PDA

View Full Version : மன்ற உறவொன்றினை சந்திக்கப்போகின்றேன்!!!!!!!!!!!!!!அகத்தியன்
19-11-2010, 04:34 AM
மன்றோடு இணைந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், மன்றத்திற்கான எனடு பங்களிப்புக்கள் மிக குறைவே, வாசிப்பதை தவிர. ஒரு முறை இதழ் தொகுப்பாளராக நானே முன்னின்று ஒரு பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போதிலும், அதை சரியாக நான் நிறைவேற்றவில்லை. ஆனாலும் மன்றம் எனது அன்றாட வாழ்வின் ஒரு கடமை போல்தான்.

எத்தனையோ உறவுகள் மன்றில் உள்ளன. ஒவ்வொருவரின் ஆளுமையினையும் நோக்குகின்ற போது, பிரமிப்பாக இருக்கும் அதோடு இவர்களை சந்திக்க மாட்டோமா என்ற எண்ணம் கூட ஏற்படுவதுண்டு, அதிலும் மன்ற உறவுகள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்த அனுபவப் பகிர்வுகளை நோக்கும் போது இன்னும் அவ்வாவல் மேலிடும்.

அவ்வாறு சந்திப்பதற்கான முயற்சிகள் என ஒரு முறை சிவா அண்ணாவை சந்திக்க முயன்று அவருக்கு தனிமடல் அனுப்பி அவரது அலைபேசி எண்ணினையும் பெற்றேன், இது அவர் அமீரகத்தில் இருக்கும் போது, துரதிஸ்டவசமாக, நான் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டதால், அவரினை சந்திக்க முடியவில்லை. பின் அவர் நைஜீரியா சென்று விட்டார். ( நினைவிருக்கின்றதா சிவா.ஜி அண்ணா?? )

இப்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்- மன்றத்தின் கதாசிரியர், மூத்த உறுப்பினர், பாரதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டப்போகின்றது. இன்று மாலை அமீரகத்தின் தலை நகரில் அவரை சந்திக்கப்போகின்றேன்.

எனது திரி ஒன்றிற்கு அவர் இட்ட பின்னூட்டத்தினை கொண்டு அவர் இங்கு இருப்பதாக யூகித்து அவரிடம் சந்திப்பதற்கான வாய்ப்பினை கேட்டிருந்தேன். தனது தொலைபேசி இலக்கத்தினை எனக்கு அனுப்பி இருந்தார். இத்தினங்களில் இங்கு விடுமுறை என்பதால், சில தடங்கல்களால் சென்ற தினங்களில் எங்களது சந்திப்பு தள்ளிப்ப்போனது. இன்று காலையில் அழைத்து மாலை சந்திக்கலாம் என சொல்லி இருக்கின்றார்.

முகமறியா உறவொன்றினை சந்திக்கும் போது ஏற்படுகின்ற அந்த பரபரப்பு இப்போதே என்னைத் தொற்றிக்கொண்டுள்ளது.

அனுராகவன்
19-11-2010, 04:38 AM
அப்படியா..மிக அருமையான உறவுக்கு ..இனிய நண்பனை நீ காண வேண்டும்...

ஆன்டனி ஜானி
19-11-2010, 04:46 AM
உங்கள் சந்திப்பு கள் வெற்றீயாகட்டும் .......உங்கள் பயணங்கள் முடியாமல் இன்னும் தொடர என்னுடய வாழ்த்துக்கள்..........!!!! நன்றி !!!!!

அன்புரசிகன்
19-11-2010, 04:51 AM
சந்திப்பு மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நான் அமீரகத்தில் சந்தித்த 2வது உறவு. (முதலாவது சுபி. இரண்டாவது பாரதி அண்ணா. மூன்றாவது சிவா அண்ணா)
ஆனால் சாப்பாடு என்றால் சிவா அண்ணாவோட தான் போகவேணும். விதம் விதமாக உணவுகளை அறிமுகப்படுத்துவார். வளர்ர பிள்ளை. நல்லா சாப்பிடவேணும் என்று எனக்கே தெம்பு கொடுத்தவர். முடிந்தால் நைஜிரியா சென்று வாருங்கள்.

நான் முதன் முதலில் பாரதி அண்ணாவை சந்தித்தது இபன் பதூதா மோலில். இன்றும் பசுமையாக ஞாபகம் உள்ளது.

aren
19-11-2010, 05:32 AM
உங்கள் சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஆதி
19-11-2010, 06:18 AM
சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள், மறக்காமல் சந்திப்பு பற்றியும் எழுதுங்க, நீங்க மறந்தாலும் நாங்கவிடமாட்டோம் என்பது வேறு விடயம்...

அமரன்
19-11-2010, 06:32 AM
நடத்துங்க.. நடத்துங்க..

ரங்கராஜன்
19-11-2010, 10:03 AM
மச்சி என்னையும் வந்து சந்தித்து போடா மச்சி.............

மதி
19-11-2010, 10:06 AM
உங்கள் சந்திப்பு இனிதே நடக்கட்டும்...! சந்தத்தபின் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும்..

ஆதவா
19-11-2010, 10:10 AM
ஓ!! வாழ்த்துக்கள் அகத்தியன்..
உங்களுக்கு ஒரு டிப்ஸ் தரேன்....
பேசும் போது வார்த்தைகளை கவனமா கையாளுங்க... அப்பறம் பேசிட்டு வயிறு வலியோட திரும்பக் கூடாது ஆமாம்....

நானும் அவரை ஊர்ல பாக்கலாம் பாக்கலாம்னு சொல்லிட்டே இருக்கேன்........... சொல்லிட்டே இருக்கேன்...

சந்திச்சுட்டு வந்து திரியொண்ணு தொடங்குங்க....
வாழ்த்துக்கள்

அகத்தியன்
19-11-2010, 04:34 PM
மச்சி என்னையும் வந்து சந்தித்து போடா மச்சி.............

தக்ஸ்! உன்ன சந்திக்க ஒரு நாள் வருவேன் காத்திரு... ( ஏண்டா பேர மாத்திக்கே இருக்க?? மைக்கல் ஜக்ஸன் பரம்பரையோ :aetsch013::aetsch013::confused::confused: .... அவன் அடிக்கடி மூக்க முகத்த மாத்தினான்.. நீ பேர.... :lachen001::lachen001::lachen001: )

அகத்தியன்
19-11-2010, 04:38 PM
சந்திப்பு இனிதே முடிந்தது. இப்போதுதான் என் அறை திரும்பினேன் மனம் நிறைய மகிழ்வோடு....

பழக எத்தனை இனிமையானவர் பாரதி அண்ணா... இதோ இப்போது அலைபேசியில் அழைத்து நான் வந்து சேர்ந்துவிட்டேனா என்பதைக்கூட கேட்கின்றார். உண்மையில் அற்புதமான அனுபவம்தான்.

முடிந்தால் எங்களது சந்திப்பை ஒரு திரியாக்க முயல்கின்றேன் நண்பர்களே!!

பாலகன்
19-11-2010, 05:06 PM
சந்திப்பு மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நான் அமீரகத்தில் சந்தித்த 2வது உறவு. (முதலாவது சுபி. இரண்டாவது பாரதி அண்ணா. மூன்றாவது சிவா அண்ணா)

அன்பு அண்ணா! நான் அமீரகத்தில் இருந்த போது தாங்கள் எனது கணினிக்கு நோய்தொற்று மருந்து (McAfee)தந்தீர்களே. உங்கள் குரல் எவ்வளவு இனிமையாக இருந்தது.

முகம் தெரியாத எனக்கு தாங்கள் உதவியமைக்கு நன்றி.

அகத்தியன் அண்ணா தங்கள் சந்திப்பு இனிதே முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

மதி
19-11-2010, 10:13 PM
சந்திப்பு இனிதே நடந்தது கண்டு மகிழ்ச்சி. கண்டிப்பாய் திரி தொடங்குங்கள் உங்கள் சந்திப்பு விவரங்களை அசை போட

வானவர்கோன்
19-11-2010, 10:39 PM
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

அமரன்
19-11-2010, 10:40 PM
முடிந்தால் எங்களது சந்திப்பை ஒரு திரியாக்க முயல்கின்றேன் நண்பர்களே!!

அதான் சந்திப்பு நல்லபடியாக முடிஞ்சுட்டுதில்ல.. எழுதியே ஆகவேணும்.