PDA

View Full Version : ஆயுள்தவம்



inban
28-11-2010, 01:53 PM
நீ முத்தமிட்ட
இதழின் ஈரம்
காயும்முன்னால்

உன்
சிணுங்களில் குத்திட்ட
ரோமக்கால்கள்
அடங்கும் முன்னால்

என்
ஸ்பரிசத்தில் சிவந்த
உனது
கன்னச் சிவப்பு
களையும் முன்னால்

என்
விரல்பட்டு விரிந்த
நின் குழல்
முடியப்படும் முன்னால்

தாலாட்டும்
நின் மடியில் இருந்து
என் தலை
விலகிடும் முன்னால்

என்னைக் கொஞ்சும்
உன் குரலோசை
செவிவிட்டு
சிறகடிக்கும் முன்னால்

சத்தியமாய்
ஒரு நாளைக்கு
நான்
செத்துப்போய்விட விட வேண்டும்

M.Jagadeesan
28-11-2010, 02:44 PM
காதலி உன் கைவசம்
ஆன பின்னால்
செத்துப் போவதற்கு
ஏன் விரும்ப வேண்டும்?

inban
29-11-2010, 03:28 PM
காதலி உன் கைவசம்
ஆன பின்னால்
செத்துப் போவதற்கு
ஏன் விரும்ப வேண்டும்?

மரணம் இயல்பானது ஆனால் மகிழ்வான மரணம்?
'மார்புக்கு மத்தியில செத்துவிடத்தோனுதடி'
-வைரமுத்து காதலின் உச்சத்தில் உளறியது.