PDA

View Full Version : சாகவும் உன் மடியல்லவா...



inban
27-11-2010, 11:07 PM
இப்போதும் ஒன்றும்
கெட்டுப்போய் விடவில்லை
உன் ஒருதுளி
வியர்வைகொடு போதும்
என் ரத்தத்தைஎல்லாம் மையாக்கி
ஓராயிரம் கவிதை தருகிறேன்.

உதைபட்ட
கடை வாயிலிருந்து
இரத்தம் ஒழுகியபடியே
மீண்டும் மீண்டும்
தாயிடமே தயவுநாடி வருகிறது கன்று

பூக்களை
ஒளிக்கத் தெரிந்திருந்த இந்தப்பாவிக்கு
அதன் வாசத்தை
மறைக்கத் தெரியாதுபோனது
வேதனைதான்.

எதிர்பார்ப்பிலும்
ஏமாற்றத்திலும்
இழுபறியில் கிடந்த ஒருகவிஞன்
நேற்றைய அந்திதொடங்கி
சாகத் துணிந்துவிட்டான்

அணுக்கள் எங்கிலும்
நீ அலர்த்திய அணிச்சங்கள்
அக்னியாகி அராஜகம் புரிகின்றன

தைலக்காடு தீபிடித்தபோது
நாசி சொல்லிற்று
ஆகா என்ன மணம்?!
அடியே!
எரிவதற்குஅல்லவா தெரியும்
அதன் ரணம்?

நீ எடுத்து வைத்திடும்
ஒவ்வொரு அடியிலும்
ஓங்கி மிதிபடுகிறது
உள்ளம்

குளிர் முகம் வைத்த கொள்ளியில்
குமைந்து எரிகிறது
கோலம்

உனது வதனப்புயல்
என் கரைகடந்திடும் போதெலாம்
பேசாமல் செத்துப் போய்விடலாமா
எனக்கூட எண்ணம் எழுகிறது.
அடியே!
சாகவும்
உன் மடியல்லவா வேண்டி இருக்கிறது !?

ஆன்டனி ஜானி
28-11-2010, 03:32 AM
ஏன் நன்பரே காதல் உங்களை ஏமாற்றி விட்டதா
இந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறீர்களே !!!!

ஒரு துளி வியர்வை தந்தால் , உங்களுடய இரத்தத்தை எல்லாம் மையாக்கி ஓராயிரம் கவிதைகள் எப்படி தலைவரே எழுத முடியும்

காதல் கவிதை வரிகள் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ,ஆனால்
சிறு ,சிறு பிட்டுகளை நினைத்துதான் காதலில் இப்படி எல்லாம் காதலிக்கிறார்களா
என்று சிந்திக்க வைக்கிறது ..

ரெம்ப அருமையான காதல் கவிதை

வாழ்த்துக்கள் ......

M.Jagadeesan
28-11-2010, 07:30 AM
"அலர்த்திய"," அணிச்சங்கள்" ஆகிய சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை.

inban
28-11-2010, 11:54 AM
"அலர்த்திய"," அணிச்சங்கள்" ஆகிய சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை.

அலர்த்திய என்றால் மலர்த்திய என்று பொருள்படும்.
அணிச்சங்கள் என்பது எழுத்துப்பிழை 'அனிச்சமே ' சரியானது. அனிச்சமென்றால் முகரும் போதே வாடிவிடும் மெல்லிய மலராகும்.

inban
28-11-2010, 12:06 PM
ஏன் நன்பரே காதல் உங்களை ஏமாற்றி விட்டதா
இந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறீர்களே !!!!

ஒரு துளி வியர்வை தந்தால் , உங்களுடய இரத்தத்தை எல்லாம் மையாக்கி ஓராயிரம் கவிதைகள் எப்படி தலைவரே எழுத முடியும்

காதல் கவிதை வரிகள் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ,ஆனால்
சிறு ,சிறு பிட்டுகளை நினைத்துதான் காதலில் இப்படி எல்லாம் காதலிக்கிறார்களா
என்று சிந்திக்க வைக்கிறது ..

ரெம்ப அருமையான காதல் கவிதை

வாழ்த்துக்கள் ......

காதலென்றாலே உணர்வுகளின் திரட்சிதானே நண்பரே...

'காதல் போயின் சாதலென' பாரதி சும்மாவா சொன்னான்

நன்றி நண்பரே

பிரேம்
28-11-2010, 11:31 PM
ஒரு ஆணின் உள்ள குமுறல்கள்
பெண்ணுக்கு தெரிவது அரிதே...
கவிதை அருமை..விரைவில் காதல் கைகூடும்..வாழ்த்துக்கள்..

கீதம்
05-12-2010, 12:25 AM
அதி தீவிர காதல் எட்டியது உச்சம்!
அலைமோதும் கவிதைகள் அதன் எச்சம்!
பாராட்டுகள் இன்பன் அவர்களே.