PDA

View Full Version : சமுதாய சீர்திருத்த கவிதைகள்



muthuvel
27-11-2010, 01:23 PM
பச்சைக்கொடி காட்டவில்லை மரங்கள் ,
வெட்டி சாய்க்கப்பட்ட பூமியில்,
பொய்த்துப்போனது மழை !


மறித்து போனது மனிதநேயம் ,
தொப்புள் கொடி அறுக்கப்பட்ட பிள்ளையிடம்,
பெருகிபோனது முதியோர் இல்லம்!...

மனிததலைகளுக்கு இடையே மண்துகள்கள்,
விழிப்புணர்வு இன்றி ,
மக்கள்தொகை பெருக்கம்!

ஆன்டனி ஜானி
05-12-2010, 05:31 PM
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் !
நாட்டு வளம் பெருக்குவோம் !!

அருமையான பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள் ......

பாலகன்
05-12-2010, 05:45 PM
விழிப்புணர்வு ஏற்படுத்த வேன்டியவர்கள் பணிசெய்யாததே காரணம்.

குழந்தையை வளர்க்க திராணியுள்ளவனே அதை பெற்றுக்கொள்ள தகுதியுடையவனாகிறான். மற்றவனெல்லாம் மண்துகள் தான்.

நல்ல கவிதை நன்றி