PDA

View Full Version : என் அன்புHega
25-11-2010, 06:42 PM
என் அன்புநீ என்னை வெறுத்தால்
நான் உன்னை நேசிப்பேன்.
என் இருதயம் அன்பாலானது

நீ என்னை அவமதித்தால்
நான் உன்னை கௌரவிப்பேன்.
உன்னை போல் நான் முட்டாளல்ல

நீ என் துன்பத்தில் சிரித்தால்
நான் உன் துன்பத்தில் அழுவேன்.
நீயும் நானும் ஒருவரல்ல

நீ என்னை காயப்படுத்தினால்
நான் உன் வலி போக்குவேன்.
உன்னைப்போல நான் மாறமாட்டேன்

நீ என்னை அவமானப்படுத்தினால்
நான் உன் தோல்விநேரம் கலங்கிடுவேன்.
என் மனம் கல்லானதில்லை .

என் குறைகளை நீ இகழும் நாளில்
உன்னை நான் தினம் புகழ்ந்திடுவேன்
உன் வழிகள் என் வழிகளல்ல

என் வெறறியை நீ மறுதலித்தால்
உன் சோர்விலே நான் துணை வருவேன்.
எனக்குள்ளே இருப்பதேல்லாம் உன் நினைவே

என்னிடம் நீ சண்டையிட்டால்
உன்னோடு நான் சமாதானமாவேன்.
என் அன்பு தூய்மையானதே

தாழ்மையோடும் பொறுமையோடும்
உன் கடினப்பட்ட மனதை
என் அன்பால் ஜெயித்திடுவேன்.

அமரன்
25-11-2010, 07:58 PM
நீ பேசாவிட்டாலும் நான் பேசுவேன் என்றே இந்தவகைக் கவிதைகள் பெரும்பாலும் பேசும். இவை பழகியவர்களுக்கு சொல்லும் அன்பு வாக்கியங்கள்.


சற்றே வித்தியாசமாக நீ பேசாவிட்டால் நான் பேசுவேன் என்று பேசுகிறது இந்தக் கவிதை.. இது முன்னப் பின்னத் தெரியாத எவருக்கும் சொல்லும் அன்பு வாக்கியங்கள்.

என்ன மனநிலையில் நாம் போனாலும் எதிரே வருபவரின் புன்னகை உதாசீனப் படுத்த முடியாது. புன்னகைக்கு அப்படி ஒரு மந்திர சக்தி.

அது போல மனங்களை வெல்லும் மந்திரம் அன்பு..
அதை அழகாக உச்சரிக்கத் தெரிந்தவர் இந்தக் கவிஞர்.

ஜனகன்
25-11-2010, 08:02 PM
நிஷா,

அனைத்தும் தேன் துளிகள். இனிமையாக இருக்கிறது,


மிக எளிமையான கவிதை.எனது பாராட்டுக்கள்

Hega
26-11-2010, 09:48 AM
நன்றி அமரன் சார்.

மனங்களை வெல்லும் மந்திரம் அன்பு பல நேரங்களில் தோற்று விடுவதேனோ..

ஆன்டனி ஜானி
26-11-2010, 11:33 AM
இந்த கவிதைகள் ரெம்ப அழகான வரிகளுடன்
தெய்வீக அன்புடன் நல்ல சிந்தனைகளுடன்
மற்றவர்களுக்கு அன்பு செய்யனும் ஆனால் எப்படி
செய்யனும் என்பதை கவிதைகளால் புரிய வைத்து
அன்பு செய்ய கற்று தந்த நிஷாவுக்கு நன்றி .......

சூறாவளி
26-11-2010, 02:19 PM
நிஷா....

இரண்டெழுத்தில் பெயர் வைத்து
இராயிரம் வரிகளின் வல்லமையை
மும்மூன்று வரிகளில் வடித்து விட்டிர்..

பாராட்டுக்கள்... :icon_b::icon_b:

--------------

இப்படியும் யோசித்தால் எப்படி இருக்கும்... யோசிப்போமா...:icon_ush:

ஒன்றை மட்டும் நாம் அன்பு செய்யும் அன்பருக்கு கட்டாயம் கற்ப்பிக்க வேண்டும்... எந்தளவு நாம் அன்பு செய்கிறோம் என்பதை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்..

உங்கள் இந்த வரிகளில் பல அர்த்தங்கள் பலவித மனநிலைகளில் வெளிப்பட்டுள்ளது.. அன்கண்டிஷனல் லவ் என்று சொல்வார்கள், அதாவது, எது செய்தாலும் செய்யாவிட்டலும் நான் அன்பு செய்து கொண்டே இருப்பேன் என்ற மனநிலை... அதைதான் மேலோட்டமாய் உங்கள் கவி வரிகளை படிக்கும் போது காண்கிறேன்.. இந்த ஒரு மனநிலைக்கு என் சபாஷ்..:icon_b::icon_b: உங்களுக்கு..

ஆனால்...


நீ என்னை அவமதித்தால்
நான் உன்னை கௌரவிப்பேன்.
உன்னை போல் நான் முட்டாளல்ல


இதில் அவரை முட்டாள் என சித்தரித்தது அவ்வளவாக உகந்தது அல்ல.. ஒருவேளை அன்பு செய்தவரே இந்த வரிகளை காண நேரிட்டால் அது இன்னும் கூடுதல் அகலம் மட்டுமே விதைக்கும்..


நீ என்னை காயப்படுத்தினால்
நான் உன் வலி போக்குவேன்.
உன்னைப்போல நான் மாறமாட்டேன்


இதிலும் கடைசி வரிகளை தாங்கி வரும் கருத்து அவரை அவரின் மனமாற்றத்தை குறைகூறுவது போல் இருக்கிறது..

ஆனால் மற்ற வரிகளின் கருத்து பார்த்தால் .... அனைத்தும் அற்புதம்..


என் இருதயம் அன்பாலானது


என் மனம் கல்லானதில்லை

உன் வழிகள் என் வழிகளல்ல


எனக்குள்ளே இருப்பதேல்லாம் உன் நினைவே


என் அன்பு தூய்மையானதே


என் அன்பால் ஜெயித்திடுவேன்

இந்த வரிகளில் அவரின் இயலாமையை சுட்டிகாட்டுவதைவிட, உங்களின் நன்மதிப்பை சொல்லியிருக்கிறிர்கள்... இதுதான் இக்கவியின் இமாலய வெற்றியின் ரகசியம்..:icon_b:

ஒருவரை அன்புக்கு அடிமைபடுத்த வேண்டுமென்றால் நீ, உன் என சுட்டிகாட்டுவதைவிட.. நான், என் என சுட்டிகாட்டினால் அதன் பலன் நம்மை மட்டுமே வந்து சேரும்.. ஆனால் அவரை சுட்டி காட்டி அர்த்தம் மாறிவிட்டால் அதன் பலன் இன்னும் கூடுதல் வெறுப்பை அதிகரிக்கும்..

எப்படியோ... ரொம்ப குழப்பி விட்டுட்டேன்னு நினைக்கிறேன்..:icon_rollout: சூறாவளி சும்மா வந்துட்டு போவாதுல்ல.. :D

Hega
26-11-2010, 04:04 PM
மிக்க நன்றி ஜனகன் அவர்களே.

Hega
26-11-2010, 04:05 PM
ஆனடனி அவர்களின் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்காக என் நன்றிகள்.

நாகரா
27-11-2010, 02:50 AM
நான் கடவுள்
நீ மனிதம்
வாழ்க கடவுளின் பேரன்பு
அதை அழகாய்க் கவிதையில் அமுதத் தமிழ் வரிகளில் நனி மிக எளிதாய்ப் புரியும் படி வெளிப்படுத்திய நிஷா நீவிர் நீடூழி வாழ்க

Hega
27-11-2010, 07:28 AM
நிஷா....

இரண்டெழுத்தில் பெயர் வைத்து
இராயிரம் வரிகளின் வல்லமையை
மும்மூன்று வரிகளில் வடித்து விட்டிர்..

பாராட்டுக்கள்... :icon_b::icon_b:

--------------

மன்னிக்கவும்.. நிஷா.. இங்கிருந்த எனது கருத்தை நீக்கியுள்ளேன்.. இங்கிருந்த எனது கருத்துக்கள் உங்களை உங்கள் சிந்தனைகளை பாதிப்புள்ளாக்கியிருக்கும் என நினைக்கிறேன்.. இனி பாராட்டுக்கள் மட்டும் சமர்பிக்கிறேன்.. எதிர் கருத்துக்களை தவிர்த்து விடுகிறேன்..:redface:அடடா சூறாவளி அவர்களே..

உங்கள் பின்னூட்டம் எனக்குள் மிக மிக மகிழ்வைத்தந்திருந்தது. மாறுபட்ட கண்ணோட்டத்தில் வரிவரியாக நீங்கள் கொ்டுத்திருந்த விளக்கம் கண்டு அதற்கான என் நன்றியையும் விபரமாக பதிவோம் என்றிருந்தேன்.

நேரம் போதாமையினால் தான் உங்கள் அழகான உற்சாகமான பெரிய பின்னூட்டத்துக்கு உடனடி நன்றி நவிலல் கொடுக்க முடியவில்லை.

என்னை ரெம்பவே ஊற்சாகபடுத்தி வித்தியாசமான முறையில் சிந்திக்க வைத்தது உங்கள் பின்னூட்டம் ஐயா.

முடிந்தால் அதே கருத்துக்களை மீண்டும் இங்கே இடுங்கள்.

நன்றி.

Hega
27-11-2010, 07:30 AM
நான் கடவுள்
நீ மனிதம்
வாழ்க கடவுளின் பேரன்பு
அதை அழகாய்க் கவிதையில் அமுதத் தமிழ் வரிகளில் நனி மிக எளிதாய்ப் புரியும் படி வெளிப்படுத்திய நிஷா நீவிர் நீடூழி வாழ்க

நன்றி ஐயா.

govindh
27-11-2010, 09:43 AM
'என் அன்பால் ஜெயித்திடுவேன்.'

அன்பு பலம் வாய்ந்தது....
அழகு வார்த்தைகளால்
அன்பின் சக்தியை
வெளிப்படுத்திய கவி அருமை...

வாழ்த்துக்கள் நிஷா.

சூறாவளி
27-11-2010, 01:38 PM
முடிந்தால் அதே கருத்துக்களை மீண்டும் இங்கே இடுங்கள்.

நன்றி.

வேறு ஒரு தளத்தில் எனக்குள் நடந்த சந்தர்ப்ப சூழலை மனதில் வைத்து இங்கும் அப்படி இருக்குமோ என நினைத்து விட்டேன்.. :icon_rollout::traurig001: ம்ம்ம்... அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. :D உங்கள் பதிவை கண்டதும் நம் மன்ற நண்பர்கள் மேலானவர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்..

மீண்டும் இணைத்து விட்டேன்... :icon_b:

ஆன்டனி ஜானி
27-11-2010, 01:56 PM
உனக்கு பிடித்தவர்களிடம்
பிடித்தவற்றை உனக்கு
பிடித்ததாக மாற்றூவதை விட
அவற்றை ரசிக்க தெரிந்தவனாக இரு !!!

நீ அன்பு செய்யும் அவர்ளின்
துன்பத்திலும் ,இன்பத்திலும்
நீ அவர்களை அன்பு செய்தால்
உன்னுடய அன்பும் அரவணைப்பும்
அவர்களுக்கு துணை போகும்

உன் உயிர் பிரிந்தாலும் >>>>>>>>>>>>>>>