PDA

View Full Version : முரண் - கலாச்சாரம்கேசுவர்
24-11-2010, 04:50 PM
கலாச்சாரங்கிறது என்னானு சில நேரம் புரியரமாதிரி இருக்கு
ஆனா புரியமாடேங்குது, நமது முன்னோர்கள் வழியை, கண்ணமூடிக்கிட்டு செல்லுதலா ? இல்லை அதனை பகுதறிந்து செல்லுதலா ?
இந்த குழப்பதில் உருவானவை தான் இங்கே உள்ள வரிகள்

------------------------------------------------------
இது தகுமா ?
------------------------------------------------------
இரு மனைவிகளுடன் தமிழ் கடவுள்
உதாரண புருஷ சந்தேக இராமன்
திருமணத்திற்கு முன்பே குழந்தையின்ற குந்தி
மாற்றான் மனைவியை கவர்ந்த இராவணன்
துயிலுரித்த துச்சாதனன்
கண்ணகியிருந்தும் மாதவியை மணந்த கோவலன்
இவை மறந்து பேசுகிறோம்
கலாச்சார சீரழிவு மேற்கத்திய தொற்றுநோயென்று.

------------------------------------------------------
இது புரட்சியா?
------------------------------------------------------
யதார்த்த துரியோதனன்
பார்க்க மறுத்த காந்தாரி
பதியை மீட்டிய சாவித்திரி
சொல் தட்டா வாசகி
இவை மறந்து பேசுகிறோம்,
கலாச்சார பொழிவு மேற்கத்திய புரட்சியென்று.
------------------------------------------------------

அமரன்
24-11-2010, 04:53 PM
நம்மிடம் உள்ளவற்றின் “பெறுமதி” நமக்குத் தெரிவதில்லை கேசுவர்.

அதன் வெளிப்பாடே இந்த மாதிரி முரண்களின் தோற்றம்.

தொடரட்டும் உங்கள் கவிச்சாரல்.

பென்ஸ்
24-11-2010, 08:09 PM
]
கலாச்சாரங்கிறது என்னானு சில நேரம் புரியரமாதிரி இருக்கு
ஆனா புரியமாடேங்குது, நமது முன்னோர்கள் வழியை, கண்ணமூடிக்கிட்டு செல்லுதலா ? இல்லை அதனை பகுதறிந்து செல்லுதலா ?
இந்த குழப்பதில் உருவானவை தான் இங்கே உள்ள வரிகள்-

என் பதிலை உங்களுக்கு வீடியோவாக கொடுக்கிறென்...

http://www.youtube.com/watch?v=w-TUL7XIbAE

கேசுவர்
25-11-2010, 12:30 PM
பார்தேன் பென்ஸ் அண்ணா, கொஞ்சம் நஞ்சம் புரிஞ்சதையும் குழப்பி
பின் தெளியடைய வைக்கிறது கமலின் பேச்சு, மாற்றம் ஒன்று தான் மாற்றம் காணாதது என்பதை ஏற்பதில் இருந்து புரிகிறது கலாச்சாரம் என்கிற பதம்.
காலப்போக்கில் சந்தர்பங்கள்,தட்ப்பவெட்ப்ப சுழ்நிலை,கல்வி,பகுத்தறிவு இன்ன பிற இவையாயும் உரமாக கொண்டு பயனப்படுகிற வாழ்க்கையின் வண்ண உடையாக தான் இந்த கலாச்சாரத்தை பார்க்கவேண்டும் போல....

என் புரிதல் சரிதானே அண்ணா

வானவர்கோன்
25-11-2010, 12:35 PM
முரண்களுக்கு மூதாதையர் நாமே!, கவிதை அருமை கேசுவர்.

ஆதவா
30-11-2010, 11:26 AM
கடவுள்கள் என்பதே மனிதனின் மேம்பட்ட நிலைதான்...... கடவுளும் மனிதனும் ஒன்று என்று சொல்லுவதற்கு காரணமெல்லாம் கடவுள் என்பவர் மனிதனாகத்தான் இருக்கிறார் அவருக்க்கும் எல்லாவகையான உணர்வுகளும் இருக்கிறது என்பதனால்தான்.
வால்மீகியும் சரி, வியாசரும் சரி, நடந்தவைகளை கற்பனைகளே என்று போடவுமில்லை, அதேசமயம் இவைதான் உண்மையில் நிகழ்ந்தவை என்று ஆணித்தரமாக அடிக்கவுமில்லை. அவர்கள் கடவுள்களும் மனிதர்களைப் போல வாழ்பவர்கள்... அதாவது மனிதர்களே கடவுள்களாகவும் இருப்பவர்கள் என்று சொல்லுகிறார்கள். (இதெல்லாம் என்னோட நம்பிக்கை)

ஒட்டுமொத்த இந்து சமய கடவுளர் கதைகளில் அற்புத சக்திகளை நீக்கினால் கிடைக்கப்பெறுவது ஒரு சாதாரண குடிமக்களின் வாழ்வுநிலையே!!
என்னதான் கடவுள் இரண்டு பொண்டாட்டி கட்டியிருந்தாலும்
என்னதான் குந்தி, திருமணத்திற்கு முன்னரேயே குழந்தை பெற்றாலும்
இந்தியாவின் திருமணக் கலாச்சாரம் என்பது அடிப்படையாக ஒருவனுக்கு ஒருத்தி எனும் நிலைமை இன்னும் வலுவாகத் தொடருகிறது அல்லவா?

ஆனால் ஒருவிஷயம் பாருங்க...........

அன்றிலிருந்து இன்று வரையிலும் மன்னர்கள் பலரை மணந்தார்கள்
எத்தனை பெண்கள் மன்னர்களாலும் செல்வந்தர்களாலும் விருப்பப்பட்டு குழந்தை பெற்றிருப்பார்கள்!!
மாற்றான் மனைவியைக் கவர்ந்திருப்பார்கள்??
எல்லாம் நடந்தன.....
ஒரு சாதாரண குடிமகனுக்கு அதில் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம். அல்லது துட்டு பிரச்சனையாக இருக்கலாம். இரண்டு மனைவிகள் கட்டிய முன்னோர்களை நாம் பார்க்கிறோமே...
என்றாலும் இவை சதவிகிதத்தில் வெகு குறைவே!!

கலாச்சாரம் என்பது வெறும் ஆண், பெண், திருமணம், உறவு ஆகிய்வற்றிலா இருக்கிறது??
அப்பறம்............
ஐந்து பேரை மணந்து புரட்சியை ஏற்படுத்திய திரெளபதியை விட்டுட்டீங்களே கேசுவர்?

கேசுவர்
01-12-2010, 10:14 AM
//கலாச்சாரம் என்பது வெறும் ஆண், பெண், திருமணம், உறவு ஆகிய்வற்றிலா இருக்கிறது??
அப்பறம்............
//

மிகச்சரியாக சொன்னிங்க , மற்ற பல பார்வைகளயும் சேர்த்துக்கொள்ளவேண்டும், அடுத்தமுறை முயற்சிக்கிறேன்.

பாஞ்சாலி ஏற்கனவே ஐந்து பேரை மணந்து அல்லல் பட்டியிருப்பாள்,
நான் வேறு எதற்கு, என்று (மறந்து)விட்டுவிடேன் :)

M.Jagadeesan
01-12-2010, 03:11 PM
தங்கள் குழப்பத்திற்கு தீர்வு காண தந்தை பெரியாரின் நூல்களைப் படியுங்கள்.

கேசுவர்
02-12-2010, 09:20 AM
நன்றி வானவர்கோன்,

நன்றி ஜகதிஸன் அய்யா, அங்காகே சில படித்திருக்கிறேன்.