PDA

View Full Version : மதுவிற்கு அடிமையாகிவிட்டவர்களை காப்பாற்ற என்ன செய்வது?பாலகன்
05-12-2010, 03:14 AM
நண்பர்களே இந்த நாட்களில் நான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகிவிட்டதால் (முன்னர் துபாயில் இருந்தேன் என்பது தாங்கள் அறிவீர்கள்) குடும்பத்துடன் எனது பொழுதை இனிமையுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் நான் தனி ஆளாக துபாயில் இருந்தபோது என்னையும் அறியாமல் மதுவுக்கு அடிமைப்பட்டேன். பார்ட்டி ஓட்டல் என்று இரவு வெகுநேரமாக வந்தாலும் கேட்க ஆளில்லாமல் இருந்தேன்.


http://scribblingpad.com/wp-content/uploads/2009/12/letz-booze.jpg

ஆனால் இன்றோ மனைவி அம்மா மற்றும் சுற்றம் சூழ நான் இருந்தாலும் பழைய அரக்கனான மது என்னை வாடா வாடா செல்லம் என்று அழைத்தது. மிகுந்த மனஉறுதி உடைய நான் சரி அரிதாக தானே என்று அந்த பழக்கத்தை இங்கும் துவங்கினேன். வீட்டிற்கு வரும்போதெல்லாம் குற்ற உணர்வு வரும். வீட்டிற்கு வந்தவுடன் பாத்ரூம் சென்று பல்விளக்கி குளித்துவிடுவேன். யாரும் என்னை கண்டுபிடிக்காதவண்ணம் என் முகத்தை மறைத்துக்கொள்ள இது தேவைபட்டது

இப்போது வாரம் ஒருமுறையாவது விடுமுறையில் சில நண்பர்களின் துணையுடன் மது விருந்து பழக்கத்தில் பழகிவிட்டேன். தற்செயலாக இந்த கட்டுரையை நான் இணையத்தில் கண்டபோது தான் எனக்கு பயம் ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் இருக்கும் நான் நினைத்தால் என்னை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் நம் மன்றத்தில் யாருக்காவது இதேபோன்று ஆரம்ப கட்டத்தில் இருப்பவரா இருந்தால் அவருக்கு உதவுமே என்று இந்த தகவலை இங்கு பகிர்கிறேன்.சிலர் கூறுவார்கள் "நான் தினமும் அடிக்கிறேன், எப்போதுவேண்டுமானால் விடுவேன். எனக்கு வில் பவர் இருக்குங்க" என்று. நானும் அப்படித்தான் நினைத்தேனுங்கோ, ஆனால் நீங்கள் தினமும் குடிக்கும் குடிகாரர் என்றால் நீங்கள் அதற்கு அடிமையாகியிருக்கும் வாய்ப்பு 99%. அதிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினாலும் உங்கள் மூளையில் அது ஏற்பத்தியிருக்கும் நிரந்தர மாற்றத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவேண்டுமென்றால் மேலும் படியுங்கள்

நம் மூளை நியூராண் எனும் செல்களால் ஆனது, இவை உற்பத்தி செய்து கடத்தும் மின் அலைகளே நம் நினைவுகள், உணர்வுகள், உத்தரவுகள் எல்லாம் மின் அலை ஒரு நியூராணிலிருந்து மற்றொரு நியூராணுக்கு Nerve Impulse ஆக பாய்கிறது. ஒவ்வொரு நியூராணிலும் மின்னை தருவதற்கு Transmitter உம் பெறுவதற்கு Receptor உம் இருக்கும்

இப்போது குடி என்ன செய்கிறது என பார்ப்போமா? நாம் அடிக்கும் சரக்கானது ஜாலியாக போய் நம் மூளையை சுற்றியிருக்கும் நீரோடு கலக்கிறது அது ஒரு நியூராணுக்கும் இன்னொரு நியூராணுக்கும் இருக்கும் இணைப்புப்பாதையை அடைப்பதோடு நில்லாமல் Nerve Impulse ஐயும் தானே கிரகித்துக்கொள்கிறது. இதனால் மூளை இடும் உத்தரவுகள் உடல் உறுப்புக்களுக்கு முழுமையாக சென்றடையாமல் அரைகுறையாக சென்றடைகிறது. ஓவராக குடித்தால் தள்ளாடுவதற்கும் வாய் குழருவதற்கும் அதுதான் காரணம். இந்த கண்றாவியை பார்த்து நம் கிட்னி சும்மா இருக்குமா? தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓவர்டைம் வேலை செய்து ரத்தத்தில் கலந்திருக்கும் குடியை அவசர அவசரமாக வெளியேற்றுகிறது. குடித்தால் அதிகம் டாய்லெட் வருவதற்கு நம் கிட்னியின் ஓவர்டைம் வேலையே காரணம்

"என்ன எல்லாம் சில நேரம்தானே" என்று சமாதானபடுத்திக் கொள்கிறீர்க்ளா? இன்னும் மேட்டர் இருக்கு நண்பர்களே! குடி மூளையின் மின் பாதையை அடைத்தவவுடன், நமது நியூராண்கள் சும்மா இருக்குமா? ஒவ்வொரு நியூராணுக்கும் சாதாரணமாக ஒரு சில Transmitter ம் ஒரு சில Receptor ம் தான் இருக்கும். வழக்கமாக நாம் குடிக்க ஆரம்பித்தால், குடியின் தடையினை வெல்ல இது நிறைய Transmitter யும் Receptor யும் உருவாக்கிக்கொள்கிறது. இப்படியாக அது குடியினால் ஏற்படும் தடையினை சமன்படுத்திக்கொள்கிறது.

அதனால் தான் முதலின் ஒரு பெக்குக்கே அவுட்டாகும் பார்ட்டிகள், போக போக ஒரு ஆப் அடித்தாலும் ஸ்டடியாக இருக்கும் காரணம் இதுதான், அதாவது நம் மூளை அந்த விஷத்தோடு வாழ கற்றுக்கொள்கிறது. "முன்ன ஒரு பீர் அடித்தாலே ஜிவ்வுன்னு இருக்கும், இப்போ குவாட்டர் ரம் அடித்தாலும் எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லையேடா" என புலம்பும் பார்டியா நீங்கள்? ஜாக்கிரதை, குடி உங்கள் மூளை நியூராண்களில் நிறைய Transmittors, Receptors உருவாக்கிவிட்டது என்று பொருள். அப்போ என்ன எல்லாம் ஓகேதானே எஙிறீர்களா? இனிமேதான் மேட்டரே. நம் மூளைக்கு இப்போது நிறைய Transmitter , Receptors வந்துவிட்டதால், குடி இல்லாமல் இருக்கும்போது அது Hyper Active ஆக இருக்கும். காரனம் குடி இல்லாமல் இருக்கும்போது எல்லா Transmitter ஐயும் Receptors ஐயும் மூளையால் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தப்படாத குடியால் உருவான Transmitter , Receptors கள் மூளையை அதிக பளுவிற்கு உள்ளாக்கும்

பிறகு குடிக்காமல் இருந்தால் Stress, Tention, Anxiety, Anger, தலைவலி எல்லாம் வரும். இதை Withdrawal Symptoms என்பார்கள் . அதனால்தான் ஒரு குடிகாரணால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அவனிடம் மன உறுதி இருந்தாலும், உடல் கேட்காது. இவ்வாறு குடியால் முளையில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டவர்கள் அதிலிருந்து விலக அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம். நான் இதுவரை மாதம் ஒருமுறையாவது அடித்துக்கொண்டிருந்ட்தேன். இந்த கட்டுரையை படித்த பிறகு முழுமையாக விட்டுவிட்டேன்.

நண்பர்களே குடி எப்படி மனிதனை அடிமையாக்குதுன்னு தெரிந்திகொண்டீர்களா? அழகா ஒரு சில Transmitter ஒரு சில Receptor என்று இருக்கும் நம் மூளை நியூராண்களை, செல்லறித்தது போல பல கை அரக்கணாக மாற்றி மூளையில் நிரந்தர பாதிப்பை இந்த குடி ஏற்படுத்தி மனிதனை அடிமையாக்குது. (குடி ஈரலுக்கு செய்யும் பாதிப்பு ஒரு தனீ டாபிக்) எப்போதாவது தன்னி அடிக்கும் பார்ட்டிகள் இது பற்றி கவலைபடவேண்டாம். நிரந்தர குடிகாரர்களுக்குதான் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது ஆங்கிலேயர்கள் தினமும் குடிக்கிறார்களே என்கிறீர்களா? ஆம் அவர்களின் மூளையிலும் கட்டாயம் இந்த மாற்றம் ஓரளவிற்கு இருக்கும். ஆனால் அவர்கள் நம்மைப்போல அதிகம் குடிப்பதில்லை, மேலும் அவர்கள் தினமும் Wine அருந்துவதால் Withdrawal Symptom மும் வருவதில்லை (நாம் தினமும் காபி அல்லது டீ குடிப்பதை போல)


நாங்கள் அளவிற்கு மீறி குடிப்பதால் அவர்களைவிட மோசமான பாதிப்பு நம் குடிகாரர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அதனால் முழு மதுவும் இரத்தத்தில் கலப்பதில்லை. மேலும் அவர்களின் குடலை அது பாதிப்பதில்லை, மூளை பாதிப்பும் அதிகம் இல்லை. நமது குடிமகன்கள் மது அருந்திவிட்டு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் அருந்தும் மது 100% ரத்தத்தில் கலக்கிறது. இது குடலையும் முளையையும் ஈரலையும் கிட்னியையும் மோசமாகவே பாதிக்கிறது.முடிவுரை:

இதிலும் அளவாக வெளிநாட்டவர் எடுத்துக்கொன்டால் பாதிப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அது உணவுக்கு பிறகு என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள். எது எப்படியோ நல்லது எது கெட்டது எது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் இது ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொன்டு நாம் நம் நிலையை உணர்ந்து செயல்படுவோம்.

இந்த கட்டுரையில் மதுவிற்கு அடிமையானவர்கள் மீள வழி ஏதும் சொல்லப்படவில்லை. அதனால் நமது மன்றத்தில் உள்ள நண்பர்கள் அதுபற்றி இங்கு அலசினால் அது அணைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.
நன்றி

அன்புடன்
மகாபிரபு

M.Jagadeesan
05-12-2010, 11:40 AM
எந்த ஒரு தவறையும் நாம் இரண்டாவது முறை செய்யக் கூடாது.மது அருந்துதல்,சூதாடுதல், விலை மகளிருடன் தொடர்பு ஆகிய தவறுகளை முதல் தடவை கூடச் செய்யக் கூடாது.
தீயநண்பர்களின்தொடர்பைஅறவேவிலக்கவேண்டும்.மனக்கட்டுப்பாடுடன்இருந்தால் மது அரக்கனை வெல்லலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
05-12-2010, 12:52 PM
தவறுகள் மனித இயல்பு தவறே செய்யாது மனிதன் இவ்வுலகில் இல்லை .இது போன்ற தவறுகள் நிகழும் பொது அதனை தீர்க்க தேவையானது மனோதிடம், விடாமுயற்சி மேலும் தேவையான அளவு உடலுழைப்பு இம்மூன்றும் இருந்தால் இதனை எளிதாக நிறுத்தலாம் .எந்த சூழலிலும் குடி ,புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை ஒரேஅடியாக விடா கூடாது இதனால் நமது உடலானது அதீத பாதிப்புக்குள்ளாகும் .கொஞ்சம் கொஞ்சமாக தான் நிறுத்தட வேண்டும் .இதற்கு தேவை விடாமுயற்சி, மனோதிடம் பின்னர் யோகா ,உடல்பயிற்சி செய்வது நமது மனதையும் உடம்பையும் ஒருநிலைபடுத்தி இதிலிருந்து விடுதலை பெற உதவும் .இதன் மூலம் நமது நண்பர்கள் தமது எல்லா வகையான தவறுகளையும் நிறுத்தலாம் .ஒரு முற்போக்கான நிகழ்வுக்காக இப்பதிவினை பதித்த நண்பர் மகாபிரபு அவர்களுக்கு வாழ்த்துகள் .
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

பாலகன்
05-12-2010, 01:31 PM
.மனக்கட்டுப்பாடுடன்இருந்தால் மது அரக்கனை வெல்லலாம்.

தாங்கள் கூறுவதுபோல முதலிலேயே இதனை இனங்கன்டு ஒதுக்கினால் தப்பித்துக்கொள்ளலாம் என்பது முக்காலும் உண்மை நண்பரே!


.ஒரு முற்போக்கான நிகழ்வுக்காக இப்பதிவினை பதித்த நண்பர் மகாபிரபு அவர்களுக்கு வாழ்த்துகள் .
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

தங்கள் வாழ்த்திற்கு நன்றி ஜெய்! தவறிழைப்பது மனித இயல்பு அதை திருத்திக்கொள்வது தான் இறைசெயல். பின்னூட்டத்திற்கு நன்றி

ஆன்டனி ஜானி
05-12-2010, 02:15 PM
மது அருந்துவது அதை நிறுத்துவது இது ஒன்ருமே சரி வராது
நாம் மது அருந்துவதற்க்கு முக்கிய காரணங்கள் இருக்கும்
1.காதல் தோல்வி
2.குடும்ப ப்ரச்சனை
3.எதிரியை பழிக்கு பழிவாங்கும் நோக்கம்
4.நாம் எங்கையாவது வீட்டை விட்டு பிரிந்து இருந்தால்
5.நண்பர்களின் பார்ட்டி
6.குடும்பத்தில் மனைவியுடன் சண்டை
இப்படி சொல்லி கொண்டே போகலாம் இது போல நிறய காரணங்கள் இருக்கும்
ஒருமுறை ஜாலியாக குடிப்பது அதுவே நம்மை ஒரு குடிகாரனாக மாற்ற காரணம் இருக்கும் குடிக்கிறவர் அடுத்தவர் சொல்லி திருத்துவதை விட தானாகவே திருந்த வேண்டும் முதலில் குடிப்பதை ஒரு அருவையாக நினைத்து
நாமாகவே ஒதுங்கி போனால் நல்லது ,அடுத்தவர் சொல்லும் போது அது ஒரு ஜாலியாக இருக்கும் குடிப்பவருக்கு ..குடிப்பது தவறுகிடையாது
இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சு என்று சொல்வார்கள் அது போல தான் இதுவும் கொஞ்ச நாட்கள் போக போக நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் டாக்டர் சொல்லும் போது தான் நாம் திருந்துவோம்
அதற்க்குள் நாமாகவே நிறுத்த முயற்சிக்க வேண்டும் ...அப்போது தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு .. சொல்லி திருந்தாதவன் பட்டு தான் திருந்துவான் என்று பழ மொழி கூட உண்டு அது போல நாமாகவே திருந்த முயலுவோம் .........


மிக்க நன்றி நண்பா !!!!!

ஒருமுறை குடி ** குடித்துவிட்டு யோசித்து பார் நீ செய்வது சரியா என்று ......

rajesh2008
05-12-2010, 03:10 PM
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றிருந்தது இப்போ வீட்டுக்கு மட்டுமே கேடு என்றாகிவிட்டது அரசியல்வியாதிகளால்.எனவே குடிப்பவராய் பார்த்து திருந்தினால் தான் உண்டு. வெளிப்படையான பகிர்வுக்கு பாராட்டு.

அன்புரசிகன்
06-12-2010, 12:15 AM
நாம் மது அருந்துவதற்க்கு முக்கிய காரணங்கள் இருக்கும்
1.காதல் தோல்வி
2.குடும்ப ப்ரச்சனை
3.எதிரியை பழிக்கு பழிவாங்கும் நோக்கம்
4.நாம் எங்கையாவது வீட்டை விட்டு பிரிந்து இருந்தால்
5.நண்பர்களின் பார்ட்டி
6.குடும்பத்தில் மனைவியுடன் சண்டை


இது எந்த வைத்தியரின் மருந்துச்சீட்டு என்று தெரிந்தால் பலருக்கும் உதவுமே... (ஐந்தாவதை மட்டும் விதிவிலக்கி....):icon_b:

ஆன்டனி ஜானி
06-12-2010, 03:43 AM
இது எந்த வைத்தியரின் மருந்துச்சீட்டு என்று தெரிந்தால் பலருக்கும் உதவுமே... (ஐந்தாவதை மட்டும் விதிவிலக்கி....):icon_b:

இதில் அவர்கள் மேலே சொன்னது நண்பர்கள் தான் வந்து குடிப்பதர்க்கு
அழைக்கிறார்கள் என்று
அது போல எது காரணமோ அதை விட்டு நீங்க வேண்டும் .....

நீங்கள் பைபிள்ல படுத்துப்பாருங்கள் ...

நமது உடம்பில் எந்த உறுப்பு திங்கு செய் கிறதோ அதை பிடிங்கி எறிந்து விடு என்று ...,,,அது போல எது நமக்கு எதிரானதாக தெரிகிறதோ அதை விட்டு நீங்கி இருக்கதான் செய்ய வேண்டும் .......

அன்புரசிகன்
06-12-2010, 04:14 AM
இதில் அவர்கள் மேலே சொன்னது நண்பர்கள் தான் வந்து குடிப்பதர்க்கு
அழைக்கிறார்கள் என்று
அது போல எது காரணமோ அதை விட்டு நீங்க வேண்டும் .....

நீங்கள் பைபிள்ல படுத்துப்பாருங்கள் ...

நமது உடம்பில் எந்த உறுப்பு திங்கு செய் கிறதோ அதை பிடிங்கி எறிந்து விடு என்று ...,,,அது போல எது நமக்கு எதிரானதாக தெரிகிறதோ அதை விட்டு நீங்கி இருக்கதான் செய்ய வேண்டும் .......

நான் ஐந்தாவதை விலக்கியதற்கு காரணம் அது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு காரணமாக அமைந்ததால் மற்றய அனைத்தும் குடிப்பவர்கள் சொல்லும் சப்பை காரணங்கள்...
அளவாக மது அருந்துபவர்களை தவறு கூறமாட்டேன். நண்பர்களின் விருந்துபசாரத்தில் அருந்துதல் தவறல்ல. இங்கு மேற்கோள் படுத்தப்படவேண்டியது நண்பர் என்ற சொல். நண்பன் தனது நண்பனுக்கு கேடுநினைக்க மாட்டான் என்ற எழுதப்படாத விதியுடன்... அந்த விதி விலகுமிடத்தில் அதை நான் விலக்க மாட்டேன்.
---------------
தவறு செய்வதை நீக்குவதாக சொல்றீங்கள். தவறு செய்ய தூண்டும் உறுப்பை என்னசெய்யலாம் என்று பார்த்து சொல்லுங்கள். காரணம் நான் கீதையையே படித்ததில்லை. இதுல எங்க ...
புத்தகங்களை படிக்க அலுப்பு பஞ்சி பிடித்த
அன்புரசிகன். :D

பாலகன்
06-12-2010, 04:23 AM
நண்பன் தனது நண்பனுக்கு கேடுநினைக்க மாட்டான் என்ற எழுதப்படாத விதியுடன்... அந்த விதி விலகுமிடத்தில் அதை நான் விலக்க மாட்டேன்.


நான் நண்பர்களை குறைசொல்லவில்லை அன்பு அண்ணா! அது தொடர்பழக்கமாக ஆகிவிட்டதே என்று தான் சொன்னேன். எப்பவாவது நண்பர்களுடன் விழாக்களிலோ அல்லது ஏதாவது ஒரு தருணத்திலோ குடிப்பதை நான் குறிப்பிடவில்லை.

ஒரே இடத்தில் இருக்கும் ஒருசில நண்பர்களுடன் வாரவாரம் தண்ணியடிக்க ஆரம்பித்ததையே சொன்னேன். அவர்களும் எனக்கு தீங்கிழைக்கவில்லை, நானும் விரும்பித்தான் அதை செய்தேன்.

ஸொப்பா டயர்டாயிடுச்சி :D

nambi
06-12-2010, 04:27 AM
ஒமியோபதியில் இதற்கான வைத்தியம் உள்ளது...ஆனால் இது மதுவுக்கான வைத்தியம் என்று முழுமையாக சொல்லமுடியாது....அந்த மருந்துகள் அனைத்தும் மதுவின் சுவை போன்று தான் அனைத்து மருந்துகளும் இருக்கும்...அதாவது சொட்டு சொட்டாக சில சொட்டுகள் விட்டு வெண்ணீரில் கலந்து காலை மாலை சாப்பாட்டிற்கு முன் அருந்துவதாக இருக்கும். வைத்திய காலத்தில் மூன்று நான்கு முறை, அதாவது 25 நாட்களுக்கு ஒருமுறை குறுதி பரிசோதனை மூலம் இதன் (கொலஸ்ட்ரால்)அளவு குறைந்து வருவதை உறுதி செய்து கொள்ளலாம். மதுவை உடனடியாகவும் கைவிடுதல் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். (தொடரந்து பாகற்காய் 40 நாளைக்கு சாப்பிட்டு வருவதாலும் இந்த அளவுகளை வெகு சீக்கிறத்தில் குறைக்கலாம்... ஒமியோபதி மருத்துவர் ஆலோசனைப்படி)

மது அருந்தினால் கொலஸ்டரால் கண்டிப்பாக வரும் ...அதிக மது உடகொள்வதினால் கொலஸ்டரால் கண்டிப்பாக அதிகமாக ஏறிவிடும்...அதை குறைப்பதற்காகவே இந்த மருந்துகள் சாப்பிடவேண்டும்...இனிப்புகள் கண்டிப்பாக 3 மாதம் வரை தொடக்கூடாது...அப்படி பழக்கப்பட்டால் மது பழக்கத்தை வெகுவாக குறைத்துவிடலாம். முற்றிலுமாகவும் கை விட்டு விடலாம். மதுவை உடனடியாக நிறுத்துவதற்கு என்று எந்த அல்லோபதி மருந்தும் இல்லை...ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் என்று எதுவுமே இல்லை மனத்திருப்திக்காக சில விட்டமின் மற்றும் ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எழுதிக்கொடுப்பார்கள்...அதையும் பயந்து பயந்து தான் எழுதுவார்கள்...கட்டுப்படுத்தமுடியாமல் இந்த மாத்திரையையும் போட்டு விட்டு மதுவை அருந்துபவர்கள் உண்டு...அது எதிர் விளைவை ஏற்படுத்தி விடும்...ஓயாத வாந்தி...என்று...அப்புறம் மருத்துவர் உள்ளே....?

இப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியர்களை மொட்டை அடிப்பதற்காக அடிக்கடி போதை பார்ட்டி என்று ஆண் ,பெண் என இருவரும் விளக்கை அணைத்து சேர்ந்து கூத்தாடும் மது விருந்துகளை கொடுத்து ஒன்றுக்கு மூன்று மடங்கு வேலைகளை வாங்கிக்கொள்கிறார்களே! அப்புறம் கை பட்டுவிட்டது கால் பட்டுவிட்டது என்று அலறுவதும் உண்டு, ஒழுங்கு நடவடிக்கைகளும் உண்டு, கலந்து கொள்ளவில்லை என்றால் அபராதமும் உண்டு.

(இதற்காகவே மாமல்லபுரம் கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ளவைகள் எல்லாம் இந்த மாதிரி கொழுப்பெடுத்த விருந்திற்காகத்தான்)

ஒருவாரத்திற்கு 180 மில்லி எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் சன் தொலைக்காட்சி).

தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால். ஜிரண கோளாருகளுக்கும் சிலருக்கு மதுவை குறைந்த அளவு எடுத்துக்கொள்ள மருத்துவரால் அறிவுறுத்தப்படுகிறது.

(அப்படி ஒரு உறவுக்கு எடுத்துக்கொள்ள சொல்லி அவரால் எடுத்துக்கொள்ள முடியாமல் வாந்தி எடுத்து ஊரையே நாற அடித்து விட்டார்.:D பிறகு உணவுக்கட்டுப்பாடு முறைக்கு மாறிவிட்டார்...புதுசாக இறக்கிய கள் குடிப்பார்)

கிராமத்து வைத்தியத்தில் கள் உண்டு ஒருமரத்து கள் குடிப்பதை வைத்தியமாக வைத்திருக்கிறார்கள். ஆயுர்வேதத்திலும் உண்டு என நினைக்கிறேன் நினைவில்லை.

(இராமலிங்க அடிகளாரின் மருத்துவ புத்தகத்தில் அனைத்து மருத்துவ தாவரங்களின் பெயர்களும் குணங்களும் எழுதப்பட்டிருக்கும் கஞ்சா உட்பட...)

சில உடல்கோளாருகளுக்காக....ஆனால் ஆர்.எஸ்.பவுடர் கலந்த கள் அல்ல..அது உடல்நலத்திற்கு கேடு...கள் உண்மையில் போதையற்றது.

தாவரத்தின் சாறு தான்...அதுதான் பனங்கற்கண்டாகவும், பனைவெல்லமாகவும் மாறுகிறது. தென்னை மரக்கள் உடல் நலத்திற்கு நல்லது.

இதெல்லாம் மனத்தேறுதல், விடுதலை (மென்டல் ரிலீப்) என்ற ரீதியில் பருகுபவர்களுக்குத்தான்....

.....ஆனால்....மூட்டைத்தூக்குபவருக்கும்...16 அடுக்கு சாரத்தின் மேலே நின்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு....7 மணிக்கு ஆரம்பித்து சாலையின் இருபக்கமும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே பள்ளம் தோண்டிக்கொண்டே செல்பவர்களுக்கும்...விவசாய கூலிகளுக்கும்....சடலம் தூக்குபவர்களுக்கும்...ரிக்ஷா ஒட்டுபவர்களுக்கும்...கைவண்டி இழுப்பவருக்கும்...சாலையோரம் சடலம் போன்று குளிரிலும் படுத்து கிடப்பவர்களுக்கும்..இன்னும் பல லட்சோபலட்ச பரிதாபத்துக்குரியவர்களுக்கும் இதுதான் தேவாமிர்த மருந்து...துயர் தீர்க்கும் மருந்து...கவலை நீக்கும் மருந்து....வலி நீக்கும் நிவாரணி.... (கள்ள...சா...மும்) வா! குவார்ட்டர் கட்டிங்...:D இதற்கு மாற்று மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை! இருந்தால் கூறலாம்.....

அன்புரசிகன்
06-12-2010, 04:35 AM
நான் நண்பர்களை குறைசொல்லவில்லை அன்பு அண்ணா! அது தொடர்பழக்கமாக ஆகிவிட்டதே என்று தான் சொன்னேன். எப்பவாவது நண்பர்களுடன் விழாக்களிலோ அல்லது ஏதாவது ஒரு தருணத்திலோ குடிப்பதை நான் குறிப்பிடவில்லை.

ஒரே இடத்தில் இருக்கும் ஒருசில நண்பர்களுடன் வாரவாரம் தண்ணியடிக்க ஆரம்பித்ததையே சொன்னேன். அவர்களும் எனக்கு தீங்கிழைக்கவில்லை, நானும் விரும்பித்தான் அதை செய்தேன்.

ஸொப்பா டயர்டாயிடுச்சி :D

சந்தடி சாக்கில சிந்துபாடுறியளே...
கடவுளே.. நான் உங்க பதிவ சொல்லவில்லை. நான் மேற்கோளிட்டு கூறியதை கவனிக்கலயா அண்ண்ண்ண்ணா..............................................

டயர்ட் ஆனா உடனேயே கூலா ஒரு போத்தல் பீர் வாங்கி குடியுங்க.. எல்லாம் சரியாகிடும். :D

வெற்றி
08-12-2010, 02:21 AM
மது அருந்துவது அதை நிறுத்துவது இது ஒன்ருமே சரி வராது
நாம் மது அருந்துவதற்க்கு முக்கிய காரணங்கள் இருக்கும்
1.காதல் தோல்வி
2.குடும்ப ப்ரச்சனை
3.எதிரியை பழிக்கு பழிவாங்கும் நோக்கம்
4.நாம் எங்கையாவது வீட்டை விட்டு பிரிந்து இருந்தால்
5.நண்பர்களின் பார்ட்டி
6.குடும்பத்தில் மனைவியுடன் சண்டை
இப்படி சொல்லி கொண்டே போகலாம் இது போல நிறய காரணங்கள் இருக்கும்
..

இதெல்லாம் சும்மா கதை . குடிப்பது போதைக்காகவே வேறு என்ன ஜல்சாப்பு சொன்னாலும் குடியின் நோக்கம் போதையே போதையே போதையே போதையே போதையே போதை மட்டுமே


நன்றி nambi தங்கள் பதில் தெளிவாக இருக்கிறது . வேறு வழி முறைகள்
கவுண்சலிங் கொடுக்கலாம் .. பாக்கெட்டில் பணம் இல்லாமல் இருக்க பார்க்கலாம் , வேறு ஒரு விசயத்தில் மனதை செலுத்தி நம்மை மேலும் பிசி ஆக்கி கொள்ளலாம் .. கடைசி சாய்சாக அவரை தமிழ் நாட்டை விட்டு நாடு கடத்தலாம் :) சவுதிஅரேபியாவுக்கு...
இது போல் பல சொல்லலாம்
ஒரு துணுக்கு : ஆஸ்கார் ஒயில்டு ஒரு முறை சொன்னவை :- சிக்ரெட் பிடித்தால் அதற்க்கு அடிமை ஆகி விடுவார்கள், அதன் பின் புகைப்பதை நிறுத்தவே முடியாது என பலரும் சொல்கிறார்கள் . ஆனால் அது உண்மை அல்ல.. நான் 25 வருடமாக புகைபிடிக்கிறேன் , நான் ஒன்றும் சிகரெட்டுக்கு அடிமை ஆகி விடவில்லையே.. :) மேலும் நான் பலமுறை :) :) சிகரெட் புகைப்பதை நிறுத்தி இருக்கிறேன் .

பாலகன்
09-12-2010, 04:45 PM
பலே மொக்கை! நீங்க சிகரெட்டும் புடிப்பீங்களா? :confused:

சரி சரி கன்ட்ரோல்ல இருக்கும்போதே அதை விட்டுவிடுங்களேன்! ப்ளீஸ் :frown:

Hega
10-12-2010, 07:47 PM
அருமையான பயன் தரும் பகிர்வுகள்..

ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றையும் படித்து விட்டு என் கருத்தினை பகிர்கிறேன்..

Hega
10-12-2010, 07:53 PM
மது அருந்துவது அதை நிறுத்துவது இது ஒன்ருமே சரி வராது
நாம் மது அருந்துவதற்க்கு முக்கிய காரணங்கள் இருக்கும்
1.காதல் தோல்வி
2.குடும்ப ப்ரச்சனை
3.எதிரியை பழிக்கு பழிவாங்கும் நோக்கம்
4.நாம் எங்கையாவது வீட்டை விட்டு பிரிந்து இருந்தால்
5.நண்பர்களின் பார்ட்டி
6.குடும்பத்தில் மனைவியுடன் சண்டை
இப்படி சொல்லி கொண்டே போகலாம் இது போல நிறய காரணங்கள் இருக்கும்
......


நியாயமான காரணங்கள் தான் ஒரு மனிதன் மதுவை அருந்த தான் கொடுக்கும் சாதாரணமான காரணங்கள்...

இதை வைத்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..

ஆண்களாகிய நீங்கள் மது அருந்துவதற்கான காரணங்களாக பட்டியலிடும் சாக்குபோக்குகள் , பிரச்சனைகள் பெண்களுக்கு இல்லையா...

பெண்கள் காதல் தோல்வியால் பாதிக்கபடுவதில்லையா..
குடும்பப்பிரச்சனைகள், தனிமை போன்றவை பெண்களுக்கு இல்லையா..

பிரச்சனை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது எனும் போது மதுகுடித்து மதிமயங்கிட ஆண்கள் சொல்லும் இந்த சாக்குபோக்குகள் சரியானதா...:fragend005:


குழந்தை இல்லையே என கவலையில் குடிப்பதாக சொல்லும் ஒருமனிதன் அவன் மனைவியும் அதே காரணத்தால் மது அருந்துவதை ஒப்புக்கொள்வானா..

Hega
10-12-2010, 07:55 PM
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றிருந்தது இப்போ வீட்டுக்கு மட்டுமே கேடு என்றாகிவிட்டது அரசியல்வியாதிகளால்.எனவே குடிப்பவராய் பார்த்து திருந்தினால் தான் உண்டு. வெளிப்படையான பகிர்வுக்கு பாராட்டு.


இக்கருத்து எப்படி என புரியல்லை..

மது குடிப்பது நாட்டுக்கு கேடாவதில்லையா..:fragend005:

Hega
10-12-2010, 08:07 PM
http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/9696.jpg?t=1292015844

Hega
10-12-2010, 08:19 PM
http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/alcohol.jpg?t=1292015922

Hega
10-12-2010, 08:43 PM
உடல் ரிதியாகவும் மனரிதியாகவும் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய மாபெரும் அரக்கன் மது.. மது தனிமனிதனுக்கு மட்டுமல்ல வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடானஒன்று. தனிமனிதனை தன் போதையால் முடக்கி போடும் மது அவனால் குடும்பங்களிடையே கலகங்களையும் நாட்டின் முன்னேற்றத்தையும் தடுக்க வல்லது.

சாதிக்க வேண்டும்.. பல்ர் போற்றும் மனிதனாக வாழவேண்டும் நாட்டையும் வீட்டையும் உயர்த்த வேண்டும் என நினைக்கும் ஒரு மனிதன் மதுவை தன் அடிமையாக்கவேண்டுமே தவிர மதுவுக்கு தான் அடிமையாகி தன் மதியை இழக்க கூடாது.


மது என்பது போதை தரும் ஒருவகை திரவம். அது இயற்கையான பொருள் அல்ல.கோதுமை, சோளம், ஒட்ஸ் , திராட்சை, என பல பொருட்களில் தயாரிக்கபட்டாலும் அது தயாரிக்கபடும் முறையை ஒரு முறை நேரில் காணும் மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் மதுவின் அருகின் சென்றிட மாட்டான்.


ஒரு ஆரோக்கியமான மனிதன் தொடர்ந்து மது அருந்துவானேயாகில் முதலில் அவனுடைய உடல் நோய் எதிர்க்கும் சக்தியை இழக்க ஆரம்பிக்கிறது.அதுவே நாட்கணக்கில் தொடரும் போது மூளை நரம்புகள், ஈரல், இரப்பை இரத்தகுழாய்,சிறுநீரகம், பாலின உறுப்புக்கள், பார்வை நரம்புகல் குடல் ஆகிய உள் உறுப்புக்களை சிறிது சிறிதாக பாதிக்கிறது.

ஒரு மனிதன் அருந்தும் மதுவில் குறிப்பிட்ட வீதம் உடனடியாகவே இரத்தத்தொடு கலந்து கலீரலை சென்றடைந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்லிரலில் பாதிப்பை ஏற்படுத்தி மூளை வரை பரவ செய்கிறது.

மது நோயை மட்டுமா உருவாக்கி கொடுக்கிறது. நல்ல நண்பர்க்களை இழகக் செய்கிறது. குடும்பத்தில் நல்லுறவை இல்லாதொழிக்கிறது,பொருளாதார கஷ்டத்தை கொடுக்கிறது.. நிம்மதியை அழிக்கிறது . எல்லாவற்றையும் விட சமூகத்தில் அவனுக்கிருக்கும் கௌரவம்,மரியாதையை இழக்க வைகிறது..


குடிகாரம் பேச்சு விடிந்தால் போச்சு என்பது கூட மதுகுடிக்கும் மனிதனின் வாய் வார்த்தை கூட நம்பத்தக்கதல்ல என்பதையே இடித்துரைக்கிறது.

சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் மனிதனாக வாழ விரும்புவவன் தன் மன்கட்டுப்பாட்டின் மூலம் மது எனும் அரக்கனால் தன் மதி இழந்து போகாதபடி காத்துக்கொள்ள முடியும்..

நாட்பட்ட போதையின்பிடியில் சிக்குபட்டவர்களை தகுந்த அறிவுரையோடு அதிலிருந்து மீட்பதே சிறப்பு...

Hega
10-12-2010, 08:50 PM
இதோ உங்களுகாக ஒரு செய்தி.

ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற த லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.

போதை மருந்துகளால் தனி நபர்களுக்கு மாத்திரமல்லாமல், பரந்துபட்ட சமூகத்துக்கே ஏற்றபடக் கூடிய ஆபத்துக்களை அளவிடுவதற்கான புதிய மதிப்பீட்டு முறை ஒன்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மதுபான பாவனை பாதக விளைவுகள் குறித்து இங்கு பிரிட்டிஷ் சமூகத்தில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு செல்கிறது.

கொக்கெயின் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை விட மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

சுகாதார ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் 16 வகையிலான பாதகத்தை ஏற்படுத்தும் 20 போதைப் பொருட்களை பட்டியலிட்டபோது, அதில் மது 72 புள்ளிகளையும், ஹெரோயின் 55 புள்ளிகளையும், முகரும் கொக்கெயின் 54 புள்ளிகளையும் பெற்றன.

ஒரு தனி நபரின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் வது மது நான்காவது மோசமான மூலமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையின் முடிவு, மதுபானம் தான் பரந்துபட்ட சமூக மட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது.

Hega
10-12-2010, 08:59 PM
மதுவின் பிடியிலிருந்து விடுபட என்ன செய்யலாம்..

அப்பழக்கத்தைக் குறித்த உணர்வு வேண்டும்..அதை நாம் நிறுத்த வேண்டும் என்ற நம்பிக்கையும் வேண்டும்..அதற்கு அவரை சூழ உள்ளோரின் ஆதரவும் அன்பும் அவசியம்.கூடவே நல் மருத்துவரின் தொடர் ஆலோசனையையும் நாடுங்கள்.

மது பழக்கம் என்பது ஒரு நோய் என புரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொண்டாலே போதும். சீக்கிரம் அவர்கள் விடுதலையாகி புதிய உலகம் காண்பார்கள்..

கூடவே பொதுமக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை, சுகாதார அதிகாரிகளின் துணை கொண்டு ஏற்படுத்துவதற்கு ஆள்வோரும் முயல வேண்டும்..

மதுவின்பிடியில் சிக்குண்டவர்களை விடுவிக்கும் ஆலோசனையை சென்னையில் பெற... அணுகுங்கள்.
T.T. Ranganathan Clinical Research Foundation (TTK Hospital)
17, IV Main Road, Indira Nagar,
Chennai-600020. India.
Telephone : 91-44-24918461, 24912948, 24416458, 24426193
Fax : 044-24456078
E-Mail : ttrcrf@md2.vsnl.net.in
ttrcrf@eth.net

ஜேஜே
11-12-2010, 03:18 PM
என்னதான் மருந்து, மருத்துவமுறை, கவுன்சிலிங் என்று செய்தாலும் அது ஒருசில நாட்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வழக்கம்போல முழுவதுமாக குடிக்கு அடிமையாகி போகிறவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். :confused:

பாலகன்
11-12-2010, 03:34 PM
என்னதான் மருந்து, மருத்துவமுறை, கவுன்சிலிங் என்று செய்தாலும் அது ஒருசில நாட்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வழக்கம்போல முழுவதுமாக குடிக்கு அடிமையாகி போகிறவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். :confused:

நிச்சயம் இருக்கு! டுமீல் குப்பத்துக்கு அனுப்பிட வேன்டியது தான் :D

ஆன்டனி ஜானி
11-12-2010, 03:49 PM
நண்பரே குடிபழ்க்கத்தில் இருந்து விடுபட
மருத்துவறை சந்தித்து ஒரு நோயாளி போல
அவர்முன் நிர்ப்பதை விட நீங்களாகவே
திருந்த முயற்ச்சிக்க வேண்டியது தானே /////////

வாழ்த்துக்கள் .........

மது அருந்துவது நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடு

ஆன்டனி ஜானி
11-12-2010, 04:05 PM
நியாயமான காரணங்கள் தான் ஒரு மனிதன் மதுவை அருந்த தான் கொடுக்கும் சாதாரணமான காரணங்கள்...

இதை வைத்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..

ஆண்களாகிய நீங்கள் மது அருந்துவதற்கான காரணங்களாக பட்டியலிடும் சாக்குபோக்குகள் , பிரச்சனைகள் பெண்களுக்கு இல்லையா...
இருக்கு இல்லையென்று சொல்லவில்லையே
அதற்க்காக அவர்கள் மது அருந்த மாட்டார்கள்
மதுவாகிய தனது அம்மா வீட்டிர்க்கு தான் செல்வார்கள்
பெண்கள் காதல் தோல்வியால் பாதிக்கபடுவதில்லையா..
குடும்பப்பிரச்சனைகள், தனிமை போன்றவை பெண்களுக்கு இல்லையா..
பெண்களுக்கு ஒரு தோல்வி வந்தால் அதை சமாளிக்கும் திறனை
ஆண்டவர் நிறய கொடுத்துஇருக்கார்,இருந்தாலும் அவர்கள் அமைதியாக தான் போக வேண்டும் ஏனென்றால் அவர்கள் வேற வீட்டில் வாழ் போறவர்கள் ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லயே ? பிரச்சனை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது எனும் போது மதுகுடித்து மதிமயங்கிட ஆண்கள் சொல்லும் இந்த சாக்குபோக்குகள் சரியானதா...:fragend005:
சரிதான் என்று சொல்லவா / வேண்டாமா
ஒக்கே ,,,,,,ஆண்களுக்கு பிடித்த வாழ்க்கை இல்லையென்றால் மது குடிக்க தான் செய்வான் அதை மறப்பதற்கு ,,,,
குழந்தை இல்லையே என கவலையில் குடிப்பதாக சொல்லும் ஒருமனிதன் அவன் மனைவியும் அதே காரணத்தால் மது அருந்துவதை ஒப்புக்கொள்வானா..
குழந்தை இல்லை என்று கவலைபடுவதை விட தன் மனவிக்கும்
மது வாங்கி கொடுத்து ஒவ்வொரு இரவும் ஆழ்கடலில் மூழ்குவதே
மேல் ,,அது தான் சந்தோசமும் கிடைக்கும் ....

உங்கள் கேள்விகள் சரிதான் நான் அதற்க்கு தவறு என்று சொல்ல வில்லை ......
சும்மா ஜாலி ,,,,,ஹா,ஹா,ஹா,ஹா

பாலகன்
11-12-2010, 04:10 PM
குழந்தை இல்லை என்று கவலைபடுவதை விட தன் மனவிக்கும்
மது வாங்கி கொடுத்து ஒவ்வொரு இரவும் ஆழ்கடலில் மூழ்குவதே
மேல் ,,அது தான் சந்தோசமும் கிடைக்கும் ....குழந்தை இல்லையே என்ற கவலையைவிட மற்றவர்கள் இவர்களை பார்த்து உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்கும்போது தான் அதிக வலி எடுக்கும். அதற்காக மனைவிக்கு மதுவா கொடுப்பது?

தங்கைக்கோ அல்லது அம்மாவுக்கோ தீராத உடல் உபாதையோ அல்லது வலிபொறுக்க முடியாத நோயோ இருந்தால் என்ன செய்வோம்?

மதுவா?

மருத்துவரா?

எனக்கு எதை தேர்ந்தெடுப்பதென்று தெரியும்! :D

Hega
11-12-2010, 04:27 PM
ஹா ஹா

அப்படியா விடயம்.. ஜானிகளே..

நான் சும்மா கொழுத்தி போட்டேங்க..

குடி குடியை கெடுக்கும்னு புரிந்தால் சரி

Hega
11-12-2010, 04:34 PM
என்னதான் மருந்து, மருத்துவமுறை, கவுன்சிலிங் என்று செய்தாலும் அது ஒருசில நாட்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வழக்கம்போல முழுவதுமாக குடிக்கு அடிமையாகி போகிறவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். :confused:தான என்னவாகணும்னு அவரவர் தான் முடிவெடுக்க வேண்டும்..
குப்பை மேடா..கோபுர உச்சியா தம் இலக்கு என்பதை அவரவர் சுயமாக முடிவு செய்ய வேண்டும்.

கவுன்சிலிங் என்பது நாட்பட்ட குடியினால் பாதிக்கப்பட்டோரை அவர்கள் மதுவை நாடத்தோன்றும் நேரங்களில் வேறோரு திசையில் கவனத்தினை செலுத்த வைத்து மனதினை மாற்ற உதவும். அவர்கள் உடலும் உள்ளமும் அவ்வளவு இலகுவில் மதுவையோ புகையையோ விட்டு விலகிட விடாது. அதற்கு தேவையானது சுய கட்டுபாடே.அதுதான் தெரியுதில்லை சுய கட்டுபட்டை மது இழக்க செய்யிதுன்னு சுயத்தோட இருக்கும் பொது தெரியிதுல்லையா... அப்புறம் எதுக்கு அது கிட்டயே போகணும்..:sauer028:. தூக்கி போட்டிர வேண்டியதுதான்.

தானாக திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
குடியும் அப்படித்தான்.... .

Hega
11-12-2010, 04:40 PM
நண்பரே குடிபழ்க்கத்தில் இருந்து விடுபட
மருத்துவறை சந்தித்து ஒரு நோயாளி போல
அவர்முன் நிர்ப்பதை விட நீங்களாகவே
திருந்த முயற்ச்சிக்க வேண்டியது தானே /////////

வாழ்த்துக்கள் .........

மது அருந்துவது நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடு


ஜானி.. நோயாளிக்கு மருத்துவர் வேண்டுமே தவிர வெட்கமும் அவமானமும் அல்ல..

பிரச்சனை இருக்கு என தெரியுமிடத்தில் அதை தமக்குள் வைத்திருந்து சமாளிக்க முயலாமல் தாம் நேசிக்கும் ஒருவரையோ தம் நலனில் அக்கறை கொண்ட ஒருவரையோதுணைக்கழைப்பதும் மருத்துவ உதவியை நாடுவதும் கௌரவக்குறைசலானதில்லை.


ஏ்னேனில் நாலு பேருக்கு தெரிந்து விட்டதே அவர்களுகாகவாவது நான் திருந்தணுமே என நினைப்பதும் அவன் திருந்த உதவும்..

சூறாவளி
11-12-2010, 06:01 PM
நியாயமான காரணங்கள் தான் ஒரு மனிதன் மதுவை அருந்த தான் கொடுக்கும் சாதாரணமான காரணங்கள்...

இதை வைத்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..

ஆண்களாகிய நீங்கள் மது அருந்துவதற்கான காரணங்களாக பட்டியலிடும் சாக்குபோக்குகள் , பிரச்சனைகள் பெண்களுக்கு இல்லையா...

பெண்கள் காதல் தோல்வியால் பாதிக்கபடுவதில்லையா..
குடும்பப்பிரச்சனைகள், தனிமை போன்றவை பெண்களுக்கு இல்லையா..

பிரச்சனை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது எனும் போது மதுகுடித்து மதிமயங்கிட ஆண்கள் சொல்லும் இந்த சாக்குபோக்குகள் சரியானதா...:fragend005:


குழந்தை இல்லையே என கவலையில் குடிப்பதாக சொல்லும் ஒருமனிதன் அவன் மனைவியும் அதே காரணத்தால் மது அருந்துவதை ஒப்புக்கொள்வானா..

என்னப்பா இது இங்க என்ன நடக்குது... :) ஹேகா அவர்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் மட்டும் தான் தண்ணி அடிக்கிறாங்கன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க..

நான் இருக்கும் நாட்டில் பலவித நாட்டு மக்கள் இருக்காங்க.. அவர்களில் பெண்கலும் சேர்ந்து தண்ணி அடிக்கிறாங்க.. அதுவும் பெரும்பாலும் வீக் எண்ட் நாள்களில் கண்டிப்பா உண்டு..

நம் நாட்டு கலாச்சாரம் படி பெண்களுக்கு என்று தனி பண்பாடு உள்ளது, ஆனால் யாரு நினைச்சா இன்னும் 50 வருஷம் ஆனதுக்கு அப்புறம் அவங்கலும் சரிசமமா தண்ணி அடிக்க மாட்டாங்களா என்ன!!!

என்னை பொறுத்தவரை தண்ணி அடிப்பது பெரிய தப்பு ஒன்னும் இல்லை.. ஆனால் அதற்க்கு அடிக்ட் ஆக கூடாது.. எப்பயாவது சின்னதா சிம்பிளா அடிக்கலாம், சுய நினைவு போகாமல் இருக்கும் நிலைவரை தண்ணி அடிக்கலாம்.. அளவுக்கு மீறினால்தான் அது நஞ்சு..

யாரோ ஒருத்தன் குழந்தை இல்லைன்னு பீல் பண்ணி தண்ணி அடிச்சதுக்கு எல்லா ஆண்கள் மேலும் பழி போடாதிங்க.. குழந்தை இல்லையென்றாலும் நல்லபடியாய் வாழும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஆண்களையும் பெண்களையும் எப்போதும் இப்படி சரிசமமாய் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது.. இருவரும் இரு தன்மைகள் சரிசமமாய் நிறைந்த மனிதர்கள்... யாரும் யாருக்கும் பெரியவரும் இல்லை குறைந்தவரும் இல்லை.. ஒவ்வொரு கலாச்சாரம் அப்படி... வெளிநாடுகளில் ஆண்கலும் பெண்கலும் இணைந்தே தண்ணி அடிப்பதெல்லாம் ஒன்னுமே இல்லை.. நம்ம இந்திய நாட்டில் தான் அது தவறான செயலாக சித்தரிக்கப்படுள்ளது..

Hega
13-12-2010, 11:49 AM
சரிதான்.

ஆன்டனி ஜானி
16-12-2010, 03:41 PM
குழந்தை இல்லையே என்ற கவலையைவிட மற்றவர்கள் இவர்களை பார்த்து உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்கும்போது தான் அதிக வலி எடுக்கும். அதற்காக மனைவிக்கு மதுவா கொடுப்பது?

தங்கைக்கோ அல்லது அம்மாவுக்கோ தீராத உடல் உபாதையோ அல்லது வலிபொறுக்க முடியாத நோயோ இருந்தால் என்ன செய்வோம்?

மதுவா?

மருத்துவரா?

எனக்கு எதை தேர்ந்தெடுப்பதென்று தெரியும்! :D

நோய் என்பது தானாக உருவாவது
ஆனால்
மது குடிப்பது மனிதனின் விருப்பம்
நாம் நினைத்தால்
அதை மறக்கவும் முடியும்

அப்படி முடியாமல் அலைகிறவனை ஒன்றும்
செய்யமுடியாது நல்ல மருத்துவரிடம் கொண்டு தான்
மருத்துவம் பார்க்கனும்

குடிக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா ??????

ஆன்டனி ஜானி
16-12-2010, 03:48 PM
ஜானி.. நோயாளிக்கு மருத்துவர் வேண்டுமே தவிர வெட்கமும் அவமானமும் அல்ல..

பிரச்சனை இருக்கு என தெரியுமிடத்தில் அதை தமக்குள் வைத்திருந்து சமாளிக்க முயலாமல் தாம் நேசிக்கும் ஒருவரையோ தம் நலனில் அக்கறை கொண்ட ஒருவரையோதுணைக்கழைப்பதும் மருத்துவ உதவியை நாடுவதும் கௌரவக்குறைசலானதில்லை.


ஏ்னேனில் நாலு பேருக்கு தெரிந்து விட்டதே அவர்களுகாகவாவது நான் திருந்தணுமே என நினைப்பதும் அவன் திருந்த உதவும்..

மது குடிப்பது நாளு பேருக்கு தெரிந்தால் நல்லது தானே
என்று சொல்லுவது சரி இல்லை குடித்து விட்டு அதை மறப்பதுக்கு நாளுபேரு கிட்ட உதவி கேட்கணுமா ??

ஒரு பிள்ளை கற்பளிக்க பட்டால் என்றால் அதை மறைத்து
யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து வைக்க பார்ப்பார்களா ?
இல்லை நாலு பேருடன் ஆலோசனை கேட்பார்களா ??


இப்படி நீங்க பண்ணுவீங்களா ????

பாலகன்
16-12-2010, 05:38 PM
மது குடிப்பது நாளு(லு) பேருக்கு தெரிந்தால் நல்லது தானே
என்று சொல்லுவது சரி இல்லை குடித்து விட்டு அதை மறப்ப(தற்)துக்கு நாளு(லு)பேரு கிட்ட உதவி கேட்கணுமா ??

ஒரு பிள்ளை கற்பளி(ழி)க்க பட்டால்(ள்) என்றால் அதை மறைத்து
யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து வைக்க பார்ப்பார்களா ?
இல்லை நாலு பேருடன் ஆலோசனை கேட்பார்களா ??


இப்படி நீங்க பண்ணுவீங்களா ????


குடிக்கும் கற்பழிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லையே!

ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல நடந்தால் இரண்டும் செய்யலாம். எது அவரவர் வசதியோ அதை செய்வார்கள்.

ஒருசிலர் நாலுபேருக்கும் அதிகம் பேருக்கே தெரியும்படி செய்வார்கள்
ஒருசிலர் மான மரியாதைக்கு பயந்து வெளியே சொல்லமாட்டார்கள்.

இதில் தாங்கள் சொல்லவரும் கருத்து என்ன???

ஆன்டனி ஜானி
16-12-2010, 06:00 PM
தாய் தந்தை உள்ளவர்கள் குடிப்பதை தெரியாமல் வீடு போய்
சேர்வார்கள்
யாருமே இல்லாமல் அல்லாடும் நபர்கள் மட்டும் தான் நாலு பேருக்கு
தெரிந்து குடிப்பார்கள்
இது என்னுடய வாக்கு வாதம் இல்ல
நான் சொல்ல நினைப்பது அதாவது சொல்ல வருவது

குடிக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியுமா? தெரியாதா ?

இதற்க்கு எதுக்கு ஆலோசனைகள் இது தான் என்னுடய கருத்து
இதற்க்கு மேல் நான் சொல்ல போனால் இந்த திரியில் வாக்கு வாதங்கள்
தான் வரும் ..........
இது தான் என்னுடய கருத்து .....

xavier_raja
17-12-2010, 11:49 AM
நான் சும்மா பொழுது போக்கிற்காக அடிக்க ஆரம்பித்தேன்.. இப்பொழுது அதை நிறுத்த முடியவில்லை.. என்ன செய்வது என்று தெரியவில்லை :(

ஆன்டனி ஜானி
17-12-2010, 12:24 PM
நான் சும்மா பொழுது போக்கிற்காக அடிக்க ஆரம்பித்தேன்.. இப்பொழுது அதை நிறுத்த முடியவில்லை.. என்ன செய்வது என்று தெரியவில்லை :(

நண்பரே உங்களால் நிறுத்த முடியவில்லை என்றால்

நண்பர்கள் உதவியுடன் நல்ல மருத்துவரை அனுகுங்கள்

srivinoth
19-12-2010, 04:38 PM
அருமையான கலந்துரையாடல்!!

nambi
20-12-2010, 02:13 AM
நான் சும்மா பொழுது போக்கிற்காக அடிக்க ஆரம்பித்தேன்.. இப்பொழுது அதை நிறுத்த முடியவில்லை.. என்ன செய்வது என்று தெரியவில்லை :(

இது ஆலோசனை தான்....இப்படியும் முயற்சிக்கலாம்....(டைவர்சன்) மாற்று விஷயங்களில் மனத்தை செலுத்துதல்...மனோதத்துவ முறையிலேயே இதற்கு தீர்வு காண முடியும்...உதாரணமாக நூலகத்தில் சில முக்கிய விஷயத்தை ஆராய்ந்து முடிவதற்கான மாற்று விஷயத்தை கையாளலாம். அதனால் தொடர்ந்து நூலகத்தை அணுகிக்கொண்டே இருக்க முடியும். குறிப்பிட்ட நட்பு சூழல் வரும்பொழுது தான் அந்த நினைவு வரும்...அந்த மாதிரி சமயங்களை நினைவுப்படுத்தி கொண்டு அந்த சமயங்களை வேறு திசைக்கு கொண்டு செல்வதாக..வேறு விருப்பமான திசைகளில் அது ஏதாவது அவரவர் மனதுப்படி நிறைய இருக்கலாம். அதில் கவனம் செலுத்தினால் இதை தவிர்க்கமுடியும். இதை நினைவு படுத்தாத நட்பு சூழலை தொடர்பு வைத்துக்கொள்ளலாம். அந்த சூழலை கொஞ்ச நாளைக்கு தவிர்க்கலாம்.

உதாரணத்திற்கு புகைப்பதை தவிர்க்க வாயில் ஏதாவது சிக்லைட் வாங்கி வைத்து கொண்டு போட்டுகொண்டே இருப்பார்கள். நிறைய வாங்கி வைத்திருப்பார்கள். சிகரெட் விலைக்கு இதை நிறைய வாங்கி இருப்பு வைத்து கொள்ள முடியும். இப்படி ஒரே வாரம் இருந்தாலே அதற்கு (சிக்லைட்டிற்கு) அடிமையாகி விடமுடியும். அப்படி மாற்றிக்கொண்டு. திருப்பி அந்த நினைவிற்கு போகாத அனைத்து விஷயங்களையும் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கையாளவேண்டும். இதைதான் மருத்துவர் கூறுவார். இது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் காசு கொடுத்து அவரிடம் கேட்கின்றனர். மருத்துவர் சொன்னால் ஏற்றுக்கொள்கின்ற மனநிலையில் மனது இருப்பதினால். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதினால். அதனால் தான் அவர்கள் நாட்டாமை கொடி கட்டி பறக்கிறது. அவரிடம் கேட்கின்றனர். :D

எப்படி ஜோதிடம் மூலம் நம்பிக்கைக்கு ஆதாரவான ஒருவிஷயத்தை பெறுகிறோமோ? அப்படித்தான் இதுவும். அது மூடநம்பிக்கை...ஆனால் காசுக்காக சில விஷயத்தை வாடிக்கையாளர் மனதை அறிந்து நமக்குத் தருவார். அதாவது ஆதரவான நம்பிக்கையூட்டும் வார்த்தைகளற்ற மனித வாழ்க்கையில் நம்பிக்கை விற்பனை. (ஒரு கூட்டரங்கில் இலக்கிய செல்வர் வலம்புரி ஜான் கூறியது...அவர் அப்புறம் ஜோதிட விளம்பரத்துக்காக தொலைக்காட்சிக்கு வந்து விட்டார் அது வேறு விஷயம்...அவர் கூறிய விஷயத்தை சற்று வித்தியாசமாக உற்று நோக்கினால் அதுவும் உண்மை தானே!)

மனம் விசனப்படும் பொழுது...ஏதாவது துன்பங்களில் ஆட்படும் பொழுது ஆதரவாக இதை நாடுவது பெரும்பாலானோரின் வழக்கம்...பணிச் சுமை காரணமாக ஏற்படும் சலிப்பின் காரணமாகவும் நாடுவது வழக்கம்..தவிர்க்க முடியாமல் இருப்பதும் வழக்கம்...வேறு ஏதாவது உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம்.

இதைத்தான் டைவர்சனாக மருத்துவர் தீர்வாக (டிப்ஸ்) தருவார் கூட திருப்திக்காக சில விட்டமின் மாத்திரைகளை தருவார். அந்த மாத்திரைகளால் எந்த பலனும் இல்லை. மருத்துவர் கொடுத்தால் ஏதாவது விஷயம் இருக்கும் என்ற நம்பிக்கை தான். அந்த மாத்திரைகளை போட்டு பலர் அருந்தாமல் தவிர்ப்பார்கள். அது ஒரு வகை. அருந்தியும் விடுபவர்கள் உண்டு.:D

அருந்தும் கால அளவை தள்ளிப்போட்டு தள்ளிப் போட்டு குறைத்துக்கொள்வது...வாரத்திற்கு, மாதத்திற்கு பின்பு ஆண்டுக்கு...அதன்பின் முற்றிலும் கைவிடுவது....அந்த இடைப்பட்ட காலத்தில் இந்த (மேல்குறிப்பிட்ட டைவர்சன்) முறைகளை கையாள்வது என்று இருந்தால் மனம் விரும்பாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

புதுவருடம் வருகிறதே!....வழக்கமாக இதைத்தான் தீர்மானமாக (ரிசொலியுசன்) தேர்ந்தெடுப்பார்கள்...இன்றிலிருந்து (2011) படிப்படியாக விட்டுவிடலாம் என்ற தீர்மானத்தை துவங்கலாம்....:D

குறிப்பு...மருத்துவரும் இந்த முறையைத்தான் கையாள்வார் அவர் கைவிடுவதற்காக...:D

(''பழக்கம்'' என்பதற்கு மாற்று மருந்து ''வில்லைகளாக'' கிடையாது..அது மூளை சம்பந்தப்பட்ட விஷயம்...மூளையின் செயல்பாடுகளை மருந்தினால் அல்லது மருந்து வில்லைகளால் மாற்றியமைக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது.....மனோதத்துவம் தான் ஒரே மருந்து...உலகத்திலேயே....)