PDA

View Full Version : இவர்களுக்கு நீதி கிடைக்குமா?



வியாசன்
04-12-2010, 06:28 PM
‘பிரகதி’ – குறும்பு சிரிப்பும்,மழலை மொழியுமாய் தவழ்ந்த ஒன்னரை வயது அழகு குழந்தை. இவளின் துள்ளலும்,கொள்ளையடிக்கும் குறும்புகளும் 23 நவம்பர் வரைதான் நீடித்தது.அதன்பின்….. அங்கே ஈழத்தில் குண்டுகளால் உறவுகளை கொன்றனர் எதிரிகள்.

இங்கோ ஏதிலியாய் வந்த நிர்மளானந்தன்,சஜீவினியின் பிஞ்சு குழந்தையை தவறான சிகிச்சையால் கொன்றுள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். ப்ரகதிக்கு வாய் அன்னத்தில் பிரச்சனை என்பதால் கடந்த நவம்பர் 19 அன்று நாகியம்பட்டி அகதி முகாமில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவரின் பெற்றோர்கள். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறிய மருத்துவர்கள் அதற்கான நாளாக 23 தேதியை குறித்து வேலையை தொடங்கினர்.

அறுவை சிகிச்சை செய்யும் முன் அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.குழந்தை மயக்கம் அடையாததால் இரண்டு முறை குடுத்து மூன்றாவது முறை அதிகமாய் குடுக்க சில நொடிகளில் வாயில் நுரை தள்ளியுள்ளது.உடனே அறுவை சிகிச்சை ரத்து செய்து விட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அதன்பின் தான் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களின் அராஜகன்களே தொடங்கின.

பெற்றோர்களை பிள்ளையை பார்க்கவே விடவில்லை ஒரே ஒரு நாள் மட்டும் இரவில் பார்க்கவிட்டு விட்டு அதன்பின் மறுத்துவிட்டனர். ‘குழந்தைக்கு சளி அதிகமாகிவிட்டது மூளை காய்ச்சல் வந்துவிட்டது ஆனாலும் உயிர்க்கு பிரச்சனையை இல்லை’ என்றே சொல்லி வந்தவர்கள் டிசெம்பர் 02 அதிகாலை ஒரு மணி அளவில் ‘உங்கள் குழந்தை இறந்துவிட்டது சீக்கிரம் பாடியை எடுத்து செல்லுங்கள் ‘என மிரட்டியுள்ளனர்.

ஏதும் செய்வதறியாத இத்தம்பதியினர் குழம்பி இருக்க காலை செய்தியாளர்களுக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினர்க்கும் தெரிய வர அவர்கள் அங்கு திரள தொடங்கினர்.அதற்குள் விஷயத்தை அமுக்க பார்த்த மருத்துவ கண்காணிப்பாளர் மோகன் ,தாசில்தார் சித்ரா,டி.சி பாஸ்கர் உட்பட்ட காவல்துறை,அரசு துறை நபர்களுடன் இனைந்து நிர்மளானந்தன்,சஜீவிநியிடம் ‘என்ன செய்ய தவறு நடந்துவிட்டது பிரச்சனையை பெரிதுபடுத்தாதீர்கள் நிவாரணம் தருகிறோம்’ என பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

‘பணம் தருவதால் போன உயிர் திரும்பி வந்துவிடுமா?எங்களுக்கு நியாயம் வேண்டும் தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழைகள் வரும் அரசு மருத்துவமனைகளில் இனியாவது கொஞ்சமேனும் பொறுப்புணர்வுடன் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கவேண்டும்’ என ப்ரகதியின் உடலை வாங்காமல் சாலை மறியல் உட்பட போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

காவல்துறையும்,அதிகாரபீடமும் எந்நேரமும் அவர்களை ஒடுக்க ஆயத்தமிட்டு உள்ளது. இப்பொழுதே க்யு பிரிவு போலீசார் குழந்தையின் பெற்றோரை மிரட்டி வருகிறது.. இங்கு இதை படிக்கும் தோழர்களே,தோழிகளே……நியாயம் கிடைக்க வுதவுங்கள்..

பாலகன்
09-12-2010, 04:42 PM
ஐய்யோ இந்த செய்தி பயங்கரமாக உள்ளதே! மயக்கம் ஏற்படவில்லையெனில் விட்டுவிட்டிருக்கலாமே! நெஞ்சை உருக்கும் செய்தி.

Hega
09-12-2010, 08:57 PM
மனதை உருக்கும் செய்தி...

காவல் துறையினரும் காவாலிகளாவது ஏனோ..

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது நிஜம் தான்..

நமக்கென்ன அடுத்த வீட்டு பிரச்சனை என இருக்கும் வரை இப்படிபட்ட சம்பவங்களுக்கும் முடிவு வரப்போவதில்லை...