PDA

View Full Version : சிந்தனையில் சிந்தியவை



கீதம்
16-11-2010, 10:16 PM
புல்

இதுவும் ஒரு அன்றாடங்காய்ச்சிதான்,
இரவெல்லாம் பாடுபட்டுச் சேர்த்ததை
விடியலில் தொலைக்கிறதே!

***************************

எழுதுகோல்

சிரசாசனம் செய்பவனின் குரல்வளை
விரலிடுக்கில் நெறிபட,
கதறிக் கக்குகிறான் கோழை!

***************************

சாபம்?

தும்பி பிடிக்கத் துரத்தியநாட்கள்
நினைவுக்கு வந்தன,
ஓரிடம் நில்லா குழந்தையை
ஒருமணிநேரமாய்த் துரத்தியும்
நிலைப்படமெடுக்க இயலாமற்போனபோது!

***************************

ஆதவா
17-11-2010, 03:23 AM
நல்லா இருக்குங்க அக்கா.
வித்தியாசமா யோசிக்கிறீங்க.
புல் பற்றிய சிந்தனை ரொம்ப பிடிச்சிருக்கு!!!

அனுராகவன்
17-11-2010, 05:34 AM
புல் ..புல்..புல்..

புல்லில் விழும் பனித்துளி.
என் மனதில் ஓடும் உயிர் நாடி..

govindh
17-11-2010, 12:41 PM
சிந்தனையில் சிந்தியவை -
அத்தனையும் கவித்தேன் துளிகள்...
ரசித்து சுவைத்தேன்.

தொடர்ந்து தாருங்கள்.
நன்றியுடன் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
17-11-2010, 01:59 PM
"புல்" கவிதை அருமை.

"மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே."

என்ற கவிதை நினைவுக்கு வந்தது.
பாராட்டுக்கள் கீதம்.


.

sures
17-11-2010, 02:54 PM
நல்ல கவிதைகள்.
மேலே சிலர் கூறியது போல் புல்-கவிதை நன்றாக உள்ளது.
பின்னூட்டம் இட்டவர்களும் தாங்களும் சலித்தவர்கள் இல்லை என்று, கவிதையுடன் பதித்துள்ளார்கள்.

பென்ஸ்
18-11-2010, 03:48 PM
கவிதைகளின் வெற்றி அதன் கருவை எங்கிருந்தோ திருடுவதில் இருக்கிறது...

இயற்க்கை...
பொருள்..
குழந்தை... என்று எதையும் விடாமல் திருடுகிறிர்கள்...

கவிதை மூலம் எங்கள் உள்ளங்களையும்...

சிவா.ஜி
18-11-2010, 04:44 PM
அழகான சிந்தனை. புல்லுக்கும், பிள்ளைக்கும் எழுந்த சிந்தனை என் சிந்தையில் தங்கிவிட்டது. வாழ்த்துக்கள்ம்மா கீதம்.

அமரன்
18-11-2010, 05:09 PM
சிந்தியவற்றை ஏந்திக் கொண்டேன் அக்கா.


புல்

இதுவும் ஒரு அன்றாடங்காய்ச்சிதான்,
இரவெல்லாம் பாடுபட்டுச் சேர்த்ததை
விடியலில் தொலைக்கிறதே!

ஆதிபகவனுக்கு
நன்றி சொல்லும் விழாவாம்
பொங்கல்.
தினமும் முற்றத்தில்
பொங்கல் வைக்கிறது
புல்..

பாலகன்
18-11-2010, 05:33 PM
தினமும் முற்றத்தில்
பொங்கல் வைக்கிறது
புல்..

இதுவும் அருமை அமரன் சார்

ஆன்டனி ஜானி
18-11-2010, 05:44 PM
புல்லின் நற்குணங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் ........

சூறாவளி
19-11-2010, 10:08 AM
எழுதுகோல் - கவிதை அசத்தல்.. எழுதுகோலின் தன்மையை விளக்கிய வரிகள்..

பாராட்டுக்கள்

வானவர்கோன்
19-11-2010, 10:52 PM
தும்பி பிடிக்கத் துவண்டன
கரங்கள் அன்று,
கமராவுடன் குழந்தையைத் துரத்தின
பாதங்கள் இன்று!

கீதம்
19-11-2010, 11:47 PM
புல்லின் நற்குணங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் ........

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5733
இங்கே சென்று இளசு அவர்கள் எழுதிய புல்லானாலும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் நண்பரே.

மற்றும்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16188&highlight=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D
இங்கே நாகரா அவர்கள் எழுதிய புல்நுனி மேல் பனித்துளி கவி வரிகளையும் ரசித்து மகிழுங்கள்.

கீதம்
19-11-2010, 11:51 PM
பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய ஆதவா, அனு, கோவிந்த், ஜெகதீசன் அவர்கள், சுரேஷ் அவர்கள், பென்ஸ் அவர்கள், சிவாஜி அண்ணா, அமரன், மகாபிரபு, ஆன்டனி ஜானி அவர்கள், சூறாவளி அவர்கள், வானவர்கோன் அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆன்டனி ஜானி
20-11-2010, 03:39 AM
[QUOTE=கீதம்;501420]http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5733
இங்கே சென்று இளசு அவர்கள் எழுதிய புல்லானாலும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் நண்பரே.

மற்றும்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16188&highlight=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D
இங்கே நாகரா அவர்கள் எழுதிய புல்நுனி மேல் பனித்துளி கவி வரிகளையும் ரசித்து மகிழுங்கள்.[/ புல்லின் கவிதை வரிகள் அதன் மேல் பனித்துளி இந்த கவிதை வரிகள் எல்லாம் படிக்கும் போதே நான் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன் ரெம்ப அருமையான கவிதைகள்....... ****வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் **** உண்மைதான்