PDA

View Full Version : லோகாயுதம்



inban
21-11-2010, 01:18 PM
காய்ந்த புதர்களின் ஊடே
உதிர்ந்த
சருகுகளின் மீது அமர்ந்துகொண்டு
வேறு எதைத்தான்
எழுதிவிட முடியும்?
பசுமை பூத்த செடிகள்
மனம் வீசும் பூக்கள்
சிட்டுக்குருவிகளின் சிறகோசை
-இவைகள்
மீதான ஏக்கங்களைத்தவிர.....

பாலகன்
21-11-2010, 03:40 PM
சீக்கிரம் இடத்தை சுத்தம் செய்துட்டு புல் செடிகள் வளரவச்சி உட்காருங்கள்

அருமையான கவிதை.

அமரன்
24-11-2010, 07:51 PM
உண்மைதான்..

அனுபவித்து அழிந்தவற்றைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும்..

அனுபவிக்காமல் நம்மால் புறக்கணிக்கப்பட்ட ஏனையவை படும் ஏக்க அவஸ்தையை, பிறவிப் பயனடையாத சோகத்தைக் கண்ணில் எடாமலும் இருக்க இயலாது இல்லையா.

முதிர்கன்னி பற்றி எத்தனை கவிதைகள்..

ஆறுதலாகப் பதில்க் கவிதைகளை அள்ளித் தரக்கூடிய கவிதை.

வானவர்கோன்
25-11-2010, 12:44 PM
மனித மன செம்மை பற்றிய ஆய்வுகள் காய்ந்த புதர்களின் உதிர்ந்த சருகுகள் மீதமர்ந்தே எழுதப்படுகின்றன.