PDA

View Full Version : ஏன் பெண் குழந்தைக்கு தயக்கம்



ஆன்டனி ஜானி
05-12-2010, 05:23 PM
பெண் இல்லையேல் நீயும் இல்லை ,
நானும் இல்லை ,எவரும் இல்லை
இந்த உலகும் இல்லை ........
பெண் பிறந்தால் சங்கடப்படுவதில்
அர்த்தமும் இல்லை ..
பெண் பிறந்தால் என்ன ?
ஆண் பிறந்தால் என்ன?
பெண்ணில்லாத உலகத்தில்
வாழ்வியா ? வாழதான் முடியுமா ?
உங்களால் எல்லாருமே
ஆண்மகனை பெற்றால் எவர்தான்
பெண்ணை பெறுவது
ஆண் மகனை பெற்றதால்
கோடி பேர் அவதி பட்டவர்கள்
தான் அதிகம்
பெண்ணை பெற்றதால் பெருமையடைந்தவர்கள்
கோடி பேர்
மணமானவுடன் மறப்பவன் ஆண்
மணம் முடிந்தாலும் மறக்காதவள் பெண்

ஆகவே
ஒரு போதும் கவலை படாதே பெண் குழந்தைக்கு !!!!!

சூறாவளி
05-12-2010, 05:30 PM
ஆண் மகனை பெற்றதால்
கோடி பேர் அவதி பட்டவர்கள்
தான் அதிகம்
பெண்ணை பெற்றதால் பெருமையடைந்தவர்கள்
கோடி பேர்
மணமானவுடன் மறப்பவன் ஆண்
மணம் முடிந்தாலும் மறக்காதவள் பெண்


இந்த வரிகள் சபாஷ்... அர்த்தமுள்ள வரிகள்...

கீதம்
05-12-2010, 08:48 PM
சொல்லவிழைந்த கருத்து நன்று. பாராட்டுகள் ஆன்டனி ஜானி அவர்களே.

M.Jagadeesan
06-12-2010, 12:00 AM
கருத்து மிகுந்த கவிதைக்கு நன்றி ஆன்டனி ஜானி அவர்களே!

பாலகன்
06-12-2010, 01:14 AM
பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள்.

அருமையான கவிதை படைத்த முற்போக்கான உங்களுக்கு 100 இணைய காசுகள் என் மனதிருப்திக்காக தருகிறேன்.

தொடரட்டும் உங்கள் சேவை.

அன்புடன்
மகாபிரபு

ஆன்டனி ஜானி
06-12-2010, 03:37 AM
எனது சிறு கவிதையை பாராட்டிய எனது தமிழ் மன்றத்தின்
நல்உள்ளங்கள் ......

சூறாவளி
கீதம்
ஜகதீசன்

மற்றும் இணைய காசுகள் ரூ.100 தந்து பாராட்டிய நமது அனைவரின்
நண்பன் .

மகா பிரபு .........அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை சமர்ப்பிக்கிறேன் .......

வாழ்த்துக்கள் .........

வானவர்கோன்
06-12-2010, 10:40 PM
அப்படியானால் கள்ளிப்பால் என்னாவது!, பாராட்டுக்கள் அன்டனி ஜானி :aktion033:

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:52 PM
அப்படியானால் கள்ளிப்பால் என்னாவது!, பாராட்டுக்கள் அன்டனி ஜானி :aktion033:

இனிமேல் கள்ளிபாலுக்கு வேலை இல்லை நண்பரே

பாராட்டுக்கள் .......

றெனிநிமல்
28-12-2010, 03:18 PM
சமூதாய விழிப்பு கவிதை
நிதர்சண உண்மையை காட்டி நிற்கின்றன.

vasanth30
29-12-2010, 07:39 PM
வாழ்த்துகிறேன் நண்பரே எனக்கு பெண் குழந்தை ஒரு கவிதை சொல்கிறேன் கேளுங்கள்

vasanth30
29-12-2010, 08:02 PM
என் செல்லமே! எங்கள் செல்வமே

பட்டு செல்லமே- என்
சிட்டு செல்லமே!
என்னை மெட்டெடுத்து பட வைத்த
குட்டி செல்லமே!

குட்டி செல்லமே- என்
குழந்தை செல்வமே!
என் குறைகள் யாவும் தீர்த்து வைக்க
குதித்த செல்லமே! மேலிருந்து
உதித்த செல்லமே!

அழகு செல்லமே- என்
அன்பு செல்வமே!
எங்கள் இருவருக்கும் கடவுள் தந்த
கருணை செல்வமே!

அம்மு செல்லமே-என்
அறிவு செல்வமே!
அழகே உருவான எங்கள்
ஆசி செல்லமே!

பெண் செல்லமே! இந்த மண்ணின் செல்வமே!