PDA

View Full Version : மனைவி...........Nanban
23-11-2003, 05:45 AM
மனைவி...........

உறிஞ்சப்படும்
சிகரெட்டாய்
காலம்
கரைகிறது.

நீ மட்டும் தான்
கரையவில்லை.

இத்தனை வருடம்
கழித்தும்
சிகரெட் உமிழும்
புகையின் மணத்தை
இயல்பாய்
ரசிக்க.

...

Nanban
23-11-2003, 04:15 PM
மாற்றங்கள் தான் வாழ்க்கை.
பிடிவாதமாக மாற மறுப்பவர்களால்
தன் வாழ்க்கை மட்டுமன்றி
தன்னைச் சார்ந்தவர்கள் வாழ்க்கையையும்
கசப்பாக ஆக்கிக் கொள்பவர்களும் உண்டு....

நீ, நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன், இருந்தும் இருவரும் நேசிக்கலாம்................
இந்த லட்சிய உறவு தோன்ற வேண்டுமானால், நம் துணையை அவர்களின் இயல்புப் படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்........
நமக்குப் பிடிக்காத சிலவை, அவர்களுக்குப் பிடித்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்........

பின் வாழ்க்கை ரசிப்பு தரும்..............

இளசு
23-11-2003, 09:26 PM
நண்பனே நீங்கள் சொல்வது ஒரு வகை..
அசைவ மனைவிக்காக அடிக்கடி அகமதியாஸ், வேலு ஹோட்டல் அழைத்துப்போகும்
ஆசாரக்குடும்ப கணவன் போல.....

இன்னொன்று -
மனமுவந்து மற்றவருக்காக
சிலவற்றை விட்டுத்தொலைப்பது..
மது, புகை, இரவில் ஊர் சுற்றல் இப்படி..

இருவகையும் கலந்துகட்டிய
இருப்புப்பாதையில் ஓடும் வண்டி
தாம்பத்யம்..

கணவன் உடல் - உயிர் குலைக்கும் சிலவற்றை கண்டித்து கட்டாயப்படுத்தி
மனைவி விலக்கினால் நான் தப்பென்று சொல்லமாட்டேன். ஒரு சிறுகதை படித்தேன். ஒரு சிறிய மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி வாங்கும்போதும்
கம்பெனி, கியாரண்ட்டி என்று அலட்டிக்கொண்டு அடிக்கடி "பத்தவைக்கும்"
கணவனைப் பார்த்து மனைவி கேட்பாள்: உங்கள் உடம்பு, உயிர் எனக்குச் சொந்தம். அது கெடாமல் நீண்ட காலம் இருக்க நானும் "உத்தரவாதம்" கேட்கிறேன்... விட்டுவிடுங்கள் இந்த சிகரெட்டை என்பாள்...

இந்தக்கேள்வியை மகன் -மகள் கேட்டால் இன்னும் கனதி கூடும்.

சேரன்கயல்
24-11-2003, 04:27 AM
இந்தக்கேள்வியை மகன் -மகள் கேட்டால் இன்னும் கனதி கூடும்.

அவர்கள் கேட்பதற்கு முன்பே...
(குழந்தை) பிறந்தவுடன் விட்டுவிடவேண்டும் என்று கேட்கும் மனைவிகள் இருக்கிறார்கள்...(ஹ்ம்...)

mania
24-11-2003, 04:36 AM
"உங்களுக்காக இத்தனை வருடங்கள் உங்கள் இஷ்ட்டப்படி வாழ்ந்தது போதும் . இனிமேல் எங்களுக்காக எங்கள் இஷ்ட்டப்படி வாழுங்கள்" என்று என் மனைவி அவளுடைய பிறந்த நாளான இன்று என்னிடம் கேட்டது பளிச்சென்று உறைக்கிறது எனக்கு!!!
அன்புடன்
மணியா

Nanban
24-11-2003, 04:42 AM
எல்லோரும் சிக்ரெட்டை மட்டுமே நினைத்துக் கொண்டால் எப்படி.......

சிகரெட் - விரும்பப்படாத ஒரு பொருளின் குறியீடு.........

அவ்வளவுதான்.......

ஒருத்தருக்கொருத்தர் கருத்து வேறுபாடு உள்ள பொருட்களை எல்லாம் வரிசைப்படுத்துங்களேன் பார்க்கலாம்.......

சேரன்கயல்
24-11-2003, 06:46 AM
பொருட்கள் மட்டுமே கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாவதில்லை...
சில வேளை மனிதர்கள் (நண்பர், உறவினர்), சில நிகழ்வுகள், சூழல்களும்...காரணிகளாகின்றன...

Nanban
24-11-2003, 07:01 AM
பொருட்கள் மட்டுமே கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாவதில்லை...
சில வேளை மனிதர்கள் (நண்பர், உறவினர்), சில நிகழ்வுகள், சூழல்களும்...காரணிகளாகின்றன...எல்லாவற்றையும்......... எல்லோரையும்.......
சேர்த்துக் கொள்ளலாம்.......

poo
24-11-2003, 12:45 PM
அண்மைக்காலமாய் அதிக பங்கேற்பு...

கவிதைகள்மூலம் அலசல்.. அதன்மூலம் விடியல்..

பாராட்டுக்கள் நண்பரே!!

Nanban
24-11-2003, 01:47 PM
ஒருவரை மற்றொருவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளல்........... இதுதான் மிகப்பெரிய சிக்கல்.........

அப்புறம் மற்றவர்கள் தொடருங்கள் அல்லது விவாதியுங்கள் இதை....

Chiru_Thuli
24-11-2003, 03:07 PM
திரு மணியா,
நன்றாக ஞாபகப் படுத்திப் பாருங்கள்.
உங்கள் திருமண நாளன்றே சொல்லியிருப்பார்கள். (சொன்னாலும் சொல்லாட்டியும் வேற வழியில்ல) :D


"உங்களுக்காக இத்தனை வருடங்கள் உங்கள் இஷ்ட்டப்படி வாழ்ந்தது போதும் . இனிமேல் எங்களுக்காக எங்கள் இஷ்ட்டப்படி வாழுங்கள்" என்று என் மனைவி அவளுடைய பிறந்த நாளான இன்று என்னிடம் கேட்டது பளிச்சென்று உறைக்கிறது எனக்கு!!!
அன்புடன்
மணியா

Chiru_Thuli
24-11-2003, 03:17 PM
மனைவியின் பார்வை......
உறிஞ்சப்படும்
சிகரெட்டாய்
காலம்
கரைகிறது.

நீ மட்டும் தான்
மாறவில்லை

சிரித்தும்,
கோபித்தும்,

அழுதும்,
அரற்றியும்,
ஆர்ப்பரித்தும்,
இனிமையாயும்,
ஈர்ப்போடும்,
உரிமையோடும்,
ஊசியாயும்,
எதிர்த்தும்,
ஏக்கத்தோடும்,
ஐயா என கெஞ்சியும்,
ஒத்துக் கொள்ளாதெனவும்,
ஓலமாயும்
புகை உனக்குப் பகை
எனச் சொல்லியும்
நீதான் மாறவில்லை.


மனைவி...........

உறிஞ்சப்படும்
சிகரெட்டாய்
காலம்
கரைகிறது.

நீ மட்டும் தான்
கரையவில்லை.

இத்தனை வருடம்
கழித்தும்
சிகரெட் உமிழும்
புகையின் மணத்தை
ரசிக்க.

தமிழ் தாட்சாயிணி
24-11-2003, 10:44 PM
மனைவி...........

உறிஞ்சப்படும்
சிகரெட்டாய்
காலம்
கரைகிறது.

நீ மட்டும் தான்
கரையவில்லை.

இத்தனை வருடம்
கழித்தும்
சிகரெட் உமிழும்
புகையின் மணத்தை
ரசிக்க.


அற்புதமான கவிதை நண்பரே.

மிகவும் ரசித்து படித்தேன்.

Nanban
25-11-2003, 01:56 AM
மிக்க நன்றி, தமிழ் தாட்சாயிணி......

இ.இசாக்
25-11-2003, 07:50 AM
நண்பன் அவர்களின் கவிதைகள்
நெகிழ்வூட்டுகிற நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே
அமைந்துவிடுகிறது.
மனைவி

ஒரு வினோத கைதி
இன்றைய சமூக சூழலில்....

இதில் என்ன கொடுமை என்றால்
கைதியின் காவலர்களே
குற்றவாளிகள்.

முத்து
25-11-2003, 04:24 PM
அருமையான சிந்தனை , காட்சி ... ..
நன்றிகள் மற்றும் பாராடட்டுக்கள்
நண்பன் அவர்களுக்கு ...

Nanban
27-11-2003, 07:58 AM
மனைவியின் பார்வை....

சிரித்தும்,
கோபித்தும்,
அழுதும்,
அரற்றியும்,
ஆர்ப்பரித்தும்,
இனிமையாயும்,
ஈர்ப்போடும்,
உரிமையோடும்,
ஊசியாயும்,
எதிர்த்தும்,
ஏக்கத்தோடும்,
ஐயா என கெஞ்சியும்,
ஒத்துக் கொள்ளாதெனவும்,
ஓலமாயும்
புகை உனக்குப் பகை
எனச் சொல்லியும்
நீதான் மாறவில்லை.


எத்தனை வகை அகிம்சைப் போராட்டங்களை வகைப் படுத்தி விட்டார், சிறு துளி - அனுபவமா?

பாராட்டுகள், சிறுதுளி......

Nanban
27-11-2003, 08:05 AM
ஒரு வினோத கைதி
இன்றைய சமூக சூழலில்.

இதில் கொடுமை
கைதியின் காவலர்களே
குற்றவாளிகள்.

ஒரு மொழியில் புலமை பெற வேண்டுமானால், அந்த மொழியிலேயே சிந்திக்கத் தொடங்குகள் என்பது தான் வல்லுநர்கள் கூறும் கருத்து.

அதுபோல, சிறந்த கவிதை படைக்க வேண்டுமென்றால், கவிதையாலயே சிந்திக்கப் பழகுங்கள் என்பதும் பொருத்தம்........

இசாக் அவர்களின் விமர்சன நடை கூட கவிதையாகவே இருக்கிறது -

(நண்பர் இளசுவின் நடையும் கூட........)

Nanban
27-11-2003, 08:07 AM
அருமையான சிந்தனை , காட்சி ... ..
நன்றிகள் மற்றும் பாராடட்டுக்கள்
நண்பன்


நன்றி முத்து அவர்களே........

ஒரு தொடர் தொடங்கப் படாமலே இருக்கிறது, உங்கள் கணக்கில்.......

Nanban
12-01-2004, 09:01 AM
முத்து, மன உளவியல் பற்றி எழுதுவதாக வாக்களித்தீர்கள், ஆனால், காணவில்லையே......

உமாமீனா
15-02-2011, 05:49 AM
நண்பா உமது கையெழுத்தில் உள்ள வரிகள் நிஜம் பேசுகிறது - உமது கவிதையும் தான்