PDA

View Full Version : கோபம்



M.Jagadeesan
21-11-2010, 12:28 PM
உன்னை அறியாமல்
உன்னுள் புகுந்து
உன்னை அழிக்கின்ற
உன்னுடைய எதிரி

கோபத்தால்
உறவுகள் பகையாகும்
உண்மைகள் பொய்யாகும்
உயிர்கள் பலியாகும்
உதவிகள் நின்றுவிடும்.

கோபம்
மனமெனும் நிலத்தில்
விளைகின்ற முள்செடி
இச்செடியில்
குணமலர்கள் பூப்பதில்லை
குற்றங்கள் பூக்கின்றன.

பாலகன்
21-11-2010, 03:51 PM
உங்கள் கவிதை
உங்கள் எழுத்துக்கள்
உங்கள் பெயரை போன்றே அழகு

உங்களுக்கு என் வாழ்த்துகள்

M.Jagadeesan
21-11-2010, 10:27 PM
உங்கள் கவிதை
உங்கள் எழுத்துக்கள்
உங்கள் பெயரை போன்றே அழகு

உங்களுக்கு என் வாழ்த்துகள்

"உ" என்ற எழுத்திலே பின்னூட்டம் தந்த பிரபுவுக்கு நன்றி.

கீதம்
21-11-2010, 11:17 PM
அகம் கொள்ளும் கோபம்,
அழகு முகம் கொல்லும்;
முகம் கொள்ளும் கோரம்,
இனிய அகம் கொல்லும்!

கவிக்கரு அழகு. பாராட்டுகள் ஐயா.

அமரன்
24-11-2010, 07:41 PM
ஆத்திரம் ஆகாதுதான்..
ஆனால்
ஆத்திரப்படாதவன் மனிதனே அல்லன்..

தகுந்த தருணத்தில் தக்கபடி வெளிப்பட்டே ஆகவேணும் ஆத்திரம்.

அதே போல் அடிக்கடி ஆத்திரப்பட்டால் அர்த்தம் அற்றதாகிவிடும்.. நாமும் தான்..

நற்கருக்கொண்ட கவிதை.

M.Jagadeesan
24-11-2010, 07:42 PM
ஆத்திரம் ஆகாதுதான்..
ஆனால்
ஆத்திரப்படாதவன் மனிதனே அல்லன்..

தகுந்த தருணத்தில் தக்கபடி வெளிப்பட்டே ஆகவேணும் ஆத்திரம்.

அதே போல் அடிக்கடி ஆத்திரப்பட்டால் அர்த்தம் அற்றதாகிவிடும்.. நாமும் தான்..

நற்கருக்கொண்ட கவிதை.

பாராட்டுக்கு நன்றி

பென்ஸ்
24-11-2010, 07:55 PM
அமரன் மீண்டும் என் சிந்தனைகளை சிந்தி கொண்டு...

கோபமும் புன்னகையும் தொற்றிகொள்ளும் கொடும் நோய்கள்...
ஆனாலும் நல்ல பாக்டிரியா போல் சில கோபம் நல்லதே... அவசியமானதே...

வானவர்கோன்
25-11-2010, 12:38 PM
அருமையாக உள்ளது கவி, பாராட்டுக்கள்.

M.Jagadeesan
25-11-2010, 01:11 PM
அருமையாக உள்ளது கவி, பாராட்டுக்கள்.

நன்றி வானவர்கோன் அவர்களே!