PDA

View Full Version : கற்றல்

M.Jagadeesan
27-11-2010, 12:22 AM
இவ்வுலகில்
எல்லாம் தெரிந்தவன் என்று
எவரும் இல்லை
எதுவும் தெரியாதவன் என்று
யாரும் இல்லை.

ஏராளமான நூல்களைப்
படித்த பின்பே
எனக்கு தெரிய வேண்டியது
ஏராளமாக உள்ளது
என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இதைத்தான்
"அறிதோறும் அறியாமை"என்று
அழகாகச் சொன்னார்
அய்யன் திருவள்ளுவர்.

பள்ளி சென்று கற்றதை விட
பள்ளி செல்லாமல் கற்றதே
மிக அதிகம்.

சில சமயங்களில்
ஆறுவயது குழந்தை கூட
ஆசிரியனாய் இருந்து
எனக்கு கற்பித்தது உண்டு.
நூறுவயது கிழவன் கூட
மாணவனாய் இருந்து
என்னிடம் கற்றது உண்டு.

கற்றவர்களிடம் நான் கற்றதைவிட
கல்லாதவர்களிடம் நான் கற்றதே
மிக அதிகம்.
அதில் ஒன்று
கற்றவர்களை விட
கல்லாதவர்கள்
நல்லவர்கள் என்பது.
இதனால்தான்
"கற்றாரை யான் வேண்டேன்" என்று
மணிவாசகர் சொன்னார் போலும்.

நான்
இயற்கையிடம் கற்றதைப் போல
யாரிடமும் கற்றதில்லை.
இந்த உலகமே ஒரு பள்ளி
மக்கள் எல்லோரும் அதன்
மாணவர்கள்
இயற்கையே அதன் ஆசான்.

பிரேம்
27-11-2010, 12:55 AM
ஆம் நாம் நிறையவே கற்க வேண்டி உள்ளோம்...
கவிதை நன்று..

M.Jagadeesan
27-11-2010, 02:06 AM
ஆம் நாம் நிறையவே கற்க வேண்டி உள்ளோம்...
கவிதை நன்று..

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
27-11-2010, 05:00 AM
ஆம். கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது மூத்தோர் உரை.

கற்றவரில், நாம் அவர்களிடமிருந்து கற்கும்படியான நிலைமை இல்லாதாரும், கல்லாதாரில், நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டிய நிலையிலுள்ளாரும் உள்ளனர் என்பது உண்மையே!

M.Jagadeesan
27-11-2010, 06:40 AM

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குணமதி அவர்களே!

அமரன்
27-11-2010, 08:54 AM
என் மனங்கவர்ந்த பலரும் சொன்ன கருத்துகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி..

கற்றது கையளவு.. கல்லாததது உலகளவு..

இதில்தான் எவ்வளவு உண்மை..!!!

நம் இருதயம் பொத்திப் பிடித்த கையளவாம்..

ஆம்.. உயிருள்ள வரை கற்றுக் கொண்டே இருக்கிறோம்..

உயிர் விட்ட பிறகு கற்றுக் கொடுப்பது தொடரும்..

வாழ்ந்தால் இப்படி வாழ வேணும்.

ஜெகதீசன்..

கவிதையை புதுக்கவிதைகள் பகுதிகு மாற்றுகிறேன்..

M.Jagadeesan
27-11-2010, 08:58 AM

நன்றி அமரன் அவர்களே!