PDA

View Full Version : ஒரு கை ஓசை



durai.r
17-11-2010, 04:12 PM
ஒரு கை ஓசை எழுப்பாது - பழைய கூற்று
ஒரு கை ஓசை எழுப்பும் - இது புதிய கூற்று
எப்படி?
உன் ஒரு கை விரல்களைச் சொடுக்கிப் (சுண்டி) பார் - புரியும்
ஓசையின் வீச்சு சற்று குறைவென்றால் ஓசையாகாதா?

மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது, தமிழா
மாற்றிவிடு உன் பழமொழியை இன்று
ஒரு விரல் ஓசை எழுப்பாது என்று.

- துரை

அமரன்
17-11-2010, 07:36 PM
வாங்க துரை!

முல்லைப் பந்தலில் உங்களைப் பற்றிச் சொல்லலாமே..

இந்த வித்தியாசமான சிந்தனை மின்னிய கணத்தில் சொடுக்குப் போட்டிருப்பீர்களோ தெரியாது.

ஆனால் கவிதை சொடுக்குப் போட்டுக் கூப்பிடுது..

தொடர்ந்து எழுதுங்கள். தட்டிக் கை கொடுக்க நிறையப் பேர் உண்டு மன்றத்தில்..

வாழ்த்துகள்.

M.Jagadeesan
17-11-2010, 08:44 PM
கவிதை நன்று.
புதிய சிந்தனை.

ஆதவா
18-11-2010, 03:19 AM
கவிதை அருமை..
தொடர்ந்து எழுதுங்கள்

durai.r
18-11-2010, 02:04 PM
நன்றிகள் பல, மன்ற நண்பர்களே!!

பென்ஸ்
18-11-2010, 02:14 PM
உங்கள் கவிதையை பாராட்டி கைதட்டலாம்ன்னு நினைத்தேன்...ஆனா சொடுக்கு தான் அப்புறம் போட்டேன்...

பாராட்டுக்கு சொடுக்கு போடுவதை உங்களால் ஏற்றுகொள்ள முடியும்தானே???