PDA

View Full Version : அக்கரைப் பச்சை



ஜனகன்
28-11-2010, 06:52 PM
[/img] எனது மூன்று ஆயிரம் பதிவு வரும் போது ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன்.கவிதை எழுதலாம் என்றால் அதற்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம்.சரி ஒரு கதை எழுதி பார்க்கலாமே..........அதனால் வந்த விளைவு தான் இது.


http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_sad.jpg

அக்கரைப் பச்சை

வடநோர்வேயில் கோடை காலம் வந்தது.அன்று நேரம் நாடு இரவு-10 மணி.கண்ணைப் பறிக்கும் சூரிய ஒளி. (நோர்வே என்றதும் நினைவில் வருவது 'நடு இரவுச் சூரியன் - (Midnight Sun)'). விழாக்களும் விருந்துகளும், பாடல், ஆடல் பரவசங்களும் என,எங்கும் உற்சாகம் களைகட்டியது. நகர வீதி எங்கும் மக்கள் திரள் வழிந்தது.

ஆனால் அந்த ஒரு வீடு மட்டும் அமைதியாக ஆள்நடமாட்டம் அற்று தெரிந்தது.

முகுந்தனோ மாடிக்கும் தரைக்குமென ஏறி இறங்கிக்கொண்டிருந்தான். சிந்தனை வயப்பட்டவனாக தோன்றியவன், தனக்குள்ளே உரையாடிக்கொண்டிருந்தான்.

லதாவுக்கு என்ன நடந்தது? என்னோடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றாள்? சில மாதத்திலேயே நான் அலுத்து விட்டேனா..?

விடை தெரியாத பெரும் சிக்கலில் தடுமாறியவன், வீட்டை பெருக்கி துப்பரவாக்கி, தான் சமைத்து வைத்த உணவை சாப்பிடாது, பசியோடு லதாவின் வரவுக்காக காத்திருந்தான்.

லதாவுக்கு எப்பவும் அவசரம்தான். காரைக் கூட மிகவும் வேகமாகவே ஓட்டுவாள். இதாலை குற்றப் பணம் கூட கட்டியிருக்கின்றாள்.

இன்று காலையில் போனவள்.... .ஏன் இப்படி நேரம் ஆகுது.என்று முணுமுணுத்துக்கொண்ட முகுந்தன், பொறுமை இழந்தவனாய் தொலைபேசியில் கதைக்க முயன்ற போதும் அவள் அதை நிறுத்தி விட்டாள்.

முகுந்தன் இலங்கையில் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன். நீர்வேலி அவனது ஊர். விவசாயத்துக்கு ஏற்ற அந்த கிராமத்தில், வளமாக விளங்கிய குடும்பத்தின் மூத்த மகனாக இவன் இருந்தான்.

படிப்பில் விண்ணனாக இருந்த முகுந்தன், பல்கலைக் கழகத்தில் இணைந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் நோர்வேயில் இருந்து அங்கு வந்த மாமன் பாலசிங்கம் தனது ஒரே மகள் லதாவுக்கு இவனை கல்யாணம் பேசி, ஆவன செய்து, நோர்வேக்கு அழைத்து திருமணம் செய்து வைத்தார்.

வெளி நாட்டு மயக்கமும், மாமன் கொடுத்த பணமும் பெற்றவர்களை பேதலிக்க வைத்து பெரும் கனவுக்கு உட்படுத்தியதால், முகுந்தன் நோர்வே மாப்பிள்ளையாக நேர்ந்தது. லதாவோ படிப்பை நிறுத்தி விட்டு தந்தையாரின் செல்வத்தில் புரளும் சொகுசுக்காரியாக துலங்குபவள். அவள் தமிழில் பேசுவதோ அபூர்வம். பார்ப்பதற்கு அழகி. ஆடம்பர தோற்றத்தோடு அலைபவள்.

லதா முகுந்தனை மனம் விரும்பி, ஏற்று கொண்டாலும், சில மாதங்களில் அவளின் போக்கு அடியோடு மாறியது. அடிமையை பார்க்கும் நோக்கோடு, அவனை அவள் நடத்தவே, துன்பத்தில் தோய்ந்தவனாக அவன் தோற்றம் பெற்று, துவண்டு போனான்.

அக்கரைப் பச்சையில் மயங்கி தன்னை தாரை வார்த்த பெற்றோரை எண்ணி அவன் இன்றுவரை புழுங்காத நாளே இல்லை எனலாம். அவனின் நட்பும் பரிவும் கலந்த நயவுரைகளை அவள் காது கொடுத்து கேட்பதாய் இல்லை. மனதில் கனிந்த நம்பிக்கையின் ஊற்று முற்றாக அடைபட்டு விட்டதாக அவன் உணர்ந்தான்.

லதாவுக்கு பிடித்த விதமாய் உணவுகளை சமைத்து முடித்திட்டான். வலுவாய் பசிக்குது. சாப்பிடலாம் என்றால், அவள் தன்னை பார்க்காமல் சாப்பிட்டதென்று, ஒரு புது பிரச்சனை எடுப்பாள். பாப்பம் கொஞ்ச நேரம்....

தனக்குள் பேசிய முகுந்தனை தொலைபேசியின் அழைப்பு குறுக்கிடவே, சென்று கதைத்தான். மறுமுனையில் லதாவின் தம்பிதான் கதைத்தான்.

அவனின் தமிழை விளங்கிக் கொள்வதென்றால் வில்லங்கமான விஷயம்.

"அக்கா டு டாக்கன் (இரண்டு நாள்) இங்கைதான் இருப்பா. மம்மிதான் சொல்லு எண்டு சொன்னது.ஒகே!"

என்றவன், தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டு அவசரமாக தொலைபேசியை துண்டித்து கொண்டான்.

இப்படி அவள் அடிக்கடி தாய் வீட்டில் தங்குவது வழமைதான். அதை அவன் விரும்பாவிட்டாலும், நடக்கும் சம்பவம்தான்.

இனி அவள் வீடு திரும்பும் போது கண்டு கொள்ள வேண்டுயதுதான். விரத்தி ததும்பிய பார்வையோடு, அவன் உணவருந்த ஆயத்தமானான். அவனின் ஆண்மையின் கொக்கரிப்பு உள் எழுந்து மோத, முகம் சிவந்தவனாய் செயல்பட்டான்.

அடுத்த மூன்று நாள் கடந்து வீடு திரும்பிய லதாவோடு அவளது நொஸ்க் (norsk) தோழி சிசிலியாவும் கூடவந்தாள்.அவளை கண்டாலே முகுந்தன் சினம் கொள்வது வழக்கம்.

காரை நிறுத்தி விட்டு துள்ளல் நடையோடு வந்த இருவரும் கும்மாள தொனியில், உரையாடி ஆர்பரிக்கவே, முகுந்தன் தனது அறைக்கு சென்று, கதவை சாத்திக்கொண்டான். லதாவை அழகி என்று கூறி, சிசிலியா அணைத்து கொள்வதும்,சிலவேளைகளில் முத்தம் இட்டு கொள்வதும் முகுந்தனை கோபங்கொள்ள வைக்கும்.

குடிப்பழக்கம் உள்ள சிசிலியாவின் நட்பை துண்டிக்குமாறு லதாவிடம் அவன் வேண்டியும், அவள் அதை கேட்பதாய் இல்லை. தான் கொண்டுவந்த மதுகுப்பியை திறந்து குவளையில் ஊற்றிய சிசிலியா,அதை லதாவுக்குப் பருக முயலவே அவள் அதை மறுத்தாள். துரத்துப்பட்டனர்....ஆடினார்.... கட்டிப் புரண்டனர்......... கூகுரல் இட்டனர்.

யன்னலுடாக இவற்றை எல்லாம் நோக்கிய முகுந்தன் கோபக்கனலாய் பறக்க யன்னலை அடித்து சாத்திக்கொண்டான். நீண்ட பொழுதை அங்கு களித்த தோழிகள் காரில் ஏறிக் கிளம்பி மறைந்த பின்னே, முகுந்தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அன்று வெகு நேரம் கழிந்த பின்னே வீடு திரும்பிய மனைவியை எதிர் கொட்ட முகுந்தனின் முகத்தில் கோபம் தெரிந்தது.

லதா...........!!! அந்த சிசிலியாவின் சிநேகம் வேணாம் எண்டு எத்தினை தரம் சொல்லிபோட்டன். நீ திருந்த மாட்டியே!

உன்னோடை சேர்ந்து என் வாழ்க்கையும் நாசமாய் போகுது. எமது எதிர்காலம் பற்றி நீ சிந்திப்பதில்லையா?கொஞ்சம் யோசி லதா..........? என கெஞ்சலும் இல்லாமல் அதட்டலும் இல்லாமல் கேட்டான்.

அவன் கதையை நிறுத்த முன் குறுக்கிடடவள். "இஞ்சை பார் எனக்கு ஒருத்தரும் உபதேசம் செய்ய தேவையில்லை. அத்தோடை நான் நிண்டு சண்டை பிடிக்க தயாரில்லை. நான் முந்த நாள் அபோஷன் பண்ணினனான். அதனாலை ரெஸ்ட் எடுக்க வேணும். படுக்க போறான்.........."

என்று கூறியவாறு, மாடிப்படி எறியவளை மறித்த முகுந்தன் "என்ன......என்ன...........!!! நீ சொன்னனி! அபோஷன் செய்தநியோ............?, எவ்வளவு பெரிய விஷயம் அது! என்னை கேளாமல் அது எப்படி நீ செய்யலாம்....?"

குறுக்கிட்ட லதா "ஒ மிஸ்டர்! இந்த நாட்டிலை ஒரு பெண் தனக்கு பிள்ளை வேணுமோ...இல்லையோ எண்டதை தீர்மானிக்கிற உரிமை இருக்கு! எனக்கு தேவை இல்லை அதாலை நான் அழிச்சேன். விளங்குதோ!." என்று கூறிவிட்டு அறைக்குள் சென்ற லதா கதவையிழுத்து ஓங்கிய ஒலியில் சாத்திக்கொண்டாள். முகுந்தனோ சோந்து போய் கதிரையில் விழுந்தான். சத்தமிட்டு கதறவேண்டும்போல் இருந்தது அவனுக்கு.

Ravee
28-11-2010, 07:05 PM
ஜனகன் , உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் .... அருமையான கரு .... அதை இன்னும் உணர்ச்சி பூர்வமாய் தொட்டு இருந்தால் எங்கேயோ போய் இருந்திருக்கும் ...இன்னும் நல்ல தலைப்பையும் தெரிவு செய்து இருக்கலாம் இருந்தாலும் அந்த கடைசி பத்து வரிகள் .... மனதை தொட்டது .... இது போல எத்தனை பொருந்தாத பொருத்தங்கள் உயிரோடு பிணமாய் வாழச் செய்கிறது மனிதர்களை.

ஜனகன்
28-11-2010, 07:18 PM
கதையை படிச்சுட்டு விட்டுடாம விமர்சனம் தந்ததற்கு மிகவும் நன்றி ரவி.

இப்பதானே கதை எழுத ஆரம்பித்துள்ளேன்.குறை நிறைகளை நீங்கள் எடுத்து சொல்லும்போது அதை திருத்தி அமைக்கும் போது முன்னேற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன்.

உங்கள் ஊக்க பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

கீதம்
28-11-2010, 09:14 PM
மனமார்ந்த பாராட்டுகள், ஜனகன். இத்தனைநாள் இந்தத் திறமையை எப்படிதான் பொத்திவைத்திருந்தீர்களோ?

வித்தியாசமான கருவும் அதைக் கதையாக்கிய விதமும் மிக அற்புதம். பேச்சுவழக்கு கதைக்கு இன்னமும் மெருகு கூட்டுகிறது. உங்கள் திறமையை தொய்யவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள். மீண்டும் என் பாராட்டுகள்.

(துலன்குபவள் என்பதை துலங்குபவள் என்றும் புளுங்காத என்பதை புழுங்காத என்றும் திருத்தி எழுத்துப்பிழை களைந்தால் இன்னும் சிறக்கும்.)

ஜனகன்
28-11-2010, 09:46 PM
என் கதையை படித்து உடனே கருத்து தெரிவித்ததில் மிகுந்த சந்தோஷம் கீதம்.

எல்லாம் உங்கள் எல்லோருடைய கதைகளும் தான் எனக்கு கதை எழுதும் ஆர்வத்தை தூண்டியது.உங்களுடைய பாராட்டுக்கள் எனக்கு இன்னும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கின்றது.மிகவும் நன்றி.

பிழைகள் களைந்து விட்டேன் எடுத்து காட்டியமைக்கு நன்றி

மதி
29-11-2010, 12:40 PM
நல்ல கரு ஜனகன். மற்றவர்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நல்ல கதையா உருப்பெறும்.. இப்போது தானே ஆரம்பித்துள்ளீர். சீக்கிரமே சிகரம் தொட்டுவிடுவீர்..
வாழ்த்துக்கள்..!

ஆன்டனி ஜானி
29-11-2010, 01:47 PM
நல்ல ஒரு கதை ,
அருமையாக அக்கரைக்கு ,இக்கரை பச்சை என்று சொல்வது போல இந்த கதை
இருந்தது ...
பாராட்டுக்கள் ஜனகன்

பிரேம்
27-12-2010, 10:41 AM
நலம் ..எனக்கு புரியுது..இருந்தாலும் என்ன தமிழ் இது...?

ஜனகன்
01-01-2011, 06:23 PM
நல்ல கரு ஜனகன். மற்றவர்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நல்ல கதையா உருப்பெறும்.. இப்போது தானே ஆரம்பித்துள்ளீர். சீக்கிரமே சிகரம் தொட்டுவிடுவீர்..
வாழ்த்துக்கள்..!

பாராட்டி பின்னூட்டம் அளித்த மதிக்கு எனது நன்றி.

ஜனகன்
01-01-2011, 06:24 PM
நல்ல ஒரு கதை ,
அருமையாக அக்கரைக்கு ,இக்கரை பச்சை என்று சொல்வது போல இந்த கதை
இருந்தது ...
பாராட்டுக்கள் ஜனகன்

என் கதை குறித்த உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி ஜானி.

ஜனகன்
01-01-2011, 06:25 PM
நலம் ..எனக்கு புரியுது..இருந்தாலும் என்ன தமிழ் இது...?

இது நாம் ஊர் பாசை.புரிந்து கொள்ள கஷ்டம் என்றால் மன்னிக்கவும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரேம்.

dellas
06-01-2011, 08:40 AM
ஜனகன் அவர்கட்கு முதலில் பாராட்டுக்கள். நல்ல கரு.
'சில மாதத்திலேயே நான் அலுத்து விட்டேனா..?' நீங்கள் இதன் மூலம் எதைச் சுட்ட வருகிறீர்கள் என்பது புரியவில்லை. தம்பத்யமா..? இல்லை அருகாமையா..? எழுத்தோட்டம் கவனமாக கையாள பட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.

வானவர்கோன்
06-01-2011, 11:21 AM
"அக்கரைப் பச்சை" அருமையான கதை, பாராட்டுக்கள் ஜனகன். ஐரோப்பிய நாடுகளில் இது சாதாரண விடயம் தானே, நோர்வேயிலுள்ள ஈழத்து படைப்பாளி கோவிலூர் செல்வராஜா எழுதிய "விடியாத இரவுகள்" கதைத் தொகுப்பில் இப்படிப்பட்ட பல கதைகள் பதிவாகியுள்ளன. நிலாவரைக் கிணற்றினை நினைவூட்டியமைக்கு நன்றி ஜனகன்.