PDA

View Full Version : தாய்மை



inban
27-11-2010, 02:03 PM
குதிகாலில் குத்திய
முள்ளின் வாய்ப்பாட்டில் இருந்து
எடிப்பார்க்கும்
ரத்தத் துளிகளுக்கு முன்னரே
இறங்கிவிடும்
அம்மாவின் கண்ணீர்த்துளி

அடித்த கையோடு
நான் அழுவது பார்த்ததும்
உடைந்துபோன சோளத்தட்டுபோல
முறிந்துபோகும்
அம்மாவின் மனமும்

ஆசைப்பட்டு அடம்பிடிக்கையிலே
வாங்கித்தர
வழியற்று நின்றிடும்
அம்மாவின் அவலநிலை அறிந்த
அன்றைக்குத்தான்
எனக்கு தெரிந்து
என்விழி கசிந்தது

உயர்திணை
அக்ரினை
எனும் அளவீடுகள் எல்லாம்
அடிபடுப்போய்விடுகின்றன
தாய்மையின் முன்னால்

குட்டியை இறுகப் பற்றியபடி
நடந்து போகிடும்
குரங்குகளிடம் கூட மிளிர்கிறது
தாய்மையின் பூரிப்பு

வேடன் வீழ்த்திய பறவையின்
வருகைக்கு காத்திருக்கும்
குஞ்சுகளை யோசிக்கையில்
விளங்குகிறது தாய்மையின் முழுமை

தாய்மை என்பது
உறவுகளின் உன்னதம்
உயிர்களின் ஆதாரம்

தன்னுயிர்போல்
எனைக்காத்த
என்தாயைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நான்கு ஆண்டுகள்
நகரவாசம் முடித்த கையோடு....

ஊனான் கொடிகள் மண்டிய
புதைகுழி மேட்டில்.
--------- inban@pavel.dpi