PDA

View Full Version : நாமாகி இருந்தால்........?



Hega
05-12-2010, 07:43 PM
நாமாகி இருந்தால்

மன்னிக்க மாட்டாயா? -உன்
மனமிரங்கி …………
மாற்றிட மாட்டாயா?--உன்
மனதை நீ……..

காயங்கள் ஒருநாள்
மாறிடும் போது
கண்டிட வருவேன்
கலக்கங்கள் தீர்ப்பேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

அன்றொரு நாளில்-- நீ
தந்த நம்பிக்கை
என்னில் நிலைத்திடும் போது
ஜெயம் பெற்று வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?


பள்ளி சென்ற போதினில்
நாம் கற்ற பாடங்கள்
என்னை உயர்த்திடும் போது
உன்னைத்தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?


நல்ல நட்பின் புகலிடமாய்
அணையாத அன்போடு
இணையாக திரிந்த காலங்கள்
நினைவில் நான் தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?


நான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்
தண்டனைக்கு பயந்தே----நான் விலகிப்போனேன்.
நான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது
சுடராக வருவேன்.
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

தானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,
நாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ?

Hega
07-12-2010, 10:20 AM
அன்பு என்பது........




பாசம் என்பது பாரமாகுமா..
நேசம் என்பதும் நெஞ்சைத்
தொட்டுச்செல்லுமா...?

வாழ்க்கை முழுவதும்
வாதை ஆகுமா
இன்பம் தேடினால்
என்றும் இனிமை போகுமா?

அன்பாய் அரவணைப்பதும் .
என்னை அடிமை ஆக்குமா.
இத்தனை வலி ,,
இந்த அன்பில் தோன்றுமா?

பந்தம் என்பதும்
பாசம் என்பதும்
வந்த சொந்தத்தால்
நிந்தை ஆகுமா?

பேதை என் உள்ளம்
வேதனை தனை
சோதனையோடு
சகிக்க வேண்டுமா?



இல்லை...........இல்லை



அன்பு என்பது
அன்னை அன்பை ஜெயிப்பது
பாசம் என்பது
தந்தை அறிவைக்கொடுப்பது

நேசம் என்பது
நட்பில் நிழலாய் இருப்பது
அணைப்பு என்பது
அகிலம் ஜெயிக்க செய்வது

வாழ்க்கை முழுவதும்... ஜெயிக்கும்
வல்லமை தருவது
நினைக்கும் போதிலே
இனிய நினைவைத்தருவது

பந்தம் என்பது
உயிர் கொடுப்பது
சொந்தம் என்பது
என்றும் நிலைத்து நிற்பது.

துன்ப நேரத்தில் பெரும்
நிழலாய் இருப்பது
துவளும் போதிலே
தாங்கும் தூணாய் இருப்பது

இத்தனை பயன்
இந்த அன்பில் இருக்க
அத்தனை அன்பும் எனக்கு
வேண்டாம் என்பேனா.... ?

ஆன்டனி ஜானி
07-12-2010, 01:37 PM
அழுகின்ற மழலை குரலை கண்டு
உண்ராத தாய் உண்டோ
கருவரையில் என்னை சுமந்த
என் தாய் இன்று
கல்லரையை
சுமந்து கொண்டுயிருக்கிறாள்
உதிரத்தை பருகி கொண்டு !!

சொந்தம்,பந்தம்,பாசம்,நட்பு,அன்பு,நேசம் எல்லாவற்றையும்
தமிழாகிய ஒரு எழுத்துக்குள் அடக்கி அதை கவிதை
மழையாக பொழிந்து விட்டீங்க !!!!!!!

அருமையாக இருந்தது ...

வாழ்த்துக்கள் ....... :cool:

சூறாவளி
08-12-2010, 04:36 PM
மனதை தென்றலாய் இதமாய் வருடிச்செல்கிறது இக்கவிதை வரிகள்..

பாராட்டுக்கள் ஹேகா அவர்களே...

பாலகன்
08-12-2010, 04:42 PM
நாமாகியிருந்தால் என்றால் காதலித்து ஏதோ சில காரணங்களால் பிரிந்தவர்கள் பேசிக்கொள்வது போல இருக்கிறது. அவர்கள் காதல் மனதோடு சம்பந்தப்பட்டிருக்கவேன்டும். நாமாகியிருந்தால் அவனாலோ அல்லது அவளாளோ போயிருக்க தான் முடியுமா?

அருமையான வரிகள்

அடுத்து அன்பு என்பது தாயின் அன்பையும் தந்தையின் பாசத்தையும் மறக்கடிக்க செய்வது காதலே.

சிறந்த கவிதையை தந்த Hega விற்கு மகாபிரபுவின் அன்பை பரிசாக தருகிறேன்

அன்புடன்
மகாபிரபு

Hega
08-12-2010, 08:58 PM
அழுகின்ற மழலை குரலை கண்டு
உண்ராத தாய் உண்டோ
கருவரையில் என்னை சுமந்த
என் தாய் இன்று
கல்லரையை
சுமந்து கொண்டுயிருக்கிறாள்
உதிரத்தை பருகி கொண்டு !!

சொந்தம்,பந்தம்,பாசம்,நட்பு,அன்பு,நேசம் எல்லாவற்றையும்
தமிழாகிய ஒரு எழுத்துக்குள் அடக்கி அதை கவிதை
மழையாக பொழிந்து விட்டீங்க !!!!!!!

அருமையாக இருந்தது ...

வாழ்த்துக்கள் ....... :cool:


நன்றி ஜானி ..

உங்கள் உற்சாகம் தரும்பின்னூட்டம் எனக்கு என்றும்தேவை.

Hega
08-12-2010, 08:59 PM
மனதை தென்றலாய் இதமாய் வருடிச்செல்கிறது இக்கவிதை வரிகள்..

பாராட்டுக்கள் ஹேகா அவர்களே...


மிக்க மகிழ்ச்சி பனித்துளி...

Hega
08-12-2010, 09:10 PM
நாமாகியிருந்தால் என்றால் காதலித்து ஏதோ சில காரணங்களால் பிரிந்தவர்கள் பேசிக்கொள்வது போல இருக்கிறது. அவர்கள் காதல் மனதோடு சம்பந்தப்பட்டிருக்கவேன்டும். நாமாகியிருந்தால் அவனாலோ அல்லது அவளாளோ போயிருக்க தான் முடியுமா?[/B][/COLOR]




பிரபு என் கவிதைகள் எப்போதும் சிறு வலியோடு தொடர்ந்தாலும் காதல் தோல்வி என்வாழ்வில் எப்போதும் ஏற்பட்டதில்லை.

நாமாகி இருந்தால் எனும் இக்கவிதை நல்ல நடப்பையும் ஏன் உடன் பிறப்பின்பிரிவையும் ஆ்ற்றாமையையும் கூட காட்டும்..





அருமையான வரிகள்

அடுத்து அன்பு என்பது தாயின் அன்பையும் தந்தையின் பாசத்தையும் மறக்கடிக்க செய்வது காதலே.

சிறந்த கவிதையை தந்த Hega விற்கு மகாபிரபுவின் அன்பை பரிசாக தருகிறேன்

அன்புடன்
மகாபிரபு


நன்றி பிரபு.. இ பணம் முடிந்து போச்சிதா... :aetsch013:

சேவையாளரின் அன்புக்கு நன்றி...நன்றி:icon_b:

அக்னி
13-12-2010, 11:19 AM
நல்ல நட்பைத் தொலைத்த வலியின் துடிப்புக்கள்...
ஆக என்னால் உணரப்படுகின்றது...

தப்பு என்மீதா உன்மீதா
என்பதில் நிலைமாறிய நட்பு,
ஏங்குகின்றது...
இந்த ஏக்கம்
உதிர்ந்த நட்பை
மீண்டும் பூக்கவைக்கும்...

உறவுகள் பிறப்பால் வரும்.
காதல் பருவத்தில் வரும்.
நட்பு எப்போதும் வரும்...

பாராட்டுக்கள்...

அமரன்
27-12-2010, 09:16 PM
கூதல் காலத்துத் தென்றல் போல மெல்லிய வலியை தந்து செல்லும் கவிதைகள்.

நான் என்பது வானம்..

நீ என்பது நிலம்..

நாம் என்பது வாழ்க்கை..

வானும் நிலமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை..

நட்பைப் பாடிய நல்ல கவிதை.

Hega
27-12-2010, 10:31 PM
நல்ல நட்பைத் தொலைத்த வலியின் துடிப்புக்கள்...
ஆக என்னால் உணரப்படுகின்றது...

தப்பு என்மீதா உன்மீதா
என்பதில் நிலைமாறிய நட்பு,
ஏங்குகின்றது...
இந்த ஏக்கம்
உதிர்ந்த நட்பை
மீண்டும் பூக்கவைக்கும்...

உறவுகள் பிறப்பால் வரும்.
காதல் பருவத்தில் வரும்.
நட்பு எப்போதும் வரும்...

பாராட்டுக்கள்...


பிறப்பால் வரும் உறவு தராத அன்பை, பாசத்தை நட்பை இடையில் வரும் நட்பு கொடுக்கும்.அது விலகும் போது வலியைதருவது இயற்கைதானே..

அந்த வலியை அணுவணுவாக ருசித்திருக்கிறேன்.
அதன் பாதிப்ப்பே இக்கவி்தை நன்றி அக்னி அவர்களே...