PDA

View Full Version : உன் மறதிகளுக்கு என் வாழ்த்துக்கள்



அகத்தியன்
25-11-2010, 06:06 AM
எழுத எண்ணும் எதுவும் தாள்களில் ஒட்டாமல் தூர நிற்கின்றன.
உன் நினைவுகள் போல,

நலமாய் இருக்கும் உன்னிடம் மீண்டும் கேட்க எதுவும் இல்லை
இருந்தும் கேட்கின்றேன் – என் தொல்லைகள் இன்றி சுகமாய் இருக்கின்றாயா?
சுவர்க்கோழிகள் கூவும் இரவொன்றில், உன் நினவுகள் என்னைத் தட்டி எழுப்பிற்று.
பெரும் பிரயத்தனங்களுடன் உன் பிம்பம் தேடி கண்களினை இறுக மூடியும்,
எம் காதலின் இறுதி ஊர்வலம் மட்டுமே மீண்டெழுகின்றது.

சொல்ல வேறொன்றுமில்லை,
உன் மறதிகளினை வாழ்த்துவதை தவிர!

அக்னி
25-11-2010, 10:49 AM
ஒருபுறம் மறதி வந்ததால் இல்லாதுபோன நினைவு...
மறுபுறம் மறதி வராததால் நிலைத்துப்போன நினைவு...

மறதியாக மாறுவது சாத்தியம் என்றால்,
நான் மாறிடுவேன்...
வந்தாலும் நான் உன்னோடு...
வராவிட்டாலும் நான் உன்னோடு...

என்று கவிதை ஆதங்கப்படுகின்றதோ...

பாராட்டு...

அமரன்
25-11-2010, 05:58 PM
மறக்கும் வரம் வாய்க்கப் பெற்ற
ஒரு மனம்.
மறதிகள் மறுக்கப்பட்டுச் சபிக்கப்பட்ட
இன்னொரு மனம்...

ஒரு மனத்தின் மகிழ்ச்சியில் மலர்ந்து
மறு மனம் வாழ்த்துகிறது மறதியை..
இதைவிடச் சிறப்பாக
எப்படிச் சொல்லலாம் காதலை..

இருந்தாலும்
மறதி என்பது நினைவுகளின் மரணம் அல்ல..
உறக்கம்..
எப்போதாவது, எங்கேயாவது, ஏதாவது உசுப்பி எழுந்து விடக் கூடும்..

சுவர்க்கோழிகள் சுவைத்தேன்..

Hega
25-11-2010, 06:30 PM
நலமாய் இருக்கும் உன்னிடம் மீண்டும் கேட்க எதுவும் இல்லை
இருந்தும் கேட்கின்றேன் – என் தொல்லைகள் இன்றி சுகமாய் இருக்கின்றாயா?
சொல்ல வேறொன்றுமில்லை,
உன் மறதிகளினை வாழ்த்துவதை தவிர!



நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை என்று சொல்லி காலமெல்லாம் மன வருந்துபவனை விட மறதியில் எல்லாம் மறந்து மறைந்தே வாழ முடிந்தால் அவன் அதிஷ்டசாலியே.

அப்படிப்பட்ட பாக்கியசாலிக்கு என் வாழ்த்துக்களும் சேரட்டும்.

வானவர்கோன்
25-11-2010, 06:33 PM
சுவர்க்கோழிகள் கூவும் இரவொன்றில், உன் நினவுகள் என்னைத் தட்டி எழுப்பிற்று.
பெரும் பிரயத்தனங்களுடன் உன் பிம்பம் தேடி கண்களினை இறுக மூடியும்,
எம் காதலின் இறுதி ஊர்வலம் மட்டுமே மீண்டெழுகின்றது. . அருமையான வரிகள், பாராட்டுக்கள்

Hega
25-11-2010, 06:37 PM
இருந்தாலும்
மறதி என்பது நினைவுகளின் மரணம் அல்ல..
உறக்கம்..
எப்போதாவது, எங்கேயாவது, ஏதாவது உசுப்பி எழுந்து விடக் கூடும்..
..

அருமை அமரன் சார்.

பல நேரம் மறக்க வேண்டும் என நினைப்பதனாலேயே உறக்கத்தில் கூட நாம் மறக்க வேண்டியதை மறக்காமல் நினைத்திருக்க வேண்டியவர்களாகின்றோம்.

நினைவுகளை மறக்க முடிந்தால் அன்று நம் மனமும் மரத்து போனதாகவே இருக்கும்.