PDA

View Full Version : கானல் கவிதை...



சசிதரன்
28-11-2010, 03:40 PM
எதைப் பற்றி என தெரியாமலே
தொடங்குகிறேன் ஒரு கவிதையை

ஒரு காதலோ
ஒரு மரணமோ
ஒரு புன்னகையோ
சிறு கண்ணீரோ
எதுவுமே இல்லை இப்பொழுது

இன்று
மொட்டைமாடி பூனைக்குட்டிகளில்
ஒன்று தொலைந்து போயிருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு
நண்பன் ஒருவன் தொலைபேசினான்
உணவகத்தில் பார்த்தவள்
அவசியமின்றி புன்னகைத்தாள்
இரண்டு மாதம் முன்பு நடுவீதியில்
வெட்டுப்பட்டு இறந்த சம்பத் சித்தப்பாவை பற்றி
ஏதோ ஒரு பழைய கதை சொன்னாள் அம்மா

தொடர்பில்லாத சம்பவங்களை
தொடர்புபடுத்தவும் முடியாததால்

எதைப் பற்றி என தெரியாமல்
தொடங்கிய கவிதையை
எதைப் பற்றி என தெரியாமலே முடிக்கிறேன்.

இமை
28-11-2010, 04:58 PM
தொடர்பில்லா கவிதை.... மிக ஆமையான தொடர்பு.... உள்ளத்திற்கும் உணர்விற்கும்...

வாழ்த்துக்கள்....

சசிதரன்

Ravee
28-11-2010, 05:14 PM
இருந்தும் இல்லாமல்
கவிதையில் ஒளிந்திருக்கும் கதைகள்
தொட்டும் தொடாமல்
விட்டுப்போன சம்பவங்கள்
முடிந்தும் முடியாத
சில நிகழ்வுகள்
சசி சசி .....
மனதை கவருதே உங்கள் கவிதை ... :)

ஆன்டனி ஜானி
28-11-2010, 05:53 PM
தொடங்கிய கவிதை
...........................
..........................
........................
முடிந்தது கவிதை
ரெம்ப அருமையான கவிதை
வாழ்த்துகள்

கீதம்
04-12-2010, 11:42 PM
எதைப்பற்றி எனத் தெரியாமலேயே துவங்கி
ஆலம்விழுதுகள் போலே ஆடிடும் நினைவுகள் பற்றி
அழகாய் ஊஞ்சலாடும் கவிதை.

பாராட்டுகள் சசிதரன்.