PDA

View Full Version : உறைந்த நிமிடங்கள்..



PremM
25-11-2010, 03:36 PM
வெள்ளிக்கிழமை இரவு..அலுவுலகத்தில் எல்லாவரும் தன் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

"என்ன குமார் வீட்டுக்கு போகலயா?" என முதுகில் தட்டி விட்டு குமாரின் தவம் கலைத்தார் குமாரின் மேனேஜர்.

"ம்ம்.. போகனும் சார்.."என தன் பார்வையை தன் மடிக்க்ணிணியின் மீது கிடத்தினான்..

தன் செல்பேசியை பொத்தான்களை அழுத்தியபடி விசாரித்தார் மேனேஜர்.."உங்க மனைவி பிரசவத்துகாக அவங்க அம்மா வீட்டுகு போயிருக்கறத சொன்னீங்கல??இப்ப எப்படி இருக்காங்க??"

"நல்லா இருக்காங்க சார்"..என நிறுத்தினான் குமார்..


"உடம்புக்கு எதாவது முடியலயா?வேணும்னா 2 நாள் லீவு எடுத்துகோயேன்.." என மேனேஜர் பொயாய் ஒரு பரிசை தந்தார்..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்..ஐயம் ஆல் ரைட்" என தன் மடிக்கணிணி ஐ மடித்து வைத்து தன் இல்லம் நோக்கி பயணித்தான்..

ஏதோ ஒரு சிந்தனையிலும்,கனவிலும் இருந்து விழித்த போது அவன் இல்லம் வந்து சேர்ந்தாயிற்று..

வீட்டினுள் நுழைந்து,கதவை உள் பக்கமாய் தாழிடுவதற்க்குமுன் இருள் நிறைந்த வீதியில்,ஆள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிட்டான்..யாரும் இல்லை என உறுதி செய்த பின் உள்ளே நுழைந்தான்..காற்றில் அடித்துக் கொண்டிருந்த ஜன்னல்களை ஒவ்வொன்றாய் மூட தொடங்கினான்..

உடைகளை மாற்றி விட்டு ,தான் வாங்கி வந்த உணவு பொட்டலத்தை வெறிக்கப் பார்த்து ,பின் அதனை தரையில் போட்டபடி தொலைக்காட்சியில் கவனத்தை தொலைக்க முனைந்தான்..

தொலைக்காட்சியில் அவன் பார்வை இருந்த போதும் அவனுள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது..

"ச்சா நாம ஏன் இப்படி பண்ணோம்..?பொறுமையா இருந்திருக்கலாம்..இத வெளியில யார்கிட்ட சொல்றது?? ஒரு 5 நிமிஷம் என்ன இப்படி மாத்திடுச்சு..அவ பிரசவத்துக்கு போகாம இருந்திருந்தா, இங்கயே இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்காது"..

மணி 9 ஐ நெறுங்கிக் கொண்டிருந்தது..அவன் பார்வை அவனது செல்பேசியை வெறித்தபடி இருந்தது..

அவன் எதிர்பார்த்தபடி அந்த அழைப்பும் வந்தது..

"ட்ரிங்,ட்ரிங்....ட்ரிங்,ட்ரிங்.."அவன் கைகள் அந்த அழைப்பை நெறுங்கிக் கொண்டிருக்கையில்..

சில நாட்களுக்கு முன்னால்..9 மணிக்கு ஒரு அழைபேசி அழைப்பு..

எதிர் முனையில்:என்ன பண்ண்றீங்க?
குமார்:ஒபாமா ஓட டிஸ்கசன்..
எதிர் முனையில்:என்னது?
குமார்:மன்னிக்கவும்,ஒபாமாவுடன் கலந்தாய்வு நடத்துகிறேன்..
எதிர்முனையில்:என்ன ஆச்சு உங்களுக்கு??
குமார்:மிதந்துக் கொண்டிருக்கிறேன்..
எதிர்முனையில்:குமார்,குடிச்சிருக்கீங்களா?
குமார்:யாரப்பாத்து என்ன கேள்வி கேட்கிறாய்?கல்லூரிக் காலத்தில் வேகமாக பீர் அருந்தும் போட்டியில் எல்லா ஆண்டும் நானே முதல் பரிசு..என்னிடம் போயா இப்படி ஒரு கேள்வி?
எதிர் முனையில்:ஐ ஏட் யூ குமார்(நான் உங்களை மிகவும் வெறுக்கிறேன்..)
குமார்:தங்கள் அன்புக்கு நன்றி..

சட்டென அழைப்பு துண்டிக்கப்பட்டது..

மதுவில் மிதந்துக் கொண்டிருந்த குமாருக்கு அப்போது தான் சுய நினைவு எட்டிப் பார்த்தது..

அருகே அரை மயக்கத்தில் இருந்த அவனது நண்பன் "யாரு டா போன் ல?இவ்வுளவு நேரம் பேசிக்கிட்டுருந்த?"

தயக்கத்துடன் குமார்
"த் த் தெரியல டா..என்னோட மனைவியொட குரல் மாதிரி இருந்தது.. $%$%$%"

நண்பன்:"%$%#@@#


மீண்டும் இன்று
"ட்ரிங்,ட்ரிங்....ட்ரிங்,ட்ரிங்.."

எதிர் முனையில்:என்ன பண்ண்றீங்க?
குமார்:சாப்பிட்டு படுத்தாச்சும்மா
எதிர் முனையில்:ம்ம்.. தண்ணி கிண்ணி அடிச்சீங்களா?
குமார்:இல்லமா
எதிர்முனையில்:உங்கள இப்படியே விட்டா சரியா வராது..நான் பிள்ளய பெத்து 5 மாசமாது இங்க இருந்துட்டு வரலாம்னு இருந்தேன்..ஆன இப்ப அதுக்கு முன்னாடியே வந்துடுவேன்..
குமார்:சரிமா
எதிர் முனையில்:சரி படுத்து நல்லா தூங்குங்க..

குமாரின் ஒரு கை அழைப்பை துண்டித்துக் கொண்டிருக்க,
மறு கை மதுவை நிரப்பிக் கொண்டிருந்தது..

இன்று பிழைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் மிதக்கத் தொடங்கினான் குமார்.. :)

PremM
25-11-2010, 03:47 PM
இது என் முதல் சிறுகதை..பிழையிருந்தால் மன்னிக்கவும்.. :)

அமரன்
25-11-2010, 05:42 PM
முதலில் முதல் கதைக்கு வாழ்த்துகள்.

வாராந்திரிக் கதைகளுக்குக் கொஞ்சமும் சளைக்காத கதையாக்கம்.

உங்களிடம் திறமை உள்ளது.

தொடர்ந்து படையுங்கள்.

பாராட்டுகள்.

வானவர்கோன்
25-11-2010, 06:34 PM
கரு புரிகின்றது, செம்மைப் படுத்தினால் சிறுகதை இன்னும் சுவைக்கும்

ஜனகன்
25-11-2010, 07:17 PM
பிரேம்,முதல் கதையே அமர்க்களம் தான் போங்க!

ஒரு சராசரி கணவனையும், கணவனில் அக்கறையுள்ள மனைவியின் மனனிலையையும் அழகாக யதார்த்த நடயில் சொல்லிவிட்டீர்கள்... பாராட்டுக்கள்... தொடர்ந்து எழுதுங்க...

PremM
01-01-2011, 01:18 AM
@அமரன்..நன்றி அமரன்..கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்..
@வானவர்க்கோன்..கண்டிப்பாக அடுத்த கதையில் கவனம் கொள்கிறேன்..
@ஜனகன்,,நன்றி ஜனகன்..தங்கள் பின்னூட்டங்கள் என்னை எழுத வைக்கும்..

dellas
06-01-2011, 02:53 PM
ஐயா, முதல் கதைக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். ஆனால் முதல் கதையிலே மனைவியை எப்படி ஏமாற்றுவது என்ற போதனையா?.. சரிதான் போங்கள்.

PremM
07-01-2011, 06:08 AM
தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி..
:) :) ஒரு கணமான கதையை சொல்லி என் கணக்கை தொடங்க வேண்டாமென நினைத்தே இதை எழுதினேன்..மர்மமாக கதையை தொடங்கி நகைச்சுவையாக முடிக்க நினைத்ததன் விளைவே இக்கதை..ஒரு முயற்சி...அவ்வுளவு தான்...