PDA

View Full Version : மரியாதை (குமுதம் (24-11-2010) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
17-11-2010, 03:14 PM
மரியாதை

"என்னடா சோமு, எல்லோரும் உனக்கு வணக்கம்
சொல்லுறாங்க, நீயோ! உனக்கு கீழே வேலை
செய்பவர்களுக்கு தேடி போய் வணக்கம் சொல்லுற,
அவர் சங்கடமா நெளியுறார்." என்றான் ராமு.

"அவர் அனுபவம் என்னுடைய வயது. 30 வருடமா
இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்." என்றான் சோமு.

"அதனால என்ன?" என்றான் ராமு.

"இந்த நிறுவனம் ஒரு கட்டிடம் மாதிரி, அவரை
போன்ற மூத்த ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் கடின
உழைப்பையும் பல தியாகங்களையும் செய்ததின்
பலனாகதான் நற்பெயர், புகழ், பல கிளைகள் என
இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு அஸ்திவாரம்
போன்றவர்கள். அவர்களை விட முக்கியத்துவம்
வாய்ந்தவர்கள் போல் மற்றவர்களுக்கு எங்களைப்
பார்த்தால் தோன்றும், ஆனால் நாங்களோ 2வது
தளம், 3வது தளம் போன்றவர்கள், அவர்களுக்கு உதவி
செய்யவே நாங்கள்.

அவருக்கு தெரிந்த விசயங்களில் 10 சதவீதம்
கூட எனக்கு தெரியாது, தெரிந்த மாதிரி காட்டிக்
கொள்வேன். தேடி போய் வணக்கம் சொல்வது அவரின்
அனுபவத்திற்குதான்.” என்றான் சோமு.

“சின்ன வயதில், பெரிய பதவியில் இருப்பதன்
அர்த்தம் இப்ப புரியுது” என்றான் ராமு.


http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Kumudam_24112010.jpg

கீதம்
17-11-2010, 08:08 PM
நல்ல கருத்து சொல்லும் கதை. வீட்டிலேயே பெற்றோரை அடக்கும் அதிபுத்திசாலிகளுக்கு நல்ல பாடம்.

குமுதத்தில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் கமலகண்ணன் அவர்களே.

M.Jagadeesan
17-11-2010, 08:33 PM
அனுபவம்தான் மிகப்பெரிய "ஆசிரியர்"

அமரன்
17-11-2010, 08:39 PM
கட்டளை இடுவதை விடக் களத்தில் கூட நிற்பது உயர்வின் வேர்!

நல்ல சிந்தனை.

குமுதத்தில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள்.

க.கமலக்கண்ணன்
17-11-2010, 08:47 PM
நன்றி கீதம்

நன்றி ஜெகதீசன்

நன்றி அமரன்

ஆதவா
18-11-2010, 03:27 AM
கலக்குங்க கமலக் கண்ணன்... :icon_b:
(அட்டையில் தமன்னா செய்திக்கு பாவனாவா???:sauer028:)

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2010, 06:26 AM
நல்ல பண்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் .இது கதைகளில் மட்டுமே சாத்தியமோ? என நினைக்க தோன்றுகிறது .இந்த நல்ல பண்புகளை எந்த இளம் உயர் அதிகாரிகள் பின்தொடர்கிறார்கள் .ஆனால் இது ஒரு நல்லதோர் பதிவு .
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

govindh
18-11-2010, 07:09 AM
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.

விக்ரம்
18-11-2010, 08:58 AM
நல்ல கருத்தைச் சொல்ற கதை மற்றும் குமுதத்தில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்.

பென்ஸ்
18-11-2010, 02:08 PM
வாழ்த்துகள் கமலகண்ணன்...
:)

க.கமலக்கண்ணன்
18-11-2010, 02:10 PM
நன்றி ஆதவா

நன்றி t.jai

நன்றி govindh

நன்றி விக்ரம்

நன்றி பென்ஸ்

ஆதி
19-11-2010, 02:22 AM
கதை நன்று, குமுதத்தில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
19-11-2010, 03:38 AM
நல்ல பண்புகள் நம்மை உயர்த்தும். நல்ல கருத்து சொல்லும் கதைக்கும், குமுதம் போன்ற வெகுஜன பத்திரிக்கையில் பிரசுரமானதற்கும் அன்பான வாழ்த்துக்கள் கமலக்கண்ணன். இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.

Mano.G.
19-11-2010, 08:26 AM
கமலகண்ணன்,

அருமையா சின்னதா ஒருபக்கத்துல
எங்க அப்பா சொன்னத சுவாரசியமா
சொன்னதுக்கு நன்றி.

எங்க அப்பா என்ன சொன்னார்?

நமக்கு சமுதாயத்துல உயர்ந்த நிலையில இருக்குர மனிதனும் நமக்கு தேவை
அதோட கடைநிலையில இருக்குர மனிதனும் நமக்கு தேவை

எல்லோரையும் சம மா மதிக்கனும் .

மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி


மனோ.ஜி

க.கமலக்கண்ணன்
19-11-2010, 11:50 AM
நன்றி ஆதன்

நன்றி சிவா.ஜி நல்ல பண்புகள் நம்மை நிச்சயமாக உயர்த்தும் என்பதில் ஐயம் இல்லை

நன்றி மனோ.ஜி உங்கள் தந்தையின் கூற்று உண்மையே மற்றவர்களை மதித்திதால் நாம் உயர்வோம்... உங்களின் நினைவு கூற்றலுக்கு நன்றி

வானவர்கோன்
19-11-2010, 02:18 PM
மற்றவர்களையும் மதிக்கத் தெரிய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் அருமையான கதை, கதையாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

அறிஞர்
19-11-2010, 02:50 PM
வாழ்த்துக்கள் கமலகண்ணன்....

சிறப்பான சிறுகதை...

குறைந்த வரியில் நிறைந்த அர்த்தங்கள்..

மென்மேலும் உம் புகழ் எங்கும் பரவ வாழ்த்துக்கள்...

ஜனகன்
19-11-2010, 10:24 PM
குறைவான கதாபாத்திரங்கள் கொண்டு நிறைவான ஒரு பக்க கதை கொடுத்திருக்கீங்க.

வாழ்த்துக்கள்.மற்றும் பத்திரிக்கையில் பிரசுரமானதற்கும்.

க.கமலக்கண்ணன்
20-11-2010, 06:17 AM
நிர்வாகி பின்னூட்டம் அளிக்கவில்லையே என்ற வருத்தமாக இருந்தது. உங்களின் வாழ்த்துக்களை படித்ததும் புத்துணர்ச்சி அடைந்தேன்... நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள் பல...

நன்றி வானவர்கோன்

நன்றி ஜனகன்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
21-11-2010, 08:37 AM
குமுதத்தில் கதையைப் படித்ததுமே என் கவன ஈர்ப்பை பெற்றிருந்தது இந்த ஒரு பக்கக் கதை. நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை நயமாகச் சொன்ன கதை. மிக அருமை.

http://idaivelikal.blogspot.com

க.கமலக்கண்ணன்
26-11-2010, 01:15 PM
நன்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா...

உங்களின் கதைகளை படித்திருக்கிறேன். மிகவும் அருமையான கருத்துக்கள் அடங்கியிருந்தது

venus143
28-11-2010, 04:36 AM
one page...wow nice...tnq.

rajesh2008
28-11-2010, 12:59 PM
நல்ல கருத்துள்ள கதை பாராட்டுக்கள்

விகடன்
28-11-2010, 01:42 PM
வாவ்...
நல்ல கதை. சிறிதாக இருந்தாலும் “நச்” என்று உண்மையை சொல்லி நிற்கிறது.
படித்தபின் சற்றே குற்ற உணர்ச்சியை வரவழைத்துவிட்டது.

படிப்பினையை தந்த பதிவு.

க.கமலக்கண்ணன்
29-11-2010, 10:31 AM
நன்றி! venus143

நன்றி! rajesh2008

நன்றி! விகடன்