PDA

View Full Version : கவிதைக் காதலி



M.Jagadeesan
23-11-2010, 11:10 AM
கற்பனைப் பெண்ணே ! கற்பனைப் பெண்ணே !
நீ
கம்பனுக்கு மட்டும்தான் சொந்தமோ?
அவன்
பத்தாயிரம் பாடல் கொண்ட இராமாயணம்
என்னும் பெரிய
சொத்துக்கு சொந்தக்காரன்
நானோ அன்றாடங்காய்ச்சி
அதனால்தான்
என்போலும்
ஏழைப்புலவனின்
எழுத்துக்களை நீ
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கவலையில்லை!
எனக்குச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் என்னும் கற்களினால்
கவிதை மாளிகை
கட்டிக்கொள்வேன்.

வெண்பாவே ! வெண்பாவே !
புகழேந்தியின் வீடு உன் புகுந்தவீடோ?
புகழேந்தியின் வாயிலிருந்து
புயலாகப் புறப்பட்டு வரும் நீ !
என்னுடைய
எழுத்தாணியின்
எழுத்துக்களைக் கண்டு
ஏளனம் செய்கிறாய்.
கவலையில்லை !
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
"புதுக் கவிதை" என்னும் புதுமையான காதலி
நீ விதிக்கும்
கடுமையான சட்ட திட்டங்களை
என் காதலி கண்டு கொள்வதில்லை
அவள்தான் என் இல்லத்தரசி
அவளே எனக்கு "உலக அழகி"

பாலகன்
23-11-2010, 01:09 PM
சொற்கள் என்னும் கற்களினால் வீடு கட்டினால்
வார்த்தை ஜாலம் என்னும் சிமென்டு இல்லையெனில்
சீக்கிரம் விழுந்துவிடும்.

மாளிகை தாங்காதே.

ஆனாலும் இது காதலிதானே மனைவி என்று சொல்லவில்லையே?

கவிதை அருமை. பாராட்டுகள்

M.Jagadeesan
23-11-2010, 01:14 PM
நன்றி மகாபிரபு அவர்களே!

கீதம்
23-11-2010, 09:30 PM
கற்பனைப்பெண் ஒன்றும் கம்பனுக்குச் சொந்தமில்லையே!
வால்மீகியின் வளர்ப்புமகள்தானே அவள்?
வெண்பாவை வளைக்கவியலாக் காரணத்தால்தானே
கருப்பாவை வளைத்து புதுப்பாவை படிக்கிறோம்!
இனியென்ன விசனம்?
யாவுமே கலையன்னை முகத்தரிசனம்!

பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
24-11-2010, 01:05 AM
கற்பனைப்பெண் ஒன்றும் கம்பனுக்குச் சொந்தமில்லையே!
வால்மீகியின் வளர்ப்புமகள்தானே அவள்?
வெண்பாவை வளைக்கவியலாக் காரணத்தால்தானே
கருப்பாவை வளைத்து புதுப்பாவை படிக்கிறோம்!
இனியென்ன விசனம்?
யாவுமே கலையன்னை முகத்தரிசனம்!

பாராட்டுகள் ஐயா.

வால்மீகியின் வளர்ப்புமகள் இராமாயணம் மட்டுமே.
கம்பனின் சொந்த மகள் கற்பனைப் பெண்.

அமரன்
24-11-2010, 05:43 AM
புதுக்கவிதை ஃபாஸ்ட்புட் என்றால் மரபுக்கவிதை நம் சமையல்..

தேவைக்கேற்ப உண்ண வேண்டியதுதான்..

பாராட்டுகள் ஜெகதீசன்

வானவர்கோன்
25-11-2010, 12:54 PM
கவிதைக் காதலி கருதுவது கவிதையைக் காதலி !

M.Jagadeesan
25-11-2010, 01:13 PM
கவிதைக் காதலி கருதுவது கவிதையைக் காதலி !

நன்றி வானவர்கோன்