PDA

View Full Version : சைக்கிள் பழகுபவனும்.. கில்லி ஆடுபவர்களும்..



rambal
20-11-2003, 09:29 PM
சைக்கிள் பழகுபவனும்.. கில்லி ஆடுபவர்களும்..

எனக்கென்று
சைக்கிள் ஓட்டிப்பழக
ஒரு மைதானம்..

கிரிக்கெட் ஆடும் கூட்டமொன்று..
கில்லி ஆடும் கூட்டமொன்று..
உதை பந்து,
கோலிகுண்டு,
என சகலமும் அங்கு விளையாட..
நிம்மதியாக
ஓட்டிப் பழகினேன் சைக்கிளை..

அவ்வப்பொழுது
கிரிக்கெட் பந்து
என்மேல் வந்து விழ
லாவகமாய் அதிலிருந்து
தப்பிக்கக் கற்றேன்..

இருந்த போதும்
அவ்வப்பொழுது பந்து என்மேல்
பட்டுக் கொண்டுதானிருந்தது..
சைக்கிள் கற்றலும்
தொடர்ந்து கொண்டுதானிருந்தது..

கில்லி ஒன்று
கண்ணில் வந்து விழ
இந்த மைதானம் தோதில்லையென்று
மாற்றிவிட்டேன் மைதானத்தை..

முத்து
20-11-2003, 09:41 PM
:cry:

பாரதி
24-11-2003, 12:59 PM
அன்பு ராம்பால்,
மனதில் உள்ள வேதனைகளை கவிதை வடிவில் வடித்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. எப்பிடி ஆறுதல் சொல்ல என்பதும் தெரியவில்லை. ஆனால் மைதானத்தை மாற்றி இருப்பதில் இருந்து சைக்கிள் ஓட்டுவது தொடரும் என்று நினைக்கிறேன். சைக்கிள் ஓட்டவில்லை என்றாலும் உங்கள் பார்வை மைதானத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

puppy
24-11-2003, 05:55 PM
எல்லோரும் விளையாட
ஒரு மைதானம் இருக்கு.
சிலர் தவழ கற்று கொள்கிறார்கள்
சிலர் ஓடி விளையாடுகின்றனர்.
பலரோ வந்து உட்கார்ந்து கொண்டு
மற்றவர்கள் விளையாடுவதை பார்த்து
செல்கின்றனர்.
எல்லோரும் வரலாம்
விளையாடலாம்
பழகி கொள்ளலாம்.
ஆனால் என்ன விளையாடுவது
எப்படி விளையாடுவது
பழகிகொள்வது என
மைதானதுக்குள் நுழையுமுன்
யாரும் படித்து அதன்படி
விளையாடாத பொழுது
சில விபத்துக்கள் நேருகின்றன.

ஆதலால் உள்ளே நுழையும் முன்
என்ன விளையாடலாம் எங்கே
விளையாடலாம் என தெரிந்து
கொண்டு விளையாடினால்
எல்லோருக்கும் நல்லது...