PDA

View Full Version : மயக்கத் தருணங்கள்



inban
24-11-2010, 12:24 AM
1.கனவுகளைத் திருடும்
உனது தகாத செயலுக்கென
யாரிடம் முறையிடுவது?
யோசித்துப்பார்த்துவிட்டு
உன்னிடமே
சரண் புகுந்து விட்டேன்.
உழலில் ஊறிடும்
அமைச்சர்களிடமே
மக்களின் வறுமைக்கென
மனு நீட்டுதல் போல....

2.வெக்கையின் விசமத்திலே
ஆடை களைந்து
அயர்ந்திருக்கிறாய்
கள்ள முத்தத்துக்கென
கதவு திறந்த போதுதான்
காமனிடம் களவு போனேன்

3.கரை புரளும்
ஆற்று வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்படுகிறேன்
பற்றிக்கொள்ள துப்பிருந்தும்
தவிர்துப்போன எனது செயல்
உனக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம்
அடியே!
நீ யூகிக்க வாய்ப்பில்லைதான்
எனக்கு முன்னால்
உன் கூந்தல்பூ
அடித்துச் செல்லப்படுவதை.

4.காதல் ஒரு சிறைதான்
சிசுவுக்கு
கருவறை சிறை என்றால்.

5.நானும்
கோவிலுக்குப் போனேன்.
அவசரத்திலே
உன் கூந்தல்பூ மீது
மிதிவண்டி ஏற்றிய
பாவத்துக்கு பரிகாரம் தேடிட.

கேசுவர்
24-11-2010, 01:21 AM
3.கரை புரளும்
ஆற்று வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்படுகிறேன்
பற்றிக்கொள்ள துப்பிருந்தும்
தவிர்துப்போன எனது செயல்
உனக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம்
அடியே!
நீ யூகிக்க வாய்ப்பில்லைதான்
எனக்கு முன்னால்
உன் கூந்தல்பூ
அடித்துச் செல்லப்படுவதை.

5.நானும்
கோவிலுக்குப் போனேன்.
அவசரத்திலே
உன் கூந்தல்பூ மீது
மிதிவண்டி ஏற்றிய
பாவத்துக்கு பரிகாரம் தேடிட.



நல்ல கற்பனை, குறிப்பாக 3வது & 5வது ,
பூ மேல் காதலா அல்லது பூவையின் மீதா ? :)

பாரட்டுக்கள் இன்பன்

அமரன்
24-11-2010, 05:39 AM
தீவிரமாகக் காதலை வெளிப்படுத்தும் கவிதைகள்... அருமை..

பாராட்டுகள் இன்பன்!

inban
24-11-2010, 11:52 AM
நல்ல கற்பனை, குறிப்பாக 3வது & 5வது ,
பூ மேல் காதலா அல்லது பூவையின் மீதா ? :)

பாரட்டுக்கள் இன்பன்
நன்றி நண்பரே இரண்டின் மீதும்தான்:D

M.Jagadeesan
24-11-2010, 03:10 PM
கவிதையில் கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது.
காதல் கவிதையில் காட்டும் கவனத்தை
வேறு கவிதைகளிலும் காட்டலாமே.

பாராட்டுக்கள் இன்பன்.

வானவர்கோன்
25-11-2010, 12:47 PM
கோவிலுக்குப் போனேன்.
அவசரத்திலே
உன் கூந்தல் சிந்திய பூ மீது
மிதிவண்டி ஏற்றிய
பாவத்துக்கு பரிகாரம் தேடிட.

inban
25-11-2010, 03:01 PM
கோவிலுக்குப் போனேன்.
அவசரத்திலே
உன் கூந்தல் சிந்திய பூ மீது
மிதிவண்டி ஏற்றிய
பாவத்துக்கு பரிகாரம் தேடிட.

காதலன் நாத்திக வாடை உள்ளவன். அவனையும் கோவிலுக்கு அனுப்புகிறது காதல் . அதற்காகத்தான் "நானும்" எனும் அழுத்தம்.

கவிதை என்றாலே வார்த்தைகளின் சிக்கனம் தானே.....
அர்த்ததை புரிந்துகொள்ள "கூந்தல்பூ" போதுமானதாகவே என் நினைப்பு

நன்றி நண்பரே.......