PDA

View Full Version : இயலாமை



Ravee
20-11-2010, 04:38 PM
http://farm4.static.flickr.com/3637/3292911433_a703cbbd8a.jpg

இயலாமை

மனைவியுடன் வாதிட்டு ஜெயிக்க முடியாத கோபம்
அவளின் புகைப்படத்துக்கு மீசை போடுவதுடன் முடிந்தது :eek:

வானவர்கோன்
20-11-2010, 07:07 PM
இயலாமை இயலாமற் போனாலும்
சிந்திக்கத் தோன்றுகின்றதே
சித்திரம்!

கீதம்
20-11-2010, 08:48 PM
மீசை வரையப்பட்ட மனைவியின்
முகம் பார்த்து வந்த சிரிப்பில்
கரைந்தேபோனது கோபம்.

அப்படித்தானே?

கவிதை நன்று. பாராட்டுகள் ரவி.

M.Jagadeesan
21-11-2010, 03:05 AM
மீசை படத்தை மனைவி பார்த்தால்
ஆசையாய் வளர்த்த உங்கள் மீசையின்
கதி என்ன ஆகும்?

அமரன்
24-11-2010, 07:56 PM
மீசை வரையப்பட்ட மனைவியின்
முகம் பார்த்து வந்த சிரிப்பில்
கரைந்தேபோனது கோபம்.

அப்படித்தானே?

கவிதை நன்று. பாராட்டுகள் ரவி.

சொல்ல வந்ததை சொல்ல விடாமல் செய்திட்டீங்க..

ஆசான் முதல் அயலான் வரை செய்த ’குரும்புகள்’ நினைவில்..

சின்னப் பிள்ளைகள் வெளிப்படுத்தும் இப்படியான கோபங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்..

இப்படிக் இயலாமையைக் கோபமாக வெளிப்படுத்திய உங்களையும் மிகவும் பிடித்து விட்டது ரவீ.

பென்ஸ்
24-11-2010, 08:01 PM
மீசை படத்தை மனைவி பார்த்தால்
ஆசையாய் வளர்த்த உங்கள் மீசையின்
கதி என்ன ஆகும்?

ஹ ஹ ஹா... ரசித்தேன்

ரவி... இதேல்லாம் சகஜமப்பு...
இதே போலவே சப்பாத்தி மாவில் உருவம் செய்து அதை மொத்துவது...
"சனியனே இங்க வா" என்று குழந்தையை திட்டுவது...

இதெல்லாம் இரண்டு பக்கமும் நடக்கும் நாடகம் தானே....

பாருங்க மதிக்கு எல்லாம் இந்த கவிதை புரியாது...

பிரேம்
17-12-2010, 05:35 AM
ஹ ஹ ஹா... ரசித்தேன்

ரவி... இதேல்லாம் சகஜமப்பு...
இதே போலவே சப்பாத்தி மாவில் உருவம் செய்து அதை மொத்துவது...
"சனியனே இங்க வா" என்று குழந்தையை திட்டுவது...

இதெல்லாம் இரண்டு பக்கமும் நடக்கும் நாடகம் தானே....

பாருங்க மதிக்கு எல்லாம் இந்த கவிதை புரியாது...

ஹி..ஹி. அனுபவம்தானே..?

முரளிராஜா
17-12-2010, 06:06 AM
மன்னிக்கனும் எனக்கு இன்னும் திருமணம் ஆகலை.
அப்படின்னு பொய் சொன்னா நம்பவா போறிங்க?

பாலகன்
17-12-2010, 07:03 AM
ஓ இப்படியும் ஜெயிக்கலாமா?
அருமை

ஆன்டனி ஜானி
17-12-2010, 07:39 AM
ஆயிரம் பிரச்சனையில் இருந்தாலும்

தனது மனவியை பார்த்தவுடன்

இவரது மதில் ஒரு புன்னகை

ரெம்ப அருமையான ஓவியம் பாராட்டுக்கள் ......

கௌதமன்
17-12-2010, 07:50 AM
ஆசை உள்ளிலிருப்பதால் தானே
மீசையோடு முடிந்தது கோபம்
வார்த்தையில் ஜெயிக்கவில்லையென்றாலும்
வாழ்க்கையில் ஜெயித்தீர் வாழ்க