PDA

View Full Version : சதா ரண நிகழ்வு



கேசுவர்
29-11-2010, 09:16 AM
-----------------------------------------
The Day My God Died – Must See Documentary - 50Mins
http://www.youtube.com/watch?v=BV5W6F4L5i8&feature=related

இந்த டாக்குமென்ட்றியை பார்த்த பின்பு, எனது இயாலமையின் வடிகாலாக அமைந்த வரிகள் தான் இவை.
உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள.
-----------------------------------------

ஒவ்வொரு விடியலும்
இங்கு
அழுகிய இரவுகளின்
வாடைகளின் இருந்து பிறக்கின்றன.

ஆம் இது ஓரு சாதரண நிகழ்வு.
இல்லை இல்லை இது சதா ரண நிகழ்வு.

கருகலைக்கபடுவதும் பின்பு கலைக்க பயணப்படுவதும் மட்டுமே
இங்கே பிரதான பணி.
உபரி தொழிகளும் உண்டு இங்கு.

சாதிகளை மதங்களையும் அவிழ்ப்பது
எங்கள் உள்பாவடைகளின் நாடக்களும் தான்.

எண்ணும் எழுத்தும் கண் ... விடுங்கள் இது பழைய சித்தாந்தம்
கன்னியும் காமமும் காச எனத்தரும்.
இதனை எழுதிய எழுதுக்கோலின் நாற்றம் பழகிய ஒன்று.

நாங்கள் வரிசையாக வந்திறங்கிய வண்ண கோலங்கள்
எங்களின் மீது நாய்களும் பன்றிகளும் நாற்றத்தை வாரியிரைத்தன.

ரணங்களிடமும் வேதனைகளிடமும் மட்டுமே
ஒட்டிக்கொண்டிருந்த உயிரிடம்,
வலி தன் பிரிவை விண்ணப்பித்த நேரம்,
நிகழ்ந்தது மர்மச்சாவு.

எங்கிருந்து களவாடிய வரிகள் என யோசிக்கிறிர்களா ?
நேற்று மதுவாங்க செல்லுகையில்,
மூன்றாவது குறுக்கு சந்தின் முனையில் கேட்ட
ஒப்பாரியின் ஓரியிரு வரிகள்.

உங்களுக்கும் கேட்கிறதா?
அது மனிதம் இழவிற்கான ஒப்பாரி.

கேசுவர்
02-12-2010, 09:33 AM
குறிப்பு:பாலியல் தொழிலுக்கு அடிமையாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை பற்றிய குறும்படம்,2003ல் வெளிவந்த படம்,இதில் சமூகப் போராளி அனுராதா கொய்ராலா, நடப்பு ஆண்டின் 'சி.என்.என். ஹீரோ ஆஃப்தி இயர்' அவர்களும் பங்கேற்று உள்ளார்.