PDA

View Full Version : நிலா இல்லாத வானம்.. (கடைசிக் கவிதை.. மன்றத்திற்கு..)



rambal
20-11-2003, 10:31 PM
நிலா இல்லாத வானம்.. (கடைசிக் கவிதை.. மன்றத்திற்கு..)

வழக்கம் போலவே
எல்லா செயல்பாடுகளும்
அமையும்..

அதே காற்று..
அதே மழை..
அதே டீசல் வாசனை..

எதுவும் மாறவில்லை..
பழைய வானம்..
பழைய நட்சத்திரம்..

நிலா இல்லாத வானம்
ஒன்றும் அவலமானதல்ல..
அவமானமுமல்ல..

சூரியன் இல்லையென்றால்
கவலைப்படலாம்..
நிலா இல்லையென்றால்?

கொண்டாடுங்கள்..

முத்து
20-11-2003, 10:38 PM
:(

poo
21-11-2003, 01:47 PM
ராமின் இந்த முடிவு வருந்தத்தக்கது ...

எனினும் வற்புறுத்தலால் படைப்புகளை வெளிக்கொண்டு வருதல் கடினம்...

பல கவிதைகள்மூலம் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி ராம்!!


வாழ்த்துக்கள்.. ராம்.. எங்கிருந்தாலும்!!!

பாரதி
23-11-2003, 01:13 PM
அன்பு ராம்....
என்னதான் நடக்கிறது?
ஏனிந்த முடிவு?
சில தினங்கள் வராததால் எதுவும் தெரியவில்லை. வந்து பார்த்தால் .... இப்படி....
:cry:

Nanban
23-11-2003, 01:44 PM
:( :( :(

தமிழ் தாட்சாயிணி
24-11-2003, 03:18 PM
ஏன் இந்த மாதிரி முடிவு ராம்?

எந்த பிரச்சனையாய் இருந்தால் தீர்வு என்று ஒன்று இருக்கின்றதே?

gankrish
27-11-2003, 07:34 AM
தலையும் புரியவில்லை ... காலும் புரியவில்லை.. ராம் ஏன் இந்த முடிவு? உங்களின் எல்லா படைப்புகளையும் ரசித்தவன் நான். பதில் எதிர் பார்க்கிறோம்

Nanban
27-11-2003, 09:13 AM
தலையும் புரியவில்லை ... காலும் புரியவில்லை..

இதற்காகத் தான் சொன்னேன் - அடிக்கடி வாருங்கள் இந்தப் பக்கமாக என்று.......