PDA

View Full Version : சங்க இலக்கியங்களில் மூலிகை மருத்துவம்.



M.Jagadeesan
22-11-2010, 04:04 AM
குறிஞ்சிப்பாட்டில் செங்காந்தள் மலர் பற்றிக் கூறப்பட்டுள்ளது.இந்த மலருக்கு எச்.ஐ.வி.மற்றும் எய்ட்ஸ் நோயைக் குணமாக்கும் திறன் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.தற்போது இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இந்த மலர்தான் நிரந்தர தீர்வு.

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள அமுக்ரா கிழங்கு மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.இதைச்சாப்பிட்டால் ஆண்களுக்கு அதிகமாக உயிரணுக்கள் உற்பத்தி ஆகும்.குப்பைமேனி கீரையை சமைத்துச் சாப்பிட்டால் உடலில் உள்ள பித்த நீர் நீங்கும்.தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள சோற்றுக் கற்றாழை 24 மணிநேரமும் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி அருகம்புல்லுக்கு உண்டு.

திருக்குறள் கூறும் நெருஞ்சிப்பூவுக்கு சிறுநீரை சுத்தப்படுத்தும் ஆற்றல் உண்டு.சங்க இலக்கியங்களில் தலையாய மூலிகை மருந்தாக வேம்பு கூறப்பட்டுள்ளது.திருக்குறளில் வேம்புவைப் பற்றிக் கூறும்பொழுது"மருந்தாகித் தப்பா மரம்" என்று வள்ளுவர் கூறுகின்றார். வேம்பைத் தின்றால் எந்த நோயும் அண்டாது.மகளிர் மருந்தான வெந்தயம் முதல் அவ்வை பாடிய நெல்லிக்கனி வரை சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:உண்மைக்குரல்-நவம்பர் 2010