PDA

View Full Version : ஊழலை ஒழிப்போம்



thav
30-11-2010, 03:35 AM
இந்த நாட்டில்
ஆட்சிகள் மாறலாம்
ஊழல்செய்யும்
காட்சிகள் மாறவில்லை

இந்த ஆட்சியில்
இந்த ஊழல் என்று
இல்லாத ஆட்சி
எந்த ஆட்சி?

அதிகாரிகளின் ஊழல்
பலரைப் பாதிக்கிறது
ஆட்சியாளரின் ஊழல்
நாட்டையே நாசமாக்குகிறது

தாயைகூட
தருணம் வந்தால்
ஊழல் செய்து
விற்று விடக்கூடிய
உலுத்தர்களுக்கு
தாய்நாட்டுப் பற்றா
தெரியப்போகிறது

இந்த நாட்டில்
எல்லாத்துறையிலும்
ஊழல் ஊடுருவியிருப்பது தான்
பிந்தங்கிய வளர்ச்சியின்
பின்னணிக் காரணம்

நடந்துவந்த பாதையில்
நடந்துவந்த ஊழலை
முன்பே நிறுத்தியிருந்தால்
முன்னேறிப்போயிருக்கும் நாடு
பலபடிகள் முன்னே


பந்து பரிமாறுவதுபோல்
பணத்தை பரிமாறி
ஊழல் செய்து
உயர்ந்தவர்கள் சிலபேர்
உயர்வை இழந்தவர்கள் பலபேர்

சட்டமும் நீதியும் கூட
கண்முன்னே நடக்கும் ஊழலை
கண்டும் காணாமல்
கண்கட்டிவித்தை
காட்டப்பார்க்கின்றன

கோடிகோடியாய் ஊழல் செய்து
கொள்ளைத்தவர்களை
கைது செய்யாமல்
சின்னத்திருடர்களை
சிறைக்கு அனுப்பும் நீதிபதிகளைப் பார்த்து
சிரிப்புத்தான் வருகிறது

அரசில் இருப்பவர்கள்
இன்னும் இன்னும்
ஊழல் செய்ய
ஆசைப்படுவதால் தான்
ஊழலை ஒழிக்க முடியவில்லை

ஊழல் இல்லாத
அபிவிருத்தித் திட்டங்களை
அரசு உருவாக்க வேண்டும்

ஊழல் செய்து உறிஞ்சாமல்;
தன்பணத்தில்
தானே செய்தது போல்
தம்பட்டம் அடிக்காமல்
மக்கள் நலத்திட்டங்கள்
மக்களை
முன்னேற்ற வேண்டும்



திருடர்களுக்கு
திருடர் பட்டம் கொடுக்கும் தேசம்
ஊழல் செய்தவர்க்கு
சிறப்பு திருடர் என்று
சிறப்புப் பட்டம் கொடுக்க வேண்டும்

திருடர்களின் படத்துடன்
திருடர்கள் ஜாக்கிரதை என்று
அறிவிக்கும் அரசு
ஊழல் செய்தவரை
உருவப்படத்துடன்
உலகுக்கு அறிவிக்க வேண்டும்

நெஞ்சுக்கு நேர்மையாய்
நினைத்தால்,
முயன்றால்
முடியும்
ஊழலை ஒழிக்க

கீதம்
04-12-2010, 11:51 PM
அன்பளிப்பென அழகுப்பெயர்கொண்டு அவதரித்து
பருவத்தில் இலஞ்சமென
பலரறிய இரகசியப்பெயர் பூண்டு
பின்னாளில் ஊழலெனும்
உயிர்குடிக்கும் உருக்குலைக்கும்
நோயாய் வளர்ந்துவிடும் நிலையை
மாற்றவிரும்பும் ஆதங்கத்தைப்
படம்பிடித்த கவிதைக்குப் பாராட்டுகள்.