PDA

View Full Version : வசன உதவி : கோவி.



govindh
15-11-2010, 05:29 PM
கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக...அனைத்துத் துறை மாணவர்களும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அவ் விழாவிற்காக..ஒரு நாடகம் தயார் செய்து
கொண்டிருப்பதாகவும்..,அதற்கான கதை அமைப்பும், ஒத்திகையும் நடக்கிறது.அதில் நீயும் கலந்து கொள்ளலாம் என எனை அன்போடு அழைத்தான் என் நண்பன். (தமிழ் துறை மாணவன்)
நானும் ஆர்வத்துடன் சென்றேன்.

நாடக அமைப்புக் குழுத் தலைமை மாணவர், நாடகத்தின் கதைச் சுருக்கத்தை தன் குழுவினருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.
என்ன இது..வணிகவியலுக்கும் தமிழ் மேல் ஆர்வமா...?!
எனக் கேட்டார்...
ஆம், என்று அமைதியாகப் பதில் சொன்னேன்.

அவர் தொடர்ந்தார்....'கல்லூரி காதல் கதை...அதுவம் ஒரு சோகக் கதை...ஆனால் ஆரம்பமெல்லாம் கேலி..கிண்டல்...எல்லாம் அமர்க்களப்படும்...
நீங்களும் உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு
இக் கதையினை உயிர்ப்பிக்க வேண்டுமென்றார்.

நான் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்காமல் ..நாடகத்தின் தலைப்பு என்னவென்று கேட்டேன். நாலைந்து தலைப்புக்கள் மனதில் இருப்பதாகவும்...இன்னும் முடிவு செய்யவில்லை...நீயும் சொல்லலாம் என அனுமதி தந்தார்.
கதை சுருக்கத்தை மனதிற் கொண்டு.., "வா...குயிலழகே...வா..." பொருத்தம் தானா என்றேன்...

பரவாயில்லையே....வணிகவியலுக்கும் நல்ல ரசனை இருக்குதே...எனத் தட்டிக் கொடுத்தார்.

தடுமாறி விழப் போவதை அப்போது நான் உணரவில்லை..!

கல்லூரி வருகையில் வரவேற்பாக..., மாணவிகளைக் கிண்டல் செய்யும் விதமாக (மனம் புண்படாமல் தான்)....நிறைய வசனங்களை சொன்னார்...அடேயப்பா...நமக்கேத் தெரியாமல் இவ்வளவு இருக்குதா...?! என அனைவரும் ஆச்சர்யப்பட்டு.., தங்கள் பங்குக்கும் அனைவரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஆர்வம் தாளாமல், நானும் என் பங்குக்கு ஏதேதோ சொன்னேன்.
'மதனா...இன்னைக்கு என்ன கிழமை...புதனா..?'
'பிருந்தா, நேத்து ஏம்மா கல்லூரிக்கு வரலை....உங்க வீட்ல விருந்தா...?'
இதெல்லாம் பிடித்திருப்பதாக குறித்துக் கொண்டார்.

காதலன்....காதலி....சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது...
தன்னை அண்ணன் பார்த்து விட்டதாகவும்.., உடனே இங்கிருந்து சென்று விடு...இடத்தைக் காலி செய்...' என அவசரப்படுத்துகிறாள் காதலி. ஆனால் காதலன் மறுக்கிறான்.

'புஷ்பலதா...நீ எனக்கு கிஸ் பல தா...' அப்பத் தான் இங்கிருந்து கிளம்புவேன்....என வசனம் சொன்னேன்.

அதுவும் அவருக்கு பிடித்து விட்டதால், கதை அமைப்பிலும், வசனத்திலும் என் கருத்துகளைப் பதிவு செய்து கொண்டார்.

ஒருவாறாக, மாற்றங்கள்..., திருத்தங்கள்...என ஒரு முழு வடிவம் அவருக்கு திருப்தியாகப் பட்டது. நாடகக் குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டு 'வசன உதவி'...
என்று உன் பெயரை அறிவிப்பேன் என்றார்.

நான், வேண்டவே வேண்டாம்...என் பெயரை சொல்லவேக் கூடாது...என பதட்டத்துடன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்...அவர் கேட்பதாக இல்லை.

ஏன்..? எனக் காரணம் கேட்டார்.

(நான் பின் விளைவுகளை எண்ணி....வீட்டில் எனக்கு
நடக்கப் போகும்..,திருவிழா, பூஜைகளை...
நினைத்து பயந்து கொண்டிருந்ததால் ....வார்த்தைகள் வரவில்லை..)

என் நண்பன் தான் எடுத்து சொன்னான்...

காரணம் இது தான் :
அதே கல்லூரியில் தான் என் அக்காளும் முதுநிலை...படிக்கிறாள்...
அதே ஊர் பள்ளியில் என் அப்பா தலைமையாசிரியர்....
என் அப்பாவும்...அக் கல்லூரி முதல்வரும் நண்பர்கள்...)

அதனால் தான்....என்று....இழுத்தவுடன் ..சத்தம் போட்டு சிரித்தார்.
'இது நாடகம் தானே...!?' உன்னைப் பாராட்டத் தான் செய்வார்கள்...உனக்கு எந்தப் பாதிப்பும் வராது...
பயப்பட வேண்டாம்...நான் பார்த்துக் கொள்கிறேன்..'என்றார்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
ஏன் இங்கு வந்தோம் என்று நொந்து கொண்டேன்.
அவரிடம் மிகவும் பணிவாக கெஞ்சிக் கேட்டேன்...

சரி...உனக்கு பயமாக இருப்பதால் விட்டு விடுகிறேன்...
ஆனால் உன் பெயரை புறக்கணிக்க மனமில்லை....
யார் கேட்டாலும்...உன் பெயரை சொல்ல மாட்டேன்...'
என உறுதி அளித்தார்....
அப்போது தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

ஆனால் அவ் விழாவில்...நாடகத்தின் முடிவில்....
வசன உதவி கோவி என அறிவித்து விட்டார்...
(மன்றத்தில் குணமதி என்னை 'கோவி' என குறிப்பிடுவார்...)

நாடகம் சிறப்பாக இருந்தது என்று அனைத்து துறை
பேராசிரியர்களும்...மாணவர்களும்....பாராட்டி புகழ்ந்து
பேசினார்கள்.
அக் குழுவில் அனைவரையும் பாராட்டி விட்டு...
யார் அந்த வசன உதவி...?! என்று ஆளாளுக்கு
கேள்வி எழுப்பி......,பேசிக் கொண்டார்கள்.

அப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது...
'நான் தான்' என சொல்லி விடலாம் என நினைத்த போது....

(அடுத்து நடந்தது தான்....எனக்கு மனசு வலித்தது...
இன்னும் வலிக்கிறது..)

தமிழ் துறை மாணவன் கோபியை எல்லோரும் பாராட்டினார்கள்.
கை குலுக்கித் தோள் தட்டினார்கள்...

அவனும் ஹி...ஹி...என இளித்துக் கொண்டே...
அனைவருடைய பாராட்டையும் வாங்கிக் கொண்டான்...

(என் வயிற்றெரிச்சலையும் சேர்த்து...!)

அமரன்
15-11-2010, 05:36 PM
விடுங்க கோவி!

நமக்கு வேண்டியது என்ன.. நம் திறமை பலருக்குப் பயன்பட வேணும். நம்மிடம் உள்ள நல்லவை நாலு பேரையாவது அடையவேணும்.

பாவம் தமிழ்த்துறைத் தலைவர். சொல்லவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தடுமாறி இருப்பார்.

மதி
15-11-2010, 06:26 PM
ரசித்தேன்..!! கவலைப் படாதீங்க.. மன்றத்துல மேடை நாடகம் போடறதா இருந்தா வசன உதவியில்லை. வசனமே நீங்க தான்.. :)

govindh
15-11-2010, 10:26 PM
விடுங்க கோவி!

நமக்கு வேண்டியது என்ன.. நம் திறமை பலருக்குப் பயன்பட வேணும். நம்மிடம் உள்ள நல்லவை நாலு பேரையாவது அடையவேணும்.

பாவம் தமிழ்த்துறைத் தலைவர். சொல்லவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தடுமாறி இருப்பார்.

மிக்க நன்றி அமரன் ஐயா.
பதித்த உடனேயே...படித்து.....
பகர்ந்த ஆறுதல் வார்த்தைகள்...
என் மனதைத் தேற்றி விட்டது.

govindh
15-11-2010, 10:29 PM
ரசித்தேன்..!! கவலைப் படாதீங்க.. மன்றத்துல மேடை நாடகம் போடறதா இருந்தா வசன உதவியில்லை. வசனமே நீங்க தான்.. :)


தங்களின் ரசிப்பிற்கும்......நம்பிக்கைக்கும்
மிக்க நன்றி மதி.

அமரன்
15-11-2010, 11:11 PM
மிக்க நன்றி அமரன் ஐயா.
பதித்த உடனேயே...படித்து.....
பகர்ந்த ஆறுதல் வார்த்தைகள்...
என் மனதைத் தேற்றி விட்டது.

அண்ணே... இப்பிடிச் சொல்லி என் வயசைக் கூட்ட ஏலாது.. சொல்லிட்டேன்..

ஐயாவைக் CUTடுங்க; நட்பில் கட்டுப்படுவோம்.

ரங்கராஜன்
16-11-2010, 03:08 AM
மண்ணுக்குள் இருந்தாலும் வைரம் தான், மறைத்து வைக்கப்பட்டாலும் வைரம் தான். கவலை வேண்டாம் கோவிந் விரைவில் உங்களுக்குள் இருக்கும் வைரம் காட்சிக்கு வைக்கப்படும். வாழ்த்துக்கள்.......

நானும் காலேஜ் படிக்கும் போது நாடகம் போட்டு இருக்கேன்........ மாணவிகளை கிண்டல் செய்து இல்லை, ஆசிரியர்களை கிண்டல் செய்து போட்டு இருக்கேன்........... நல்ல வரவேற்பு கிடைத்தது எல்லாரிடமும் இருந்து, ஒருவரைத் தவிர, நான் யாரை கிண்டல் செய்தேனோ அந்த ஆசிரியரை தவிர........(எப்படி வரவேற்பார்), அவர் அந்த காலேஜை விட்டே போய் விட்டார். போகும் போது என்னை சப்ஜெட்டில் ஃபெயில் ஆக்கி விட்டு சென்று விட்டார். அதில் முட்டி மோதி பாசாவதற்குள் நான் பட்ட கஷ்டம் அடேங்கப்பா............ அதோடு முடிந்தது என் நாடக வசனம், மற்றும் கதை எழுதும் படலம்...........

ஆதவா
16-11-2010, 04:25 AM
ஹாஹாஅ.... வசனங்கள் அருமையாக இருக்கின்றன கோவிந், உங்கள் பாராட்டை கோபி பெற்றுக் கொண்டது கொஞ்சம் வருத்தம்தான்.
இந்த திறமையை நன்கு வளர்த்துக் கொண்டால் நாளை சினிமாவுக்கும் வசனம் எழுத வாய்ப்பு வரலாம்.

நான் பள்ளியில் நாடகத்தில் நடித்து முதல் பரிசு பெற்றிருக்கிறேன்.
வசனமெல்லாம் நாங்கள் எழுதுவது கிடையாது ; வாத்தியார்கள்தான்.
ஒருமுறை திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்ற ஒரு நாடகத்திற்கு ரெக்கார்டிங் செய்து கொண்டு போயிருந்தோம். கேசட்டில் வரும் குரலுக்கு ஏற்ப நாங்கள் வாயசைக்கவேண்டும். அது ஏதோ ஒரு கிறித்துவ மத கூட்டத்தில் நடைபெற்ற நாடகம் (மோசஸீன் பிறப்பு என்று நினைக்கிறேன்) இசையும் கோர்த்து உருவாக்கினோம்.
ஒன்பது, பத்து வகுப்பு படிக்கும்பொழுது “நாடகம்” என்றால் அது எங்கள் குழு மட்டும்தான்!!

நினைவு மீட்டதற்கு நன்றி!

govindh
17-11-2010, 10:10 AM
அண்ணே... இப்பிடிச் சொல்லி என் வயசைக் கூட்ட ஏலாது.. சொல்லிட்டேன்..

ஐயாவைக் CUTடுங்க; நட்பில் கட்டுப்படுவோம்.

ஹி...ஹி...
என் வயதைக் குறைத்துக் கொள்ள முயன்றேன்...
கண்டுபிடித்து விட்டீர்கள்....
நட்பில் கட்டுப்படுவோம்.
நன்றி நண்பா...!

govindh
17-11-2010, 10:15 AM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரங்கராஜன்.

நாடக வசனம், மற்றும் கதை எழுதும் படலம்...........
தொடர்ந்திடுங்கள்.
படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

govindh
17-11-2010, 10:22 AM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஆதவா..

உங்களின் நாடக அனுபவங்களையும்
எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு
மிக்க நன்றி.:)

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 11:25 AM
புதிதாய் மலர்ந்த பூக்களின் தேனை சேகரிக்கும் தேனீக்களிடம் இருந்து
தேனை பறிக்கும் மனிதனாக இருந்தாலும் தேனீக்களை மறப்பதில்லை
அவன் அது போலத்தான் இது நண்பரே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

govindh
20-11-2010, 09:56 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.