PDA

View Full Version : ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் - உன் தயவினால்…



அகத்தியன்
01-12-2010, 11:54 AM
மெல்லத் தொடங்கும் சம்பாசனைகள் – நேரம் சுருங்க,
மீதி ஏதோ சொல்லவில்லை என்பது போல் முடியும்.
மீண்டும் தொடங்க எதுமின்றி
குரல் கேட்டு சிலிர்த்து,
மௌனங்கள் மட்டும் பேசி
காலங்கள் கரையும்..
ஏதுமில்லா இனிமைகளில் என் உலகு அமிழ
தொடர எண்ணும் வேட்கையுடன் விடைகொள்வாய்.

கண இடைவெளியில்
மீண்டும் தொடரும் – இனிமைகள்
இப்போது எழுத்தாக..
வாழ்த்தாக, காதலாக , சிரிப்பாக , உன் கனவுகளாக
நம் காதலின் ஜோதியில் எழுத்துக்கள் ஜொலிக்க,
உறங்க அனுமதிப்பாய் - ஓர் ஈர முத்தத்தோடு..

படுக்கை முழுக்க இனிமைகள், கனவுகளோடு இறைந்து கிடக்க,
காலைகள் உன் சுக விசாரிப்புகளோடு விடியும்.
இரவின் மீதி இனிமைகள் இன்றைய நாளுக்காய் கடத்தப்பட,
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன்
உன் தயவினால்…

ஆன்டனி ஜானி
01-12-2010, 01:50 PM
ரெம்ப ஒரு அருமையான கவிதை
படுக்கை முழுக்க இனிமைகள் ,கனவுகளோடு இறைந்து கிடக்க

காலைகள் உன் சுக விசாரிப்புகளோடு விடியும் இந்த வரி
ரெம்ப பொருத்தமாக
எழுதீருக்கிறார்கள்
வாழ்த்துக்கள் .......

M.Jagadeesan
01-12-2010, 10:21 PM
காதலிக்காக தினமும் பிறவி எடுக்கிறீர்கள்

கவிதை நன்று. வாழ்த்துக்கள்.

கீதம்
05-12-2010, 12:06 AM
காதலின் ஏக்கம்
கனவுகளில் தாக்கம்!
கனவுகளின் தாக்கம்
கவிதைகளின் ஆக்கம்!
பாராட்டுகள் அகத்தியன் அவர்களே.