PDA

View Full Version : எழுதியவன் ஏட்டைக் கெடுத்தானா?



M.Jagadeesan
27-11-2010, 11:25 PM
திருக்குறளில் அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில்

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

என்பது ஒரு குறள்.பெரும்பாலான குறட்பாக்களில் இரண்டு வரிகளிலும் முதல் சீரில் எதுகை, மோனை போன்ற தொடைகள் இயல்பாகவே அமைந்து இன்பம் பயக்கின்றன.ஆனால் இக்குறட்பாவில் அவ்வாறு அமையவில்லை.ஆனால் அமைய வழி உள்ளது.

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.

என்று குறள் இருக்குமேயானால் முதல் இரண்டு சீர்களில்,அதாவது "தீயினால்", "வாயினால்" ஆகிய இரண்டு சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றி எதுகை இன்பம் பயத்தலைக் காண்கிறோம்.இரண்டாவது வரியில் "வாயினால்"மற்றும் "வடு" ஆகிய சொற்களில் முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தலைக் காண்கிறோம்.

மேலும் "வாய்" என்ற சொல்லைத் திருவள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்தக் காண்கிறோம்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

மேலேகண்ட மூன்று குறட்பாக்களிலும் "வாய்"என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்து கிறார்.ஆகவே குறட்பா

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.

என்று இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.ஏடுஎடுத்து எழுதியோர் செய்த பிழையோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

கப்பலோட்டிய தமிழர் வ.வு.சி அவர்களும் தம்முடைய "திருக்குறள் அறப்பால்"விருத்தி உரையில் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.

பாலகன்
03-12-2010, 05:17 PM
நா- பிறழக்கூடியது என்பதால் அந்த இடத்தில் பிழன்று பேசும் நாவால் மற்றவர் படும் அவதியை திருவள்ளுவர் அப்படி சொல்லியிருக்கலாம்.

மூன்று இடங்களில் வாய் என்று கூறிய திருவள்ளுவருக்கு இதுகூட தெரியாதா?

ஆன்டனி ஜானி
03-12-2010, 05:18 PM
அருமையான திருக்குறள் கள் இதற்க்கு விளக்கமெல்லாம் தந்து சொல்லியிருந்தால்
அனைத்தும் விளக்கமாய் விரிவாய் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக
அமைந்து இருக்கும்
நான் தலைப்பை பார்த்தவுடம் பெரிய கதையாக இருக்குமோ என்று நினைத்தேன்
இங்கு பார்த்தால் சிரிய வரியில் முடித்து விட்டீர்களே நண்பரே !!

வாழ்த்துக்கள் ......

M.Jagadeesan
04-12-2010, 07:28 AM
நா- பிறழக்கூடியது என்பதால் அந்த இடத்தில் பிழன்று பேசும் நாவால் மற்றவர் படும் அவதியை திருவள்ளுவர் அப்படி சொல்லியிருக்கலாம்.

மூன்று இடங்களில் வாய் என்று கூறிய திருவள்ளுவருக்கு இதுகூட தெரியாதா?

பின்னூட்டம் தந்த பிரபுவுக்கு நன்றி!

M.Jagadeesan
04-12-2010, 07:29 AM
அருமையான திருக்குறள் கள் இதற்க்கு விளக்கமெல்லாம் தந்து சொல்லியிருந்தால்
அனைத்தும் விளக்கமாய் விரிவாய் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக
அமைந்து இருக்கும்
நான் தலைப்பை பார்த்தவுடம் பெரிய கதையாக இருக்குமோ என்று நினைத்தேன்
இங்கு பார்த்தால் சிரிய வரியில் முடித்து விட்டீர்களே நண்பரே !!

வாழ்த்துக்கள் ......

பின்னூட்டம் தந்த ஆன்டனி ஜானி அவர்களுக்கு நன்றி!

பாலகன்
05-12-2010, 03:47 AM
என்னங்கன்னா! ரொம்ப யோசிச்சி விளக்கமெல்லாம் சொன்னா ஒருவரியில பின்னூட்டம் போட்டவங்க லிஸ்டுல சேர்த்துட்டீங்க.

விவாதமே நடக்கலையே! அப்ப எது சரி

M.Jagadeesan
05-12-2010, 05:59 AM
மகாபிரபு அவர்களுக்கு

" நாவினால் சுட்ட வடு" என்று இருப்பதால் தவறு ஒன்றும் இல்லை.வள்ளுவர் அப்படி எழுதி இருப்பாரா? என்பதுதான் கேள்வி.எதுகை,மோனைகளை வலிந்து புகுத்தும் வழக்கம் வள்ளுவரிடம் கிடையாது.சிலகுறட்பாக்கள்எதுகை,மோனையின்றி இருப்பதையும் காணலாம்.இக்குறட்பாவில் "வாயினால் சுட்ட வடு" என்றுஇருந்தால் எதுகை, மோனை நயத்தோடு இருக்கும்.

பரிமேழலகர், அதிகாரத் தலைப்பு, குறள் வைப்பு முறை,குறட்பாக்கள்ஆகியவற்றில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். நாம் படிக்கும் திருக்குறள்அப்படியேதிருவள்ளுவர் எழுதியது போல இல்லை.பலரும் பல மாற்றங்களைச் செய்துள்ளனர்.அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பது என் கருத்து.

M.Jagadeesan
05-12-2010, 12:09 PM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்பிலார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்புடைமை என்ற அதிகாரத்தில் வந்துள்ள குறள் இது. இக்குறளில்
"என்பு" என்ற அஃறிணைச் சொல் உயர்திணைக்குரிய "அர்" விகுதி ஏற்குமா?"என்பும் உரிய பிறர்க்கு" என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு "திருக்குறளில் ஓர் ஐயம்" என்ற என் கட்டுரையில் கேட்டிருந்தேன்.மன்ற உறுப்பினர்களில் சிலர் குறளில் தவறு இல்லை என்று தங்கள் கருத்தைத் தெரிவித்து இருந்தனர்.

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் " நச்சர்" என்பாரும் ஒருவர்.
அவர் " என்பும் உரிய பிறர்க்கு" என்றே பாடம் கொண்டு உரை எழுதியுள்ளார்.

பாலகன்
05-12-2010, 01:41 PM
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் " நச்சர்" என்பாரும் ஒருவர்.
அவர் " என்பும் உரிய பிறர்க்கு" என்றே பாடம் கொண்டு உரை எழுதியுள்ளார்.

என்பும் உரியர் பிறர்க்கு

எலும்பு வாழும் மனிதனின் ஒரு அங்கம் எனவே அது எப்படி அஃறினை ஆகும். நச்சரின் விளக்கவுரையை இங்கு பதிந்தால் இன்னும் விவாதிக்க வசதியாக இருக்கும் நண்பா!