PDA

View Full Version : என் நம்பிக்கையே!Hega
05-12-2010, 07:39 PM
என் நம்பிக்கையே!

இயற்கையில் இளகிடும்
மனதினைகொடுத்து
இமயமாய் அதிலொரு
கனவினைத்தொடுத்து
இளகிய மனமது
இறைவனைத்தேடுது
இனியொரு வரமில்லை
இறங்கி நீ வா...

இன்னல்கள் தொல்லைகள்
இதுவரை போதும்
ஏன் இந்த வாழ்வென்ற
கேள்வியும் போதும் .
இருப்பதை உணர்ந்து
இனியேதும் வேண்டேன்
எனக்கென மறுபடி
இரங்கி நீ வா....

நான் தவறிடும்
வேளையில் கலங்கிவிடாது
தவறுகள் சகித்து
தயங்கியே நித்தம்
தவித்திடும் வேளையில்
தாய் மடி நீயாகி
என்னைக்காத்திட வா

இறைவனின் கரமே
இணையற்ற உறவாய்
எனை அணைத்திடும் நாளில்
இனியெனக்கில்லை
இகமதில் துன்பம்
இறுமாந்திருப்பேன்
சீக்கிரம் வா

இன்பத்தில் துன்பம்
இன்னல்கள் இல்லை
இனியென்றும் சுகமே
இறைவனின் கரத்தில்
இயலாமை அகன்று
இடுக்கண்கள் நீங்கி
நீடித்த நாட்கள் நிம்மதி
தந்திட வா...

அலை மோதும் உலகினிலே
அன்பினைத்தேடி
யாரிடம் செல்வேன்
உம்மையே நான்
அண்டியே வந்தேன்
இறையே என்
அடைக்கலாமானாய்
எனக்காக வா

கீதம்
05-12-2010, 09:31 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23130

இங்கேயும் இருக்கிறதே உங்கள் நம்பிக்கையின் இருப்பிடம்!

நல்ல கவிதை. பாராட்டுகள் நிஷா.

Hega
05-12-2010, 10:39 PM
நன்றி கீதம் அவர்களே..

என் நம்பிக்கை தொலைந்து போகாமல் தேடிக்கொடுக்கப்ட்டிருப்பதனால அதேதலைப்பில் வேறு கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

எல்லாவற்றையும் ஒன்றாக்கிட வழி இருக்கிறதா இங்கே...

Hega
05-12-2010, 10:44 PM
வார்த்தைகள் மௌனமாயானதேன?

வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
உணர்வுகள் நிறைந்ததால்
உறக்கத்தை தொலைத்ததேன்?

ஊர்வலம் சென்றிடும் நினைவுகள்
இனியதாய் தோனறிய நாளிலே
பழகிய பாசமும் பகிர்ந்திட்ட நேசமும்
வேசமாய் போனதால் மோசமாயானதேன்?

தூங்கிக்கிடக்கும் வலிதனை
உணர்வுகள் கிழித்துப்போட்டதால்
கண்களில் வழியும் கனவுகள்,
இதயத்தைஅடைத்திடும்
இதமான வலியானதேன்?

தூங்கும் என் நினைவுகள் தூங்கட்டும்
வலிகளால் வடிந்திடும் குருதியில்
என் உயிர் நிசபதமாய் ஆகட்டும்
என் மௌனமே வாழ்வினில் ஜெயிக்கட்டும்.

ஆன்டனி ஜானி
06-12-2010, 03:04 AM
கவிதை அருமை நிஷா அவர்களே !!!!

நீங்கள் உறங்கி கொண்டு இருந்தாலும்
உங்கள் கனவுகள் நிஜமானதாய் பழிக்கும்
மௌனம் தான் வாழ்வின் முதற்படி !!!

மௌனம் தான் சம்மதத்திற்க்கும் அறிகுறி !!!

வாழ்த்துக்கள் ......

நன்றி .....

நாஞ்சில் த.க.ஜெய்
06-12-2010, 05:09 AM
கவிதைகள் நன்றாக உள்ளன .இந்த கவிதைகள் அனைத்தையும் நிஷாவின் கவிதைகள் என்ற தலைபிட்டு எழுதினால் நன்று முதல் கவிதை நம்பிக்கையின் மௌனம் இரண்டாவது கவிதை மௌனத்தின் நம்பிக்கை .தொடருங்கள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

சூறாவளி
06-12-2010, 02:40 PM
முதலில் பதிந்த "என் நம்பிக்கையே" கவிதையை எடுத்தால்... கவிதை வரிகள் அற்புதமாய் கவிக்கேற்றார்போல் வரிசையில் படைத்து மிளிர செய்து விட்டிர்கள்.. அதற்க்காக பாராட்டுக்கள்..

ஆனால் கவிதையின் உள் அர்தங்கலுடன் எனக்கு உடன்பாடு இல்லை.. என்னை பொறுத்தவரை 99% இன்ஸ்பிரேஷன், 1% காட்ஸ்பிரேஷன்.. அதாவது நம்மீது நம்பிக்கை வைத்து உண்மையான செயல்களோடு கடினப்பட்டால் கண்டிப்பாக வெற்றிகள் நம் மடிமீது படுத்துறங்கும்.. இது முற்றிலும் என் கருத்து மட்டுமே.. உங்கள் கருத்துக்களை நான் குறைகூறவில்லை.. ஒவ்வொருவரின் மனதும் ஒவ்வொரு விதம் தானே.. உங்கள் கருத்துக்களை கவிதையாய் நீங்கள் செதுக்கினிர்கள், எனக்கு கவி கொட்டினாலும் வராததால் இங்கு பதிந்தேன்..

அடுத்து கவிக்கு.... கவிதை வரிகள் நன்று.. பாராட்டுக்கள்..

வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
உணர்வுகள் நிறைந்ததால்
உறக்கத்தை தொலைத்ததேன்?

உணர்வுகள் தான் நம்மை மனிதனுக்கும் மற்றவைகலுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.. உறக்கத்தை தொலைக்க செய்யும் அந்த உணர்வுகளை அதிகமாய் உலாவ விடுவதால் அது உங்கள் உறக்கத்தை எடுத்துக்கொள்கிறது போலும்..

நிஷாவின் கவிதைகளில் எல்லாம் கனத்த வலியின் உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கு... இவையெல்லாம் கவிதைக்காக எழுதுகின்றிர்களா!! அல்லது உண்மையாகவே மனதின் அடியில் மறைவில் சிறிதளவு வலி இருந்து அதன் பிரதிபலிப்பானோ... இக்கவிதைகள்..!!

பாலகன்
06-12-2010, 03:43 PM
வார்த்தைகள் மௌனமாயானதேன?
வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
மிக அருமையான வரிகள் இலக்கை நோக்கிய பயனமாக இருக்கலாம்.உணர்வுகள் நிறைந்ததால்
உறக்கத்தை தொலைத்ததேன்?
நான் சொன்னேன்ல உணர்ச்சிப்பெருக்கோடு கொள்கைகளை நோக்கிய நெடும்பயனமாக இருக்கலாம்ஊர்வலம் சென்றிடும் நினைவுகள்
இனியதாய் தோனறிய நாளிலே
நன்கு பழகிய நாட்களை நினைவுகூறும்போது எப்போதும் இனிமையே

பழகிய பாசமும் பகிர்ந்திட்ட நேசமும்
வேசமாய் போனதால் மோசமாயானதேன்?
வாழ்க்கை என்றால் அப்படித்தான் இன்பமும் துன்பமும் இருக்கும். ம் மேலேதூங்கிக்கிடக்கும் வலிதனை
உணர்வுகள் கிழித்துப்போட்டதால்
நிஜத்தை நாம் கடந்தாலும் நினைவுகளை கடக்க வருடங்கள் பல ஆகுமே?

கண்களில் வழியும் கனவுகள்,
இதயத்தைஅடைத்திடும்
இதமான வலியானதேன்?
கனவுகள் வருங்காலம் பற்றயதாக இருந்தால் இன்னும் சுகமேதூங்கும் என் நினைவுகள் தூங்கட்டும்
வலிகளால் வடிந்திடும் குருதியில்
அது மட்டும் வேனாம். மனதை தளரவிடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம். நினைவே ஒரு சங்கீதமாக மாறும் காலம் வரும்.

என் உயிர் நிசபதமாய் ஆகட்டும்

என் மௌனமே வாழ்வினில் ஜெயிக்கட்டும்.
உயிர் நிசப்தம் என்றால் மரணமா? அப்படியானால் எல்லாம் முடிந்துவிடுமே?
கவிதை வரிக்கு வரி மிகவும் அருமை. ரசித்து உணர்ந்து படித்தேன்.

Hega
07-12-2010, 10:06 PM
கவிதை அருமை நிஷா அவர்களே !!!!

நீங்கள் உறங்கி கொண்டு இருந்தாலும்
உங்கள் கனவுகள் நிஜமானதாய் பழிக்கும்
மௌனம் தான் வாழ்வின் முதற்படி !!!

மௌனம் தான் சம்மதத்திற்க்கும் அறிகுறி !!!

வாழ்த்துக்கள் ......

நன்றி .....

தங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்காக நன்றி ஆனடனி

Hega
07-12-2010, 10:07 PM
கவிதைகள் நன்றாக உள்ளன .இந்த கவிதைகள் அனைத்தையும் நிஷாவின் கவிதைகள் என்ற தலைபிட்டு எழுதினால் நன்று முதல் கவிதை நம்பிக்கையின் மௌனம் இரண்டாவது கவிதை மௌனத்தின் நம்பிக்கை .தொடருங்கள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

நன்றிங்க

நீங்க கூறிய ஆலோசனை மிக அருமை. அதற்கும் நன்றி

Hega
07-12-2010, 10:15 PM
முதலில் பதிந்த "என் நம்பிக்கையே" கவிதையை எடுத்தால்... கவிதை வரிகள் அற்புதமாய் கவிக்கேற்றார்போல் வரிசையில் படைத்து மிளிர செய்து விட்டிர்கள்.. அதற்க்காக பாராட்டுக்கள்..

ஆனால் கவிதையின் உள் அர்தங்கலுடன் எனக்கு உடன்பாடு இல்லை.. என்னை பொறுத்தவரை 99% இன்ஸ்பிரேஷன், 1% காட்ஸ்பிரேஷன்.. அதாவது நம்மீது நம்பிக்கை வைத்து உண்மையான செயல்களோடு கடினப்பட்டால் கண்டிப்பாக வெற்றிகள் நம் மடிமீது படுத்துறங்கும்.. இது முற்றிலும் என் கருத்து மட்டுமே.. உங்கள் கருத்துக்களை நான் குறைகூறவில்லை.. ஒவ்வொருவரின் மனதும் ஒவ்வொரு விதம் தானே.. உங்கள் கருத்துக்களை கவிதையாய் நீங்கள் செதுக்கினிர்கள், எனக்கு கவி கொட்டினாலும் வராததால் இங்கு பதிந்தேன்..

அடுத்து கவிக்கு.... கவிதை வரிகள் நன்று.. பாராட்டுக்கள்..உணர்வுகள் தான் நம்மை மனிதனுக்கும் மற்றவைகலுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.. உறக்கத்தை தொலைக்க செய்யும் அந்த உணர்வுகளை அதிகமாய் உலாவ விடுவதால் அது உங்கள் உறக்கத்தை எடுத்துக்கொள்கிறது போலும்..

நிஷாவின் கவிதைகளில் எல்லாம் கனத்த வலியின் உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கு... இவையெல்லாம் கவிதைக்காக எழுதுகின்றிர்களா!! அல்லது உண்மையாகவே மனதின் அடியில் மறைவில் சிறிதளவு வலி இருந்து அதன் பிரதிபலிப்பானோ... இக்கவிதைகள்..!!மிக அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டம்.

உங்கள் கருத்தினை நான் அப்படியே ஏற்கிறேன்.

தற்போதைய சூழலில் கவிதையொன்றை எழுதும் மனனிலையில் நான் இல்லை. என்னை நேசித்த நான் நேசித்த ஒர் உறவொன்றின் இழப்பால் மிகவும் பாதிக்கப்ப்ட்டிருக்கிறேன்

ஆனால இந்த சூழ்னிலைக்கு ஏற்றால் போல் நான் எப்போதோ எழுதிய கவிதைகள் பொருந்துவது தான் ஆச்சரியமானது.

என் ஆழ்மனதில் அன்புக்காக ஏங்கும் வலி எப்போதுமே இருக்கிறது..
அது கூட அவ்வப்போது வெளிப்படுவது தவிர்க்க வியலாததான்றது.

நன்றி பனித்துளி அவர்களே...

Hega
07-12-2010, 10:19 PM
வார்த்தைகள் மௌனமாயானதேன?
வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
மிக அருமையான வரிகள் இலக்கை நோக்கிய பயனமாக இருக்கலாம்.உணர்வுகள் நிறைந்ததால்
உறக்கத்தை தொலைத்ததேன்?
நான் சொன்னேன்ல உணர்ச்சிப்பெருக்கோடு கொள்கைகளை நோக்கிய நெடும்பயனமாக இருக்கலாம்ஊர்வலம் சென்றிடும் நினைவுகள்
இனியதாய் தோனறிய நாளிலே
நன்கு பழகிய நாட்களை நினைவுகூறும்போது எப்போதும் இனிமையே

பழகிய பாசமும் பகிர்ந்திட்ட நேசமும்
வேசமாய் போனதால் மோசமாயானதேன்?
வாழ்க்கை என்றால் அப்படித்தான் இன்பமும் துன்பமும் இருக்கும். ம் மேலேதூங்கிக்கிடக்கும் வலிதனை
உணர்வுகள் கிழித்துப்போட்டதால்
நிஜத்தை நாம் கடந்தாலும் நினைவுகளை கடக்க வருடங்கள் பல ஆகுமே?

கண்களில் வழியும் கனவுகள்,
இதயத்தைஅடைத்திடும்
இதமான வலியானதேன்?
கனவுகள் வருங்காலம் பற்றயதாக இருந்தால் இன்னும் சுகமேதூங்கும் என் நினைவுகள் தூங்கட்டும்
வலிகளால் வடிந்திடும் குருதியில்
அது மட்டும் வேனாம். மனதை தளரவிடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம். நினைவே ஒரு சங்கீதமாக மாறும் காலம் வரும்.

என் உயிர் நிசபதமாய் ஆகட்டும்

என் மௌனமே வாழ்வினில் ஜெயிக்கட்டும்.
உயிர் நிசப்தம் என்றால் மரணமா? அப்படியானால் எல்லாம் முடிந்துவிடுமே?
கவிதை வரிக்கு வரி மிகவும் அருமை. ரசித்து உணர்ந்து படித்தேன்.நீங்கள் கொடுத்த இந்த ஊக்கம்தரும் பின்னூட்டம் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு வெறும் நன்றி மட்டும் போதாதுங்க.இருந்தாலும் நன்றி நன்றி.

உங்கள் சேவைகள் தொடர என் பிராத்தனைகளும் தொடரும்.