PDA

View Full Version : திரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்



durai.r
18-11-2010, 02:26 PM
அத்தைக்கு மீசை முளைத்தால் ஆச்சர்யம்!!
குதிரைக்கு கொம்பு இருந்தாலும் ஆச்சர்யம்!!

தெருவோரக் கூத்து காலத்தில் நாடகம் ஆச்சர்யம்!!
நாடக காலத்தில் திரைப்படம் ஆச்சர்யம்!!
கருப்பு-வெள்ளைத் திரைக்காலத்தில் வண்ணப்படம் ஆச்சர்யம்!!
வண்ணத்திரைக் காலத்தில் கம்ப்யூட்டர் அனிமேஷன் & கிராபிக்ஸ் (இந்தக் காலத்தில்) ஆச்சர்யம்!!
இந்தக்காலத்தில் கதை ஆச்சர்யம்!!

ஆமாம்,
- நல்ல கதை
- உண்மையான கதை
- உயிரோட்டமான கதை
- உருக்கமான கதை ஆச்சர்யம் !!!

நூற்றுக்கு ஒன்றிரண்டு என்பது மாறி
நூற்றுக்கு நூறானால் - ஆஹா அதுவும் ஆச்சர்யம்!!!

திரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்!!

பாலகன்
18-11-2010, 03:23 PM
திரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்!!

இப்பவெல்லாம் திருட்டு வீசீடி வந்துவிட்டதால் இனி திரைப்படமே ஆச்சர்யம் தான்

நல்லா யோசிச்சிருக்கீங்க. பாராட்டுகள்