PDA

View Full Version : என் சொற்கள்



ஆதவா
17-11-2010, 08:02 AM
என் சொற்கள்
தொலைந்து போய்விட்டன
அவை திசையறியாமல்
எங்கேனும் சுற்றிக் கொண்டிருக்கலாம்
என்னைப்பற்றி யாரிடமேனும்
விசாரித்துக் கொண்டிருக்கலாம்
சுய சிந்தனையற்றவை
என் சொற்கள்
தனித்து வாழ இயலாதவை
எப்பயனுமில்லாத வாழ்க்கையை
சொந்தமாக்கிக் கொண்டவை
நீங்கள் எங்காவது கண்டீர்களா
எனக்கு அடிமையாக இருந்த
அச்சொற்களை?

Ravee
17-11-2010, 08:57 AM
அடிமையிடம் அடிமையாய் இருக்க விருப்பமில்லை
நாம் இருவரும் ஒருவரின் அடிமைகள் இப்போதேன்றது
ஜெஸிதாவின் அடிமைகளாக போன சொற்கள் .... :lachen001:

ஆர்.ஈஸ்வரன்
17-11-2010, 09:04 AM
மீண்டும் சொற்கள் திரும்பிவரும்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

பென்ஸ்
18-11-2010, 10:18 PM
ஆதவா...

உங்கள் கவிதைகள் ஆளமானவை...
சில காலமாக உங்கள் கவிதைகள் கருவை கற்பனைக்கு விட்டு முடிவை தேட
வைக்கும் ரக கவிதைகளாக "மட்டும்" இருப்பது நீங்கள் சிறு வட்டத்திற்குள்
செல்லுவது போல் ஒரு உணர்வு...

உங்கள் கவிதைகளின் ரசிகன் என்ற பெயரில் உள்ள ஆதங்கம் இது....
முன் போல் காதல் கவிகளோ, தீர்கமான எண்ணக்களை
சொல்லும் கவிதைகளோ வருவதில்லையே....

ரசிகனின் எதிர்பாப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயமா..
இல்லை முற்றிலும் வித்தியாசமான ஒரு முத்திரையை கொடுக்கும் எண்ணமா...
எது என்று குழம்பி வம்புக்கு இளுக்கும் ஒரு ரசிகன்...

இந்த கவிதை கூட உங்கள் ஆழ்மன பயத்தின் ஒரு பிரதிபலிப்பா..??? :frown:

ஆதவா
19-11-2010, 03:13 AM
அடிமையிடம் அடிமையாய் இருக்க விருப்பமில்லை
நாம் இருவரும் ஒருவரின் அடிமைகள் இப்போதேன்றது
ஜெஸிதாவின் அடிமைகளாக போன சொற்கள் .... :lachen001:

ஜெஸிகாவை ஜெஸிதா (ஜெஸியை தா என்று நீங்கள் மதிகிட்டதான் கேட்கணும்) என்று சொன்னதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்.



மீண்டும் சொற்கள் திரும்பிவரும்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

நன்றிங்க.


ஆதவா...

உங்கள் கவிதைகள் ஆளமானவை...
சில காலமாக உங்கள் கவிதைகள் கருவை கற்பனைக்கு விட்டு முடிவை தேட
வைக்கும் ரக கவிதைகளாக "மட்டும்" இருப்பது நீங்கள் சிறு வட்டத்திற்குள்
செல்லுவது போல் ஒரு உணர்வு...

உங்கள் கவிதைகளின் ரசிகன் என்ற பெயரில் உள்ள ஆதங்கம் இது....
முன் போல் காதல் கவிகளோ, தீர்கமான எண்ணக்களை
சொல்லும் கவிதைகளோ வருவதில்லையே....

ரசிகனின் எதிர்பாப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயமா..
இல்லை முற்றிலும் வித்தியாசமான ஒரு முத்திரையை கொடுக்கும் எண்ணமா...
எது என்று குழம்பி வம்புக்கு இளுக்கும் ஒரு ரசிகன்...

இந்த கவிதை கூட உங்கள் ஆழ்மன பயத்தின் ஒரு பிரதிபலிப்பா..??? :frown:

அண்ணே....

இப்போதுமட்டுமல்ல, அப்போதும் சிறு வட்டத்திற்குள்ளேதான் சுற்றிக் கொண்டிருந்தேன். இது எனக்கு நன்கு தெரியும். ஆனால்... ஒரு வட்டம் விட்டு இன்னொரு வட்டம் தாவிக் கொண்டிருக்கிறேன்... பெரும்பாலும் இப்பொழுது எழுதும் கவிதைகள் வறட்சியை மையமாகவே கொண்டிருக்கின்றன. அதில் கற்பனைகள் எதுவும் வைக்கவில்லை. படித்து முடித்தபிறகு “என்னவோ சொல்லியிருக்கானே” என்று யோசிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி செய்கிறேனோ இல்லையோ, பணி தொடர்கிறது. ஆராய்ச்சியும்.

காதல் கவிகளை மிக அழகாக எழுத இன்று நம் மன்றத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். தீர்க்கமான எண்ணங்களுக்கும் அதே!!
கொஞ்சம் வித்தியாசம் என்று எண்ணித் தருகிறேனோ தெரியவில்லை.........
மனம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்!!

ஆனால் இந்த கவிதை பயத்தின் பிரதிபலிப்பு என்று சொல்லிவிடமுடியாது... ஒரு விபத்து.....
கவிதை தன் தேடலைத் துவங்கும் துவக்கம்... அவ்வளவே.......
எனினும்
திரும்பவும் பழைய வட்டத்திற்குள் குதிப்பேன்... அல்லது வேறு வட்டம் தேடுவேன்!!!

உங்கள் பின்னூட்டம் கண்டு மனம் நெகிழ்ந்திருக்கிறேன்.... ஏனெனில் உங்களைப் போல ஒரு சிலர் தவிர வேறு யாரும் மனதைத் தொட்டுச் சொல்லுவதில்லை!!!

அன்புடன்
ஆதவா!!

பிகு : அகநாழிகை ஜூன் 2010 இதழில் இக்கவிதை வந்திருந்தது!! எனக்கே தெரியாமல்............. :)

அக்னி
22-11-2010, 01:18 PM
அடிமைத் தளை விட்டுத் தப்பித்த
சொற்களை
மீண்டும் தளைத்து அடிமைப்படுத்த
நினைக்கும் ஆதவாவுக்கு... (சும்ம்ம்மா...)

கருவறை சிறை அல்ல,
கருவறைத் தாண்டிய கருவை
மீண்டும் அடைத்துவைக்க...

உங்கள் மனவறையும்
சிறைக்கூடமல்ல... கவிக்கூடம்...
அங்கிருந்து தப்பிக்கவில்லை சொற்கள்,
அங்கிருந்து உயிர்ப்பிக்கப்படுகின்றன.

மீண்டும் ஒரு கவிதைக்காகச்
சொற்கள் கோர்க்கப்படும்வரை,
இல்லாத வெற்றிடம் உணரப்படத்தான் செய்யும்...

M.Jagadeesan
22-11-2010, 03:26 PM
உமக்குச் சொந்தமான சொற்கள் தஞ்சம்தேடி-என்
வாசலுக்கு வந்து கதவைத் தட்டின.
"யார் நீங்கள்?"-என்று கேட்டேன்.
"ஆதவாவின் அடிமைகள்"-என்றன.
"எதற்கு வந்தீர்கள்?"-என்று கேட்டேன்.

"எங்களுக்குச் சிந்திக்கத் தெரியாதாம்
தனியாக வாழத் தைரியம் இல்லாதவர்களாம்.
பயனற்ற வாழ்க்கை வாழ்பவர்களாம்
ஆதலால் வந்து விட்டோம்
ஆதவாவை விட்டுவிட்டு"-என்று
அழுது கொண்டே சொன்னது.

"தவறு செய்துவிட்டீர்கள் தங்கங்களே
அவரை விட்டுப் பிரிந்தது
உயிரை விட்டு உடல் பிரிந்தது போல
ஒரு மனிதனுக்கு
சொற்கள் அன்றோ சொத்து?
உங்களைப் பிரிந்து ஊமையாக
ஆதவா அங்கிருக்க நீங்கள் இங்கிருப்பதா?"

எனச் சொல்லி அனுப்பிவைத்தேன் அவர்களை
பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாலகன்
22-11-2010, 03:32 PM
ஐய்யோ தெரியாம உள்ளார புகுந்துட்டேன்.

மன்னிக்கவும்

ஆதவா
23-11-2010, 03:45 AM
கருவறை சிறை அல்ல,
கருவறைத் தாண்டிய கருவை
மீண்டும் அடைத்துவைக்க...


அக்னி... நீங்கள் இளம் இளசு என அடிக்கடி ஞாபகப்படுத்திவிடுகிறீர்கள்!!



உமக்குச் சொந்தமான சொற்கள் தஞ்சம்தேடி-என்
வாசலுக்கு வந்து கதவைத் தட்டின.
"யார் நீங்கள்?"-என்று கேட்டேன்.
"ஆதவாவின் அடிமைகள்"-என்றன.
"எதற்கு வந்தீர்கள்?"-என்று கேட்டேன்.

"எங்களுக்குச் சிந்திக்கத் தெரியாதாம்
தனியாக வாழத் தைரியம் இல்லாதவர்களாம்.
பயனற்ற வாழ்க்கை வாழ்பவர்களாம்
ஆதலால் வந்து விட்டோம்
ஆதவாவை விட்டுவிட்டு"-என்று
அழுது கொண்டே சொன்னது.

"தவறு செய்துவிட்டீர்கள் தங்கங்களே
அவரை விட்டுப் பிரிந்தது
உயிரை விட்டு உடல் பிரிந்தது போல
ஒரு மனிதனுக்கு
சொற்கள் அன்றோ சொத்து?
உங்களைப் பிரிந்து ஊமையாக
ஆதவா அங்கிருக்க நீங்கள் இங்கிருப்பதா?"

எனச் சொல்லி அனுப்பிவைத்தேன் அவர்களை
பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பதிலை வெகுவாக ரசித்தேன் ஜெகதீசன் அவர்களே! நன்றி


ஐய்யோ தெரியாம உள்ளார புகுந்துட்டேன்.

மன்னிக்கவும்

அவ்வ்..... அவ்வளவு கொடூரமாவா கவிதை இருக்குது? :eek: