PDA

View Full Version : உ.ச.போ.எண் 04 - கருப்பு ஆடுஜேஜே
23-11-2010, 02:30 PM
கருப்பு ஆடு
ஜேஜே


இடம்: டிரைவ் இன், மதுராந்தகம்

ஆள் ஆரவரமற்ற பகுதியில் இருந்த டேபிளில் சூடான காபி ஆவி பறந்துகொண்டிருந்தது, அதை விட சூடாக இருந்தார்கள் சீனுவும் பாண்டியனும்.

காவல்துறையில் எடுக்கப்படும் ரகசியமான முடிவுகள் நிழல் உலக தாதா செழியனுக்கு தெரியப்படுத்தும் காக்கிச்சட்டை அணிந்த கருப்பு ஆட்டை கண்டுப்பிடிக்க கமிஷ்னர் ராஜா இவர்கள் இருவரையும் நியமித்திருந்தார். அதைபபற்றி ரகசிய ஆலோசனைகளை செய்துக்கொண்டிருந்தார்கள்.

சீனு: " டிபார்ட்மெண்ட் விசியம் வெளிய போகுதுன்னா கண்டிப்பா அந்த டிஸ்கசன்ல இருந்தவங்களா இருக்கனும் இல்ல அவங்ககூட சம்பந்தப்பட்டவங்களா தான் இருக்கும். அந்த லிஸ்ட்ல இருக்கவங்களை கண்காணிச்சா போதும் ஈசியா கண்டுப்பிடிச்சிடடலாம்."

பாண்டி:" எனக்கென்னமோ கண்ணியப்பன் மேலதான் டவுட்டு. அந்தாளு அப்படி ஒன்னும் வசதி இல்ல. ஆனா கொஞ்ச காலமா நல்லா செழிப்பா இருக்காரு, ஒருவேளை அவராகூட இருக்கலாம்."

சீனு: " இல்ல இல்ல பா அந்தாளு விசுவாசமான ஆளுன்னு நம்ம கமிஷ்னரே ஒருதடவை சொல்லிகேட்டிருக்கேன்."

பாண்டி:"ம்ம்ம்.. அவரு இல்லைனா.. ஒருவேளை நம்ம சேகரா இருக்குமோ, அதான்யா கோவிலூர் இன்ஸ்பெக்டர், அவனும் கூட அப்போ அங்கே இருந்தானே"

சீனு: " ம்ம்ம்.. ஆனா அவன் பேக்ரவுண்ட் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லயே, அவனுக்கு அந்தளவுக்கு தைரியமிருக்க மாதிரி தெரியல "

பாண்டி:" ஓ.. அப்புறம்.. எஸ்.ஐ.ராஜேஷ் மேலகூட எனக்கு டவுட்டு இருக்கு.. வர வர அந்தாளு போக்கு ஒரு மாதிரி தான் இருக்கு.. "

சீனு :" ம்ம்ம்.. இருக்கலாம். அந்தாளுக்கு சொந்த ஊரு கூட செழியன் ஊருக்கு பக்கத்துலதான்.. "

பாண்டி:" ஓ.. அப்ப அந்தாளு ஏன் சொல்லிருக்க கூடாது.. சொந்தஊர்க்காரன்னா கண்டிப்பா அவனுக்கு தெரிஞ்சவனாதான் இருக்கும்.. "

சீனு: " ஆனா அந்தாளு முதல்வர் கையில மெடல் வாங்கியிருக்காருய்யா.. அவரு அப்படி பண்ணுவாருன்னு கொஞ்சம் தயக்கமா இருக்கு."

பாண்டி:" சரி நமக்குள்ள எதுக்கு குழப்பம்.. போன தடவை மீட்டிங்ல இருந்தவங்களோட கால் லிஸ்டை செக் பண்ணினா யார் செழியனுக்கு போன் பண்ணிருக்காங்கனு தெரிஞ்சிரும்.."

சீனு: " எஸ்.. தட்ஸ் ரைட்.. "


இடம்: காவல்துறை ஆணையர் அலுவலகம்.


கமிஷனர்: "என்ன சீனிவாசன் நம்ம தகவல்களை வெளியிடுற அந்த கருப்பு ஆடு யாருன்னு கண்டுப்பிடிச்சீங்களா.. "

சீனு: "இல்லை... சார்.. இன்னும் இரண்டுநாள் டைம் குடுங்கசார். கண்டிப்பா நான் கண்டுப்பிடிச்சிருவேன்.. இதுக்கான வேலையில ரொம்ப மும்முரமா இறங்கி இருக்கேன் சார்.. நிச்சயம் கண்டுப்பிடிச்சிருவோம் சார்.. "

கமிஷனர்: " எதுக்கு இன்னும் இரண்டு நாள் வேற எங்கேயாவது தலைமறைவாகுறதுக்கா.. "

சீனு: " சார்.. நீங்க என்ன சொல்றீங்க.. "

கமிஷனர்: " எஸ்.. உங்களை நீங்களே எப்படி கண்டுப்பிடிப்பீங்க மிஸ்டர் சீனுவாசன்.. யூ.. ஆர் த ப்ளாக் ஷிப்.. "

சீனு: " சார்.. நா.. நானா.. "

கமிஷனர்: " எஸ்.. உங்களோட செல்போன்கால் லிஸ்டை நாங்க செக் பண்ணினதில் உங்க நம்பர்ல இருந்து செழியனுக்கு அடிக்கடி கால் போயிருக்கு.. இந்தமுறை எங்ககிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது ஆதாரம் பலமா இருக்கு.. "

சீனு: " சார்.. சார்.. இது.. இது எப்படின்னு எனக்கு தெரியாது.. நான் எதுவுமே பண்ணலை சார்.. பளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. "

கமிஷனர் :" நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. உங்கமேல விசாரனை இருக்கு.. "

விசாரணையில் கடைசி வரை நான் செய்யவில்லை என வாதாடியும் செல்போன் ஆதாரம் வலுவாக இருக்க அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதற்காக சீனுவாசனுக்கு சிறை தண்டனை கிடைத்தது.


இடம்: புழல் சிறை

சீனிவாசனை பார்க்க வந்திருந்தான் பாண்டியன்.

சீனு: "பாண்டியா.. நான் எதுவுமே பண்ணலைடா.. அவங்க சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்கடா.. நீயாவது நான் சொல்றதை கேளுடா.. "

பாண்டி:" ம்ம்ம். நம்புறேன்டா.. "

சீனு: "ரொம்ப தேங்க்ஸ்டா.. நீயாவது என்னை நம்பினாயே"

பாண்டி: " நீ இதை செய்யலைன்னு எனக்கு நல்லா தெரியும்.."

சீனு: " எப்படிடா.."

பாண்டி:" ஏன்னா அதை செஞ்சது நான்.. "

சீனு: " ஏய்.. என்ன சொல்ற.. "

பாண்டி:" எஸ் நாந்தான் அந்த கருப்பு ஆடு.. ம்மே.. ம்மே..."

சீனுவாசன் அதிர்ச்சியில் உறைந்துபோய் சிலையாக நின்றான்.

பாண்டி: " வேற யாரா இருந்தாலும் என்னை கண்டுப்பிடிச்சிருக்க மாட்டாங்க. ஆனா நீ புத்திசாலி கண்டிப்பா என்னை கண்டுப்பிடிச்சிருவ. அதான் நீ கண்டுப்பிடிக்கிறதுக்கு முன்னாடி நான் உன்னையே மாட்டிவிட்டுட்டேன். "

சீனு: " ஆனா.. அந்த போன்.. "

பாண்டி:" உன் நம்பர்ல இருந்து எப்படி போச்சுனு கேக்குறீயா. நாந்தான் பண்ணினேன் உன் நம்பர்ல இருந்து உனக்கே தெரியாம. ஏண்டா மக்கு போன் நம்பரை வைச்சி கண்டுப்பிடிக்கலாம்னு எனக்கு ஐடியா குடுத்ததே நீ தானடா. அதான் அதே ஐடியா வைச்சி உனக்கு வைச்சேன் ஆப்பு.. ஹா ஹா ஹா ஹா... "

சீனுவாசனை ஒழித்துகட்டிய மகிழ்ச்சியில் நாரகாசமாக சிரித்தான் பாண்டியன். ஆனால் இதுவரை அதிர்ச்சியில் இருந்த சீனுவாசனின் முகம் மாறியது. அவனின் உதடுகளில் புன்னகை பூத்தது.

சீனு: ஹா ஹா ஹா ஹா..

அவன் சிரிப்பதை பார்த்து திகைத்தான் பாண்டியன்.

பாண்டி: ஏன். ஏன் சிரிக்கிற..

சீனு: " டேய் நீ தான் கருப்பு ஆடுன்னு எனக்கு எப்பவோ தெரியும்டா. அதை உன் வாய்ல இருந்தே வரவைக்கிறதுக்காக நானும் கமிஷ்னரும் போட்ட நாடகம்தான் இந்த ரகசிய குழு,கைது எல்லாமே. நீ பேசினது எல்லாமே பதிவாகிடுச்சி. நீ தப்பிக்கவே முடியாது. "

கருப்பு ஆட்டை பிரியாணி ஆக்க காவலர்கள் விலங்கோடு பாண்டியனை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.


**** முற்றும்****

நண்பர்களே.. கதையை படித்த பிறகு, இந்தக்கதைக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் (**/10)ஐ மகாபிரபு அவர்களுக்கு தனிமடலில் அனுப்பவும்.

மதிப்பெண் அனுப்ப இங்கே க்ளிக் பண்ணுங்க. (http://www.tamilmantram.com/vb/private.php?do=newpm&u=4258)

பாலகன்
23-11-2010, 03:01 PM
கருப்புஆட்டை பிரியாணி ஆக்க சீனு தானே பிரியாணிக்குள்ளார சாரி ஜெயிலுக்குள்ள போயி.. அப்பப்பா திடீர்திருப்பங்கள் நல்லாவே இருந்தது ஜேஜே.

வாக்களித்தபடி கதை பதித்த உங்களுக்கு என் பாராட்டுகள் மற்றும் சின்ன அன்பளிப்பாக 100 இணைய காசுகள்.

அன்புடன்
மகாபிரபு

அமரன்
23-11-2010, 06:13 PM
போட்டிக்கெற்ற படைப்பு ஜேஜே.

வாழ்த்துகள்.

கீதம்
23-11-2010, 08:59 PM
கருப்பு ஆட்டை களமிறக்கிவிட்டீர்கள். பார்ப்போம், முட்டிமோதி எந்த ஆடு முன்னுக்கு வருகிறதென்று!

நல்ல திருப்பங்களுடனான கதைக்குப் பாராட்டுகள் ஜேஜே.

சிவா.ஜி
24-11-2010, 02:55 AM
நிஜமாகவே நல்ல திடீர் திருப்பமுள்ள கதை. வாழ்த்துக்கள் ஜேஜே.

ஜேஜே
24-11-2010, 09:38 AM
கருப்புஆட்டை பிரியாணி ஆக்க சீனு தானே பிரியாணிக்குள்ளார சாரி ஜெயிலுக்குள்ள போயி.. அப்பப்பா திடீர்திருப்பங்கள் நல்லாவே இருந்தது ஜேஜே.

வாக்களித்தபடி கதை பதித்த உங்களுக்கு என் பாராட்டுகள் மற்றும் சின்ன அன்பளிப்பாக 100 இணைய காசுகள்.

ஆஹா முதல் பந்தியிலயே செம வெட்டு.. நன்றி மகாபிரபுவே தங்களின் இணைய காசு அன்பளிப்புக்கு.


போட்டிக்கெற்ற படைப்பு ஜேஜே.

வாழ்த்துகள்.

தங்களின் பதிவை எனது படைப்பில் காண்பதில் மகிழ்கிறேன். மிக்க நன்றி.


கருப்பு ஆட்டை களமிறக்கிவிட்டீர்கள். பார்ப்போம், முட்டிமோதி எந்த ஆடு முன்னுக்கு வருகிறதென்று!


இந்தக்கதைக்கு துரோகி என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். தங்களின் கதை தலைப்பில் வைத்துவிட்டதால், ஆட்டை இறக்கிவிட்டுட்டேன்.

ஆட்டை பிரியாணி ஆக்காம இருந்தா சரி.


நிஜமாகவே நல்ல திடீர் திருப்பமுள்ள கதை. வாழ்த்துக்கள் ஜேஜே.

நன்றி சிவா.ஜி. தி பாஸ்..:)

govindh
24-11-2010, 12:33 PM
கருப்பு ஆடு-
திடீர் திருப்பங்களுடன்...
கதையினை அமைத்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள் ஜேஜே.

M.Jagadeesan
24-11-2010, 03:02 PM
யூகிக்க முடியாத இரண்டு திருப்பங்கள்.

பாராட்டுக்கள் ஜே.ஜே.

ஜனகன்
24-11-2010, 09:18 PM
உரையாடலில் கதையை தந்து, போட்டிக்கு ஏற்றாற் போல் கொண்டுவந்த விதம் அருமை. வாழ்த்துக்கள் ஜேஜே.

ஜேஜே
26-11-2010, 07:17 AM
கருப்பு ஆடு-
திடீர் திருப்பங்களுடன்...
கதையினை அமைத்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள் ஜேஜே.

நன்றி 'கோவி':)


யூகிக்க முடியாத இரண்டு திருப்பங்கள்.

பாராட்டுக்கள் ஜே.ஜே.

இரண்டு திருப்பங்களையும் படித்து பின்னூட்டமிட்ட ஜகதீசனுக்கு நன்றிகள் பல.


உரையாடலில் கதையை தந்து, போட்டிக்கு ஏற்றாற் போல் கொண்டுவந்த விதம் அருமை. வாழ்த்துக்கள் ஜேஜே.
நன்றி ஜனகரே..

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே..

Ravee
28-11-2010, 06:25 PM
இயல்பான திருப்பங்களுடன் ஒரு நல்ல கதையை தந்துள்ளீர்கள் ஜே ஜே வாழ்த்துக்கள் ... :)

ஆதவா
29-11-2010, 05:30 AM
ஒரு டபுள் திருப்ப கதை... படிக்க சுவாரசியமான வசனங்கள். நாடகம் மாதிரியான சிறுகதையமைப்பு... பின்னிட்டீங்க.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இணைய நண்பன்
08-12-2010, 10:05 AM
நாடக அமைப்பில் வித்தியாசமான படைப்பு வாழ்த்துக்கள்.