PDA

View Full Version : திருநங்கை



கேசுவர்
25-11-2010, 04:15 PM
அவனுள் அவள் என்ற மாற்றம்
அவனை வெறுக்க அவள் கட்டிக்கொண்ட தோற்றம்
புரியாமல் புரிந்துக்கொள்ள வேண்டாத சுற்றம்
சிறைக்குள் சிறைப்பட்ட சீற்றம்

எங்கு செல்வாள் என்னவள்,
அவனை கடக்கவும் அவர்களை கடக்கவும்...
எத்தகைய வலி.
எட்டிஉதைக்க வேண்டாம்
வழிவிட்டு நிற்போம்
அவள் வலி விட்டு போகட்டும்.

அமரன்
25-11-2010, 05:38 PM
திருநங்கை..

எவ்வளவு உயர்வான குறியீடு!

33 சதவீதம் கேட்பவர்ளிலும் கொடுப்பவர்களிலும் சிலர் கூட இவர்களை ஒதுக்குவது வேதனை!

வானவர்கோன்
25-11-2010, 06:15 PM
அவனுள் அவள்
அவனை வெறுக்க அணிந்த வேடம்
அறியாமல் உழலும் சுற்றம்
உடலெனும் சிறைக்குள் திருநங்கை!

கவிதை அருமை கேசுவர்!

கேசுவர்
30-11-2010, 09:42 AM
நன்றி அமரன், வானவர்கோன்
இவர் படும் வேதனையை சொல்லிமாளாது, அத்துனை இன்னல்கள்.