந்து போட்டிகளில் பயிற்சி பெறுவதற்கு ஸ்கூல் முடிந்தும் பிராக்டீஸ்...... முகம் சுளிக்காமல், எல்லோரும் கபடிக்குப் பேர் கொடுத்து விடுவார்கள்....... ஏன் என்று பாருங்களேன்........


விளையாட்டு நேரம்..............

புகை உருக்கா
நெஞ்சம்
இருந்த காலம் அது........

ஆவேச விரட்டலுடன்
கால்பந்தும்
கோல் போஸ்ட்களும்
காலை நேர
விளையாட்டு.......

மாலை
பள்ளி முடிந்ததும்
மூச்சைப் பிடித்து
மண்ணில் புரளும்
கபடி......

பிடிபட்டு வீழ்வதில்
மாணவர்கள்
அத்தனை பேர்களுக்கும்
அதீத போட்டி.......

எல்லைக் கோட்டை
தொட்டு அடுத்து
பெண்களின்
பாஸ்கெட் பால் கோர்ட்.......

சேரன்கயல்
02-12-2003, 02:50 PM
சபாஷ்...
அப்படியே இந்த கவிதையை, படத்தில் ஒரு பாடல் காட்சியாக்கிட வேண்டியதுதான்...(உங்களோட அல்லது என்னோட படத்தில்)
அசத்துங்க நண்பன்...

Nanban
02-12-2003, 02:56 PM
நன்றி, சேரன்.........

இப்ப நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.......

நாம் தான் இப்படியெல்லாம் இருந்தோமா என்று.......

இன்று எந்தப் பெண்களைக் கண்டதும், கை கூப்பி ஒரு நமஸ்காரத்தோடு விலகிக் கொள்ளும் இன்றைய நான் பொய்யோ என்று தோன்றுகிறது......

இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்து பழைய காலத்திற்கு சென்றால், மீண்டும் இதே விளையாட்டுகளில் ஈடுபடுவேன் - எந்தக் கூச்சமுமில்லாமல்.......

இக்பால்
02-12-2003, 02:59 PM
அண்ணே...நண்பன் படம் எடுத்திருந்தால் என்று இல்லை...நான் படம் எடுத்தாலும் கிரேக்க எழுத்துக்கள் என்ன...இன்னும் பல மொழிகளின் எழுத்துகளில் வர்ணம் தீட்டியிருப்பேன்...


சொல்லவே வேண்டாம். கொளுசு கண்டுபிடித்ததிலேயே தெரிகிறது.

Nanban
02-12-2003, 03:12 PM
அவர்களும் சளைத்தவர்கள் அல்ல.....

பள்ளி சீருடையும்
விளையாட்டுச் சீருடையும்
வெவ்வேறாகப் போனதில்
எங்களுக்கு ஒரு சந்தோஷம்.........

முதல் ஒப்பந்தம் -
முதலில்
உடைமாற்றிக் கொள்ள
பெண்களுக்கு உரிமை.....

அடுத்து மாதங்கள்
சில போனதும்
அடித்துப் பிடித்து வந்தனர்
ஒப்பந்தம் மாற்றி அமைக்க......

உடைகள் எல்லாம்
தொட்டு
கலைக்கப்பட்டதாக புகார்.....

நாங்கள்
உங்களைத்
தொடா விட்டால் என்ன?
நீங்கள்
எங்களைத் தொடுங்கள் -
அறையின் ஜன்னல்களில்
சட்டையும்,
முழுக்கால் சட்டைகளும்
தொங்க விடப்பட்டன.....

முடிவு கட்டப்பட்டது,
இந்த விளையாட்டு ஒருநாளில் -
பல சட்டைகள்
பெண்கள் வீட்டு
வேலைக்காரர்கள் உடலில்......

Nanban
02-12-2003, 04:03 PM
எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை...... சில வீட்டில் பெற்றவர்களும், மற்றவர்களும் நண்பர்களாய்......

அப்படி ஒரு வீட்டில்.........

உதை வாங்காமல் வந்தா சரி.... என்று சிரித்துக் கொண்டே எங்களை வேடிக்கைப் பார்ப்பர்........

சிக்கலாக்கிக் கொள்ளாமல் துணையாக நின்றவர்களும் அவர்களே......


துரியோதனன் வீட்டில்..........

அடிக்கடி கூடும்
நண்பன் வீடு.....
கதை பேசும் நேரம்
காதில் விழும்
உயிர்ப்புள்ள
பாடல்கள்.....

கலாய்க்கும்
சங்கேத சங்கீதம்...
நண்பனின் அம்மா
அதட்டலில்
அடங்கும் குரல்...

கண் பார்த்து
சிரிக்கும் விஷமம் -
கூடிய நண்பர்களுக்கெல்லாம்
கலக்கும் வயிற்றை
எங்கே
அம்மா முன் போட்டு
உடைத்து விடுவாளோ என....

அம்மாவே சொல்வார்கள் -
எல்லாம் தெரியும்
எனக்கும் அக்காவுக்கும்
யார் யார்
எந்தெந்த பெண்ணை
பார்க்கிறீர்கள் என்று........

இளசு
02-12-2003, 07:45 PM
ஒரு குதூகல குறும்படம் ஓடுகிறது மனக்கண்ணில்..


ஆயிரம் நிகழ்வுகள் பின்னாளில்..மோதி வளரும்..
ஆணி அடித்த இவை அடியில் நிரந்தரமாய் தங்கும்.

மிக ரசித்தேன். நன்றி நண்பனே.

Nanban
03-12-2003, 04:52 AM
நன்றி........

கொஞ்சம் பயமும் இருக்கிறது - யாராவது தடை உத்தரவு கேட்டு விண்ணப்பிப்பார்களோ........... என்று.

james
20-12-2007, 10:51 AM
மிக ரசித்தேன் நண்பனே...