PDA

View Full Version : உடைமைகளின் பாடல்



inban
29-11-2010, 03:59 PM
1]தொலையாத உடைமைகளின்
அருமை தெரிவதில்லை
யாருக்கும்

2]உரியவனிடம்
ஒப்படைக்க முடியா உடமைகளை
நியே வைத்துக்கொள்வது நல்லது

3]தொலைந்து போன
எந்த உடமைக்காகவும்
அழுகை வடிக்காதே
உனது அழுகை
எல்லாவற்றையும்
தொலைத்துவிடக்கூடும்

4]எந்த உடமையையும்
உன்னதே என
ஒருபோதும் எண்ணாதே
உன்னை அது
அவ்வாறு எண்ணும் நாள்
வெகுதூரத்தில் இல்லை

5]களவு போகிடும்
எல்லா உடமைகளும்
உடையவனின் பாவத்தை
உடன்சுமந்தே செல்கின்றன.