PDA

View Full Version : எதிரும் புதிருமாக



M.Jagadeesan
17-11-2010, 09:45 AM
காதலிக்காகக்
கால்கடுக்கக்
காத்திருக்கும்
காதலனுக்கு
நேரம் போகவில்லையே என்ற கவலையால்
ஒவ்வொரு நிமிடமும்
ஒரு யுகமாகக் கழிகிறது.

தூக்கமின்றித் தவிக்கும்
தூக்குத் தண்டனைக் கைதிக்கோ
நாட்கள் நகர்கிறதே என்ற கவலையால்
ஒவ்வொரு நாளும்
ஒரு நிமிடமாகக் கழிகிறது.

லஞ்சங்களில் புரளும்
லட்சாதிபதிக்கு
நூறு ரூபாய் எல்லாம்
ஒரு ரூபாய்,

பஞ்சத்தில் அடிபட்ட
பரதேசிக்கோ
ஒரு ரூபாய் எல்லாம்
நூறு ரூபாய்.

பல நாள்
பட்டினிக்காரனுக்குப்
பாகற்காய் எல்லாம்
பஞ்சாமிர்தம்.

பசியைத் தேடும்
பணக்காரனுக்கோ
பஞ்சாமிர்தம் எல்லாம்
பாகற்காய்.

மண்டை பிளக்கும் வெயிலில்
மாடுபோல் உழைப்பவனுக்கு
மலையெல்லாம் கடுகாகும்

வாழைப்பழம் உரிக்கவும்
ஆளைத்தேடும் சோம்பேறிகளுக்குக்
கடுகெல்லாம் மலையாகும்.

ஆதவா
17-11-2010, 09:58 AM
கிழக்கும் மேற்கும் சுற்றி வந்தால்தானே நாள் முழுமையாகிறது.
கவிதை அருமை!

M.Jagadeesan
17-11-2010, 10:06 AM
கிழக்கும் மேற்கும் சுற்றி வந்தால்தானே நாள் முழுமையாகிறது.
கவிதை அருமை!

நன்றி ஆதவா.

கீதம்
17-11-2010, 10:13 AM
முரண்கள் சொல்லும் பரிமாணங்கள் வெகு அழகு. பாராட்டுகள்.

M.Jagadeesan
17-11-2010, 11:08 AM
முரண்கள் சொல்லும் பரிமாணங்கள் வெகு அழகு. பாராட்டுகள்.

நன்றி.கீதம்.

govindh
17-11-2010, 12:31 PM
எதிரும் புதிருமாக -
கவி அருமை.

பாராட்டுக்கள்.

M.Jagadeesan
17-11-2010, 01:38 PM
எதிரும் புதிருமாக -
கவி அருமை.

பாராட்டுக்கள்.

நன்றி கோவிந்த் அவர்களே.

ஜனகன்
17-11-2010, 01:53 PM
எதிரும் புதிருமாக அமைத்த நல்ல கவிதை. மேலும் பல கவிதைகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
17-11-2010, 02:04 PM
எதிரும் புதிருமாக அமைத்த நல்ல கவிதை. மேலும் பல கவிதைகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி .ஜனகன் அவர்களே.

அமரன்
17-11-2010, 07:41 PM
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...

நன்று ஜெகதீசன்..

கவிதையை புதுக்கவிதைகள் பகுதிக்கு மாற்றி உள்ளேன்

ஆதவா.. உங்கள் பதிலும் அருமை.

M.Jagadeesan
17-11-2010, 08:36 PM
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...

நன்று ஜெகதீசன்..

கவிதையை புதுக்கவிதைகள் பகுதிக்கு மாற்றி உள்ளேன்

ஆதவா.. உங்கள் பதிலும் அருமை.

நன்றி அமரன் அவர்களே.