PDA

View Full Version : அந்த அறையில் உன் புத்தகங்கள்



ஆதவா
16-11-2010, 05:03 AM
அந்த அறை மிகவும் இருட்டானது
திறக்கவியலா பூட்டுக்கள் நிறைந்த
பல கதவுகளால் நிறைந்தது
ஒவ்வொரு அறைக்குள்ளும் நீ
நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தாய்
வாசிப்பதற்காக சில சாவிகளைக் கொடுத்து
நீயே கதவுகளைத் திறந்து வைத்து
மெழுகுவர்த்திகளைக் கொடுத்தனுப்பினாய்
உன் புத்தகங்கள் ஒவ்வொன்றும்
ஆழமான கருத்துள்ளவை
படிப்பதற்குக் கடினமான மொழியாளுமையைக்
கொண்டிருப்பவை
பல புத்தகங்களைப் படித்த பின்னே
என் அந்திமமும் நெருங்கிவிட்டது
படிப்பதற்கே இத்தனை காலமெனில்
எத்தனை நாட்களாய் அமர்ந்து எழுதினாய்?
இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை
ஏனெனில்
திறக்கவியலாத சாவிகளைத்தானே
என்னிடம் கொடுத்தனுப்பினாய்!!??

பென்ஸ்
18-11-2010, 10:36 PM
பல எண்ண ஓட்டங்கள் ஆதவா....
அததனையும் ஒன்றாக்கு எழுது கோர்க்க முடியவில்லை...

வாசிக்க சென்றது உன் விருப்பம் தானே...???
உன் கரங்களை விட அந்த சுவர் வலிமையானதா..
இல்லை... அந்த இருட்டின் வாசிப்பு பிடித்து போனதா???

Ravee
18-11-2010, 11:34 PM
பல புத்தகங்களைப் படித்த பின்னே
என் அந்திமமும் நெருங்கிவிட்டது
படிப்பதற்கே இத்தனை காலமெனில்
எத்தனை நாட்களாய் அமர்ந்து எழுதினாய்?
இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை

பலமுறை நான் அனுபவித்து ரசித்த வரிகள் ஆதவா ...... :)

இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை
ஏனெனில்
திறக்கவியலாத சாவிகளைத்தானே
என்னிடம் கொடுத்தனுப்பினாய்!!??

இருந்தாலும் பல நேரம் பிரச்சனைகள் சுவர் உடைத்து நம்மை இழுத்து போகிறதே ....... :frown:

ஆதவா
19-11-2010, 03:01 AM
வாசிக்க சென்றது உன் விருப்பம் தானே...???
உன் கரங்களை விட அந்த சுவர் வலிமையானதா..
இல்லை... அந்த இருட்டின் வாசிப்பு பிடித்து போனதா???

அதுதான் தெரியவில்லை..
அது ஒரு மாயை!! இழுத்து அமர்த்தி தீபமேற்றி படிக்க வைத்து பின், பின்செல்ல அனுமதி மறுத்து.....
மறுக்கப்பட்டதா அல்லது
விருப்பப்பட்டதா என்று மட்டும் தெரியவில்லை அண்ணா...
மிக்க நன்றி


பல புத்தகங்களைப் படித்த பின்னே
என் அந்திமமும் நெருங்கிவிட்டது
படிப்பதற்கே இத்தனை காலமெனில்
எத்தனை நாட்களாய் அமர்ந்து எழுதினாய்?
இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை

பலமுறை நான் அனுபவித்து ரசித்த வரிகள் ஆதவா ...... :)

இப்போதும் அறைவிட்டு வர முடியவில்லை
ஏனெனில்
திறக்கவியலாத சாவிகளைத்தானே
என்னிடம் கொடுத்தனுப்பினாய்!!??

இருந்தாலும் பல நேரம் பிரச்சனைகள் சுவர் உடைத்து நம்மை இழுத்து போகிறதே ....... :frown:

அண்ணே... அது நாம் எவ்வளவு ஊன்றி படிக்கிறோம் என்பதில் இருக்கிறது...
ஒருவேளை எழுதியதே தவறென்றால்..................
அந்த அறையில் நாமும் எழுத்தாளனாவதில் தவறென்ன??

நன்றிங்க ண்ணா